வெள்ளி, 25 மார்ச், 2011

டென்மார்க்கின் கல்வி

டென்மார்க்கின் கல்வ
டென்மார்க், இயற்கை வளம் மிகக் குறைவாக உள்ள நாடு. அதனால் இங்கு நாம் நமது மனித வளத்தை அதிகமாகச் சார்ந்துள்ளோம். அதாவது மக்களுடைய கல்வி, பயிற்சி இவற்றின் மூலம் இந்த வளத்தை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. வேகமான தொழில் நுட்ப வளர்ச்சியும், சமீப நிகழ்வான உலகமயமாக்கலும் இதற்கு காரணங்கள். இல்லாவிடில் நாம் அனைத்து நாட்டுப் போட்டிகளில் பின்தங்க நேரிடும். டென்மார்க் பொது நல அரசாட்சியை பராமரித்தும் வளர்ப்பதும் மென்மேலும் கடினமாகிவிடும்.


கல்வி அல்லது பயிற்சி இல்லாத மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு
கல்வியும் பயிற்சியும் கூட, தனி நபருக்கு முக்கியமானவை. நவீன சமூகத்தில் தேர்ச்சியற்ற மக்களுக்கு அதிக வேலைகள் இருப்பதில்லை. சுமை அகற்றும் பணியாளர் தான் முதுகில் சுமப்பதற்கு மாறாக, பளு தூக்கும் சாதன இயக்கம் பற்றி அறிகிறார். சுத்தம் செய்யும் உதவியாளர் சுத்திகரிப்புப் பொருள்களைத் தக்கவாறு பயன்படுத்தும் வழிமுறைகளைப் படித்தறிந்து செய்வது அவர் கொண்டிருக்கும் கல்விப் பேற்றால்தான். ஒரு பெட்டிக் கடைக்காரரும், மதிப்புக் கூட்டு வரி, வரிக்கணக்கு இவற்றை மேற்கொள்ளும் அறிவுத் திறன் கொண்டுள்ளார்.
ஆகையால், கல்வி, திறன்களின் மேம்பாடு, தனிப்பட்ட வளர்ச்சி இவற்றுக்கு பல் வகையான வாய்ப்புகளை அனைத்து டென்மார்க் மக்களும் ஏற்க இயலும்.
அறிவுத்திறன் படைத்த மக்கள் ஜனநாயகத்திற்கு அவசியம்
மக்கள் ஆதரவுக் கல்விக்கான* நாட்டின் மரபு, நமது ஜனநாயகத்தைப் போன்று பழமையானது. கல்வி அறிவு படைத்த மக்கள், நன்கு செயல்படும் ஜனநாயகத்திற்கு ஒரு முக்கிய முன் தேவை என்ற நம்பிக்கை அதன் அடிப்படையாகும்.
ஆயுட்காலம் முழுவதும் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதே நடைமுறையில் இதன் பொருள். உதாரணமாக நாட்டு மரபு உயர்நிலை பள்ளி* அல்லது மாலை நேர வகுப்புகளுக்கு* போவதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஆகியவற்றின் மூலம் அல்லது தங்கள் வேலை இடங்களில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கட்டாயக் கல்வி
டென்மார்க்கில் ஒன்பது ஆண்டுகள் கட்டாயக் கல்வி அளிக்கப்படுகிறது. எனினும் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் அறிமுகப் பள்ளிக் காலத்தை* ஏற்கனவே ஆறு வயதில் பள்ளிக்கு முந்தைய வகுப்பிலேயே தொடங்கி விடுகின்றனர்.
பல மக்கள் கட்டாயக் கல்விக்கு பிந்தைய கல்வி அல்லது பயிற்சி பெறுகிறார்கள்
ஒன்பது ஆண்டுகள் கட்டாய பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, மேலும் கல்வி பயில்வது விருப்பத்தைப் பொறுத்தது. பல இளைஞர்களும், தங்கள் கல்வியை தொழில் அல்லது மேல்நிலை செகன்டரிப் பள்ளியில் தொடர்கிறார்கள் அல்லது உயர் ஆயத்தத் தேர்வு* என்று அழைக்கப்படும் தேர்வுக்கு படிக்கிறார்கள். பலரும், கட்டாயக் கல்விக்குப் பிந்தைய, ஒருவித குறுகிய கால, நடுக்கால, நெடுங்கால கல்வியை விரும்புகிறார்கள்.
பங்கேற்பும் ஒத்துழைப்பும்
சுதந்திரமும் பங்கேற்பும்
டென்மார்க் கல்வி முறை பெருமளவுக்கு சுதந்திரம் மற்றும் செயல் மிக பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டது. பள்ளியின் தொடக்க ஆண்டுகள் முதல் பல்கலைக் கழக நிலை வரை கற்போருக்கும், மாணவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்வி திட்டம் குறித்து சொந்தமாக முடிவெடுக்க உரிமை உண்டு. அவர்கள் இந்த உரிமையை பயன்படுத்துவது எதிர்பார்க்கப்படுகிறது.
ஒத்துழைப்பும் சமுதாய உணர்வும்
பாடத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களில் அடிப்படை அறிவு பெறுதல், உரையாடல் திறன்கள், பிறருடன் ஒத்துழைத்தல் ஆகியவை அடங்கியிருக்கும். 1-ஆம் வகுப்பிலிருந்தே குழந்தைகள் குழுக்களாக வேலை செய்யவும், கொடுக்கப்பட்ட பயிற்சிகளை சேர்ந்து செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள்.
பெரிய வகுப்புகளில், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யலாம். குழுக்களாக தேர்வு எழுதலாம். பல்கலைக் கழகத் துறைகளின் உயர்கல்விக் கழகங்களில் மாணவர்கள் பல சமயம் படிப்புக் குழுக்கலாகப் பிரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தனியாகவோ வளாகத்திலோ சந்தித்து கொடுக்கப்பட்ட பயிற்சி பாடங்களில் ஒத்துழைப்பார்கள்.

பள்ளிக்கு முன், துவக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளி
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளியும் (Folkeskole) அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான அடிப்படையில் இலவசக் கல்வி அளிக்கும். இதில் ஓராண்டு பள்ளிக்கு முந்தைய கல்வியும் அதை அடுத்து ஒன்பது ஆண்டுகள் கட்டாய அடிப்படைக் கல்வி மற்றும் விரும்பினால் ஓராண்டு 10-வது வகுப்பையும் அடங்கும்.
பள்ளிக்கு-முந்தைய வகுப்பு
கட்டாயக் கல்வி 1 முதல் 9 வரை வகுப்புகள் அடங்கும். எனினும், பல குழந்தைகள் ஐந்து அல்லது ஆறு வயதில் பள்ளிக்கு முந்தைய வகுப்புக்குப் போகத் தொடங்கி விடுகிறார்கள்.
விளையாட்டுடன் கூடிய பள்ளி வாழ்க்கை
பள்ளிக்கு முந்தைய வகுப்பு, விளையாட்டையும் கல்வியையும் கலந்தளிக்கிறது. குழந்தைகள் அங்கு எழுத்துகள், பாடுதல், விளையாட்டு, ஆட்டம் – பாட்டம் போன்றவற்றைக் கற்கிறார்கள்.
பள்ளிக்கு முந்தைய வகுப்பின் நோக்கம் மாணவர்களை பள்ளியின் அன்றாட வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துவதாகும். பள்ளிக்கு முந்தைய வகுப்பில் சந்திக்கும் சில குழந்தைகள் 1-வது வகுப்பில் சக மாணவர்களாகலாம்.
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள்
அனைத்து மாணவர்களுக்குமான ஒரே வகுப்பு
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளிகள் பொது பாடத் திட்டப் பள்ளிகள். அனைத்து மாணவகர்களும் ஒரே குழுவாகி அனைத்து வகுப்புகளிலும் கற்பிக்கப்படுகின்றார்கள் என்பதே இதன் பொருளாகும். அதாவது கல்வித்துறையில் வேறுபாடு என்பது இப்போது இல்லை.
பள்ளி அடிப்படை அறிவைத் தருகிறது
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள், கணிதம், மொழிகள், சமூகவியல், அறிவியல் இவற்றில் அடிப்படைகளைக் கற்பிக்கின்றன. டென்மார்க் பண்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகமானதாகச் செய்வதும், பிற பண்பாடுகளைப் புரிந்துகொள்ளச் செய்வதும் பள்ளியின் நோக்கங்கள்.
தொடக்க மற்றும் கீழ் நிலை செகன்டரி பள்ளி முறையின் மற்ற இலக்குகளில் குழந்தைகளின் தனி ஆளுமை வளர்ச்சியும் அவர்களது கற்பனை மற்றும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டுவதும் அடங்கும்.
மாணவர்கள் செயல் நிறைந்த பங்கேற்பு, கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை கற்கிறார்கள்
சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் வாழ்க்கை அமைய, குழந்தைகளை பள்ளிகள் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கையும் கொடுப்பதன் மூலமும், உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அவர்களுக்கு கற்பிப்பதன் மூலமும் இது எய்தப்படுகிறது.
மாணவர் மன்றங்கள் செவிமடுக்கப்படுகின்றன
மாணவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மாணவர்களின் மன்றங்களை அமைக்கலாம். பள்ளியில் முக்கிய தீர்மானங்கள் செய்கையில் அவற்றின் ஆலோசனைக்கு இடமுண்டு.
8-வது வகுப்புக்கு முன்னர் மதிப்பெண்கள் கிடையாது
தொடக்கப் பள்ளியின் முதல் சில ஆண்டுகளில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்த ஆலோசனை மூலம் மாணவரின் படிப்புத் திறன் மதிப்பிடப்படுகிறது. தரம் பிரிப்பதோ, அல்லது சிறு தேர்வோ 8-வது வகுப்பை அடையும் வரை கிடையாது.


டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளி முறையின் நோக்கங்கள் (போக்கெஸ்கோலன் - Folkeskolen) டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி பள்ளி முறை ''ஃபோக்கெஸ்கோலன் மீதான சட்டம்'' என்பதை அடிப்படையாகக் கொண்டது. டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகண்டரி கல்விக்கு, பின்வரும் குறிக்கோள்களை இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. ''(1) ' ஃபோக்கெஸ்கோல் ' – பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் அறிவு திறன்கள், வேலை முறைகள், தங்கள் கருத்துகளை வெளியிடுவதற்கான வழிகள் முதலானவற்றை மாணவர்கள் பெறுவதை வளர்த்து, தனிப்பட்ட மாணவரின் அனைத்து ஆளுமை வளர்ச்சிக்கு உதவ வேண்டும். (2) மாணவர்கள் விழிப்புணர்வு, கற்பனை மற்றும் கற்கும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு அனுபவம், உழைப்பு, கிரகிப்பு ஆகியவற்றுக்கு வாய்ப்புகளை தோற்றுவிக்க ஃபோக்கெஸ்கோல் முயல வேண்டும். இதனால், மாணவர்கள் தம் வழிகளில் தன்னம்பிக்கை பெறுவர். தவிரவும், சுதந்திரமாக முடிவுகள் எடுக்கவும் சொந்த விஷயங்களில் நடவடிக்கை கொள்ளவும் திடம் பெறுவர். (3) ஃபோகெஸ்கோல் டென்மார்க் பணிபாட்டை மாணவர்களுக்கு பழக்கப்படுத்தும், புரிந்துகொள்ள உதவும்; மனிதன் இயற்கையுடன் உறவாடுவதைப் புரிந்துகொள்ள உதவும். சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில், செயல் நிறைந்த பங்கேற்பு, கூட்டுப் பொறுப்பு, உரிமைகள் மற்றும் கடமைகள் இவற்றுக்கு மாணவர்களை பள்ளிகள் ஆயத்தப்படுத்தும். எனவே, அறிவு சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம் இவ்வடிப்படைகளைக் கொண்டு, பள்ளியின் கற்பித்தலும் அன்றாட வாழ்வும் அமைக்கப்பட வேண்டும்."
தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி தனியார் சுயாட்சி பள்ளிகள்
பொதுமக்கள் தொடக்க மற்றும் செகன்டரிப் பள்ளிகள் அளிக்கும் கல்விக்குப் பதிலாக வேறு விதமான பள்ளிப் படிப்பை பெற்றோர் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, தனியார் சுயாட்சிப் பள்ளி ஒன்றில் தங்கள் குழந்தையைச் சேர்க்கலாம். இங்கே பள்ளி நடத்துவதற்கான செலவின் ஒரு பகுதிக்கென பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகிறார்கள்.
மற்ற கருத்துகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில்
சில பள்ளிகள் நகராட்சிகளின் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளிலிருந்து வேறுபட்ட கருத்துகள் மற்றும் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். உதாரணமாக, தத்துவங்கள் அல்லது மத வழிகள் பற்றி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்பித்தல், பொது மக்கள் பள்ளி முறையில் இடம் பெறாத விஷயங்களை, சில பள்ளிகள் கற்றுக் கொடுக்கின்றன.
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள் போன்றே கல்வி நிலை இருக்க வேண்டும்
எனினும் டென்மார்க் சட்டப்படி, தனியார் சுயாட்சிப் பள்ளிகளில் தொடக்க மற்றும் செகன்டரி நிலையில் தரப்படும் கல்வி, பொது மக்கள் பள்ளி முறையின் நிலைக்கு ஒத்திருக்க வேண்டும். உதாரணமாக அவையும் மாணவர்களுக்கு பொது மக்கள் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகள் வழங்கும் டேனிஷ் மொழித் திறன், கல்வி அறிவு, சமூகப் புரிந்துணர்வு போன்றே வழங்க வேண்டும்.
கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள்
மாணவர்கள் பள்ளியில் தங்குகிறார்கள்
ஒன்று அல்லது இரண்டாண்டுகளுக்கு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிக்கு, 8-வது, 9-வது அல்லது 10-வது வகுப்பிற்கு அனுப்பலாம். கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள், ஒருவித தங்கும் வசதி/ உணவு வசதிப் பள்ளிகள். அங்கு படிப்புக் காலம் முழுவதும் தங்கிப் படிக்க வேண்டும். அங்கு சுத்தம் செய்தல், சமையல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு உதவியை, மாணவர்கள் முறை வைத்துக் கொண்டு செய்வார்கள்.
சாதாரணமாக, இளம் வயதினர் கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளியை விரும்புவார்கள். ஏனெனில், பொதுப் பள்ளிக்கு ஒரு மாற்றைத் தேடுவார்கள் அல்லது தங்கள் குடும்பத்திலிருந்து சில காலம் தள்ளியிருக்க விரும்புவார்கள்.
தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம்
பொதுக் கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி, மனப்பக்குவம் ஆகியவற்றில் பாடத் திட்டம் கவனம் செலுத்துகிறது. ஆகையால், பல கீழ்நிலை செகன்டரி தொடரும் பள்ளிகள் நாடகம், இசை, விளையாட்டு, புகைப்படம், வேளாண்மை, கைவினைத் தொழில்கள் போன்ற படைப்பு மற்றும் நடைமுறை விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

பள்ளியில் சேர்தல்
பெற்றோர் பள்ளிக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்
பெயர் பதிவான மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகள் தானாகவே சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். குழந்தை பள்ளிக்கு முந்தைய வகுப்பில் சேர்வதற்கு வெகுநாள் முன்னரே பெற்றோர்கள் பள்ளியைப் பார்க்கவும் ஆசிரியருடன் பேசவும் அழைக்கப்படுகிறார்கள்.
பள்ளி தொடங்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
பள்ளி தொடங்குவதற்கு முன் நடைமுறைத் தகவல்களுடன் கடிதம் ஒன்று பெற்றோர்களுக்கு வரும். உதாரணமாக பை, பென்சில் உறை, பகலுணவு முதலானவற்றை குழந்தை முதல் நாள் கொண்டு வர வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கும். சாதாரணமாக மாணவர்கள் அன்றாட பகலுணவு கொண்டு வருவது வழக்கம். ஒரு சில பள்ளிகள் பகலுணவுத் திட்டம் ஒன்றை நடத்துகின்றன. வேறு பள்ளிகள் உணவகம் நடத்துகின்றன. அங்கு மாணவர்கள் குறைந்த விலையில் உணவு வாங்கலாம்.
தனியார் பள்ளிகளை பெற்றோர்கள் தாங்களேதான் தொடர்பு கொள்ள வேண்டும்
தனியார் சுயாட்சிப் பள்ளி ஒன்றில் தங்கள் குழந்தையைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் தாங்களேதான் பள்ளியுடன் தொடர்பு கொண்டு, தங்கள் குழந்தையின் பெயரை காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் நீண்ட காத்திருப்போர் பட்டியல் இருக்கும். ஆகையால், உங்கள் உழந்தை பள்ளியில் சேருவதற்கு பல ஆண்டுகள் முன்னரே குழந்தையின் பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாயிருக்கும். குழந்தை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதா என்பதை, பள்ளி தொடங்குவதற்கு வெகு காலம் முன்னதாகவே பள்ளிகள் பெற்றோருக்குத் தெரிவிக்கும்.
பள்ளிக் கல்வியின் குறிக்கோள்களும் பொருளடக்கமும்
கற்பிக்க வேண்டிய பாடங்களுக்கு சில குறைந்த பட்சத் தேவைகளை டென்மார்க் சட்டம் நிர்ணயித்துள்ளது. இந்தத் தேவைகள் தவிர மற்றபடி ஒவ்வொரு பள்ளியும் அதன் கல்வித் திட்டத்தை எப்படி வகுத்துக் கொள்வது என்பதை விருப்பப்படி தீர்மானிக்கலாம்.
சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் ஒரே பாடங்கள்தாம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன
நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளில் சிறுமிகள் சிறுவர்களுக்கு ஒரே பாடங்கள் தான் கற்பிக்கப்படுகின்றன. இது டேனிஷ், ஆங்கிலம், சமூகவியல், கணிதம் போன்ற கல்விப் பாடங்களும், படைப்பாற்றல் சம்பந்தப்பட்டவைகளுக்கும் பொருந்தும். இருபாலாரும் தையல், சமையல் மற்றும் கருவிகள் பயன்பாடு அனைத்தும் கற்கிறார்கள். மிகக் கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர்ந்து நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் சிறுவர், சிறுமியருக்குத் தனித்தனி குளியல் வசதிகள் இருக்கும்.
கிறித்துவமும் பிற மதங்களும்
சிறித்துவப் படிப்புகள்/மதக் கல்வி என்பது பொதுவாக மனிதாபிமானப் பிரச்சினைகளைப் பற்றி அமையும். அவற்றை எடுத்துரைப்பதும் விவாதிப்பதும், கிறித்துவ மற்றும் பிற மத வழிமுறைகள் தத்துவங்கள் இவற்றின் பின்னணியில் இருக்கும்.
கல்வி மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. கல்வியின் ஒரே நோக்கம் தகவல் தருவதுதான். இதனால் இக்கல்வி, பல நவீன சமூகங்களின் வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த பின்னணிகளை மாணவர்கள் புரிந்து கொள்ளுவதை மேம்படுத்த உதவுகிறது.
மதக் கல்வி வகுப்புகளிலிருந்து குழந்தைக்கு விலக்களிக்க பெற்றோர்கள் கோரலாம். குழந்தைகளுக்குத் தாங்களே கற்றுக் கொடுக்க விரும்புவதாக ஒரு கடிதம் கொடுத்து விலக்கு வாங்கிக் கொள்ளலாம்.
பாடங்களை சமாளிப்பதில் சிரமப்படும் குழந்தைகள்
வகுப்பில் ஏனைய மாணவர்களுக்கு சமமாக பாடங்களைக் கற்பதில் பெரும் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்கு, சிறப்பு கவனம் கிடைக்கும். உதாரணமாக, இது டிஸ்லெக்சியா (எழுதும் மற்றும் படிக்கும் திறத்தில் குறைபாடு) குழந்தைகளுக்குப் பொருந்தும்.

பாலியல் கல்வி: உடலும் மன உணர்ச்சிகளும்
பள்ளி பாலியல் கல்வி பாடங்களும் கற்பிக்கிறது. உடல் எப்படி வேலை செய்கிறது என்று மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. காதல் பற்றியும், கலவி, கருத்தரித்தல் மற்றும் கருத்தடை பற்றியும் விவரிக்கப்படுகிறது.
பாலியல் கல்வி பாடத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயம் அல்ல. பாடத்தின்போது இயல்பாக எழும் சந்தர்ப்பங்களில் ஆசிரியர் இத்தலைப்பின் விஷயங்களைச் சுட்டிக் காட்டுவார்.
இரண்டாம் மொழியாக டேனிஷ் மற்றும் தாய்மொழிப் பயிற்சி
இருமொழி பேசுபவர்
டேனிஷ் மொழி தவிர தாய்மொழி பேசும் குழந்தைகள் இரு மொழி பேசும் குழந்தைகள் ஆவர். இவர்கள் சுற்றியுள்ள மக்களுடன் தொடர்பு கொண்ட பிறகு தான் டேனிஷ் மொழியை கற்கத் தொடங்குகின்றார்கள் – உதாரணமாக பள்ளியில்.
பள்ளிக்கு முந்தைய வகுப்புக் குழந்தைகளுக்கான மொழி உணர்வைத் தூண்டுதல்
இரு மொழி பேசும் பள்ளிக்கு முந்தைய வகுப்புக் குழந்தைகளுக்குத் தேவையான உதவியை நகராட்சி அளித்தாக வேண்டும். அவர்கள் மேலும் விரைவாக டேனிஷ் மொழியைக் கற்பதற்கு அவர்களுடைய மொழி ஆற்றல் ஊக்குவிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மொழி ஆற்றலை தூண்டக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் அந்த உதவியில் அடங்கியிருக்க வேண்டும்.
இரண்டாம் மொழியாக டேனிஷ் பாடங்கள்
இருமொழி மாணவர்கள் நகராட்சி தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளிகளில் சேரும்போது, மாணவர்களின் தேவைகளை தலைமை ஆசிரியர் மதிப்பீடு செய்வார். குழந்தையை, இரண்டாம் மொழியாக டேனிஷ் மொழியைக் கற்க சிறப்பு வகுப்பிற்கு அனுப்ப வேண்டுமா என்பதை அவர் தீர்மானிப்பார். இரண்டாம் மொழியாக இருக்கையில், டேனிஷ் மொழியிலான அறிவைத் திருத்திக் கொள்ள மாணவர்களுக்குப் பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவை பள்ளிக்கு முந்தைய வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கிடைக்கும்.
தாய் மொழிப் பயிற்சி
ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகள், ஈ.ஈ.ஏ. நாடுகள் – நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லீச்டென்ஸ்டைன். ஃபாரோ தீவுகள், கிரீன்லாந்து இவற்றிலிருந்து வந்த குழந்தைகளுக்கு தாய் மொழியை நகராட்சிகள் கற்றுத் தர வகை செய்ய வேண்டும். எனினும் பாடங்கள், தனிப்பட்ட பள்ளி அல்லது நகராட்சி பள்ளியில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கற்பிக்கப்படும். உதாரணமாக தகுதியான மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் சேர வேண்டும்.
பிற நாடுகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு தன்னார்வ அடிப்படையில் தாய்மொழி பயிற்சியை நகராட்சிகள் வழங்க முன் வரலாம். இத்தகைய பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கவும் அவற்றுக்கு உரிமை உண்டு.
பள்ளி நேரத்திற்குப் பிந்தைய பொழுது போக்கு மையங்களும் பள்ளி நேரத்திற்குப் பிந்தைய கவனமும்
4-வது வகுப்பு வரையிலும் பள்ளி நேரத்திற்குப் பிறகு பகல் வேளை கவனிப்பு
பள்ளி நேரத்திற்குப் பிறகு பொழுது போக்கு மையம் அல்லது கவன ஏற்பாட்டிற்கோ (SFO) குழந்தைகள் செல்லலாம். 4-வது வகுப்பு தொடங்கும் வரை அவர்கள் அங்கு போகலாம். அங்கு நண்பர்களுடன் விளையாடலாம். வீட்டுப் பாடங்களைச் செய்யலாம். அல்லது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். பள்ளி நேரத்திற்குப் பிறகு பொழுதுபோக்கு மையம் மாலை 5 மணி 6 மணி அளவில் மூடப்படும்.
இந்த வசதிகளுக்கான செலவில் ஒரு பகுதியை இலவச அனுமதி இல்லாத பெற்றோர்கள் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தொகை பெற்றோர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்திருக்கும்.
வயதான குழந்தைகளுக்கு கிளப் வசதிகள்
சில நகராட்சிகள் இளைஞர்களுக்கு கிளப் வசதிகள் அளிக்கின்றன. பள்ளிக்கு பிறகான பொழுதுபோக்கு மையம் அதிக வயதினருக்குப் பொருந்தாது என்பதால் இளைஞர் கிளப் ஏற்பாடு உள்ளது.
பள்ளி முகாம்
வகுப்பின் சமூக வாழ்க்கைக்கு முக்கியமானது
பள்ளி முகாம் பாடதிட்டத்தின் ஒரு பகுதி, சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துவதிலும் மாணவர்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதிலும் அது முக்கியமான பங்காற்றுகிறது. பள்ளி முகாம், பள்ளி ஆண்டில் மிக முக்கியமானதொரு நிகழ்ச்சியென பல மாணவர்கள் கருதுகிறார்கள்.
பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டும் விளக்கங்களை எழுதியும் மாணவர்கள் பள்ளி முகாமுக்கு ஆயத்தம் செய்து கொள்கிறார்கள்.
முகாமில் மாணவர்கள் தங்கள் உணவைத் தாங்களே சமைத்துக் கொள்கிறார்கள். மீன் பிடிக்கச் செல்கிறார்கள், அல்லது மிதி வண்டி ஓட்டுகிறார்கள். தீ மூட்டி சுற்றி அமர்ந்து கேளிக்கையில் ஈடுபடுகிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது கடலில் நீந்தப் போகிறார்கள். சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் தனித்தனி வசதிகள் இருக்கின்றன.


பாதுகாப்பான சூழலில் பள்ளி முகாம் பாடத் திட்டத்தின் பகுதியான பள்ளி முகாம் நேர்முக மற்றும் ஆக்கபூர்வமான அனுபவத்தை மாணவர்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் ஒரு பாதுகாப்பான சூழலில் மாணவர்கள் பயில்கிறார்கள். தங்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பலாம் என்று பெற்றோர் உணரும் வகையில் உணவு, தங்குமிடம் போன்ற நடைமுறை விஷயங்கள் அவர்களுடன் முன் கூட்டியே விவாதிக்கப்படுகின்றன.
பள்ளி முகாமுக்கு பணம் சேமிக்க மாணவர்கள் உதவுகிறார்கள்
குழந்தைகள் எத்தனை தடவை மற்றும் எவ்வளவு காலத்திற்கு முகாமுக்கு போகலாம் என்பது பள்ளியைப் பொறுத்தது. குறைந்த பட்சம் இரண்டு இரவுகள் தங்கும் வண்ணம், டென்மார்க்கில் எங்காவதோ, அல்லது வெளிநாட்டிலும் ஏற்பாடு அமையும்.
வெளிநாட்டில் பள்ளி முகாமை நடத்துவதற்கு நிதி திரட்டி பள்ளிக்கு உதவ, உயர் வகுப்பு மாணவர்கள் ஓய்வு நேரத்தில் வேலை செய்வதும் நிறையவே உண்டு.
பெற்றோர் பங்கேற்பு
டென்மார்க் தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரிப் பள்ளி (Folkeskole-loven) சட்டத்தின்படி, பள்ளித் தொடர்பான விஷயங்களில் பெற்றோருக்கு செல்வாக்கு உண்டு. பள்ளி நிர்வாகக் குழு இந்த உரிமையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். நிர்வாகக் குழுவில் பள்ளிப் பிரதிநிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.


பள்ளி நிகழ்ச்சிகளில் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள் பள்ளி வாழ்க்கையில் அக்கறை செலுத்தவும், தேவையான மாற்றத்தைத் தோற்றுவிக்கவும், பெற்றோருக்கு பள்ளிகள் பல வாய்ப்புகள் அளிக்கின்றன. பல பெற்றோர்களும், பெற்றோர் கூட்டங்கள், விழாக்கள் மற்றும் இதர பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். பள்ளியில் பாடங்களும் அன்றாட வாழ்க்கையும் எப்படியிருக்கும் என்பதை உணரவும், குழந்தை என்ன செய்கிறது என்பதை அறியவும் இது ஒரு நல்ல வழி. அதே சமயம் மற்ற பெற்றோர்களை சந்திக்கவும் வாய்ப்பளிக்கும்.
மேல்நிலை செகன்டரிப் பள்ளி
தொடக்க மற்றும் கீழ்நிலை செகன்டரி கல்வி முறையின் 9-வது அல்லது 10-வது வகுப்பு நிலையை முடித்த மாணவர்களுக்கு, பல கல்வி திட்டங்களையும் பயிற்சி முறைகளையும் டென்மார்க் கல்வி முறை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் பலவும் இளம் வயதினருக்கு மட்டுமே. மற்ற திட்டங்கள் வயது அதிகமுள்ளவர்களுக்கும் இடமளிக்கும்.
மேல்நிலை செகன்டரி கல்வி
பொது மற்றும் தொழில் மேல்நிலை செகன்டரி கல்வி வகுப்புகள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கொண்டவை. மேல்நிலை செகன்டரி பள்ளித் தேர்வில் தேர்வது, செகன்டரி கல்விக்குப் பிந்தைய படிப்பில் சேரத் தகுதியளிக்கிறது. டென்மார்க் மேல்நிலை செகன்டரிக் கல்வியில் அடங்கியவை. இவை:
• மேல்நிலை செகன்டரி பள்ளிகள் (Gymnasium) – இதற்கு மூன்று ஆண்டுகளும், வயது வந்தோர் மேல்நிலை செகன்டரி நிலை (Studenterkursus) படிப்புக்கு மேலும் 2 அல்லது 3 ஆண்டுகளும் ஆகும். இவ்விரு படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மேல் நிலை செகன்டரி பள்ளி தேர்வை (Studentereksamen) எழுதுகிறார்கள்.
• மேல்நிலைக் கல்விக்கு (HF) ஆயத்தம் செய்யும் 2 ஆண்டு கல்விப் படிப்பு
• மேல்நிலை செகன்டரி மட்டத்தில் 2 ஆண்டு அல்லது 3 ஆண்டு தொழில் பயிற்சி திட்டங்கள். இந்தத் திட்டங்களில் அடங்கியவை இவை. உயர் தொழில் நுட்ப இயல் தேர்வு (HTX) மற்றும் உயர் வணிக இயல் தேர்வு (HTX) திட்டங்கள். அவை மாணவர்களை தொழிற்துறைக்கும் மேல்படிப்பு மற்றும் உயர் கல்விக்கும் தகுதியாக்குகின்றன.

தொழிற்கல்வி, கட்டாயக் கல்விக்குப் பிந்தைய கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள்
தொடக்க மற்றும் கீழ்நிலை கல்வியில் 9-வது அல்லது 10-வது வகுப்பிற்குப் பிறகு இறுதித் தேர்வில், தேரிய இளம் மற்றும் அதிக வயது மக்கள், பல வேறு பொது மற்றும் தொழிற்கல்வி, மேல்நிலை செகன்டரிக் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
3 ஆண்டு 4 ஆண்டு தொழிற்கல்வி, பயிற்சித் திட்டங்கள்
3 ஆண்டு 4 ஆண்டு தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களில் தெரிவு செய்ய, சுமார் 100 வெவ்வேறான வகைகள் இருக்கின்றன. அவற்றில் பணியிடத்திற்குரிய விளக்கம் மற்றும் செயல்முறை பயிற்சி அடங்கும். இதனால் வணிகம், நிர்வாகம், நிதி, கட்டுமானத் தொழில், இரும்பு மற்றும் உலோகத் தொழில்கள், வரைகலை, போக்குவரத்து, வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் ஆகிய துறைகளில் பல வேலைகளில் சேரத் தகுதி கிடைக்கிறது.
2 ஆண்டு சமூகவியல் மற்றும் சுகாதார கல்வித் திட்டங்கள்
மற்றொரு சாத்தியக் கூறு 2 ஆண்டு சமூகவியல் மற்றும் சுகாதார பயிற்சித் திட்டம். இந்தத் திட்டம் சமூக வியல் மற்றும் சுகாதார உதவியாளர் அல்லது பணியாளராக வேலை பெற மாணவர்களை தகுதியாக்குகிறது.
உற்பத்தி பள்ளிகள்
டென்மார்க்கெங்கும் காணப்படும் 100 உற்பத்தி பள்ளிகளில் ஒன்றில் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் சேரலாம். இந்த வகை பள்ளி பாட விளக்கத்தையும், செயல்முறை பயிற்சியையும் இணைந்து வழங்குகிறது. அங்கு பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் மாணவர்கள் பங்கு பெறுகிறார்கள்.
செயல்முறை பயிற்சி
பயிற்சித் தகுதி இடத்தை மாணவர்கள் தாங்களே தேடிக் கொள்ள வேண்டும்
கட்டாயக் கல்விக்குப் பிந்தைய கல்வி திட்டங்கள் பலவும் பணியிடம் பற்றிய பாட விளக்கங்களையும் செயல்முறை பயிற்சியையும் ஒரு பயிற்சித் தகுதியை இணைந்து வழங்குகின்றன.
நீங்களேதான் அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை பயிற்சியிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அது சிரமமாக இருக்கலாம். பயிற்சித் தகுதி ஒன்றைப் பெறுவதற்கு தங்கள் முயற்சிகளில் பல இளம் வயதினர் மீண்டும் மீண்டும் ஏமாற்றமடைவதும் உண்டு.
பள்ளியில் செயல்முறை பயிற்சி
பள்ளியின் ஆண்டின் முதல் பகுதிக்குப் பிறகு உங்களுக்கு பயிற்சி தகுதிக்கான இடத்தைப் பெற முடியவில்லையானால், உங்கள் செயல்முறை பயிற்சியை பள்ளியிலேயே செய்யலாம். இதனால் உங்களுக்கு பள்ளியில் தொழிற்சாலைப் பயிற்சியும், உண்மையான ஒரு பணியிடத்திலேயே பயிற்சித் தகுதி பயிற்சியும் இணைந்து கிடைக்கும்.
இப்போதும் நீங்கள் பயிற்சித் தகுதி இடத்தை தேடியாக வேண்டும். ஆனால் பாதி நேரத்திற்கு மட்டுமே.
பயிலுநர் ஊதியம்
நீங்கள் செயல்முறைப் பயிற்சியில் இருக்கும் வரை உங்களுக்கு பயிலுநர் ஊதியம் ஒன்று கிடைக்கும். அது அரசு கல்வி உதவித் தொகையை விட அதிகம். ஆனால் முறையான ஊதியங்களை விடக் குறைவு.


மாணவர்-ஆலோசகரை தொடர்பு கொள்ளவும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும், மாணவர்க்கு ஆலோசகர் ஒருவர் உண்டு. அவர் சிறப்பாகப் பொருந்தும் கல்வித் திட்ட வகையை தெரிவு செய்வதில் மாணவர்களுக்கு உதவுகிறார்.
செகன்டரிக்குப் பிந்தைய கல்வி
நீங்கள் மேல்நிலை செகன்டரி கல்வித் திட்டத்தை முடித்திருந்தால், செகன்டரிக்குப் பிந்தைய கல்விக்குப் போகலாம். இதில் மூன்று வகையில் உள்ளன.
• 2 ஆண்டு குறுகிய கால செகன்டரிக்குப் பிந்தைய கல்வித் திட்டம். இந்த படிப்புகள் மாணவர்களை, உதாரணாக ஒரு சோதனைக்கூட தொழில் நுட்பமறிந்தோராக, ஒரு சந்தை பொருளாதார நிபுணராக, ஒரு மின்சாரத் தொழிலாளராக அல்லது ஒரு பொறியியல் நுட்பமறிந்தவராக ஆவதற்கு தகுதியுள்ளவர்களாக்குகின்றன.
• 3 ஆண்டு அல்லது 4 ஆண்டு மத்திய காலத் திட்டங்கள். இவை ஒரு வேலைக்கு தகுதியாக்குகின்றன. உதாரணமாக, ஒரு ஆசிரியர், பள்ளிக்கு முந்தைய கல்வி ஆசிரியர், ஒரு மருத்துவப் பணியாளர் அல்லது சமூகப் பணியாளர்.
• நீண்ட காலத் திட்டங்கள் – இவை பல்கலைக் கழகங்கள் அல்லது நிகரான தகுதியுடைய கழகங்களில் கிடைப்பன. ஒரு மருத்துவர், பொறியியல் முதுநிலைப் பட்டம் அல்லது மேல்நிலை செகன்டரி நிலை ஆசிரியர் போன்ற தகுதிகளுக்கு அவை வகை செய்கின்றன. ஒரு பல்கலைக் கழகப் படிப்பிற்கு பிற்சேர்க்கையாக முனைவர் படிப்பும் (Ph.D) மேற்கொள்ளலாம். இதற்கு சுமார் 3 ஆண்டுகள் ஆகலாம். அந்த கால கட்டத்தில் நீங்கள் சம்பளம் பெறும் ஆராய்ச்சியாளராகவும் கற்பிப்பவராகவும் வேலை செய்வீர்கள்.
சேர்வதற்கான தகுதிகள்
மாணவர் எண்ணிக்கை அளவு மற்றும் சேர்வதற்கான தகுதிகள்
ஒவ்வோர் ஆண்டும், டென்மார்க் கல்வி அமைச்சகம், மாணவர் கல்வித் திட்டத்திற்கான எண்ணிக்கையை நிர்ணயம் செய்கிறது. மாணவர் எண்ணிக்கை நிலை, தனிப்பட்ட திட்டங்களுக்கு மாணவர் சேர்க்கையின் தேவைகளை தீர்மானிக்கிறது.
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், முந்தைய நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டும் மாணவர்கள் சேர்க்கப்படலாம்.
நுழைவுத் தேர்வு
இந்த கல்விகள் சிலவற்றில் சேர்வது நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது நடிப்பு, திரைப்பட இயக்கம், இதழியல் மற்றும் வடிவமைப்பு போன்ற கலை மற்றும் படைப்பாற்றல் துறைகளுக்கு வழக்கமாகப் பொருந்துகிறது.
கல்வித் திட்டத்திற்கு மற்றும் சக மாணவர்களுக்கு உங்கள் அறிமுகம் பல பல்கலைக் கழகங்களும் மற்ற உயர் கல்விக் கழகங்களும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அறிமுகத் திட்டத்தை ஏற்பாடு செய்கின்றன. புதிய மாணவர்கள் கல்வித் திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன், எழுத்துரை சமர்ப்பித்தல், விவாதங்கள், மற்றும் விருந்துகள் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். பல சமயங்களில், இந்தத் திட்டத்தில் ஓர் இடத்திற்கு சில நாள்கள் சுற்றுலா செல்வதும் அடங்கும்.
மன்றங்களும் சமூக சங்கங்களும்
மாணவர்கள் பாட அடக்கத்தை உருவாக்க உதவலாம்
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் கல்வி மன்றங்கள் அதாவது பாட விஷயம் தொடர்பான மன்றங்களை, மாணவர் கல்விப் பிரிவு மன்றங்களை அல்லது மாணவர்களின் மன்றங்களை அமைத்துக் கொள்ள உரிமை உண்டு. இந்த மன்றங்கல் பொதுவாக மாணவர்களின் நலன்களை பாதுகாப்பதுடன் கல்வியின் அடக்கப் பொருள்கள் மற்றும் தரம் தொடர்பாக கோரிக்கைகளை சமர்ப்பிக்கும். மாணவர் கல்விப் பிரிவிற்கு போட்டியிடுவதன் மூலம் எவரும் கல்வியின் அடக்கத்தை உருவாக்கலாம்.
சங்கங்கள்
பல கல்வி நிறுவனங்களில் பல சமூக நல சங்கங்களும் இருக்கின்றன. அவை பல்வேறு மாணவர் பிரிவின் நலன்களை கவனித்துக் கொள்கின்றன.
டென்மார்க்கின் கல்வி முறை
செயல்பாடுகள் உயர்நிலைக் கல்வி கழகங்களின் பல மன்றங்களும், சங்கங்களும் மாணவர்களுக்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளுக்கு வகை செய்வதுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களும் விளையாட்டுகள் மற்றும் விழாக்களுக்கென சொந்தமான சிறப்பு படிப்புச் சூழலையும் கொண்டுள்ளன. கல்வி நிறுவனத்தின் வாழ்க்கை வகைக்குப் பங்காற்றுவது மாணவர்களையே பெரிதும் பொறுத்திருக்கிறது.
அரசு தரும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் கடனுதவித் திட்டம் ( SU)
வாழ்க்கைச் செலவுகளுக்கு நிதி உதவி
பல கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் இலவசம். எனினும் மாணவர் என்ற முறையில் உங்களுக்கு வாழ்க்கைச் செலவுகள், புத்தகங்கள் முதலானவற்றுக்குப் பணம் தேவைப்படும். ஆகையால் டென்மார்க் அரசு, மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த உதவிக்கு தகுதி உடைய ஒரு அங்கீகரித்த படிப்புத் திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அவ்வுதவியை வழங்குகிறது.
கல்வி உதவித் தொகைகள், கடனுதவிகள் மற்றும் பள்ளி படிப்புக்குப் பின் வேலைகள்
நிலையான மாதத் தொகை வடிவில் அரசு வழங்கும் உதவிப் பணத்தை நீங்கள் பெறலாம். இது சாதாரணமாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியிருக்காது. நீங்கள் படிப்பு முடிந்த பிறகு வட்டியுடன் திருப்பித் தர வேண்டிய கடன் உதவியும் உங்களுக்கு வழங்கப்படலாம். மாணவர் கடனுக்கு சிறப்பான குறைந்த வட்டி விகிதம் இருக்கும்.
பல மாணவர்கள் கடன் பெறாமல் இருக்க முடிவு செய்வர். அதற்குப் பதிலாக ஓய்வு நேரத்தில் வேலை ஒன்றை செய்கிறார்கள். படிப்பு முடிந்த பின் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனைத் தவிர்ப்பதற்கு அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

வயது வந்தோர் கல்வி
பொதுவான வயது வந்தோர் தொழிற்கல்வி
பள்ளிப் படிப்பிற்கு கூடுதலாக பயிற்சி பெற வாய்ப்பு
பொதுவான வயது வந்தோர் தொழிற்பயிற்சி 18 வயதிற்கு மேற்பட்ட எல்லாக் குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டம் எந்தக் குறிப்பிட்ட தொழில் அல்லது கல்வித் தகுதியையும் நோக்கமாகக் கொண்டதல்ல. ஆனால், இது பொது விஷயங்கள் குறித்து நமது பள்ளிப் படிப்பை மேம்படுத்திக் கொள்ளவும், கூடுதல் பயிற்சி பெறவும் வாய்ப்பளிக்கிறது.
கணிதம், ஆங்கிலம், இயற்கை விஞ்ஞானம், தத்துவம், மனவியல், இரண்டாம் மொழியாக டேனிஷ், கணிணி அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகியவை கற்பிக்கப்படும் பாடங்களாகும்.
ஒரு தேர்வுடன் நிறைவடையும்
9-வது அல்லது 10-வது வகுப்பு அல்லது உயர் ஆயத்தத் தேர்விற்கு (HF) பிறகு இறுதித் தேர்வு ஒன்றுக்கு சமமான தேர்வுடன் திட்டத்தை நிறைவு செய்யலாம்.
வயது வந்தோர் தொழிற்பயிற்சி மையம் (VUC) ஒன்றில் வகுப்பு நடக்கிறது பகல் மற்றும் மாலை இரு வேளை வகுப்புகளும் உண்டு. புதிய வகுப்புகள் முறையான இடைவெளிகளில் ஆண்டுதோறும் நடக்கும். ஆகையால், உங்களுக்கு சரியாகப் பொருந்தும் சமயத்தில் நீங்கள் கற்கலாம்.
வெளிநாட்டு கல்விப் பட்டங்களின் அங்கீகரிப்பு
உங்கள் கல்வித் தகுதிகளை டென்மார்க்கிற்கு மாற்ற முடியுமா?
வெளிநாட்டில் நீங்கள் உங்கள் கல்விப் பட்டம் பெற்றிருந்தால், உங்கள் கல்விப் பட்டம் டென்மார்க்கில் அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது இங்கே உங்கள் கல்வித் தகுதியை பயன்படுத்த உங்களுக்கு கூடுதலாக பயிற்சி தேவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
ஒரு நகராட்சி அறிமுகத் திட்டம் அல்லது வேறு ஏதாவது செயல்பாட்டுத் திட்டம் ஒன்றில் நீங்களஅ பங்கேற்பதாக இருந்தால் உங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் பணியாளரைத் தொடர்பு கொண்டு அறிவுரை பெறலாம்.
வெளிநாட்டுக் கல்வித் திட்ட கணிப்பு பற்றிய உதவி
வெளிநாட்டில் நீங்கள் பெற்ற கல்விப் பட்டங்கள் டென்மார்க் கல்வி மற்றும் தொழிலாளர் சந்தைத் தரங்களுடன் எவ்வாறு ஒப்பிடக்கூடியவை என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அமைப்பு டென்மார்க் வெளிநாட்டுக் கல்வித் தகுதி மதிப்பீட்டு மையம் (CVUU).
வெளிநாட்டு வயது வந்தோர்க்கான டேனிஷ் மொழி வகுப்புகள்
வெளிநாட்டைச் சேர்ந்த வயது வந்தோர்க்கு டேனிஷ் மொழிப் பாடங்கள்
டென்மார்க்கில் குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்ட 18 வயதிற்குப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் டேனிஷ் மொழியிலும், சமூக விவகாரங்களிலும் இலவசமாக பாடங்கள் கற்க உரிமை உண்டு.
பங்கு பெறுவோர் இறுதித் தேர்வு ஒன்றை எழுதலாம். அதை, உதாரணமாக கல்வித் திட்டம் ஒன்றில் சேருவதற்கு பயன்படுத்தலாம். நிரந்தர இருப்பிட அனுமதி அல்லது டேனிஷ் குடிமை பெற வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், சிறப்பு விதிவிலக்குகள் இல்லாதவரை நீங்கள் எப்படியும் இந்தத் தேர்வில் தேறியே ஆக வேண்டும்.
புதிதாக வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கான அறிமுகத் திட்டத்தில் நீங்கள் பங்கு பெறுவதாக இருந்தால், நீங்கள் நகராட்சிப் பகுதியில் வசிப்பவரான பிறகு ஒரு மாதத்திற்கு மேற்படாமல் இந்த பயிற்சியை நகராட்சி உங்களுக்கு அளிக்க முன்வர வேண்டும். திட்டத்தை பல்வேறு வழிகளில் செயல்படுத்தலாம். உதாரணமாக பங்கேற்பவர்களுக்கு தனித்தனியாக பயிற்சி அளிக்கலாம் அல்லது பெரிய அல்லது சிறிய குழுக்களாக நகராட்சி மொழிப் பயிற்சி மையம் தொழிற்கல்விக்கூடம் அல்லது வேலை சூழலில் கற்பிக்கலாம். இதோடு, தொலைக் கல்வியையும் இணைத்து கற்பிக்கலாம்.

டேனிஷ் மொழி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்வது கட்டாயமாகும்
நிதி உதவி குறைக்கப்படலாம்
டென்மார்க் வந்து சேர்ந்த பிறகு விரைவாக உங்களால் வேலை தேடிக் கொள்ள முடியவில்லையெனில், அறிமுக உதவி வடிவில் டென்மார்க் அரசின் நிதி உதவி உங்களுக்குத் தேவையாக இருக்கும். அறிமுகச் சலுகைகளைப் பெறுவதற்கு நீங்கள் டேனிஷ் மொழிப் பயிற்சியிலும் செயல்பாட்டுத் திட்டங்களிலும் சுறுசுறுப்பாகப் பங்கேற்று, தொழிலாளர் சந்தைக்குக் கிடைக்கும்படி செய்து கொள்ள வேண்டும். இதனால் கிடைக்கும் வேலை வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையினால், பயிற்சிப் பள்ளி பங்கு கொள்வோரின் வருகையைப் பதிவு செய்து, வராதவர்களை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. தக்க காரணம் இன்றி வராமல் இருந்தால், நகராட்டி அதிகாரி, நிதி உதவியை குறைக்கவோ நிறுத்தவோ வேண்டியிருக்கும்.


டேனிஷ் மொழி – சமூகத்திற்கு உங்கள் திறவுகோல் டேனிஷ் மொழி கல்வி, வேலை மற்றும் சமூக வாழ்க்கைக்கு உங்கள் திறவுகோலாகும். மேலும், மொழியை கற்றுக் கொள்வது டென்மார்க் சமுதாயத்தில் உங்கள் உரிமைகளையும் கடமைப் பொறுப்புகளையும் புரிந்து கொள்வதற்கு முக்கியமாகும். சட்டத்தை பின்பற்றாமல் இருப்பதற்கு சட்டம் தெரியாது என்று சொல்வது காரணமாக இருக்க முடியாது. மேலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் எதிர்நோக்கும் பல பாதுகாப்பு விதிகளும் வழக்கமாக டேனிஷ் மொழியில்தான் எழுதப்பட்டிருக்கும். டென்மார்க் மக்களுடன் எவ்வளவுக்கெவ்வளவு நிங்கள் அதிகமாக பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவாக டேனிஷ் மொழியைக் கற்றுக் கொள்வீர்கள். ஆகையால் டென்மார்க் மக்களை சந்திக்க வேண்டியது முக்கியமாகும். உதாரணமாக மாலை வகுப்புகளில் விளையாட்டுகளில், அல்லது மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் நீங்கள் உள்ளூர் சங்கங்கள் அல்லது பெற்றோர் சங்கங்களில் சேரலாம். பல அண்டை வீடுகளில் உங்கள் வீட்டு வேலையில் உதவி கிடைக்கலாம்.

லேபிள்கள்:

போதைவஸ்து

போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டிரு ப்பவர்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண் டிருக்கிறார்கள். சமுதாயத்தை சிறிது சிறி தாக அரிக்கும் புற்றுநோய் என்று இதை கூறலாம். இன்று ஏராளம் இளம் பரம் பரையினர் போதைவஸ்துப் பாவனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஆண்கள் மாத்தி ரமன்றிப் பெண்களும் இதில் அடங்குவர். போதை வஸ்துப் பழக்கத்துக்கு உள்ளாகி யவர்களால் அதைக் கைவிட முடியாது. அவர்கள் உட்கொள்ளும் போதைவஸ்து படிப்படியாகச் சீக்கிரமாகவே அவர்களை மரணத்தின் வாசலுக்குக் கொண்டு போய் விடும். நாட்டின் எதிர்கால சந்ததியின் ஒரு பகுதி நாட்டுக்கும் பிரயோசனமின் றித் தங்களுக்கும் பிரயோசனமின்றிச் சீரழி வதற்குப் போதைவஸ்து காரணமாகின் றது.
போதைவஸ்துப் பாவனையாளர்கள் தங் களை அழித்துக்கொள்வது மாத்திரமன்றிச் சமுதாயத்துக்கும் பிரச்சினையானவர்கள் ஆகின்றனர். போதைவஸ்து வாங்குவதற் குப் பணம் இல்லாத போது சிறுசிறு திரு ட்டுகளில் ஈடுபட்டுப் பின்னர் பெரிய திருடர்களாக மாறுகின்றனர்.
சிலர் வழிப் பறிக் கொள்ளைகளிலும் ஈடுபடுகின்றனர். வன்புணர்ச்சி, கொலை போன்ற பல குற் றச் செயல்களுக்குப் போதைவஸ்துப் பாவனை காரணமாக இருப்பதை உத்தியோகபூர்வ தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.
போதைவஸ்துப் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நற்பிர சைகளாக்கும் திட்டமொன்றை அரசாங் கம் நடைமுறைப்படுத்துகின்றது.
இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. புனர்வாழ்வுத் திட் டத்தின் கீழ் நற்பிரசைகளாக வெளியேறு பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவா கவே உள்ளது. மேலும், போதைவஸ்து வர்த்தகர்கள் தங்கள் விற்பனையை அதிக ரிப்பதற்காகப் புதுப்புதுத் தந்திரோபாயங் களைப் பின்பற்றும் நிலையில் அரசாங்கத் தின் புனர்வாழ்வுத் திட்டம் பெரிதாக வெற்றியளிக்கப் போவதில்லை. எனவே போதைவஸ்து வர்த்தகத்தை இல்லாதொ ழிப்பதற்கான செயற்பாட்டுக்கு அரசாங் கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
போதைவஸ்து வர்த்தகத்துக்கு எதிரான யுத்தம் இலகுவானதாக இருக்காது. இந்த வர்த்தகர்கள் சாதாரணமானவர்களல்ல. இவர்களுக்குப் பல்வேறு மட்டங்களில் வலுவான தொடர்புகள் உண்டு. பாதாள உலகத்துடனும் நெருக்கமான தொடர்பு கள் உண்டு. அரசியல் மட்டத்திலும் தொட ர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். குற் றச் செயல்களுக்கும் வேறு சட்டவிரோதச் செயல்களுக்கும் இவர்கள் பின்நிற்காதவர் கள். சுருக்கமாகக் கூறுவதானால் போதை வஸ்து வர்த்தகர்கள் ஒரு ‘மஃபியா’ கூட் டம் எனலாம்.
போதைவஸ்துத் தடுப்புப் பிரிவு இப் போது பொலிஸ் திணைக்களத்தில் இய ங்குகின்றது. இப்பிரிவு தீவிரமாகச் செயற் படுகின்ற போதிலும் போதைவஸ்து வர் த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு இப்பி ரிவின் ஆளணியும் வளங்களும் போதா திருப்பதை நடைமுறையில் உணரக்கூடிய தாக இருக்கின்றது.
இப்பிரிவை ஆளணி ரீதியாகவும் வளரீதியாகவும் மேலும் வலு ப்படுத்துவதோடு சிரேஷ்ட அதிகாரியொ ருவரைப் பொறுப்பாக நியமிப்பதன் மூலம் போதைவஸ்து வர்த்தகத்தை இல் லாதொழிக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கடமையாக அரசாங்கம் இதைக் கருத வேண்டும்.

லேபிள்கள்: ,

பெற்றோரின் மது பாவனையால் பிள்ளைகளின் கல்வியின் தாக்கம்

ஒரு நாட்டின் மிகப் பெரிய செல்வம் இளைஞர்க ளும் யுவதிகளும். எதிர்காலத்தில் நாட்டை நிர்வ கிக்கப் போகின்றவர்களும் நிர்மாணிக்கப் போகி ன்றவர்களும் அவர்களே. இளைய சந்ததியினர் தவ றான பாதையில் வழிநடத்தப்படுவதைத் தடுத்து ஆக்க பூர்வமான சக்தியாக அவர்களை வளர்த்தெடுக்கும் கட ப்பாடு அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி சமூகத்துக்கும் உண்டு.
ஒரு புறத்தில் அராஜக அரசியல் சக்திகள் இளைஞர்களை தங்கள் வழிக்குத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன. அண் மைக்காலமாக இடம்பெற்று வரும் பல்கலைக்கழக மாண வர்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்த வகையானவை. விர க்தியடைந்த அரசியல்வாதிகள் மாணவர்களைத் தவ றான பாதையில் வழிநடத்துகின்றார்கள். இந்த ஆபத்தி லிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அரசாங் கம் நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளை பெற்றோ ரும் இவ்விடயத்தில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
இளைய சந்ததியினரின் எதிர்காலத்தைச் சிதைக்கும் பிரதா னமான இன்னொரு விடயம் போதை வஸ்துப் பாவனை க்கு அவர்களை அடிமைப்படுத்துவதற்கு மேற்கொள்ள ப்படும் முயற்சி. இந்த முயற்சி மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.
அண்மையில் கஞ்சா கலந்த பெருந்தொகையான பாபுல் பைக் கற்றுகளும் பைக்கற்றில் அடைக்கப்படாதிருந்த பெரும ளவு பாபுல்களும் கொழும்பு வர்த்தக நிலையமொ ன்றிலிருந்து கைப்பற்றப்பட்டன. கஞ்சாவை அரைத்து டப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மலையக நகரமொன்றிலிருந்து அவை கைப்பற்றப்பட்ட தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
சிறிய அளவில் போதையூட்டப்பட்ட பாபுல் போன்றவை பெருமளவில் மாணவர்களுக்கே விற்பனை செய்யப் படுகின்றன. பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள சில கடைகளில் இவை இரகசியமாக விற்கப்படுவதாகத் தக வல்கள் வெளியாகின்றன. அதேநேரம், மாணவர்கள் நடமாடும் இடங்களில் இவற்றைக் கொண்டுதிரிந்து விற் பனை செய்பவர்களும் உள்ளனர்.
சிறிய அளவுப் போதையுள்ள இவற்றைக் கணநேர இன்ப த்துக்காகப் பாவிக்கும் இளம் பராயத்தினர் காலப்போக் கில் கூடுதலான வீரியமுள்ள போதைப் பொருட்களைப் பாவிப்பது மாத்திரமன்றி அதற்கு அடிமைப்படும் நிலையும் ஏற்படும். இதற்கு உடனடியாக முடிவு கட்டா விட்டால் நாட்டின் எதிர்கால சந்ததி நலிவுற்றுவிடும்.
போதை வஸ்துக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பித்திருப்ப தாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் கூறினார். பெரு மளவில் போதை வஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவ ர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுப் பதன் மூலமே இந்த யுத்தத்தில் அவர் வெற்றியீட்ட முடி யும். போதை வஸ்து வர்த்தகம் முற்றாக ஒழிக்கப்படும் போது பாவனை தானாக இல்லாது போகும். பெரிய போதை வஸ்து வர்த்தகர்களுக்கும் அவர்களின் விற் பனை முகவர்களுக்கும் எதிரான நடவடிக்கை மாத்தி ரம் போதுமானது எனக் கருதிவிடக்கூடாது. இளம் பரா யத்தினரைப் போதை வஸ்துப் பாவனைக்குத் தூண்டும் பாபுல் போன்றவற்றின் விற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது நாட்டின் எதிர்கால சந்ததி யைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானது.
இவ்விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின் றார்கள் என்பதையிட்டுப் பெற்றோர் அவதானமாக இரு ப்பார்களேயானால் அப்பிள்ளைகள் தவறான வழிக்குத் திரும்புவதைத் தடுக்க முடியும்.

லேபிள்கள்:

கலைத்திட்டம்

பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் இந்நாட்டுப் பிள்ளைகள் எந்தவிதமான தங்குதடையின்றி சீரான சீர்கல்வியை இடையறாது தொடரவும் அதற்கான ஊக்கவிப்பாக அவர்களுக்கான நூல்களும், சீருடை மற்றும் உணவு போன்றனவும் வழங்கப்பட்டு வருகின்றமை நாமறிந்த விடயம்தான்.
அதுமட்டுமா என்ன? மாணவர்களுக்கு எவ்வாறு கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்கிற பல்வேறு நுணுக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், உளவியற் கருத்துக்கள் போன்றவற்றையும் ஆசிரியருக்கு பயிற்றுவித்து அதன் ஊடாக சிறந்த கல்வியையும், சீர்மிகு ஒழுக்க விழுமியங்களுடன் கூடியதான நாட்டிற்குகந்த பண்பாளனாகவும் மாற்றி நாளைய உலகின் தலைசிறந்த தலைவர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், இன்னும் பல நோக்குகளையும் அடைந்து கொள்வதற்காக பாடசாலைக் கல்வி நடைமுறை தரம் ஒன்றிலிருந்து ஆரம்பித்து உயர்தரம் வரையிலும் வியாபித்து செல்கின்றது.
ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் வயதின் அடிப்படையிலும், உளரீதியான மனோ எழுச்சிகளின் அடிப்படையிலும் காலத்திற்கு காலம் அறிஞர்கள் பலரின் ஒத்துழைப்புடனும் காலத்திற்கேற்றவாறும் பாடங்களும், பாடத்திட்டங்களும், பிள்ளைகளின் நடத்தைவாத ஆய்வுகளின் பேறாகவும், நவீன உலகின் போக்குக்கு ஏற்பவும் கல்வித்துறை பாரிய பங்களிப்பினை ஆற்றிவருகிறது.
கோடான கோடி ரூபாய்களை செலவு செய்து மாணவர்களின் புரிந்துணர்வினைக் கைக்கொண்டு வெற்றி நடைபோடும் பாடசாலைக் கலைத்திட்டத்தின் உயிர் நாடியாக மாணவர்கள் திகழ்கிறார்கள். மாணவர்கள் இல்லை என்றால் எதற்குப் பாடசாலைகள்? என்கிற வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தரம் ஒன்றில் சேருகின்ற பிள்ளைகளை சரியான முறையில் கற்பிக்கின்ற ஆசிரியர் அறிந்து கொண்டால் கற்றலுக்கான வழித்துணை அனைத்துமே சரியாக அமைந்துவிடும்.
‘முதற்கோணம் முற்றும் கோணம்’ என்பார் மூத்தோர்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ன! இதுவும் நாம் தரப்போகிற விடத்திற்கு ஒத்துழைக்கும் என நம்புகிறேன். சரி விடயத்திற்கு வருவோம். இன்று பாடசாலைகளில் தரம் ஒன்றில் பிள்ளையை சேர்ப்பதற்கு போட்டியோ போட்டி, ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் சிலவேளை தாம் எதிர்பார்த்த பாடசாலையில் தனது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் பெற்றோருக்கு சில பாடசாலைகளில் பிள்ளைகளே சேரவில்லை என்கிற நச்சரிப்புக்கள் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு, வகுப்பில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிற பிரச்சினை பெரிய பாடசாலைகளில். இவ்வாறு தரம் 1 இல் மாணவர்களை சேர்க்கின்ற நிலையில், அல்லல்படுகின்ற நிலையில் கல்வியமைச்சும் புதிய புதிய சுற்று நிருபங்கள் தரம் 1 இல் பிள்ளைகளை சேர்ப்பதில் இழுபறி இவற்றையும் தாண்டி பிள்ளை ஏதோர் பாடசாலையில் சேர்ந்த நிம்மதியில் பெற்றோர் இருந்து விடுகின்றனர்.
இனிமேல்தான் ஆரம்பிக்கிறது மாணவர்களின் தொழிற்பாடுகள். உண்மையில் பிள்ளை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருமுன்னராக பெற்றோரையும் தன் சுற்றுத்தாரையும், குறிப்பிட்ட உறவினரையும் பார்த்துப் பழகிய பிள்ளைக்கு பாடசாலைச் சூழல் பாரியதோர் பிரச்சினையை தோற்றுவிக்கலாம். அப்போதுதான் தரம் ஒன்று கற்பிக்கின்ற ஆசிரியர் சரியான முறையில் மாணவர்களை இனங்கண்டு அவர்களை அறிந்து கொள்வதன் ஊடாக பாடசாலைக்கும், வீட்டுக்கும் இடையிலான தொடர்பை சிறந்த முறையில் பேணி மாணவர்களினது, கற்றலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவும் இச்செயற்பாட்டை கட்டாயம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் செய்தேயாக வேண்டிய நிலைக்கு உட்படுகின்றனர்.
ஆதலால்தான் இதனை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கல்வி மறுசீரமைப்பினைத் தொடர்ந்து, பின்ணூட்டல் வேலைத்திட்டங்களினூடாகவும் கண்டறியப்பட்ட பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொண்டு தேசிய கல்வி நிறுவகம் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் தரத்தில் பாடசாலைகள் பிரவேசிக்கின்ற பிள்ளைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் “பிள்ளைகளை அறிந்து கெள்வோம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நடைமுறையானது பிள்ளைகளினது மனமகிழ்ச்சியைத் தொடராக வைத்திருந்து பாடசாலையும், வீடும் ஒரேயமைப்புடனே காணப்படுகிறது என்கிற உள்ளார்ந்த நிலையை இப்பாலக பிஞ்சுள்ளங்களில் படிப்படியாக உரமேற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களைத் தயாரித்து அதுனூடாக கற்றலை ஒரு யுக்தியாக மேற்கொள்ளும் நோக்காவே இவை கருதப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை தேசிய கல்வி நிறுவகத்தின், ஆரம்பக் கல்வி, விசேட கல்விப்பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து கல்வி வெயியீட்டுத் திணைக்களத்தின் உதவிகொண்டு இதனையொரு கையேடாக பாடசாலைகளுக்கு வழங்கியும் உள்ளன.
இதனில் காணப்படுகின்ற 16 வேலைத்திட்டங்கள் உண்மையாகவே பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மேலும் வலுவூட்டி இரசனை மிக்கதாக்கும் நோக்குடன் பின்வரும் குறிக்கோள்களையும் அடையும் நோக்குக்கு அமைய இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனலாம். அவைகளாவன:
தரம் ஒன்றில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தில் பாடசாலை தொடர்பான விருப்பை ஏற்படுத்த தரம் 1 இல் சேர்கின்ற மாணவர்களுக்கிடையிலான நட்பினை உருவாக்கிக் கெள்ள.
மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையிலான நட்பினை ஏற்படுத்தவும்.
இப்பருவ பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை ஆரம்பத்தி லிருந்தே ஆசிரியர் இனங் காணவும்.
முறைசார்ந்த கல்விப் புலமான பாடசாலைக்கு வருகின்றமை யினால் அவர்களின் உளரீதியான ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறைக்கு வித்திடவும், இதுபோன்றவற்றுடன், பிள்ளையை அறிந்து கொள்ளவும், பெற்றோருக்கு மாணவர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு வரவும், சக வகுப்பு மாணவர்களுடன் பங்கெடுத்து விளையாடவும், பாடசாலையைப் பற்றிய நடைமுறைகளை ஓரளவாவது கற்றுக் கொள்ளவும் வேண்டிய நிலையில்தான் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான ‘ஏடுதொடக்க விழா’ என்று தரம் இரண்டு வகுப்பு (பெரிய வகுப்பு) மாணவர்களால் வரவேற்கப்படுவதும் இவைகளை முன்னிட்டேயாகும்.
இவைகள் காரணமாக பாடசாலையின் மாணவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் அற்ற நிலையில் மகிழ்ச்சியான சூழலில் ஒரு ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில் சிநேகபூர்வமான முறையில் கல்வியைத் தொடரக்கூடிய வாறான நிலையிலும் தரமான கல்விச் சூழலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வகைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஊடாக வழங்கப்படுகின்ற 16 செயற்பாடுகளையும் இறுதியாக பிள்ளைகளை இனங்காணும் நியதிகளாக 28 உள்ளார்ந்த ஆற்றல்களும் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படுகின்ற போது நாமும், நாடும், பெற்றோரும் எதிர்பார்க்கின்ற ஒரு திடமான, உறுதியான சமூதாயத்தின் உறுப்பினரை உறுதிசெய்கின்ற அத்திவாரத்தை இடுகிறோம் என்ற நிலை ஆரம்பப்படிகளிலேயே இடப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
இதன் மூலமாக விளையாட்டு வீடு, சுதந்திரமான செயற்பாடுகள், குழு விளையாட்டு 1,2, ஆடல் பால், அபிநயம், கதையில் வரும் பாத்திரங்களை பாவனை செய்தலும், பல்வேறு ஒலிகளை எழுப்புதலும், பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை எழுப்புதலும் (குருவிகள் கிராமம்), விளையாட்டு முற்றம், வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல், ஆக்கச் செயற்பாடுக்ள 1,2, கதை சித்திரம் வரைதல், ஊர்வலம், எண்ணுதல், பொருள்களை எண்ணுதல் / எண் விளக்கம் 1,2 போன்ற 16 செயற்றிட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனது குறிக்கோள், வளங்கள், முன் ஆயத்தம், செயலொழுங்கு, இன்காணக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்களை போன்றனவும் ஆசிரியரால் மாணவர்களிடமிருந்து பெறத்தக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை வேறுவிதமானவாறு, சூழலுக்கேற்றவிதமாகவும் மாற்றியமைக்கின்ற சுதந்திரத் தன்மையும் ஆசிரியருக்கு உண்டு. எனவே இவ்வேலைத்திட்டத்தை பிள்ளைகளிடம் திணிக்காது, ஒரு பரீட்சையாக மேற்கொள்ளாது கருதி செயற்பட வேண்டிய பொறுப்பும் ஆசிரியரிடம் காணப்படுதல் வேண்டும். இருப்பினும் எதிர்பார்க்கும் அனைத்து பிள்ளைகளும் இவ்வாறு இயங்காமலும் விடலாம். ஆதலால்தான் குறைபாடுகளை அல்லது விசேட தேவையுள்ளவர்களை இனங்காணவும் இந்தச் சந்தர்ப்பங்கள் உதவுகின்றன. இதனையும் கருத்திற்கொண்டு குறிப்பிடப்பட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்வதன் ஊடாக பாடசாலையை பிள்ளைகள் விரும்புகின்ற ஓர் இடமாக மாற்றி, வெற்றிகரமான கற்றல் – கற்பித்தல் செயல்முறையை உருவாக்குவதற்கு இதுபோன்ற வேலைத்திட்டங்கள் துணையாக கொள்ளப்படுகின்றன எனலாம்.
ஆதலால்தான் கால்ரோஜஸ் (விar ஞிogலீrs) என்கிற அறிஞர் இவ்வாறு கூறுகிறார். அதாவது “ஆசிரியர் சிறப்பான உறவை வளர்த்து, கூடுதலான அனுபவத்தின் மூலம் கற்றலை மேற்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இதனை மாணவர்கள் விரும்பி ஏற்பார்கள். இங்கு மாணவர்களுக்கு எல்லாச் சுதந்திரங்களும் வழங்கப்படுதல் வேண்டும். அப்போதுதான் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் மிக நெருங்கிய சுமுகமான மானுடத் தொடர்பை விருத்தி செய்ய இதுபோன்ற கற்றல் கற்பித்தல் முறைகள் பயனுடையதாக அமைகின்றது” என்று கூறுகின்றார்.
அந்தவகையில் பார்க்கின்றபோது தற்காலத்தில் பிள்ளைநேயப் பாடசாலைகள் என்ற பெயரில் வலயத்திற்கு வலயம் பல பாடசாலைகள் காணப்படுகின்றன. அங்கெல்லாம் பிள்ளைகளை நேயமுடன் கவனிக்கப்படல் வேண்டும் என்பதற்காக பிள்ளைகளின் அறிவுத்தாகம் ஈடுசெய்வதற்காக அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு பாடசாலைகள் அபிவிருத்தியை நோக்கி நடை பயின்று வருகின்றன. ஆனால் இவ்வாறான பாடசாலைகளிலும் சரி, பிள்ளைநேயப் பாடசாலை அல்லாத பாடசாலையானாலும் சரி பிள்ளை நேயங்கள் சரியான முறையில் பின்பற்றப் படுகின்றதா? என்பது ஒருபுறம் இருக்க பாடசாலைகளுடன் சேர்ந்து வீடுகளிலும் மகிழ்ச்சிகரமான சூழலில் கற்கின்ற பிள்ளை நேயப் பண்புகளை கொண்டதாக மாற்றம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் எதிர்பார்க்கின்ற கல்வியை மாணவர்களிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியும்.
இன்று மனித நேயமோ? பிள்ளைநேயமோ? பற்றி சிந்திக்கவும், சுதந்திரமான கல்வியை பெறவும், பிள்ளைகள் விளையாடவும் முடியாதவாறு அனைத்து தரத்தாரும் பிள்ளையை எவ்வேளையிலும் படி, படி என்று கவ்வியைத் திணிக்கின்ற ஒரு நிலையில் முன்பள்ளியே தொடங்குகிறது ‘டியூசன்’ கல்வி. இதனால்தான் இயல்பான முறையில் தரம் 5 மாணாக்கர் வெற்றியடைய வேண்டிய புலமைப் பரீட்சைக்காக பல்லாயிரம் ரூபாய்களை செலவு செய்து பிள்ளையும் கற்று சித்தியடைந்தால் கிடைப்பது ஊரில் இன்னாரின் பிள்ளையும் பாஸ் பண்ணியுள்ளாராம். அவ்வளவுதான் பிள்ளையின் பெற்றோருக்கு கிடைக்கும் மதிப்பு.
ஆனால் பிள்ளையின் உளரீதியான பாதிப்பை யார்தான் கண்டு கொண்டார்கள்? என்கிற பிரச்சினைகளிலிருந்து விடுபட ஏதுவாக இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறு வதிலிருந்து தப்பிக்க சரியான சந்தர்ப்பங்கள் வந்து இடையூறுகளாக நிற்கின்றன. இதன் காரணமாக தற்காலத்தில் அதிகமான பாடசாலைகளில் மாணவர்களுக்கு பரீட்சை மையமான கற்றல் கற்பித்தலே ஆரம்பித்திலிருந்து நடைபெற்று வருகின்றன. உண்மையிலேயே எந்தவிதமான அபிவிருத்தியும் நிலையான அபிவிருத்தியாக அமையாது. அது எதுவரையில் என்றால் மாணவர்கள் சிறந்த பண்புள்ளவர்களாக ஆக்கப்படுகின்ற வரையில்தான், உண்மையான அபிவிருத்தி கல்வியில் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டும். ஆதலால்தான் பரீட்சைப் பேறுகளினது வளர்ச்சியுடன் நல்ல பண்பாளர்களையும் இணைத்தே உருவாக்குதல் ஆசிரியரினதும் கடமையாகக் கொள்ளப்படுகின்றது. அதற்கு ஆரம்பக்கல்வியில் இதுபோன்ற பிள்ளைகளை அறிதல் செயற்பாடு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
எனவே எதிர்காலச் சிற்பிகளை உருவாக்க விளையும் பாடசாலைகள் அங்கு உலாவரும் பிள்ளைச் செல்வங்களை கல்வியோடு இயைந்ததாக காணப்படுவதற்கு ஏற்ற சூழலை பாடசாலையின் பொறுப்பாளர்களான அதிபர்களும், ஆசிரியர்களும் வழங்கும் அதேவேளையில் ஆசிரியர்கள் தமது பாடங்களை கற்பிப்பதற்கு அரசினால் வழங்கப்படுகின்ற “வழிகாட்டி அறிவுரைப்பு நூல்களை” சரியான முறையில் வாசித்தறிந்து, மாணவர் மையக் கற்றலுக்குகந்தவாறு அதனை மாற்றியமைத்து செயற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பும் ஆசிரியருக்கு உள்ளது என்கிற விடயத்தையும் கவனத்திற் கொண்டு பிள்ளைகளை இனங்கண்டு, இடர்பாடுகளை விளக்கி, பிள்ளையிடம் குறைபாடுகளை விடுத்து திறமைகளை வெளிப்படுத்தி, வகுப்பறையானது அனைத்துப் பிள்ளைகளும் கற்பதற்கான இடமாக மாற்றம் பெற ஆசிரியர் வழிகாட்டவும், அதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுதல் வேண்டும்.
ஆகவேதான் பிள்ளைகள் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள இக்கால கட்டத்தில் இவர்களுக்கான இதுபோன்ற பயிற்சிகள் மூலமாக பிள்ளைகளை அறிந்து கொள்ளும் வேலைத்திட்டங்கள் மாணவரின் உள எழுச்சிக்கு புத்துயிர் அளிக்கின்ற விடயத்தை பெற்றோரும் அறிந்திருப்பதன் அவசியப்பாடுகள் காரணமாகவே இதனை விரிவாக ஆராய்ந்துள்ளேன். இவைகள் வலுவிழந்து போகாதிருக்க அனைவரும் பாடசாலைக் கல்வியின்பால் கவனத்தை செலுத்தி நாளைய நற்பிரஜை களை தோற்றுவிக்க உறுதுணை யாக அமைந்திடுவோம்

லேபிள்கள்:

பாடசாலைக் கல்வி வளர்ச்சியில் தனியார் வகுப்புக்களின் தாக்கம்

இன்று வரை உலக வல்லரசு நாடுகளுக்கு சமனான கல்வி அறிவை கொண்ட நாடு இலங்கை ஆகும்.ஆயுத, செல்வ, தொழில் நுட்ப வளங்களை விட இலங்கை கல்வியை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
இலங்கை அரசு வேறு எந்த சேவைக்கும் செலவு செய்யாத அளவு பணத்தை இந்தக் கல்விச் வேவைக்காக இன்றளவும் வாரி இறைத்துக்கொண்டிருப்பதே இதற்கு சிறந்ததோர் சான்றாகும்.
கடந்த காலங்களைப் பார்க்கின்றபோது மாணவர்கள் தமது கல்வித் தேவையை நிறைவு செய்யவென பாடசாலையை மாத்திரமே நம்பி வந்தனர். இதனால் இலங்கை அரசு பாடசாலைகள் தொடர்பாக மிகுந்த கரிசனையை செலுத்தி, அதெற்கென தனித்துவமான கருத்திட்டத்தை (Curriculum) உருவாக்கி, அக் கருத்திட்டத்தை அடைவதற்குத் தேவையான சகல வளங்களையும் பாடசாலைகளுக்கு வழங்கியது.
இதன் விளைவாக பாடசாலைகள், கல்வி ஊற்றெடுக்கும் இடங்களாக பெருமதிப்போடு போற்றப்பட்டும் பேணப்பட்டும் வந்தன.
கால ஓட்டத்தில் பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தாம் கற்பிக்கின்ற பாட விதானங்களில் தெளிந்த விளக்கத்தை அளிப்பதற்கு பாடசாலை நேரத்தில் நேரம் போதாமையால் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மாணவர்களை பிரேத்தியேகமாக அழைத்து தமது கற்பித்தலை மேற்கொண்டு சென்றனர்.
இவாகளுடைய இச்செயல் பாடசாலைகளில் எந்தவிமான தாக்கத்தையும் செலுத்தாத அதேவேளை பாடசாலையின் வளர்ச்சிக்கே பங்களித்தது.
இவ்வாறு ஆரம்ப காலத்தில் நல்லநோக்குடனே இலவசமாக ஆரம்பிக்கப்பட்ட இத்தனியார் வகுப்புக்கள் பிற்பட்ட காலங்களில் தமது நோக்கத்தை இழந்து, கல்வி வளங்களை மையமாகக்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சறுகி பணத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டு, ஆசிரியர் சேவையினை ஆசிரியர் தொழிலாக மாற்றி விட்டுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
நவீன தனியார் வகுப்புக்களின் பிரவாகப் பெருக்கினால் இலங்கை அரசுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு துரதிஷ்ட நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சமகாலத்தில் இத்தனியார் வகுப்புக்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் சிலவற்றை மாத்திரம் இங்கு அடிக்கோடிட்டுக் காட்டுவது பொருத்தம் என எண்ணுகின்றேன்.
01.பாடசாலை மாணவர் வருகை வீழ்ச்சி:
புத்தகக் கல்வியை மட்டுமே இலக்காகக் கொண்ட மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் சென்று மிக விரைவாக தமது பாடத்திட்டத்தினை (Syllabus) பூர்த்தி செய்துவிடுவதால் தாங்கள் பாடசாலைக்கு வருகின்ற வீதத்தினை குறைத்துக் கொள்கின்றனர்.
எந்தளவுக்கு என்று சொன்னால் சில மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே பாடசாலைகளுக்கு வருகின்றனர். இதனால் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கும், பாடசாலை செயற்பாடுகளுக்கும் பொருத்தமான மாணவர்களைப் பெற முடியாமல் போகின்றது.
02. பாடசாலைக் கல்வியில் கவனம் செலுத்தாமை:
தனியார் வகுப்புகளுக்குச் செல்கின்ற மாணவர்கள் சில வேளை பாடசாலைக்கு வந்தாலும், அங்கு ஆசிரியர் கற்பிக்கின்ற பாடங்களை அவதானிப்பதிலோ அல்லது அங்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகளைச் செய்வதிலோ தமது கவனத்தைச் செலுத்தாமல்
மாறாக ஏனைய மாணவர்களின் கல்விக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதையே காணமுடிகிறது.
தாங்கள் தனியார் வகுப்புக்களில் ஏலவே படித்து விட்டதால் தங்களால் அப்பாடம் தொடர்பான பரீட்சைகளில் வெல்ல முடியும் என்ற ஒரு அலாதியான நம்பிக்கையிலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.
03.ஆசிரியர்கள் மனமுடைதல்:
தங்களின் வகுப்பிலுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் இவ்வாறு பாடசாலைக் கல்வியில் அசிரத்தையாக செயற்படுகின்ற பொழுது அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மனமுடைந்து இவர்களுக்கு தாங்கள் ஏன் கற்பிக்க வேண்டும் எனக் கருதி விடுகின்றனர்.
இத்தகைய எண்ணம் அவர்களினுள் முளைவிடுகின்றபோது ஏனோ தானோ என்றோ அல்லது கடமைக்காகவோ அவர்கள் கற்பிப்பார்களே ஒழிய மனம் வைத்து விருப்பத்துடன் கற்பிக்க மாட்டார்கள்.
இந்நிலை பாடசாலையிலுள்ள பெரும்பாலான ஆசிரியர்களிடம் ஏற்படுமாயின் அது அப்பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
04. வசதியற்ற மாணவர்களின் கல்வி வீழ்ச்சி:
இவ்வாறு ஆசிரியர்கள் மனமுடைந்து ஒழுங்கான முறையில் கற்பிக்காதவிடத்து அது பாடசாலையை மட்டுமே நம்பியிருக்கும் வறிய மாணவர்களின் கல்வித் தேடலை நிச்சயமாக மழுங்கடித்துவிடும்.
எந்தவித வசதிகளுமற்ற, பாடசாலையை மட்டுமே நம்பிக் கல்வி கற்கின்ற இத்தகைய மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி வழங்கப்படாமல் இருக்கின்றமையால்தான் இன்று பொதுப்பரீட்சை களில் இலங்கை 50 வீதமான வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளது என்பதும் ஏற்கத்தகுந்த காரணமே.
இவ்வாறு ஏழை மாணவர்கள் கல்வி பெறாமையால் விரக்தி அடைந்து பாடசாலையை விட்டும் இடை விலகிச் செல்லும் அவலநிலை அதிகரிப்பதையும் அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது.
05. ஆளுமைமிக்க மானுட வளத்தைப் பெற முடியாமை:
ஒரு நாட்டினுடைய வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந் நாட்டின் மானுட வளத்திலேயே தங்கியுள்ளது.
அணு குண்டு வீசப்பட்ட ஜப்பான் இன்று வானளாவ உயர்ந்து நிற்பதற்கு காரணம், அது தன்னகத்தே கொண்ட மானுட வளத்தைச் சரியாக இனங்கண்டு பயன் படுத்தியமையேயாகும்.
இலங்கையில் வறிய மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிச் செல்கின்றபோது அவர்களுக்குள் காணப்படுகின்ற ஆளுமைகளும் திறமைகளும் மழுங்கடிக்கப்படுகின்றன. அவர்கள் செயற்திறன் குன்றியவர்களாக மாறிவிடுகின்றனர். இதனால் இலங்கை தான் பெறவேண்டிய மிகச்சிறந்த மானுட வளங்களையெல்லாம் மறைமுகமாக இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையை எதிர்கொண்டு வருகின்றது.
06. செயற்திறனற்ற கல்வியிலாளர்கள் உருவாக்கம்:
இலங்கையில் இன்றளவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கல்வி முறையில் மாணவர்கள் தாம் கற்கின்ற வற்றைச் செயற்படுத்திப் பார்க்கின்ற களமாக பாடசாலை அமைய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக விஞ்ஞான பாடத்தில் தாம் கற்கின்ற ஒவ்வொரு பரிசோதனையையும் ஆய்வு கூடத்தில் செய்து பார்த்து நம் அன்றாட வாழ்வில் அவற்றைப் பயன்படுத்துவதே அப்பாடத்தினுடைய இலக்காகும்.
ஆனால் இன்று தனியார் நிறுவனங்களில் அத்தகைய எந்த வளங்களும் இல்லாமல் வெறுமனே வாய்மொழி மூலமாக மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றமையால், அவ்வாறு கற்கின்ற மாணவர்களால் பரீட்சைகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடிகின்ற போதிலும் அப்பாடத்தினுடைய இலக்கு தவறி விடுகின்றது.
இலங்கையில் இன்று வெளியிடப்படும் பாட நூல்களில் ஒவ்வொரு பாடத்தினதும் இலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ‘அன்றாட வாழ்வில் பயன்படுத்தல்’ என்ற சொல்லாடலை அதிகம் காணமுடிகிறது. அதுவே அப்பாடத்தினுடைய இலக்குமாகும்.
ஆனால் இன்று சாதாரண நுணுக்குக்காட்டியைக் கூட கண்ணூடாகக் காணாமல் எத்தனையோ மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
07. ஆசிரியர்களிடையே தோன்றியுள்ள பணம் சம்பாதிக்கின்ற ஆவல்:
சிலர், தனியார் நிறுவனங்களின் ஊடாக பணம் சம்பாதிப்பதைக் கண்ணுற்ற வேறு சில ஆசிரியர்கள் தாங்களும் அவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு அலாதிப் பிரியத்தினால் அவர்களும் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கின்றனர். இதனால் ஒரே ஆசிரியர் இரண்டு இடங்களில் இரண்டு முறையாகக் கற்பிக்கின்ற நிலமை தோன்றியுள்ளது.
ஆசிரியர்கள் பாடசாலைகளில் மேலோட்டமாக அல்லது அரை குறையாகக் கற்பிக்கும் அதேவேளை தமது தனிப்பிட்ட வகுப்புக்களில் மாணவர்களை கவர்வதற்காக ஆழமாகவும் முழுமையாகவும் அங்கு கற்பிக்கின்றனர். இது போன்ற ஒரு சில ஆசிரியர்களினுடைய செயற்பாட்டினால்தான் இன்று ஆசிரிய சேவை ஆசிரிய தொழிலாக மாறிச் சென்று அதன் புனிதத்துவத்தை இழந்து நிற்கிறது.
08. இங்கை அரசு விழலுக்கு நீரிறைக்கிறது:
எந்தத்துறைக்கும் செலவிடாத ஒரு கனிசமான தொகையை இலங்கை அரசு கல்விக்குச் செலவிடுவதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அதிலும் முக்கியமாக இலவச பாட நூல்களுக்கே பாரிய ஒரு தொகை ஒதுக்கப்படுகின்றது.
இன்று கல்வி கற்கின்ற ஒவ்வொரு மாணவர்களுக்கும் வண்ண வண்ணப் புத்தகங்களும், கற்பிக்கின்ற ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் அவர்களது பாடம் சார் வழிகாட்டி நூல்களும் (Teacher’s Guide) அச்சடித்து (விலையுடன்) இலவசமாக விநியோகிக்கப்பட்டிருக்க, ஆசிரியர்கள் தாம் விரும்பிய முறை யில் கற்பிப்பதையும்; மாணவர்கள் தமது பாடநூல்களைப் புறந்தள்ளிவிட்டு தனியார் வகுப்புக் குறிப்புக் கொப்பிகளை அல்லது அங்கு வழங்கப்படுகின்ற மேலதிகக் குறிப்புக்களை (Student’ Guide / Tutes) மட்டும் கற்பதில் பகீரதப்பிரயத்தனம் மேற்கொள்வதைக் காண்கிறோம்.
இதனால் அரசாங்கம் செய்த செலவு வீணாகி விடுகின்றது. இதற்குச் செலவிட்ட பணத்தை வேறு எதற்காவது செலவிட்டு நாட்டை முன்னேற்றி இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
09. பாடசாலையில் ஒழுக்க வீழ்ச்சி:
மேற்சொன்ன இத்தனை விளைவுகளாலும், பாடசாலைகள் வெறுமனே ஒரு சம்பிரதாயத்திற்காகத் திறக்கப்பட்டு கற்றல் கற்பித்தல்கள் நடைபெறும் இடங்களாக மாறி வருகின்றமையால் பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்க வீழ்ச்சி தோன்றுவதற்கு அது வழிகோலியுள்ளது என்றால் மிகையில்லை.
எந்தளவுக்கு என்று சொன்னால், தண்டனையாக பாடசாலையில் இருந்து மாணவர்களை இடைநிறுத்தினாலும் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றவர்களைக்கூட இன்று ஆங்காங்கே காண முடிகின்றது.
அதேபோல மாணவர் – ஆசிரியர் இடைத்தொடர்புகள் குன்றி, மாணவ – மாணவ இடைத்தொடர்புகள் குன்றி பாடசாலைகள் தமது புனிதத்துவத்தை இழந்து வருகின்றன என்பதே உண்மையாகும்.
ஆரம்ப காலங்களில் அதிமுக்கியமான ஓரிரண்டு பாடங்களுக்கு மட்டுமே தனியார் வகுப்புக்கள் நடாத்தப்பட்ட நிலை மாறி இன்று பாடசாலையில் கற்பிக்கின்ற (விருப்பத்திற்குரிய பாடங்கள் உட்பட) சகல பாடங்களுக்கும் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
அவற்றின் பால் கவரப்படுகின்ற மாணவர்கள் இரவு பகலாக அங்குமிங்கும் அலைந்து திரிவதைக் காண்கின்றோம். ஆசிரியர்களுக்கிடையேயும் தனியார் வகுப்புக்களில் கற்பிக்கின்ற விடயத்தில் போட்டி நிலமை தோன்றியுள்ளது.
முற்று முழுதாக தனியார் வகுப்புக்களைக் குறை சொல்வதோ அல்லது அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களைக் குறை காண்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.
இருப்பினும் பாடசாலைகளில் ஏற்படுகின்ற ஒழுக்க வீழ்ச்சிக்கும், இலங்கையினுடைய கல்வி வீழ்ச்சிக்கும் ஒரு பாரிய காரணியாக இத்தனியார் வகுப்புக்கள் ஆகிவிடக் கூடாது என்ற ஒரு நேர்ச் சிந்தனையின் அடிப்படையில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் இத்தனியார் வகுப்புக்களை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை முன்வைப்பதன் மூலமும் அவற்றுக்கென தனியான வரையறைகளை ஏற்படுத்துவதன் மூலமும் எமது பாடசாலைகளை சிறப்படையச் செய்யும் அதேவேளை இலங்கையினுடைய பரீட்சை சித்தி வீதத்தினை அதிகரிக்கலாம் என்பதுவுமே எனது கருத்தாகும்

லேபிள்கள்:

மாஸ்லோ

முதலாளித்துவத்தின் அடிப்படை கொள்கைகள்தாம் உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பொருளியல் சரிவின் மூல காரணம் என்பதைச் சில உதாரணங்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

'தனியார் பொருளாதாரச் சுதந்திரம்' என்ற போர்வையில் லாபம் பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஏழை-பணக்காரர்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதே முதலாளித்துவம். வட்டி அதன் இரத்த ஓட்டமாக இருந்து வருகிறது. தனது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள 'வர்த்தக நெறிமுறை'களைக் (Business Ethics) கூட காற்றில் பறக்கவிட்டு தில்லுமுல்லுகள், தகிடுதத்தங்கள் செய்யவும் முதலாளித்துவவாதிகள் தயங்குவதில்லை என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.

முதலாளித்துவத்தின் இன்னொரு அடிப்படை 'பொருளாதார மனிதன்' (Homo Economicus) எனும் கோட்பாடு. பொருளாதார நடவடிக்கைகளில் மனிதர்கள் இப்படி-இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள் என சில பொருளியல் நிபுணர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு குடியிருப்புப் பகுதியில் பலசரக்குக்கடை வைத்திருக்கும் ஒருவர் அப்பகுதியில் வசிக்கும் தமது வாடிக்கையாளர்களைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்து வைத்திருப்பார்: 'இவர்கள் நடுத்தர வருமானமுடைய மாதச் சம்பளக்காரர்கள், மாதத்தின் முதல் பாதியில் வீட்டு உபயோக, மளிகைப் பொருட்களை அதிகம் வாங்குவார்கள், விலை ஏற்ற இறக்கங்களில் மிக கவனமாக இருப்பார்கள், இவர்களை நம்பி கடன் கொடுக்கலாம், தேதி பிறந்தவுடன் கடனை அடைத்து விடுவார்கள்' இப்படி எல்லாம் அவரது கணிப்பு இருக்கும். அவரது இந்த மதிப்பீட்டைப் பொருத்தே அவர் கொள்முதல் செய்யும் பொருட்கள், அதன் தரம், விலை, விளம்பரம் ஆகியவை அமையும்.

அது போலவே, சில பொருளியல் நிபுணர்களின் கணிப்புப்படி மனிதர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஜான் கே என்ற பொருளியலாளர், "மனிதர்கள் பொதுவாக சுயநலவாதிகள். உலகாதாய நோக்கம் மட்டுமே கொண்டவர்கள். தனது செல்வ மதிப்பை கணக்கிடுவதிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்" என்கிறார். இதுதான் முதலாளித்துவம் அறிமுகப்படுத்தும் 'பொருளாதார மனிதன்'. மனிதர்களைப் பற்றிய இந்த மதிப்பீட்டின் அடிப்படையில்தான் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் கட்டமைக்கப் பட்டுள்ளன. அதனால்தான், சிறு முதலாளிகள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை தங்கள் லாபங்களை அதிகரித்துக் கொள்வதற்காக செய்யும் முறைகேடுகளும் தில்லுமுல்லுகளும், 'பிஸினஸ்லே இதெல்லாம் சகஜமப்பா!' என நியாயப் படுத்தப் படுகின்றன.மனித வாழ்வின் பல நிலைகளில் மாறிக்கொண்டே இருக்கும் அவனது தேவைகளை ஆபிரஹாம் மாஸ்லோ என்ற சமூகவியலாளர் வகைப்படுத்தியிருக்கிறார். மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவனைச் செலுத்தும் உந்துசக்தியாக இருப்பது அவனது தேவைகள்தாம் என்பது அவரது கருத்து.வருமானம் தேடி பட்டணத்திற்கு வருகிறான் ஒரு கிராமத்து இளைஞன். அவனுக்கு இப்போது உடனடித்தேவை உண்ண உணவு, குடிக்க நீர், உடுத்த உடை, படுக்க ஓர் இடம். உடல் சார்ந்த இத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதுதான் இப்போது அவனது ஒரே நோக்கம். அவனுக்கு ஒரு வேலை கிடைத்து, இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறிவிட்டால் அடுத்ததாக அந்த வேலை நிரந்தரமாக வேண்டும், அல்லது சொந்தத் தொழில் தொடங்க வேண்டும், வாடகைக்கு தனி வீடு வேண்டும் என அவனது அடுத்தக் கட்டத் தேவைகள் முன்னுக்கு வரும். இந்தத் தேவைகளும் நிறைவேறிய பிறகு, திருமணம் செய்து குடும்பஸ்தனாகும் ஆவல் பெருகும். இந்த நிலையை அடைந்த பிறகு தனது சுய கவுரவத்தை நிலை நிறுத்தும் விதமாக பதவி, அங்கீகாரம், அந்தஸ்து ஆகியவற்றை அவன் அடைய முற்படுவான்.

மாஸ்லோ-வின் தேவை அடுக்கு


வாழ்வின் இத்தனை நிலைகளிலும் பொருளாதாரத்தை மையமாக வைத்தே சுழன்று கொண்டிருந்த அந்த மனிதனுக்கு அவனது சுய கவுரவத்தேவைகள் நிறைவேறிய பிறகே 'தன்னை அறிய வேண்டும்' என்ற உந்துதல் பிறக்கிறது. ஆன்மீகச் சிந்தனைகளையும் நன்னடத்தைகளையும் வளர்த்துக் கொண்டு உயரிய நோக்கங்களை முன்வைத்துத் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறான் அவன்.இக்கோட்பாட்டின்படி, ஒரு மனிதன் தான் எதிர்பார்க்கும் பதவி, அங்கீகாரம் ஆகியவற்றை அடையுமுன் நற்குணம், நல்லொழுக்கம், ஆகியவற்றைப் பற்றிச் சிந்திக்கவே மாட்டான் என்கிறார் அபிரஹாம் மாஸ்லோ. பொருளாதாரத் தேவைகள் முழுவதும் நிறைவேறி, ஒரு குறிப்பிட்ட அந்தஸ்தை அடைந்த பிறகே நெறிமுறைகளைப் பற்றிச் சிந்திப்பது பொதுவாக மனிதனின் இயல்பு என்பது மாஸ்லோவின் கருத்து. அரசியல் போன்ற பிற துறைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், முதலாளித்துவத்தின் சுயநல அடிப்படைக்கு இக்கோட்பாடு மிகவும் பொருத்தமானது.உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் தன் போட்டியாளர்களை நசுக்கி உலகின் நம்பர் ஒன் கணினி மென்பொருள் நிறுவனம் என்ற தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள செய்த முறைகேடுகளும் சட்ட மீறல்களும் ஏராளம். இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கிடையில் 1999இல் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு, உலக அளவில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவற்காக அவர் 'பில் அண்டு மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' எனும் சேவை நிறுவனத்தைத் துவக்கினார். மாஸ்லோவின் கோட்பாட்டிற்கு இதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.முதலாளித்துவக் கொள்கையினால் பலன்களைவிட பாதகங்களே அதிகம் என்ற நிலையில், அதைச் சீர்திருத்த ஒருவர் கூட முயலவில்லையா என்ற இயல்பான சந்தேகம் நமக்கு எழலாம். முதலாளித்துவத்தை சீர்திருத்தும் திட்டம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு பில் கேட்ஸ் வெளியிட்டார். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

லேபிள்கள்:

திங்கள், 14 மார்ச், 2011

கல்வியில் மாணவர்களின் உள நெருக்கீடு

இன்றைய நவீன கல்வியியல் முறையானது மாணவர்களுக்கு என விசேட செயற்திட்டங்கள் நோக்கியதான கற்றல் கற்பித்தல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடையக் கூடிய ஓர் நிலையினை எட்டியுள்ளோம். இன்றைய நிலையில் பன்திறன் கொண்ட மாணவர் சமூதாயம் உருவாக்கப்பட்டு வருகின்றது என்பதில் வெளிப்பாடுகள் சான்றுபகிர்கின்றன பெருபெறுகள் அடைவுமட்டச் சான்றுதல்கள் பரிசில்கள் போன்றன இதனை வெளிக்காட்டுகின்றன
ஆயினும் இன்றைய நிலையில் உள நெருக்கீட்டிற்கும் சுமைகளுக்கும் ஆளாகக் கூடியவர்களாகக் காணப்பட்டு வருகின்றன மகிழ்சி கரமாண கற்றல் விரும்பக்கற்றல் என்பது குறைந்த நிலையிலேயே உள்ளது இதற்கு அதிகூடிய காரணம் பெற்றோர்களினாலேயே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.
ஆரம்பக் கல்வியில் இருந்து எழுதும் திறன், படிக்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன், பேசும் திறன் போன்ற நான்கு திறன்களும் முறைமையடையும் போதே ஒரு மாணவனானவன் அம் மொழியில் புலைமை பெற முடியும் ஒரு பிள்ளையின் சொற்கள் கூடிய விதத்தில் 2000 சொற்களாகும் வரை வாக்கியங்களை சரிவர பொருள்விளங்கி வாசிக்க முடியாது இதற்காகப் பொற்றோர் தன் பிள்ளை முன்பள்ளிக்கு சென்ற உடனே வாசிப்புப் பெற்று விடவேண்டும் என்பதில் ஐயம் கொள்வது நியாயம் இல்லை மாறாக முன்பள்ளி என்பது இயைந்து மற்றவ்ரகளோடு (சகபாடிகளோடு) இடைவினை கொள்வதும் பேச்சுத்திறனை அதிகரிக்கும் ஓர் களமாகக்காணப்படுகிறது ஒரு பிள்ளை வாசிப்பு திறனை அதிகரிப்பதிலும் முன்னமே பேச்சுத்திறன் மேலாக்கம் பெற வேண்டும் தன்னுடைய பிள்ளைகள் வேகமாக, அவசரமாக முன்னேற வேண்டும் என்பதற்காக “குருவித்தலையில் பணங்காயைச் சமத்துவது போன்று” தங்கள் பிள்ளைகளின் மனதில் சுமைகளை பரப்பி விடுகின்றனர். அவரவர் கொள்தகுதிறன் (Capcity) கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக – தரம் 5 – புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை சித்தி எய்த வேண்டும் என்பதற்காக தரம் - 3லிருந்து விசேட பாடத்திட்டம் என்றும் மாணவர்களை பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது உதாரனம் காட்டி அவர்களின் பிள்ளை சித்திபெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தியெய்த வேண்டும் அப்படியென்றால் தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் விரட்டியடிப்பதினை எம் மத்தியில் இன்று காணக் கூடியதாக உள்ளது. உதாரணம் காட்டி அவர்களின் பிள்ளை சித்தி பெற்றிருக்கின்றது கட்டாயம் என்னுடைய பிள்ளையும் சித்தி எய்த வேண்டும் அப்படி என்றால்தான் தனக்குப் பெறுமை என்று எண்ணிச் செயற்பட்டு வரும் பெற்றோர்கள் அதிகரித்து வருவதான அறியமுடிகின்றது.
இவ்வாறு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது மகிழ்ச்சிகரமானதாக அமையும் நிலையிலும் கூட அவர்களின் வயதிற்கேற்ற கல்வியின் வளர்ச்சியினைப் பெறுவதற்கும் அவர்களின் உளவிரத்தியினை மேற்கொள்வதற்கும் ஒவ்வோர் பெற்றோரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய தேவையுடையவர்களாக இன்றைய மாணவர்கள் காணப்படுகின்றனர்.
உளவிருத்தியினை ஏற்படுத்தும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் இன்று பெற்றோர்களால் 2ம் தரமாகவே நோக்கப்படுகின்றது. மாணவர்களின் சிந்தனை விருத்தி நினைவாற்றலினை அதிகரிக்கும் ஓர் முக்கிய நற்பயன் ஆன்மீகக் கல்விக்கு உண்டு என்பதையும் அது உள அமைதியினை ஏற்படுத்துகின்றது என்பதனையும் பெற்றோர்கள் சிந்திக்கத் தவருகின்றனர். இவ்வாறு ஓய்வின்றி பிள்ளையின் மனதினைக் கணமாக்கும் பெற்றோர்கள் குழந்தையின் உள விரத்தி என்பது குழந்தை முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை உணர வேண்டும்.
உதாரணத்திற்கு ஓர் மாணவனை அனுகும் சமயம் தனது பெற்றோர் என்பவர் ஓர் ஓய்வு என்ற நிலையினை தங்களுக்குத் தரத்தவருகின்றனர் என்ற கூற்று தரப்படும் நிலையினை அறியமுடியும். இவ்வாறு இன்று உளரீதியான தாக்கம் மிருந்த நிலையில் உள்ளது.
இவ்வாறு ஆர்வம் காட்டும் பொற்றோர் பிட்பட்ட காலங்களின் பிள்ளைகள் மீதான கண்காணிப்பினையும் கரிசனையினையும் காட்டத்தவருகின்றனர். ஆனால் பெற்றோர் தனது பிள்ளையில் அனைத்து வயதுப்பருவங்களிலும் அக்கரை காட்டக் கூடியவர்களாகவும் ஊக்கமூட்டக் கூடியவர்களாகவும் காணப்பட வேண்டும். இதனாலேயே “பெற்றோர்கள் பிள்ளைகளின் நிரந்தர ஆசிரியர்கள் அவர்களுக்கு ஓய்வு என்பது கிடையவே கிடையாது” என்ற கூற்று நினைவுறுத்தப்படுகின்றது.
அத்தோடு ஓர் பிள்ளையின் குடும்பச் சூழலும் உளநெருக்கீடாக அமைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது இன்றைய நிலையில் குழந்தையானது புத்திமதிகளைக் கேட்டு நடப்பதை விட பெற்றோர்களின் நடத்தைகளைச் சுலபமாக பின்பற்றக் கூடியவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் தாய் தந்தையர்களுக்கிடையிலான பழக்கவழக்கங்கள் பிள்ளையில் பாரிய தாக்கத்தினைச் செலுத்துகின்றது. திய நடத்தைகளும் அமைதியும் அற்ற குடும்பத்தில் இருந்து வரும் பிள்ளைகள் உளநெருக்கீட்டிற்கு உற்பட்டவர்களாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் பெற்றோர் பிள்ளையின் மீது திணிக்கும் செயல்ப்பண்பும் அவர்களின் உள நெருக்கடியினைத் தூண்டுவதாகவும் உள்ளது. அத்தோடு மாணவர்கள் சகபாடிகள் சம வயதுக்குழுக்கள் விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றினூடாகவும் உள நெருக்கீட்டிற்கு உள்ளாக்கப்படுவதனை இன்று அவதானிக்கக் கூடிய நிலையில் உள்ளது.

இவ்வாறு பெற்றோர்கள் சமவயதுக்குழுக்கள் சூழல் போன்றவற்றினால் உள நெருக்கீட்டிற்குள்ளாகும் அதே சமயம் ஆசிரியச் சமூகத்தினாலும் உளநெருக்கீடு மாணவர்களுக்கு ஏற்படுகின்றது. அதாவது பின்தங்கிய பிரதேச மற்றும் எல்லைப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியரின் கவலயீனமும் அப் பாடசாலை மாணவர்களின் உள்ளங்களில் ஓர் விருத்தியினைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. அதாவது அதிக விடுமுறை மற்றும் நேரத்திற்கு தொழில் புரியாமை குறைந்த நேரக்கற்கை போன்றனவும் மாணவர்களில் பிரதிபலிக்கக் கூடியதே. மேலும் தொடரான விடுமுறையடுத்து பரீட்சைகாலங்களில் மேலும் கற்பித்தலைக் கணமாக்கும் வேளையில் மாணவனினால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வதில் சிரமம் போன்றனவும் காணப்படக்கூடியதாகவே உள்ளது. அதாவது ஒரு நிருவாகத்துறையில் பணிபுரியும் ஊழியர் ஒரு நாள் விடுமுறை என்றால் அவர் தனது பணியினை அடுத்தநாள் தொடரக் கூடியதாகவிருக்கும் ஆனால் ஓர் கற்றல் நாள் என்பது அவ்வாற நிலையில் அல்ல. என்பது சிந்தனைக் குறியதே.
இன்யை சூழலில் புதிய புதிய சீர்திருத்தங்கள் மாணவர்களுக்காக அறிமுகம் பெறும் வேளையிலும் அவை அனைத்தும் சகலரினாலும் ஏற்கப்பட்டு பன் விருத்தி வகிபங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதும். உள வளர்ச்சி மேன்மை பெறுவதும் தேவையை நோக்கியதே இந்த வகையில் மாணவர்களும் - ஆசிரியர்களும், மாணவர்களும் - பெற்றோர்களும், பெற்றோர்களும் - ஆசிரியர்களும் என்ற நிலையில் காணப்படும் இன்றைய கல்வியியல் முறையானது

லேபிள்கள்:

நெறிசார்ந்த கல்வி

நெறிசார்ந்த கல்வி

எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்தேனும் கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.

லேபிள்கள்:

ஆரம்பக் கல்வி கற்கும் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் அவசியம்

முதற்கோணம் முற்றும் கோணம்’ என்பார் மூத்தோர்கள்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

என்ன! இதுவும் நாம் தரப்போகிற விடத்திற்கு ஒத்துழைக்கும் என நம்புகிறேன். சரி விடயத்திற்கு வருவோம். இன்று பாடசாலைகளில் தரம் ஒன்றில் பிள்ளையை சேர்ப்பதற்கு போட்டியோ போட்டி, ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் சிலவேளை தாம் எதிர்பார்த்த பாடசாலையில் தனது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் பெற்றோருக்கு சில பாடசாலைகளில் பிள்ளைகளே சேரவில்லை என்கிற நச்சரிப்புக்கள் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு, வகுப்பில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிற பிரச்சினை பெரிய பாடசாலைகளில். இவ்வாறு தரம் 1 இல் மாணவர்களை சேர்க்கின்ற நிலையில், அல்லல்படுகின்ற நிலையில் கல்வியமைச்சும் புதிய புதிய சுற்று நிருபங்கள் தரம் 1 இல் பிள்ளைகளை சேர்ப்பதில் இழுபறி இவற்றையும் தாண்டி பிள்ளை ஏதோர் பாடசாலையில் சேர்ந்த நிம்மதியில் பெற்றோர் இருந்து விடுகின்றனர்.
இனிமேல்தான் ஆரம்பிக்கிறது மாணவர்களின் தொழிற்பாடுகள். உண்மையில் பிள்ளை தரம் ஒன்றில் பாடசாலைக்கு வருமுன்னராக பெற்றோரையும் தன் சுற்றுத்தாரையும், குறிப்பிட்ட உறவினரையும் பார்த்துப் பழகிய பிள்ளைக்கு பாடசாலைச் சூழல் பாரியதோர் பிரச்சினையை தோற்றுவிக்கலாம். அப்போதுதான் தரம் ஒன்று கற்பிக்கின்ற ஆசிரியர் சரியான முறையில் மாணவர்களை இனங்கண்டு அவர்களை அறிந்து கொள்வதன் ஊடாக பாடசாலைக்கும், வீட்டுக்கும் இடையிலான தொடர்பை சிறந்த முறையில் பேணி மாணவர்களினது, கற்றலுக்கு தயாராகும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உதவும் இச்செயற்பாட்டை கட்டாயம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் செய்தேயாக வேண்டிய நிலைக்கு உட்படுகின்றனர்.
ஆதலால்தான் இதனை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கல்வி மறுசீரமைப்பினைத் தொடர்ந்து, பின்ணூட்டல் வேலைத்திட்டங்களினூடாகவும் கண்டறியப்பட்ட பல்வேறு விடயங்களையும் கருத்திற்கொண்டு தேசிய கல்வி நிறுவகம் கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து முதலாம் தரத்தில் பாடசாலைகள் பிரவேசிக்கின்ற பிள்ளைகளை அறிந்து கொள்ளும் நோக்குடன் “பிள்ளைகளை அறிந்து கெள்வோம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நடைமுறையானது பிள்ளைகளினது மனமகிழ்ச்சியைத் தொடராக வைத்திருந்து பாடசாலையும், வீடும் ஒரேயமைப்புடனே காணப்படுகிறது என்கிற உள்ளார்ந்த நிலையை இப்பாலக பிஞ்சுள்ளங்களில் படிப்படியாக உரமேற்றுவதற்குரிய வேலைத்திட்டங்களைத் தயாரித்து அதுனூடாக கற்றலை ஒரு யுக்தியாக மேற்கொள்ளும் நோக்காவே இவை கருதப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை தேசிய கல்வி நிறுவகத்தின், ஆரம்பக் கல்வி, விசேட கல்விப்பிரிவு, பாடவிதான அபிவிருத்தி நிலையம் என்பன இணைந்து கல்வி வெயியீட்டுத் திணைக்களத்தின் உதவிகொண்டு இதனையொரு கையேடாக பாடசாலைகளுக்கு வழங்கியும் உள்ளன.
இதனில் காணப்படுகின்ற 16 வேலைத்திட்டங்கள் உண்மையாகவே பிள்ளைகளை அறிந்து கொள்வதற்கான வேலைத்திட்டத்திற்கு மேலும் வலுவூட்டி இரசனை மிக்கதாக்கும் நோக்குடன் பின்வரும் குறிக்கோள்களையும் அடையும் நோக்குக்கு அமைய இவைகள் திட்டமிடப்பட்டுள்ளன எனலாம். அவைகளாவன:
தரம் ஒன்றில் பிரவேசிக்கும் பிள்ளைகளிடத்தில் பாடசாலை தொடர்பான விருப்பை ஏற்படுத்த தரம் 1 இல் சேர்கின்ற மாணவர்களுக்கிடையிலான நட்பினை உருவாக்கிக் கெள்ள.
மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையிலான நட்பினை ஏற்படுத்தவும்.
இப்பருவ பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை ஆரம்பத்தி லிருந்தே ஆசிரியர் இனங் காணவும்.
முறைசார்ந்த கல்விப் புலமான பாடசாலைக்கு வருகின்றமை யினால் அவர்களின் உளரீதியான ஆற்றல்களை எதிர்காலக் கல்விச் செயன்முறைக்கு வித்திடவும், இதுபோன்றவற்றுடன், பிள்ளையை அறிந்து கொள்ளவும், பெற்றோருக்கு மாணவர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்கள் மகிழ்ச்சியாக பாடசாலைக்கு வரவும், சக வகுப்பு மாணவர்களுடன் பங்கெடுத்து விளையாடவும், பாடசாலையைப் பற்றிய நடைமுறைகளை ஓரளவாவது கற்றுக் கொள்ளவும் வேண்டிய நிலையில்தான் பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களுக்கான ‘ஏடுதொடக்க விழா’ என்று தரம் இரண்டு வகுப்பு (பெரிய வகுப்பு) மாணவர்களால் வரவேற்கப்படுவதும் இவைகளை முன்னிட்டேயாகும்.
இவைகள் காரணமாக பாடசாலையின் மாணவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் அற்ற நிலையில் மகிழ்ச்சியான சூழலில் ஒரு ஜனநாயகப் பண்புகளின் அடிப்படையில் சிநேகபூர்வமான முறையில் கல்வியைத் தொடரக்கூடிய வாறான நிலையிலும் தரமான கல்விச் சூழலை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வகைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஊடாக வழங்கப்படுகின்ற 16 செயற்பாடுகளையும் இறுதியாக பிள்ளைகளை இனங்காணும் நியதிகளாக 28 உள்ளார்ந்த ஆற்றல்களும் ஒழுங்கு முறையாக செயற்படுத்தப்படுகின்ற போது நாமும், நாடும், பெற்றோரும் எதிர்பார்க்கின்ற ஒரு திடமான, உறுதியான சமூதாயத்தின் உறுப்பினரை உறுதிசெய்கின்ற அத்திவாரத்தை இடுகிறோம் என்ற நிலை ஆரம்பப்படிகளிலேயே இடப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
இதன் மூலமாக விளையாட்டு வீடு, சுதந்திரமான செயற்பாடுகள், குழு விளையாட்டு 1,2, ஆடல் பால், அபிநயம், கதையில் வரும் பாத்திரங்களை பாவனை செய்தலும், பல்வேறு ஒலிகளை எழுப்புதலும், பாத்திரங்களைப் பாவனை செய்தலும் ஒலிகளை எழுப்புதலும் (குருவிகள் கிராமம்), விளையாட்டு முற்றம், வெட்டுதல் குறித்த எல்லையினுள் நிறந்தீட்டுதல், ஆக்கச் செயற்பாடுக்ள 1,2, கதை சித்திரம் வரைதல், ஊர்வலம், எண்ணுதல், பொருள்களை எண்ணுதல் / எண் விளக்கம் 1,2 போன்ற 16 செயற்றிட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதனது குறிக்கோள், வளங்கள், முன் ஆயத்தம், செயலொழுங்கு, இன்காணக்கூடிய உள்ளார்ந்த ஆற்றல்களை போன்றனவும் ஆசிரியரால் மாணவர்களிடமிருந்து பெறத்தக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை வேறுவிதமானவாறு, சூழலுக்கேற்றவிதமாகவும் மாற்றியமைக்கின்ற சுதந்திரத் த
• பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் இந்நாட்டுப் பிள்ளைகள் எந்தவிதமான தங்குதடையின்றி சீரான சீர்கல்வியை இடையறாது தொடரவும் அதற்கான ஊக்கவிப்பாக அவர்களுக்கான நூல்களும், சீருடை மற்றும் உணவு போன்றனவும் வழங்கப்பட்டு வருகின்றமை நாமறிந்த விடயம்தான்.
http://salasalappu.com/?p=1737

நூலகங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மாணவர்களுக்குச் சிறு பராயத்திலிருந்தே பயிற்சியளிக்கப்படுதல் அவசியம். இந்த வகையில் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கும் மாணவர்களுக்கு நூல்களை வாசிப்பதில் ஆர்வத்தையும், அக்கறையையும் ஏற்படுத்தக் கூடியனவாகச் சிறுவர் நூலகங்களும், பாடசாலை நூலகங்களும் செயற்படுகின்றன. பெற்றோர் தம் சிறார்களை சிறுவர் நூலகங்களுக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் நூல்ககளை வாசிக்கும் வகையில் ஊக்கப்படுத்துதல் வேண்டும். பாலர் பாடசாலை ஆசியர்கள் தம் மாணவர்களை மட்டுமன்றி அம் மாணவர்களது பெற்றோர்ருக்கும் இவ்வகையில் ஊக்கமும் வழி காட்டலும் அளிக்க வேண்டும். அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் அனேகமான இடங்களில் பெற்றோர் தாம் நூலகங்களுக்குச் செல்லும்போது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று சிறு வயது முதலே நூலகங்களைப் பயன்படுத்துவதில் அவர்களை ஈடுபடச் செய்கின்றனர். வுளர்முக நாடுகளில் இவ்வாறு பெற்றோர் தம் பிள்ளைகளை நெறிப்படுத்தும் தன்மை குறைவாகவே காணப்படுகின்றது

லேபிள்கள்:

பெற்றோர்களது முக்கியமான கடமை

தம் குழந்தைகளுக்குக் கல்விபுகட்ட முதன்மையான, விட்டுக் கொடுக்கமுடியாத உரிமையும் கடமையும் பெற்றோருக்கு உண்டு. எனவே கல்விக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆகவே குடிமக்களின் உரிமைகளைக் காத்து ஆதரிக்கவேண்டிய பொறுப்புள்ள பொது அதிகாரிகள், பங்கீட்டு நீதியைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தம் மனச்சான்றின்படி தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களை உண்மையான சுதந்திரத்துடன் தெர்ந்தெடுக்க இயலும் வகையில் பொதுநிதி உதவி பங்கிடப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.20
எல்லாக் குடிமக்களையும் அறிவு வளர்ச்சியில் தகுந்த பங்கடையக் கூடியவர்கள் ஆக்குவதும், அவர்களுடைய கடிமைசார் கடமைகளையும் உரிமைகளையும் தகுந்தமுறையில் நிறைவேற்ற அவர்களைத் தயாரிப்பதும் அரசின் கடமையாகும். எனவேஈ பள்ளியல் கல்வி பெறுவதற்குச் சிறுவர்கள் கொண்டுள்ள உரிமையை அரசு பாதுகாக்கவேண்டும்; ஆசிரியர்களின் திறமையையும் கல்வியின் தரத்தையும் விழிப்பாயிருந்து கவனிக்கவேண்டும்; மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். பொதுப்படையாக, பள்ளிகளின் பணி முழுவதையும் அரசு ஊக்குவிக்கவேண்டும். கீழிருப்போர் செய்யக்கூடியதில் மேலிடம் தேவையின்றித் தலையிடக்கூடாது என்னும் கருத்தினை எப்போதும் கண்முன் கொண்டு, கல்விக் கூடங்களை நடத்த தனக்கே முழு உரிமை உண்டென அரசு கருதலாகாது. ஏனெனில் கல்விக் கூடங்களை நடத்த அரசுக்கே முழு உரிமை உண்டென்னும் பார்வை மனிதரின் பிறப்புரிமைகளுக்கும், பண்பாடு வளர்வதற்கும் பரவுவதற்கும், அமைதியுடன் குடிமக்கள் உடடினாத்து வாழ்வதற்கும், எண்ணிறந்த சமூகங்களில் இன்று நிலவும் பன்னோக்குக் கண்ணோட்டத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.21
எனவே, திருச்சங்கம் உகந்த கல்வி முறைகள், பயிலும் முறைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டுபிடிப்பதிலும்ஈ இளைஞருக்குத் தக்க கல்வி தரவல்ல ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தாமாக முன்வந்து ஒத்துழைக்கக் கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது. மேலும் சிறப்பாகப் பெற்றோர் கழகங்கள் வழியாகப் பள்ளி பணி முழுவதற்கும், முக்கியமாகப் பள்ளி கொடுக்கவேண்டிய ஒழுக்கக் கல்விக்கும் தொடர்ந்து உதவியளிக்கவும் கிறிஸ்தவர்களைத் திருச்சங்கம் தூண்டுகிறது.22
கல்விக் கூடங்களில் அளிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சமயப் பயிற்சி


திருச்சபை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் சமயக் கல்வியைத் தளரா ஊக்கத்துடன் கவனிக்க வேண்டிய தன் முக்கியமான பொறுப்பைத் தெளிவாக உணர்ந்து, கத்தோலிக்கப் பள்ளிகளல்லாத மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் எண்ணிறந்த தன் பிள்ளைகள் மத்தியில் தனிப்பட்ட அன்பு காட்டி உதவி செய்வதன் மூலம் உடனிருக்க வேண்டும். இவ்வுடனிருப்பு கீழ்வரும் வழிகளில் வெளிப்படும்: இப்பிள்ளைகளின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் தம் வாழ்க்கையால் சான்று பகர்தல்; உடன் மாணவர்களின் திருத்தூதுப் பணி;23 குறிப்பாகப் ;பிள்ளைகளின் வயதிற்கும் சூழ்நிலைக்கு;ம ஏற்றவகையில் நிறைவாழ்வுப் போதனையைப் படிப்பித்தும் கால இடச் சூழலுக்கேற்பத் தகுந்த முயற்சிகளால் அருள்வாழ்வு சார்ந்த உதவியளித்தும் வருகின்ற திருப்பணியாளர்கள், பொது நிலையினரது பணி.
மேலும் பெற்றோர்களது முக்கியமான கடமை ஒன்றினைத் திருச்சபை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அதாவது, தங்கள் குழந்தைகள் மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உலகியல் கல்விப் பயிற்சியோடு கூடக் கிறிஸ்தவக் கல்விப் பயிற்சியிலும் சேர்ந்து இசையுற முன்னேறவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதிலும், ஏன் அவற்றை வேண்டிப் பெற்றுக்கொள்வதிலும் பெற்றோரின் இந்த முக்கியக் கடமை அடங்கும். ஆகவேதான் இன்றைய சமுதாயத்தின் பன்னோக்கு நிiயைக் கருத்திற்கொண்டு, நியாயமான சமயச் சுதந்திரத்தை மதித்து, குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட சய மற்றும் ஒழுக்குக் கோட்பாடுகளின்படி எல்லாப் பள்ளிகளிலும் தம் பிள்ளைகளுகு;குக் கல்வி அளிக்க இயலும் வண்ணம் உதவி செய்கின்ற குழமைச் சமூகங்களையும் அவற்றின் அதிகாரிகளையும் குழுக்களையும் திருச்சபை வெகுவாய்ப் புகழ்கிறது.

லேபிள்கள்:

விடுச்சுழல் கல்வியில் செலுத்தும் செல்வாக்கு

அரசாங்க அல்லது தனியார் பாடசாலைகளைத் தவிர்த்து வீட்டில் பெற்றோராலும் போதனாசிரியர்களாலும் வழங்கப்படும் கல்வியே வீட்டுக்கல்வி, அல்லது வீட்டுப் பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. காலனித்துவத்திற்கு முன்பு நமது பகுதிகளில் வீட்டுக்கல்வியே பரவலாக இருந்துவந்த்து. எமது மரபில் ஆசிரியரின் இல்லங்கள் கல்விக்கூடங்களாக விளங்கின. முறைசார் பாடசாலைகளும் கட்டாயக் கல்விச் சட்டங்களும் வருவதற்கு முன்னர் இம்முறையை நாம் பின்பற்றி வந்தோம். ஆனால் தற்காலத்தில் முறைசார் பாடசாலைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக, வீட்டுப்பாடசாலைகள் தோன்றியுள்ளன.
புதிய அறிவு மைய, தகவல் மைய நூற்றாண்டிலும் முழுப்பாடசாலைக் கல்வியையும் வீடுகளிலேயே வைத்துக் கற்பிப்பதற்குரிய சாதனங்கள் வளர்ச்சியடைந்துவிட்டன. பாடசாலைகளின் கல்விச் சூழலுக்கு மாறுபட்ட சூழலில் வைத்து கல்வியை வழங்க விரும்பும் பெற்றோர்களுக்கு வீட்டுப் பாடசாலை ஒரு சட்டபூர்வமான மாற்று ஏற்பாடாகும். மேற்கு நாடுகளில் சமைய, மற்றும் கல்வி ரீதியான காரணங்களுக்காகவும் நடைமுறையிலுள்ள அரசாங்க, தனியார் கல்வியை விரும்பாதவர்களும் வீடுகளை கல்விக்கூடங்களாக்கிக் கொள்கின்றனர். ஒதுக்குப்புறமாக தனித்து அல்லது புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களும் இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டியுள்ளது.
வீட்டில் இடம்பெறும் கல்வியை வெளியிலுள்ள பாடசாலைகள் மேற்பார்வை செய்வதுமுண்டு, பாடசாலை தொடர்பற்ற பாட ஏற்பாடு என்ற நிபந்தனையற்ற வீட்டுக்கல்வியும் உண்டு. சில நாடுகளில் வீட்டில் பயிலும் குழந்தைகளின் பாடஏற்பாட்டுக்கு அரசாங்க அனுமதியையும் பெறவேண்டியுள்ளது. 1977 லேயே பாடசாலை இல்லாமல் வளர்தல் என்ற சிந்தனை தோன்றிவிட்டது. 1960 களிலிருந்து பாடசாலை கல்வி முறை கடும் எதிர்ப்புக்குள்ளாகி வருகின்றது. 1964 இல் ஜே. ஹோல்ட் என்ற அறிஞர் How Children Fail – குழந்தைகள் எப்படி தோற்கிறார்கள் என்ற நூலில் பாடசாலைக் கல்வியை காரசாரமாக விமர்சித்தார். பாடசாலைகள் குழந்தைகளை நிர்ப்பந்தம் செய்வதன் காரணமாகவே அவர்கள் சித்தியடைய முடியவில்லை என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பவயதில் வீட்டில் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் உளவளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் சேர்த்துவிடுவதால் இவ்வாறான நன்மை இழக்கப்படுகின்றது. நிறுவன மயப்பட்ட பாடசாலைச்சூழலில் இவ்விழப்பை ஈடுசெய்ய முடியாது. பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சிக்கு வீடே சரியான இடமாகும். பின்தங்கிய வகுப்பினரின் குழந்தைகள், விசேட தேவையுடைய குழந்தைகள் ஆகியோருக்கு வீட்டுக்கு வெளியே பாடசாலையின் கல்வி ஏற்பாடுகள் தேவையாகும். மற்றக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் தகுதியுள்ள ஆசிரியர்களைவிட சாதாரண பெற்றோர்களே போதுமானவர்கள் என்ற முறையில் கல்வியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் பெற்றோர்களை வீட்டுப்பாடசாலைகள் குறித்து சிந்திக்க வைத்தன.
இவ்வறிஞர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் வளமையான கல்வி வீடுகளில் இடம்பெற வேண்டுமென்று கூறவில்லை. அவ்வாறான பாடசாலைக் கல்வியை அவர்கள் எதிர்த்தனர். கல்வியானது வெறுமனே புலமை சார்ந்தது, புத்தக்க்கல்வியே கல்வி என அவர்கள் சொல்லவில்லை. அவர்களுடைய சிந்தனையின் படி, கல்வியானது இயற்கையானது, வாழ்க்கையைப் பரிசீலிப்பது. குடும்ப உறுப்பினர்களின் நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து எழுவதாகும்.
வீட்டில் கல்வி வழங்க முற்பட்டோர் பல்வகையான முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தினர். நூல்நிலையங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், வீட்டுப்பாடசாலை அமைப்புக்களின் ஏற்பாடுகள், நூல்கள், பாடஏற்பாடு, சமைய நிலையங்கள் வழங்கும் கல்வி, உள்ளுர்ப் பாடசாலை பாடவிடயம், தொலைக்கல்வி ஏற்பாடுகள், தொலைக்காட்சி, வானெலியின் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், இணையத்தள வசதிகள், இலத்திரன் அஞ்சல் முதலிய பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். குழந்தைகளின் கற்றல் வேகத்திற்கேற்ப பாட ஏற்பாட்டுப் பொதிகளை கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறே பாடசாலை பாட ஏற்பாட்டுச் சாதனங்கள் அனைத்தையும் கொள்வனவு செய்து அருகிலுள்ள பாடசாலையில் கற்பிக்கப்படும் சகல விடயங்களையும் வீடுகளில் கற்பிக்கவும் முடியும். வீட்டில் கல்வி வழங்க விரும்புபவர்கள் சமூதாய வளங்களையும் பயன்படுத்த முடியும். சமூக நிலையங்கள், அரும்பொருள் காட்சிசாலை, விளையாட்டுக்கழகங்கள், வழிபாட்டு இடங்கள், விஞ்ஞானப் பூங்காக்கள், நூலகங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். மக்கள் அரங்குகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பெற்றோரும் குழந்தைகளும் பங்கு கொள்ளலாம்.
வீட்டுக் கல்வி வழங்கும் பெற்றோர் ஒன்றுகூடி சங்கங்கள் அமைத்து கிழமைக்கொருமுறை ஒன்றுகூடவும் முடியும். அப்போது வகுப்பறைச் சூழல் ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த பல்வேறு பெற்றோர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளலாம். செயல்முறைப் பயிற்சிகள், வெளிநாட்டு மொழிகளைக் கற்றல், விஞ்ஞானப் பரிசோதனை செய்தல், கலந்துரையாடல் என்பனவற்றை இவ்வொன்றுகூடலில் செய்யலாம். பெற்றோர்கள் சேவையின் அடிப்படையில் பங்குகொள்வதால் வீட்டுக்கல்வியின் செலவுகளும் குறைகின்றன. இணையவழிக் கற்றலையும் பெற்றோர் பயன்படுத்தலாம்.
வீட்டுக்கல்வி உண்மையில் இயற்கையாக வழங்கப்படும் கல்வியாகும். இவ்வகைக் கல்வி குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அறிவைப் புகட்டுவதாகும். பெற்றோர்கள் பாடநூலிலும் கற்பித்தலிலும் அதிக அக்கறை செலுத்தாது பல கற்றல் அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றனர். பெற்றோர் தாம் விரும்பிய பாடவிடயத்தை தினித்து அதிகாரம் செய்ய மாட்டார்கள். குழந்தைகள் சுதந்திரமாகத் தேடுதலில் ஈடுபட ஊக்குவிப்பர். அறிஞர் ஹோல்ட் குழந்தைகள் தமது வாழ்க்கை அனுபவங்களினூடாக கற்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளோடு இணைந்து வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுவதையும் வழியுறுத்தினார். குழந்தைகள் படித்தாக வேண்டும் என்று சொல்லக்கூடிய அறிவுத்தொகுதி என்று எதுவுமில்லை. பாடசாலை பாடநூல்களை அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை கல்விச் செயற்பாட்டின் மையப்பகுதி அல்ல என்பது அவரது கருத்தாகும்.
தங்கள் பிள்ளைகள் கல்விமான்களாக திகழ வேண்டும் என்ற வேட் கையும் எப்படியாவது அவர்களுக்கு கல்வியைப் போதித்து விட வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியும் விழிப் புணர்ச்சியும் பெற்றோர் களிடம் அதிகமாக உள்ளது.அதே நேரத்தில் கல்விக்காக செலவு செய்கின்ற பொருளாதாரச் சுமையும் அதிகரித்து இருக்கிறது. பணக்காரக் குடும்பமாக இருந்துவிட்டால் பிரச்சினையில்லை. பிள்ளைகள் படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட முடியும்.நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.வீட்டு வாடகை, குடும்பச் செலவு என்று வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கின்றபோது பிள்ளைகளுக்காக பணம் செலவு செய்ய தடுமாற்றம் அடைகின்றனர்.

இப்படி சிரமப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கின்ற பெற்றோர்கள், அன்றாட வாழ்க்கையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.அதை அவர்கள் புரிந்து கொண்டால் வெற்றி பெற்ற மாணவனை வீட்டிலேயே உருவாக்கிவிட முடியும் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆரம்பப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, இடைநிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, முதலில் அவர்களுக்கு நேர ஒழுங்கையும் நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

காலையில் 5 மணிக்கு பிள்ளைகளை எழுப்பி காலைக் கடன்களை முடிக்கச் செய்து குறைந்தது 1/2 மணி நேரமாவது பாடப் புத்தகங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.வெறுமனே படிக்கச் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே டிவியை திறந்து படம் பார்க்க பெற்றோர்கள் அமர்ந்து விடக் கூடாது. பிள்ளைகளின் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சத்தம் போட்டு படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

பெற்றவர்கள், தங்கள் மீது மிகுந்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகளின் மனதில் இது ஏற்படுத்தும். பெற்றவர்கள் மீது பிள்ளைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் கூடும்.சீருடை அணிவது, பாடப்புத்தகங்களை அடுக்கி வைப்பது போன்ற செயல்களை பெற்றவர்களே நேரடியாகச் செய்யாமல் பிள்ளைகளை செய்ய விட்டு நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி பக்குவப்படுத்த வேண்டும்.பள்ளி முடிந்து வந்தவுடன் மைலோ கலக்கிக் கொடுப்பது, ரொட்டி வாட்டிக் கொடுப்பது மட்டுமே தங்கள் கடமை என்று இல்லாமல் பள்ளிக் கூடத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை சொல்லச் சொல்லி கேட்டு ரசிக்க வேண்டும்.

அடிக்கடி குறுக்கிட்டுப் பேசி தங்களின் அதிமேதாவித் தனத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. அடுத்த நாள் அவர்கள் பேசத் தயக்கம் காட்டக் கூடும்.அவர்கள் படித்த பாடங்களை சுருக்கமாகச் சொல்லும்படி ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது நீங்களும் ஓர் ஆசிரியர் மாதிரி ஆகிவிடக் கூடாது. அவர்கள் பேச்சை ரசிக்கின்ற ஒரு ரசிகனாக மாறிவிட வேண்டும்.நல்ல கருத்துக்கள் கொண்ட சுவையான குட்டிக் குட்டிக் கதைகளைக் கூற வேண்டும். நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு பிள்ளைகளிடம் பதில்பெற வேண்டும். அந்தக் கேள்விக்கான விடை உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் திருப்பிக் கேட்கும் போது திருதிருவென நீங்கள் விழிக்கக் கூடாது.படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று அழுத்தம் கொடுக்காமல் படிப்பும் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.பிள்ளைகள் பொறுப் பானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்களே பொறுப் புள்ளவர்களாக நடந்து கொண்டால் தானாகவே பிள்ளைகளுக்கு பொறுப்பு வந்துவிடும்.

முதலில் உங்களுக்கு இது சிரமமாக இருக்கும். பிள்ளைகளும் முரண்டு பிடிப்பார்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதைத் தவறாமல் கடைப்பிடித்தால் பிறகு இதுவே பழக்கத்திற்கு வந்துவிடும்.பிறகு நீங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். டியூசனுக்காக பெரும் பணத்தை செலவிட வேண்டாம். பிள்ளைகளே படிப்புக்கான விஷயங்களைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள். ¿மது பிள்ளைகள் புத்திசாலிகள். பெற்றோர்களும் பொறுப்புமிக்கவர்கள். ஆனால் வாழ்க்கைத் தேடலில் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட அவகாசம் கிடைப்பது அரிதாகி விட்டது.அன்றாடம் காலையும் மாலையும் 1/2 மணி நேரம் ஒதுக்கிப் பாருங்கள்; நீங்களே ஆச்சரியப்படும்படி பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள்

லேபிள்கள்: