செவ்வாய், 25 நவம்பர், 2014

பெண் பிள்ளைகளின் தவறான தொடர்புகளும் விளைவுகளும் 

பக்­கு­வ­மற்ற இளம் ரீன் ஏஜ் வய­து­டைய பிள்­ளைகள் நல்­லது கெட்­டது எது என்­பது பற்றி சீர்­தூக்கி பார்த்து தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாத வய­தினர். இவர்­களின் அனு­ப­வ­மற்ற தன்­மையும் அறி­யா­மையும் இவர்கள் தவ­று­களில் சிக்­கு­வ­தற்கு கார­ண­மாக இருக்­கின்­றன. இவர்­க­ளது நட­வ­டிக்­கைகள் மீது பெற்றோர் கண்­கா­ணிப்­பாக இருப்­ப­துடன் அவர்­க­ளது மன­நி­லை­களை புரிந்து அவர்­க­ளுக்கு ஒரு நல்ல ஆலோ­ச­க­ரா­கவும் அவர்­க­ளுடன் நட்­பா­கவும் அதே நேரம் கட்­டுக்­கோப்­பா­கவும் அவர்­களை வழி நடத்த வேண்டும். ஆனால், பெற்­றோர்­களோ இன்­றைய பொரு­ளா­தாரம், தமது முன்­னேற்­றங்கள், தமது உயர்­கல்வி, பதவி உயர்வு, போட்­டிகள், பொருள்­தே­டுதல் மற்றும் அவர்­களின் தனிப்­பட்ட நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்­றுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து முழு மூச்­சாக ஓடிக்­கொண்­டே­யி­ருக்­கி­றார்கள். இந்­நி­லையில் தமது பிள்­ளைகள் கல்வி நட­வ­டிக்­கை­க­ளி­லேயே தம்மை முற்றும் முழு­தாக ஈடு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள் என்ற அசைக்க முடி­யாத நம்­பிக்­கையில் இருந்து வரு­கி­றார்கள். இறு­தியில் தமது பக்­கு­வ­மற்ற வய­தி­லுள்ள பிள்­ளைகள் விடு­விக்­கப்­பட முடி­யாத சிக்­கல்­களில் சிக்­கிய பின்­னரே திரும்பிப் பார்க்­கின்­றனர்.
ரீன் ஏஜ் இளம் வய­தி­ன­ருக்கு எவ்­வா­றான வழி­களில் தவ­றான தொடர்­புகள் ஏற்­பட முடியும்?
இவ்­வா­றான இளம் வய­தி­ன­ருக்கு சில சந்­தர்ப்­பங்­களில் வீடு­களில் தனி­மையே துணை­யா­கி­றது. இவர்­க­ளுக்கு கண்­கா­ணிப்­பற்ற தனிமை என்­பது மிகவும் ஒரு ஆபத்­தான விடயம் என்­பதை எவரும் உணர்­வ­தில்லை. இப்­ப­ரா­யத்­தினர் இரு வழி­களில் தவ­றான தொடர்­பு­க­ளுக்கும் சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுக்­கி­றார்கள். முத­லா­வது வழி இவர்­க­ளது அறி­யா­மையே பல­வீ­ன­மாகப் பயன்­ப­டுத்தி வீடு­களில் வந்­து­போகும் தெரிந்­த­வர்கள், உற­வி­னர்­க­ளா­லேயே ஏற்­படக் கூடும். அதா­வது இவர்கள் இப்­பிள்­ளை­க­ளுடன் அன்­பாகப் பேசி நட்­பாகப் பழகி தகாத உற­வு­வரை கொண்டுசெல்ல முடியும். இப்­பிள்­ளை­களோ இது குறித்து அறிவோ அனு­ப­வமோ இல்­லா­மை­யினால் இவ்­வா­றான வலை­க­ளிற்குள் சிக்­கிக்­கொள்ளும் பரி­தாபம் ஏற்­ப­டு­கின்­றது.
இரண்­டா­வது வழி இப்­பிள்­ளைகள் வெளி செல்லும் போது ஏற்­படும் ரீன ஏஜ் காதல் தொடர்­புகள் மீள­மு­டி­யாத சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கு­ம­ள­விற்கு போய்­வி­டு­கின்­றன. இவற்­றிற்கு பக்க பல­மாக இவர்­களின் கைகளில் கொடுக்­கப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சிகள், கணினிகள் இணை­யத்­த­ளங்கள் பேஸ்புக் என்­பன அமை­கின்­றன. தமது பிள்­ளைகள் அந்­த­ள­விற்கு போக­மாட்­டார்கள் என பெற்­றோர்கள் தமது மனங்­களில் கொண்­டி­ருந்த அசைக்க முடி­யாத நம்­பிக்கை எனும் பலமே இவ்­வா­றான சிக்­கல்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான பல­வீ­ன­மாக மாறு­கின்­றது.
இவ்­வா­றான ரீனேச் பரு­வத்தில் ஏற்­படும் தவ­றான தொடர்­பு­களின் பின் விளை­வுகள் எவை?
தவ­றான தொடர்­புகள் இளம் பிள்­ளை­களில் மீள­மு­டி­யாத உள­வியல் உடற் தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. உள­வியல் தாக்­கங்கள் என்­கின்ற போது பிள்­ளைகள் பிற்­கால வாழ்க்­கை­யிலும் தமது திரு­மண வாழ்க்­கை­யிலும் பயந்­த­வர்­க­ளா­கவும் தன்­னம்­பிக்கை இழந்­த­வர்­க­ளா­கவும் வாழ்க்­கையில் வெறுப்­பு­டை­ய­வர்­க­ளா­கவும் உள­வியல் ரீதி­யா­கவே தீர்க்­கப்­பட முடி­யாத மனத்­தாக்­கங்­களில் சிக்கித் தவிக்­கின்­றனர். அத்­துடன் கல்­வியில் திற­மை­களை வெளிக்­காட்டும் தன்மை மங்­கிப்­போ­வதும் திரு­மண வாழ்க்­கையில் வெற்­றி­ய­டைய முடி­யாத பிரி­வு­க­ளுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுப்­பது வழ­மை­யாகி விடும்.
உடல் ரீதி­யான தாக்­கங்கள் என்­கின்ற போது பாலியல் தொற்று நோய்­க­ளுக்கு உள்­ளாதல், வேண்­டப்­ப­டாத கருத்­த­ரித்தல், கன்­னித்­தன்மை இழக்­கப்­ப­டுதல் என முக்­கிய மருத்­துவ ரீதி­யான சிக்­கல்கள் ஏற்­ப­டு­கின்­றன. இதன் பின்னர் இதற்­கான தீர்­வு­க­ளுக்­காக எமது பெற்­றோர்கள் ஏங்க வேண்டி உள்­ளது.
ரீனேச் பரு­வத்­தி­னரின் பிரச்­சி­னை­களை தடுப்­பது எவ்­வாறு?
பெற்­றோர்­க­ளா­கிய நாங்கள் முதலில் இவ்­வ­யது பிள்­ளைகள் எதிர்­கொள்­ளக்­கூ­டிய பிரச்­சி­னைகள் குறித்தும் அறிந்­தி­ருக்க வேண்டும். அத்­துடன் இவ்­வ­யது பிள்­ளைகள் பக்­கு­வ­மற்ற வய­து­டை­ய­வர்கள் அறி­யா­மை­யிலும் அனு­ப­வ­மற்ற தன்­மை­யிலும் உள்­ள­வர்கள் என்­ப­தனை மறந்­து­விடக் கூடாது. இவர்­களால் ஒரு அறி­வியல் ரீதி­யான தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யாது என்­ப­தனை நாம் அறிந்­தி­ருக்க வேண்டும்.
இவர்­களைக் கண்­கா­ணிக்க கண்­டிப்­புடன் நாம் நடந்து கொள்­வதன் மூலம் வெற்றி கொள்ள முடி­யாது. இவ்­வாறு கண்­டிப்­புடன் நடக்கும் பெற்­றோர்­களின் பிள்­ளைகள் அன்­பையும் அர­வ­ணைப்­பையும் வெளி­யி­டங்­களில் தேடு­வார்கள். தமது உணர்­வு­க­ளையும் மன நிலை­க­ளையும் வெளி­யார்­க­ளு­ட­னேயே பகிர்ந்து கொள்­வார்கள். இதனை வெற்றி கொள்ள நாம் எமது பிள்­ளை­க­ளுக்கு ஒரு விதத்தில் நல்ல நண்­பர்­க­ளா­கவே நடந்து கொண்டு அவர்­களை மனம்­விட்டுப் பேச சந்­தர்ப்பம் வழங்கி அவர்­க­ளது மன­நி­லை­களை அறிந்த வண்ணம் இருக்க வேண்டும். இதன் மூலமே அவர்­களைச் சுற்­றி­யி­ருக்கும் சூழ­லையும் அவர்­க­ளது உணர்­வுகள் குறித்தும் அறிந்து அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்.
இப்­ப­ரா­யத்­தி­ன­ருக்கு தனிமை ஆபத்­தா­னது. எனவே இதற்­கான சந்­தர்ப்­பங்­களைத் தவிர்க்க வேண்டும். அத்­துடன் குடும்­பத்­திற்குள் வந்து போகும் அறிந்­த­வர்­களால் ஏற்­ப­டக்­கூ­டிய துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்து அறிந்­தி­ருக்க வேண்டும். ஆகையால் எமது பிள்­ளை­களை அனு­ம­தி­யின்றி தொடு­வ­தற்கு எவ­ரையும் அனு­ம­திக்கக் கூடாது என பிள்­ளை­க­ளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கூடு­த­லா­கவும் தொடர்ச்­சி­யா­கவும் எவரும் தொடு­கையை ஏற்­ப­டுத்­தினால் பிள்­ளைகள் உட­ன­டி­யாக பெற்­றோர்­க­ளிடம் முறை­யி­டு­வ­தற்கோ அல்­லது கூச்­ச­லிட்டு கத்­து­வ­தற்கோ கற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும்.
எமது பிள்­ளை­களை மட்­டுமே அறிந்­தி­ருந்தால் போதாது அவர்­களைச் சுற்­றி­யி­ருக்கும் நண்­பர்கள் எப்­படிப் பட்­ட­வர்கள் என்­ப­தனை பற்றி ஒரு கண்­ணோட்டம் இருக்க வேண்டும்.
பக்­கு­வ­மற்ற இளம் வய­தினர் கைகளில் உள்ள கைய­டக்­கத்­தொ­லை­பே­சிகள் இணை­யத்­த­ளங்­களால் ஏற்­படும் தொடர்­புகள் நன்மை தீமைகள் குறித்து அறிந்­தி­ருக்க வேண்டும்.பாலியல் கல்­வியின் பங்­க­ளிப்பு என்ன?
இளம் பரா­யத்­தி­ன­ரையும் ரீன் ஏஜ் இது போன்ற தவ­றான தொடர்­பு­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் ஆளா­காமல் தவிர்ப்­ப­தற்கு பாலியல் கல்வி உத­வி­ய­ளிக்கும் என முடிவு செய்து மேலை­நா­டு­களில் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இதன் மூலம் தொடு­கை­யி­லி­ருந்து ஆரம்­பிக்கும் உற­வுகள் எது­வரை சென்று முடியும் என ஆரம்­பத்­தி­லேயே பிள்­ளைகள் அறிந்­தி­ருப்­பார்கள்.
இதன் மூலம் சம்­ப­வங்­களை ஆரம்­பத்­தி­லேயே தடுப்­ப­தற்கும் தவிர்ப்­ப­தற்கும் அவர்களால் முடிந்திருக்கக் கூடும். ஆனால் எமது பிள்ளைகளிற்கு இது போன்ற அறிவுகள் இல்­லா­மை­யினால் எல்லாம் முடி­வ­டைந்த பின்­னரே விளை­வு­களை உணர்­கின்­றார்கள். ஆனால், இன்­னொரு பக்­கத்தை பார்ப்­போ­மாயின் பாலியல் கல்­வியின் ஆரம்ப அறி­வுகள் சிறு­வர்­களை தவ­றாக வழி நடத்­தவும் அவர்­களின் மனங்­களைச் சிதைக்­கவும் உத­வி­ய­ளித்­து­வி­டுமே என அச்­ச­மா­கவும் உள்­ளது.
எனவே, பாலி­யற்­கல்­வியின் இரு புறங்­க­ளையும் சீர்­தூக்கிப் பார்த்தால் இது எந்­த­ள­விற்கு நடை­மு­றையில் பய­ன­ளிக்­கு­மென விவா­தித்­துக்­கொண்டே போகலாம்.
ஆனால், அள­வான பாலியல் தொடர்­பான ஆரம்ப அறிவு பாட­சாலை மட்­டத்தில் இருப்­பது நடை­மு­றையில் நடந்து கொண்­டி­ருக்கும் பல வித சிக்­கல்­க­ளி­லி­ருந்து சிறார்கள் தப்­பித்துக் கொள்­வ­தற்கு அவர்களுக்கு உதவியளிக்குமென நம்புகின்றேன்.
ujeyanthan

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு