செவ்வாய், 25 நவம்பர், 2014

திருமணம் எனும் பந்தம்
இல்­லறம் எனும் இனிய பந்­தத்­திலே இணைந்து வாழ மனப் பொருத்தம், ஜோடிப் பொருத்தம், அந்­தஸ்துப் பொருத்தம் இவற்றை எல்லாம் புறம் தள்ளி இறுதி வரை வாழ்வை செப்­ப­னிட்டு செல்­வது இருவரது ஜாதகப் பொருத்­தங்­களே.
இன்­றைய கால கட்­டத்­திலே பெரும்­பாலும் மாப்­பிள்­ளைகள் வெளி­நா­டு­க­ளி­லேயே இருப்­பதால் பெண்ணை கொடுக்கும் பெற்றோர் ஜாதகப் பொருத்­தங்­க­ளையே பெரிதும் நம்பி செயற்­ப­டு­கின்­றனர். அதில் சிலர் இன்று ஜாதகப் பொருத்த நிச்­ச­யங்­களை சரி­யான ஆய்வு செய்­யாமல் பொருத்தம் அற்ற ஜாத­கங்­க­ளையும் பொருத்தம் என்று குறிப்­பிட்டு விடு­கின்­றனர். அதைப் பின்­பற்றி திரு­ம­ணத்தை செய்து விட்டு பின் அவஸ்தை நிலை பெறு­கின்­றனர். எப்­போதும் திரு­மணப் பொருத்தம் என்­பது குறைந்­தது மூன்று ஜோதி­டர்­க­ளிடம் என்­றாலும் காண்­பிக்­கப்­பட வேண்டும். அப்­போது தான் அதன் பொருத்தத் தன்­மையை நாம் ஓர­ள­விற்கு தெளி­வாக புரிந்து கொள்ள முடியும். கிரக நிலைப் பொருத்­தங்­களில் பெண்ணின் ஜனன லக்­னத்­திற்கு ஆண் ஜனன லக்னம் வசி­ய­மாக அமைந்தால் கிரக நிலை லக்ன வசியம் அமை­கின்­றது. இந்த நிலை கிரஹ நிலையில் உள்ள மற்­றைய தோஷ நிலை­களை நிவர்த்தி செய்து விடு­கின்­றன. பெண் ஆண் ஜாதக லக்­னங்கள் நேர்­கோட்டு நிலை­களில் அமைந்­தாலும் கிரக நிலையில் அனு­கூ­ல­மான பொருத்த நிலைகள் அமையும்.
பொது­வாக குடும்­பஸ்­தான அதி­பதி களத்­தி­ரஸ்­தான அதி­பதி கிரகங்கள் மறைவு நிலை நீச நிலைகள் பெற்று அமைந்தால் அதேபோல் அதற்கு ஈடான சம­தோஷ நிலை மற்­றைய ஜாத­கத்­திலும் அமைந்து இருப்­பதே மிகவும் விசே­ட­மாகும். ஒரே நட்­சத்­திரம் என அமையும் போது ஆண், பெண் இரு­வரும் ரோகிணி, திரு­வா­திரை, மகம், விசாகம், அத்தம், திரு­வோணம், உத்­த­ரட்­டாதி, ரேவதி இந்த எட்டு நட்­சத்­தி­ரங்­களும் மிக உத்­த­ம­மான நட்­சத்­திரம். அடுத்து அமை­கின்ற அஸ்­வினி, கார்த்­திகை, புனர்­பூசம், பூசம், பூரம், உத்­தரம், சித்­திரை, அனுஷம், பூராடம், உத்­த­ராடம் இந்த பத்து நட்­சத்­தி­ரங்­களும் ஒரே நட்­சத்­தி­ர­மாயின் மத்­தி­ம­மான பொருத்­தமே. மற்­றைய நட்­சத்­தி­ரங்கள் சிறப்­பா­ன­தாக எடுக்கக் கூடிய நிலை இல்லை. இதிலே மிருக சீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கு நட்­சத்­தி­ரங்­களில் ஒன்று பெண், ஆண் யாருக்கு அமைந்­தாலும் பொருத்தம் பார்க்­கா­மலே திரு­மணம் செய்­யலாம் என்­கின்ற ஒரு விதியை ஜோதிட நூல்கள் கூறி நிற்­கின்­றன.
இருப்­பினும் இந்த நான்கு நட்­சத்­திரம் கொண்­ட­வர்­களில் வாழ்­வியல் அனு­பவ ரீதியில் போராட்டம் கொண்ட நிலை­யி­லேயே அமை­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே நட்­சத்­திரப் பொருத்­தங்­களில் இவை­களை மிகவும் முக்­கி­ய­மாக கவ­னித்துக் கொள்ள வேண்டும். பெண் ஜாத­கத்தில் குடும்­பஸ்­தானம் எனப்­படும் 2 ஆம் இடமும் களத்­தி­ரஸ்­தானம் எனும் 7 ஆம் இடமும் மாங்­கல்ய ஸ்தானம் எனப்­படும் 8 ஆம் இடமும் மிக மிக முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யவை.
திரு­மணப் பொருத்­தங்கள் மொத்தம் 14 உண்டு. இவற்றில் மிக முக்­கி­ய­மான பொருத்­தங்­க­ளாக கரு­தப்­ப­டு­பவை கிரகம், நட்­சத்­திரம், கணம், யோனி, ராசி, வசியம், ராசி­ய­தி­பதி, தாலி, புத்­திரர், ஆயுள். இதிலே யோனி அல்­லது வசியம் ராசி அல்­லது ராசி­ய­தி­பதி ஏதேனும் ஒன்று பொருந்தி இருந்தால் போது­மா­னது. யோனி, வசியம் இவை இரண்டும் பொருத்­தமே இல்­லாமல் அமை­கின்ற நிலையில் அத்­தி­ரு­ம­ணத்தை தவிர்ப்­பது நல்­லது. ஒரு சில ஜாத­கங்­களில் கிரக நிலைப் பொருத்தம் குறை­வாக அமைந்து மற்­றைய பஞ்­சாங்கப் பொருத்தம் அனைத்தும் மிகவும் சிறப்­பாக பொருந்தி இருந்தால் கிரக நிலை பொருத்­தத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்­டிய நிலை இல்லை. அதே நேரம் கிரக நிலையில் செவ்வாய், சுக்­கிரன், ராகு, கேது தோஷ நிலைகள் ஒரு­வ­ருக்கு அமைந்து மற்­றை­ய­வ­ருக்கு அமை­யாது விடும் நிலையில் அந்த நிலை­யி­லுள்ள ஜாதகம் தவிர்க்­கப்­பட வேண்­டி­ய­தாகும். அதே­நேரம் இரு­வ­ருக்கும் செவ்வாய் தோஷம் மற்­றைய தோஷங்கள் சம­னாக அமை­கின்ற நிலை ஏற்­பட்டால் பாதிப்­புக்கள் அமை­யாது. முக்­கி­ய­மாக ரச்சு எனப்­படும் தாலிப் பொருத்தம் மிக முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­வ­தாகும். ஒரு பெண் தன் வாழ்­நாளில் பல­வித பிரச்­சி­னைகள், சஞ்­ச­லங்கள், துன்­பங்கள் என தொடர்ந்­தாலும் அப் பெண்ணின் அந்­தஸ்து மேன்மை சமூக மரி­யாதை என்­ப­ன­வற்றை நிலை நிறுத்தும் ஒரே விடயம் சுமங்­கலி என்­கின்ற நிலை­யாகும். தாலிப் பொருத்த நிலையில் ஐந்து வித­மான ரச்சு அமை­கின்­றது. சிரோ ரச்சு, கண்ட ரச்சு, நாபி ரச்சு, ஊரு ரச்சு, பாத­ரச்சு என்­கின்ற இந்த ஐந்து ரச்சு வரி­சை­களில் அமை­கின்ற நட்­சத்­தி­ரத்­தி­லேயே பெண் ஆண் நட்­சத்­திரம் அமைந்தால் தாலிப் பொருத்தம் அற்ற நிலை­யா­கின்­றது. ஒரு சில ஜோதிட நூல்கள் ஆரோ­கண அவ­ரோ­கண கதியில் அமைந்தால் தாலிப் பொருத்தம் உண்டு என்று கூறி­னாலும் கிரக நிலையில் உள்ள பெண் ஆண் ஆயுள் பாவமும் பெண்ணின் மாங்­கல்ய ஸ்தான கிர­கத்தின் நிலையும் நன்கு ஆய்வு செய்தே இந்த தாலிப் பொருத்த நிலை முடிவு செய்­யப்­பட வேண்டும். மாங்­கல்ய தோஷ நிலை தரும் கிரக அமைப்­புக்கள் சில பெண்கள் ஜாத­கத்தில் 8 ஆம் இடம் பாவக் கிர­கங்கள் அமை­வதும் செவ்வாய் சனி பார்வை 8ஆம் இடத்தை நோக்­கு­வதும் பாவக் கிரகபார்வை 8 ஆம் இடம் அமை­வது 7 ஆம், 8 ஆம் இடம் சூரியன் சுக்­கிரன், சேர்க்கை அமை­வது சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று எந்­தஸ்­தானம் அமை­வதும் சந்­திரன் பலம் குன்றி பாவக் கிரக சேர்க்­கை­யுடன் 8 ஆம் இடம் அமைவது குரு சுக்கிரன் 12 ஆம் இடம் அமைவது 9 ஆம் இடத்திற்குரிய கிரகம் சூரியனுடன் சேர்க்கை பெற்று 6 ,8, 12 ஆம் இடம் அமைவதும் அந்த ஸ்தான அதிபதிக் கிரகங்களும் 6ஆம், 8ஆம், 12ஆம் இடம் அமைவது என்பன பெண்களுக்கு மாங்கல்ய தோஷ நிலையைக் கொடுக்கும். திருமணம் எனும் பந்தம் அமைய திருமணப் பொருத்தத்தின் சூட்சும விடயங்கள் பல உண்டு.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு