செவ்வாய், 25 நவம்பர், 2014

 முன்­பள்ளி கல்­வித்­து­றையில் ஒரு புதிய திருப்பம்

நாட்டில் கல்­வித்­து­றையில் மிக வும் பின்­தங்­கி­யுள்ள மக்­க­ளாக பெருந்­தோட்­டத்­துறை மக்­களே கணிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். நாட்டில் மலை­யக மக்­களின் தொகை ஆறு அல்­லது ஏழு விகி­த­மாக இருந்­தாலும் ஆண்­டு­தோறும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அனு­ம­தி­பெறும் மாணவர் எண்­ணிக்கை இன்னும் 05% விகி­தத்தை விடவும் அதி­க­ரிக்­காமல் இருப்­பது பெருந்­தோட்ட மக்கள் கல்­வியில் எவ்­வ­ளவு பின்­தங்­கி­யுள்­ளார்கள் என்­ப­தற்கு தெளி­வான சாட்­சி­ய­மாகும். கடந்த காலங்­களில் மலை­யக கல்­வித்­து­றையில் படிப்­ப­டி­யாக மாற்­றங்­களும் முன்­னேற்­றங்­களும் ஏற்­பட்­டு­வந்­துள்­ளன என்­பது உண்மை. ஆனா லும் நாம் கல்வி அபி­வி­ருத்­தியில் மற்­றைய துறை­யி­னரை எட்­டிப்­பி­டிக்க இன்னும் பல ஆண்­டுகள் செல்லும்.
பிள்­ளையின் கல்வி முன்­னேற்­றத்­திற்கு முன்­பள்ளிக் கல்வி அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இன்­றைய நவீன கல்­வி­மு­றையில் பிள்ளை பாட­சா­லையில் எதிர்­நோக்கும் சவால்­களை சமா­ளிக்க வேண்­டு­மானால் பாட­சா­லைக்கு செல்லும் முன்னர் பிள்ளை, முன்­பள்­ளியில் நன்கு ஆயத்­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். நகர, கிராம பகு­தி­களில் பெற்­றார்கள் தங்கள் பிள்­ளைகள் பாட­சா­லைக்கு செல்லும் முன்னர் முன்­பள்­ளிக்கு அனுப்­பு­கி­றார்கள். இன்று இது ஒரு கட்­டாய தேவை­யா­கி­விட்­டது. ஆனால், பெரும்­பான்­மை யான பெருந்­தோட்­டங்­களில் முன்­பள்ளிக் கல்வி என்­பது இன்னும் கூட முற்­றிலும் அறி­யப்­ப­டாத ஒன்­றா­கவே உள்­ளது. முன்­பள்ளிக் கல்­வியின் முக்­கி­யத்­து­வத்தை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பெருந்­தோட்ட பெற்­றார் கள் அறிந்­தி­ருந்­தாலும் பெருந்­தோட்ட பகு­தி­களில் முன்­பள்­ளிகள் இல்­லா­மையால் தமது பிள்­ளை­க­ளுக்கு இந்த வச­தியை பெற்­றுத்­தர முடி­யாத நிலையில் உள்­ளனர்.
பெருந்­தோட்டக் கல்வி எதிர்­பார்த்த அள­வுக்கு முன்­னே­றா­மைக்கு முன்­பள்ளிக் கல்வி வச­தி­யில்­லாமை முக்­கிய கார­ண­மாகும். இந்த பின்­ன­ணியில் பிரிடோ நிறு­வனம் கடந்த இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் முன்­பள்­ளி­சா­லை­களை நடத்தி வரு­கி­றது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் இந்த நிறு­வ­னத்தால் முன்­பள்­ளிகள் நடத்­தப்­படும் பகு­தி­களில் பிள்­ளை­களின் அடைவு மட்­டமும் ஐந்தாம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைவோர் எண்­ணிக்­கையும் முன்­பள்­ளிகள் இல்­லாத பகு­தி­க­ளோடு ஒப்­பி­டும்­போது மிகவும் அதி­க­மா­க­வுள்­ளது என்­பதை நுவ­ரெ­லியா மாவட்ட கல்வி அதி­கா­ரிகள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். ஆயினும் இவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் வாய்ந்த முன்­பள்ளிக் கல்­வியை பெருந்­தோட்ட பிள்­ளைகள் பெறு­வ­தற்கு மலை­யக அர­சி­யல்­வா­திகள் எவரும் இது­வரை உத­வி­யதும் இல்லை. அதைப்­பற்றி பேசி­யதும் இல்லை. அதற்­காக வளங்கள் ஒதுக்­கி­யதும் இல்லை.
முன்­பள்­ளிகள் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு தொழில்­வாய்ப்பைத் தரு­கி­றது
முன்­பள்­ளிக்­கல்வி மலை­யக கல்வி முன்­னேற்­றத்­துக்கு இன்­றி­ய­மை­யா­தது என்­ப­தை­விட, இலங்­கை­யி­லுள்ள எல்லா பெருந்­தோட்­டங்­க­ளிலும் சகல பிள்­ளை­க­ளுக்கும் முன்­பள்ளிக் கல்வி கிடைக்க செய்­வ­தானால் ஆயி­ரக்­க­ணக்­கான முன்­பள்­ளி­களை அமைக்க வேண்­டிய தேவை­யுள்­ளது. இவ்­வாறு முன்­பள்­ளிகள் அமைக்­கப்­ப­டும்­போது ஆயி­ரக்­க­ணக்­கான பெருந்­தோட்ட இளம் பெண்­க­ளுக்கு சமூக அங்­கீ­காரம் பெற்ற தொழில்­வாய்ப்பு கிடைக்கும். பெருந்­தோட்ட முன்­பள்­ளிக் ­கல்வி ஆயி­ரக்­க­ணக்­கான யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பை தரும் ஒரு கெள­ர­வான தொழிற்­றுறை என்­பதை நாம் ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும்.
ஆயினும் முன்­பள்­ளி­களை எவரும் தாம் நினைத்­த­படி நடத்­தி­விட முடி­யாது. முன்­பள்ளி ஆசி­ரி­யர்கள் தர­மான பயிற்சி பெற்­ற­வ­ராக இருக்க வேண்டும். முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்கு தர­மான பயிற்சி வழங்­கு­வ­தற்கு பெருந்­தோட்டப் பகு­தி­களில் அண்­மைக்­கா­லம்­வரை வாய்ப்­புக்கள் எதுவும் இல்­லாத நிலையில் பெருந்­தோட்ட பகு­தியில் திறந்த பல்­க­லைக்­க­ழங்­களில் முன்­பள்ளி ஆசி­ரி­ யை­க­ளுக்­கான கற்­கை­நெறி ஆரம்­பிக்க வேண்டும் என்ற பரிந்­துரை ஐந்து ஆண்­டு­ க­ளுக்கு முன்­னரே முன்­வைக்­கப்­பட்­டது. ஆனால் மலை­யக அர­சி­யல்­வா­திகள் எவ ரும் அந்த முயற்­சிக்கு உத­வி­ய­ளிக்­க­வு­மி ல்லை. ஊக்­கப்­ப­டுத்­த­வு­மில்லை. தனி­யொரு நிறு­வ­ன­மாகப் போரா­டியே ஹட்டன், கண்டி போன்ற பெருந்­தோட்ட பகு­தி­களில் திறந்த பல்­க­லைக்­க­ழங்­களில் தமிழ்­மொ­ழி யில் முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்­கான பயி ற்சி நெறியை ஆரம்­பிப்­பதில் பிரிடோ நிறு­வனம் வெற்­றி­கண்­டது.
இந்த பின்­ன­ணியில் வரவு –- செலவுத் திட்­டத்தின் கல்வி மற்றும் கல்விச் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்தில் பேசிய பிர­தி­ய­மைச்சர் பி.திகாம்பரம் பெருந்­ தோட்டங்­களில் முன்­பள்­ளிக்­கல்வி பர­வ லான முறையில் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்டி­யதன் முக்­கி­யத்­துவம் குறித்தும் அரசு, முன்­பள்ளி ஆசி­ரி­யை­க­ளுக்கு வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள 2500ரூபா கொடுப்­ப­னவு பெருந்தோட்டப் பகுதி ஆசிரியை களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். தற்போது மாகாண சபை, பிரதேச சபை, நகர சபைகள் மூலம் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் பெருந் தோட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கு இந் தக் கொடுப்பனவு ஒருபோதும் கிடைத்ததி ல்லை. அதுபற்றி எந்த வொரு மலையக அரசியல்வாதியும் பேசியதுமில்லை. இந்தப் பின்னணியில் பிரதியமைச்சரின் முன்பள்ளி அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்ற உரை பெருந்தோட்ட முன்பள்ளிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் அங்கீகாரமும், அவர்க ளும் பாடசாலை ஆசிரியைகளுக்கு சமமான முறையில் மதிக்கப்படவும், கொடுப்பனவு களை பெறவும் வாய்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு