செவ்வாய், 25 நவம்பர், 2014

                                 பெண் கல்வி
இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு தனித்துவம் நிறைந்தவளாக உலகுக்கு காட்டக் கூடிய சக்தி கல்விக்கே உள்ளது.
ஒரு குடும்பத்தின் குலக்கொழுந்தாக இருக்கும் பெண்மணிகள் கண்டிப்பாக நல்ல கல்வி அறிவோடு இருந்தால் தான் அவர்களை அடியொற்றி உருவாக்கப்படுகின்ற எதிர்கால சந்ததியினரை நல்வழியில் இட்டுச் செல்ல முடியும்.
உலகில் உள்ள எல்லாச் செல்வங்களையும் விட கல்விச் செல்வமே மேலானது. காரணம் இது நாம் இறக்கும் வரை எம்மோடு கூட வரக்கூடிய அழியாச் செல்வமாகும். உதாரணமாக ஒரு சபையில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவர் என்ன படித்திருக்கின்றார். என்ன பட்டங்களைப் பெற்றுள்ளார் என்றுதான் அறிமுகப்படுத்துகின்றோமே தவிர அவருக்கு எவ்வளவு சொத்துள்ளது.
அல்லது எவ்வளவு பணம் உள்ளது என்று அறிமுகப்படுத்துவது இல்லை. எனவே இந்த அழியாத செல்வத்தை உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு வாரி வழங்குவதோடு மட்டுமல்லாது அதன் முக்கியத்துவத்தையும் எம்மை செம்மைப்படுத்தும் விதத்தையும் நன்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நாம் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு