திங்கள், 14 மார்ச், 2011

பெற்றோர்களது முக்கியமான கடமை

தம் குழந்தைகளுக்குக் கல்விபுகட்ட முதன்மையான, விட்டுக் கொடுக்கமுடியாத உரிமையும் கடமையும் பெற்றோருக்கு உண்டு. எனவே கல்விக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவேண்டும். ஆகவே குடிமக்களின் உரிமைகளைக் காத்து ஆதரிக்கவேண்டிய பொறுப்புள்ள பொது அதிகாரிகள், பங்கீட்டு நீதியைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் தம் மனச்சான்றின்படி தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களை உண்மையான சுதந்திரத்துடன் தெர்ந்தெடுக்க இயலும் வகையில் பொதுநிதி உதவி பங்கிடப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.20
எல்லாக் குடிமக்களையும் அறிவு வளர்ச்சியில் தகுந்த பங்கடையக் கூடியவர்கள் ஆக்குவதும், அவர்களுடைய கடிமைசார் கடமைகளையும் உரிமைகளையும் தகுந்தமுறையில் நிறைவேற்ற அவர்களைத் தயாரிப்பதும் அரசின் கடமையாகும். எனவேஈ பள்ளியல் கல்வி பெறுவதற்குச் சிறுவர்கள் கொண்டுள்ள உரிமையை அரசு பாதுகாக்கவேண்டும்; ஆசிரியர்களின் திறமையையும் கல்வியின் தரத்தையும் விழிப்பாயிருந்து கவனிக்கவேண்டும்; மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டும். பொதுப்படையாக, பள்ளிகளின் பணி முழுவதையும் அரசு ஊக்குவிக்கவேண்டும். கீழிருப்போர் செய்யக்கூடியதில் மேலிடம் தேவையின்றித் தலையிடக்கூடாது என்னும் கருத்தினை எப்போதும் கண்முன் கொண்டு, கல்விக் கூடங்களை நடத்த தனக்கே முழு உரிமை உண்டென அரசு கருதலாகாது. ஏனெனில் கல்விக் கூடங்களை நடத்த அரசுக்கே முழு உரிமை உண்டென்னும் பார்வை மனிதரின் பிறப்புரிமைகளுக்கும், பண்பாடு வளர்வதற்கும் பரவுவதற்கும், அமைதியுடன் குடிமக்கள் உடடினாத்து வாழ்வதற்கும், எண்ணிறந்த சமூகங்களில் இன்று நிலவும் பன்னோக்குக் கண்ணோட்டத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.21
எனவே, திருச்சங்கம் உகந்த கல்வி முறைகள், பயிலும் முறைகள் ஆகியவற்றை ஆய்ந்து கண்டுபிடிப்பதிலும்ஈ இளைஞருக்குத் தக்க கல்வி தரவல்ல ஆசிரியர்களை உருவாக்குவதிலும் தாமாக முன்வந்து ஒத்துழைக்கக் கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது. மேலும் சிறப்பாகப் பெற்றோர் கழகங்கள் வழியாகப் பள்ளி பணி முழுவதற்கும், முக்கியமாகப் பள்ளி கொடுக்கவேண்டிய ஒழுக்கக் கல்விக்கும் தொடர்ந்து உதவியளிக்கவும் கிறிஸ்தவர்களைத் திருச்சங்கம் தூண்டுகிறது.22
கல்விக் கூடங்களில் அளிக்க வேண்டிய ஒழுக்க மற்றும் சமயப் பயிற்சி


திருச்சபை தன் குழந்தைகள் அனைவரின் ஒழுக்க மற்றும் சமயக் கல்வியைத் தளரா ஊக்கத்துடன் கவனிக்க வேண்டிய தன் முக்கியமான பொறுப்பைத் தெளிவாக உணர்ந்து, கத்தோலிக்கப் பள்ளிகளல்லாத மற்ற பள்ளிகளில் கல்வி பயிலும் எண்ணிறந்த தன் பிள்ளைகள் மத்தியில் தனிப்பட்ட அன்பு காட்டி உதவி செய்வதன் மூலம் உடனிருக்க வேண்டும். இவ்வுடனிருப்பு கீழ்வரும் வழிகளில் வெளிப்படும்: இப்பிள்ளைகளின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் தம் வாழ்க்கையால் சான்று பகர்தல்; உடன் மாணவர்களின் திருத்தூதுப் பணி;23 குறிப்பாகப் ;பிள்ளைகளின் வயதிற்கும் சூழ்நிலைக்கு;ம ஏற்றவகையில் நிறைவாழ்வுப் போதனையைப் படிப்பித்தும் கால இடச் சூழலுக்கேற்பத் தகுந்த முயற்சிகளால் அருள்வாழ்வு சார்ந்த உதவியளித்தும் வருகின்ற திருப்பணியாளர்கள், பொது நிலையினரது பணி.
மேலும் பெற்றோர்களது முக்கியமான கடமை ஒன்றினைத் திருச்சபை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. அதாவது, தங்கள் குழந்தைகள் மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் உலகியல் கல்விப் பயிற்சியோடு கூடக் கிறிஸ்தவக் கல்விப் பயிற்சியிலும் சேர்ந்து இசையுற முன்னேறவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதிலும், ஏன் அவற்றை வேண்டிப் பெற்றுக்கொள்வதிலும் பெற்றோரின் இந்த முக்கியக் கடமை அடங்கும். ஆகவேதான் இன்றைய சமுதாயத்தின் பன்னோக்கு நிiயைக் கருத்திற்கொண்டு, நியாயமான சமயச் சுதந்திரத்தை மதித்து, குடும்பங்கள் தங்களது தனிப்பட்ட சய மற்றும் ஒழுக்குக் கோட்பாடுகளின்படி எல்லாப் பள்ளிகளிலும் தம் பிள்ளைகளுகு;குக் கல்வி அளிக்க இயலும் வண்ணம் உதவி செய்கின்ற குழமைச் சமூகங்களையும் அவற்றின் அதிகாரிகளையும் குழுக்களையும் திருச்சபை வெகுவாய்ப் புகழ்கிறது.

லேபிள்கள்:

விடுச்சுழல் கல்வியில் செலுத்தும் செல்வாக்கு

அரசாங்க அல்லது தனியார் பாடசாலைகளைத் தவிர்த்து வீட்டில் பெற்றோராலும் போதனாசிரியர்களாலும் வழங்கப்படும் கல்வியே வீட்டுக்கல்வி, அல்லது வீட்டுப் பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. காலனித்துவத்திற்கு முன்பு நமது பகுதிகளில் வீட்டுக்கல்வியே பரவலாக இருந்துவந்த்து. எமது மரபில் ஆசிரியரின் இல்லங்கள் கல்விக்கூடங்களாக விளங்கின. முறைசார் பாடசாலைகளும் கட்டாயக் கல்விச் சட்டங்களும் வருவதற்கு முன்னர் இம்முறையை நாம் பின்பற்றி வந்தோம். ஆனால் தற்காலத்தில் முறைசார் பாடசாலைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக, வீட்டுப்பாடசாலைகள் தோன்றியுள்ளன.
புதிய அறிவு மைய, தகவல் மைய நூற்றாண்டிலும் முழுப்பாடசாலைக் கல்வியையும் வீடுகளிலேயே வைத்துக் கற்பிப்பதற்குரிய சாதனங்கள் வளர்ச்சியடைந்துவிட்டன. பாடசாலைகளின் கல்விச் சூழலுக்கு மாறுபட்ட சூழலில் வைத்து கல்வியை வழங்க விரும்பும் பெற்றோர்களுக்கு வீட்டுப் பாடசாலை ஒரு சட்டபூர்வமான மாற்று ஏற்பாடாகும். மேற்கு நாடுகளில் சமைய, மற்றும் கல்வி ரீதியான காரணங்களுக்காகவும் நடைமுறையிலுள்ள அரசாங்க, தனியார் கல்வியை விரும்பாதவர்களும் வீடுகளை கல்விக்கூடங்களாக்கிக் கொள்கின்றனர். ஒதுக்குப்புறமாக தனித்து அல்லது புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களும் இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டியுள்ளது.
வீட்டில் இடம்பெறும் கல்வியை வெளியிலுள்ள பாடசாலைகள் மேற்பார்வை செய்வதுமுண்டு, பாடசாலை தொடர்பற்ற பாட ஏற்பாடு என்ற நிபந்தனையற்ற வீட்டுக்கல்வியும் உண்டு. சில நாடுகளில் வீட்டில் பயிலும் குழந்தைகளின் பாடஏற்பாட்டுக்கு அரசாங்க அனுமதியையும் பெறவேண்டியுள்ளது. 1977 லேயே பாடசாலை இல்லாமல் வளர்தல் என்ற சிந்தனை தோன்றிவிட்டது. 1960 களிலிருந்து பாடசாலை கல்வி முறை கடும் எதிர்ப்புக்குள்ளாகி வருகின்றது. 1964 இல் ஜே. ஹோல்ட் என்ற அறிஞர் How Children Fail – குழந்தைகள் எப்படி தோற்கிறார்கள் என்ற நூலில் பாடசாலைக் கல்வியை காரசாரமாக விமர்சித்தார். பாடசாலைகள் குழந்தைகளை நிர்ப்பந்தம் செய்வதன் காரணமாகவே அவர்கள் சித்தியடைய முடியவில்லை என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பவயதில் வீட்டில் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் உளவளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் சேர்த்துவிடுவதால் இவ்வாறான நன்மை இழக்கப்படுகின்றது. நிறுவன மயப்பட்ட பாடசாலைச்சூழலில் இவ்விழப்பை ஈடுசெய்ய முடியாது. பெரும்பாலான குழந்தைகளின் வளர்ச்சிக்கு வீடே சரியான இடமாகும். பின்தங்கிய வகுப்பினரின் குழந்தைகள், விசேட தேவையுடைய குழந்தைகள் ஆகியோருக்கு வீட்டுக்கு வெளியே பாடசாலையின் கல்வி ஏற்பாடுகள் தேவையாகும். மற்றக் குழந்தைகளைப் பொறுத்தவரையில் தகுதியுள்ள ஆசிரியர்களைவிட சாதாரண பெற்றோர்களே போதுமானவர்கள் என்ற முறையில் கல்வியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் பெற்றோர்களை வீட்டுப்பாடசாலைகள் குறித்து சிந்திக்க வைத்தன.
இவ்வறிஞர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் வளமையான கல்வி வீடுகளில் இடம்பெற வேண்டுமென்று கூறவில்லை. அவ்வாறான பாடசாலைக் கல்வியை அவர்கள் எதிர்த்தனர். கல்வியானது வெறுமனே புலமை சார்ந்தது, புத்தக்க்கல்வியே கல்வி என அவர்கள் சொல்லவில்லை. அவர்களுடைய சிந்தனையின் படி, கல்வியானது இயற்கையானது, வாழ்க்கையைப் பரிசீலிப்பது. குடும்ப உறுப்பினர்களின் நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளிலிருந்து எழுவதாகும்.
வீட்டில் கல்வி வழங்க முற்பட்டோர் பல்வகையான முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தினர். நூல்நிலையங்கள், புத்தக விற்பனை நிலையங்கள், வீட்டுப்பாடசாலை அமைப்புக்களின் ஏற்பாடுகள், நூல்கள், பாடஏற்பாடு, சமைய நிலையங்கள் வழங்கும் கல்வி, உள்ளுர்ப் பாடசாலை பாடவிடயம், தொலைக்கல்வி ஏற்பாடுகள், தொலைக்காட்சி, வானெலியின் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், இணையத்தள வசதிகள், இலத்திரன் அஞ்சல் முதலிய பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். குழந்தைகளின் கற்றல் வேகத்திற்கேற்ப பாட ஏற்பாட்டுப் பொதிகளை கொள்வனவு செய்ய முடியும். அவ்வாறே பாடசாலை பாட ஏற்பாட்டுச் சாதனங்கள் அனைத்தையும் கொள்வனவு செய்து அருகிலுள்ள பாடசாலையில் கற்பிக்கப்படும் சகல விடயங்களையும் வீடுகளில் கற்பிக்கவும் முடியும். வீட்டில் கல்வி வழங்க விரும்புபவர்கள் சமூதாய வளங்களையும் பயன்படுத்த முடியும். சமூக நிலையங்கள், அரும்பொருள் காட்சிசாலை, விளையாட்டுக்கழகங்கள், வழிபாட்டு இடங்கள், விஞ்ஞானப் பூங்காக்கள், நூலகங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். மக்கள் அரங்குகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பெற்றோரும் குழந்தைகளும் பங்கு கொள்ளலாம்.
வீட்டுக் கல்வி வழங்கும் பெற்றோர் ஒன்றுகூடி சங்கங்கள் அமைத்து கிழமைக்கொருமுறை ஒன்றுகூடவும் முடியும். அப்போது வகுப்பறைச் சூழல் ஏற்படுத்தப்படும். குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த பல்வேறு பெற்றோர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளலாம். செயல்முறைப் பயிற்சிகள், வெளிநாட்டு மொழிகளைக் கற்றல், விஞ்ஞானப் பரிசோதனை செய்தல், கலந்துரையாடல் என்பனவற்றை இவ்வொன்றுகூடலில் செய்யலாம். பெற்றோர்கள் சேவையின் அடிப்படையில் பங்குகொள்வதால் வீட்டுக்கல்வியின் செலவுகளும் குறைகின்றன. இணையவழிக் கற்றலையும் பெற்றோர் பயன்படுத்தலாம்.
வீட்டுக்கல்வி உண்மையில் இயற்கையாக வழங்கப்படும் கல்வியாகும். இவ்வகைக் கல்வி குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அறிவைப் புகட்டுவதாகும். பெற்றோர்கள் பாடநூலிலும் கற்பித்தலிலும் அதிக அக்கறை செலுத்தாது பல கற்றல் அனுபவங்களையும் செயற்பாடுகளையும் ஒழுங்கு செய்கின்றனர். பெற்றோர் தாம் விரும்பிய பாடவிடயத்தை தினித்து அதிகாரம் செய்ய மாட்டார்கள். குழந்தைகள் சுதந்திரமாகத் தேடுதலில் ஈடுபட ஊக்குவிப்பர். அறிஞர் ஹோல்ட் குழந்தைகள் தமது வாழ்க்கை அனுபவங்களினூடாக கற்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளோடு இணைந்து வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுவதையும் வழியுறுத்தினார். குழந்தைகள் படித்தாக வேண்டும் என்று சொல்லக்கூடிய அறிவுத்தொகுதி என்று எதுவுமில்லை. பாடசாலை பாடநூல்களை அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை கல்விச் செயற்பாட்டின் மையப்பகுதி அல்ல என்பது அவரது கருத்தாகும்.
தங்கள் பிள்ளைகள் கல்விமான்களாக திகழ வேண்டும் என்ற வேட் கையும் எப்படியாவது அவர்களுக்கு கல்வியைப் போதித்து விட வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியும் விழிப் புணர்ச்சியும் பெற்றோர் களிடம் அதிகமாக உள்ளது.அதே நேரத்தில் கல்விக்காக செலவு செய்கின்ற பொருளாதாரச் சுமையும் அதிகரித்து இருக்கிறது. பணக்காரக் குடும்பமாக இருந்துவிட்டால் பிரச்சினையில்லை. பிள்ளைகள் படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட முடியும்.நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.வீட்டு வாடகை, குடும்பச் செலவு என்று வாழ்க்கையை ஓட்டுவதே பெரும்பாடாக இருக்கின்றபோது பிள்ளைகளுக்காக பணம் செலவு செய்ய தடுமாற்றம் அடைகின்றனர்.

இப்படி சிரமப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கின்ற பெற்றோர்கள், அன்றாட வாழ்க்கையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.அதை அவர்கள் புரிந்து கொண்டால் வெற்றி பெற்ற மாணவனை வீட்டிலேயே உருவாக்கிவிட முடியும் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆரம்பப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, இடைநிலைப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சரி, முதலில் அவர்களுக்கு நேர ஒழுங்கையும் நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

காலையில் 5 மணிக்கு பிள்ளைகளை எழுப்பி காலைக் கடன்களை முடிக்கச் செய்து குறைந்தது 1/2 மணி நேரமாவது பாடப் புத்தகங்களைப் படிக்கச் சொல்ல வேண்டும்.வெறுமனே படிக்கச் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே டிவியை திறந்து படம் பார்க்க பெற்றோர்கள் அமர்ந்து விடக் கூடாது. பிள்ளைகளின் பக்கத்தில் அமர்ந்து அவர்களை சத்தம் போட்டு படிக்கச் சொல்லி கேட்க வேண்டும்.

பெற்றவர்கள், தங்கள் மீது மிகுந்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை பிள்ளைகளின் மனதில் இது ஏற்படுத்தும். பெற்றவர்கள் மீது பிள்ளைகளுக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் கூடும்.சீருடை அணிவது, பாடப்புத்தகங்களை அடுக்கி வைப்பது போன்ற செயல்களை பெற்றவர்களே நேரடியாகச் செய்யாமல் பிள்ளைகளை செய்ய விட்டு நிறைகுறைகளை எடுத்துச் சொல்லி பக்குவப்படுத்த வேண்டும்.பள்ளி முடிந்து வந்தவுடன் மைலோ கலக்கிக் கொடுப்பது, ரொட்டி வாட்டிக் கொடுப்பது மட்டுமே தங்கள் கடமை என்று இல்லாமல் பள்ளிக் கூடத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை சொல்லச் சொல்லி கேட்டு ரசிக்க வேண்டும்.

அடிக்கடி குறுக்கிட்டுப் பேசி தங்களின் அதிமேதாவித் தனத்தைக் காட்டி பிள்ளைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடாது. அடுத்த நாள் அவர்கள் பேசத் தயக்கம் காட்டக் கூடும்.அவர்கள் படித்த பாடங்களை சுருக்கமாகச் சொல்லும்படி ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது நீங்களும் ஓர் ஆசிரியர் மாதிரி ஆகிவிடக் கூடாது. அவர்கள் பேச்சை ரசிக்கின்ற ஒரு ரசிகனாக மாறிவிட வேண்டும்.நல்ல கருத்துக்கள் கொண்ட சுவையான குட்டிக் குட்டிக் கதைகளைக் கூற வேண்டும். நீங்கள் ஏதாவது கேள்வி கேட்டு பிள்ளைகளிடம் பதில்பெற வேண்டும். அந்தக் கேள்விக்கான விடை உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் திருப்பிக் கேட்கும் போது திருதிருவென நீங்கள் விழிக்கக் கூடாது.படிப்பு மட்டுமே வாழ்க்கை என்று அழுத்தம் கொடுக்காமல் படிப்பும் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.பிள்ளைகள் பொறுப் பானவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விட நீங்களே பொறுப் புள்ளவர்களாக நடந்து கொண்டால் தானாகவே பிள்ளைகளுக்கு பொறுப்பு வந்துவிடும்.

முதலில் உங்களுக்கு இது சிரமமாக இருக்கும். பிள்ளைகளும் முரண்டு பிடிப்பார்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதைத் தவறாமல் கடைப்பிடித்தால் பிறகு இதுவே பழக்கத்திற்கு வந்துவிடும்.பிறகு நீங்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். டியூசனுக்காக பெரும் பணத்தை செலவிட வேண்டாம். பிள்ளைகளே படிப்புக்கான விஷயங்களைத் தேடித் தேடி சேகரிக்க ஆரம்பித்து விடுவார்கள். ¿மது பிள்ளைகள் புத்திசாலிகள். பெற்றோர்களும் பொறுப்புமிக்கவர்கள். ஆனால் வாழ்க்கைத் தேடலில் பிள்ளைகளோடு நேரத்தை செலவிட அவகாசம் கிடைப்பது அரிதாகி விட்டது.அன்றாடம் காலையும் மாலையும் 1/2 மணி நேரம் ஒதுக்கிப் பாருங்கள்; நீங்களே ஆச்சரியப்படும்படி பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாகத் திகழ்வார்கள்

லேபிள்கள்:

புதன், 24 நவம்பர், 2010

கல்வியின் தேவை

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை.
அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்

கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி! ]

கல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

ஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.

ஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன

வேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.
ஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.

ஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.

வசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.

இதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.

மேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.

இதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.

கல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.

உதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.

அதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா? மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.

அடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.

அதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், "ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா?'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.

''பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, "அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.

அறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: "இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.

இதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி

லேபிள்கள்:

பொது அ‌‌றிவு துணு‌க்குக‌ள்

குழ‌ந்தைகளே உ‌ங்களு‌க்கு பொது அ‌றிவு வள‌ர்‌க்கு‌ம் ‌விதமாக ‌சில துணு‌க்கு‌ச் செ‌ய்‌திகளை இ‌ங்கே அ‌ளி‌த்து‌ள்ளோ‌ம். படி‌த்து பய‌ன்பெறு‌ங்க‌ள்.

அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

பசுமைப் புரட்சி என்று கேள்விப்பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.

மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

லேபிள்கள்:

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

கல்வி என்றால் என்ன

UJEYANTHAN.Y
B.Ed

இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். அவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்க வேண்டும்.

தரமான கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர்களாக, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து மற்றவர்களை வழி நடத்த வேண்டும், தானும் நடக்க வேண்டும்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, மருத்துவம், போர்த்திறன், கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு வகைகளில் கற்றுக் கொள்பவருக்குள் நுழைகிற கருத்துருக்கள் அவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால்கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.


இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பு ஏதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.


இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தற்பொழுது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், ஒன்றும் அறியாத மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள்.

தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

கடந்த இருபது ஆண்டுகளாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டிற்காகப் பேசப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை.

எனவே இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி, திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

லேபிள்கள்:

குரு ஸ்தானம்! ஆசிரியர்

குரு ஸ்தானம்!
வாழ்வின் இரண்டு அதி முக்கிய அறைகள். ஒன்று கருவறை; அம்மாவுடையது. மற்றொன்று பள்ளியறை ஆசிரியருடையது! அம்மா வாழ்வை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துவார். ஆசிரியர் அறிவை தந்து வாழ்வை அறிமுகப்படுத்துவார். உலகின் மிக உன்னத அறைகளுக்கும், அதன் அன்பாளர்களுக்கும் மிக்க வந்தனம்!
மூன்றாமிடம்!
தலைச்சிறந்த வரிசை ஒன்று உள்ளது. அதில் ஆசிரியருக்குமான இடமும் நன்று உள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் இடம் மூன்று - ஆசிரியப் பணிக்கென உள்ளது.
7-ல் 1 பங்கு / 2 பங்கு!
இன்றைய அறிவியல், மருத்துவ முன்னேற்றம் மனிதனின் வயது ஸ்கோரின் சராசரியை 70 வரை கொண்டு வந்து உள்ளது. இன்று கட்டாய கல்வி சட்டமாகிவிட்டது. ஒரு மனிதன் குறைந்தது 10 ஆம் வகுப்பு வரை படிப்பான் என்று வைத்து கொள்ளலாம். அப்படியென்றால், 10 வருடங்கள் பள்ளி. இதன்மூலம் ஒரு மனிதன் தனது வாழ்வின் 7ல் 1 பங்கை ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான். அதுவே மேல் படிப்பு, உயர் படிப்பு, சிறப்பு படிப்பு என்று மனிதன் படிப்பில் பல படிகள் ஏறினால், மேலும், 10 வருடங்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் அவன் வாழ்வை செலவழிப்பான். அந்த நிலையில் அவனின் வாழ்வின் பங்கில் அதாவது 7ல் இரு பங்கை, ஆசிரியரிடம் அர்ப்பணிக்கிறான்.
நோபலில் 60 சதவீதம்!
அமைதி, விஞ்ஞானம், இலக்கியம் என பல துறைகளில் உன்னதம் புரிந்தவர்களுக்கு மனிதகுலம் சூட்டும் மிகப் பெரிய மகுடம் "நோபல்' ஆகும். இதனை இன்றளவும் வென்றிட்ட மாந்தர்களில் 60 விழுக்காடு நபர்கள் ஆசிரியர் பணியில் இருந்தவர்கள்தான்.
இந்த பட்டியலில் முதல் இடம்!
உலகில் தவறுகள், பிழைகள், குற்றங்கள், பாவங்கள், கொடூரம் என வளர்ந்து கொண்டே இருக்கும் போது நம்பிக்கையுடன் சாய்ந்து கொள்ளும் ஒரு இடம் உண்டு. பெற்றோரும், சான்றோர்களும் அந்த இடம் ஆசிரியருடையது என இக்காலத்தில் கூறுவர். சமூகம் தீமையிலிருந்து விலகி நன்மையில் நடந்திட, அதனை நடத்திட பெரிதும் நம்புவது ஆசிரியர்களையே! அதனால், தவறே செய்யக்கூடாதோர் பட்டியலில் ஆசிரியர்கள் முதலிடம் பெறுகின்றனர். ஆசிரியரின் தவறு, மனிதனின் ஆதார நம்பிக்கை அடிப்படையையே ஆட்டம் காண செய்துவிடும். ஆசிரியர் மேல் இச்சமூகம் மிகுந்த மரியாதையை, மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதனால்தான் சமூகம் தனது சந்ததியை தனது எதிர்காலத்தையே ஆசிரியரிடம் அளித்து உள்ளது. மாணவனும், ஆசிரியரை மலை போல் நம்புகிறான் . பாதை காட்ட வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கமாய் வாழ வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாய் ஆசிரியரின் வாழ்வு இருந்திடல் வேண்டும்.
வெளிச்சம் தரச் செய்ய வேண்டும்!
நன்றாக படிப்பவன் கடைசியில் கவனிக்கப்பட வேண்டியவன். மோசமாய் படிப்பவன் எமர்ஜென்சி கேஸ்; உடனே கவனிக்கப்பட வேண்டியவன். படிப்பில் ஆர்வம் இல்லாதவன் பியூஸ் போன பல்பு போன்றவன். கூடு இருக்கும் ஆனால், உயிர் இராது. ஆசிரியர் விஞ்ஞானி போல ஆராய்ந்து அங்கே உயிரை ஊட்ட வேண்டும். சுமாராய் படிப்பவன் லோ வோல்டேஜில் எரியும் பல்பு. வோல்டேஜை சரி செய்தால் போதும். நன்றாய் படிப்பவன் பளிச்சென பகல் போல எரியும் பல்பு. திடீரென ஈசல்கள் மண்டாதபடி மட்டும் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒரு சினிமா ஹீரோ போல் !
ஒரு ஹீரோவிற்கு தெரியாத வேலையே இல்லை. தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் காட்டுவார்கள். எதிலும் பூந்து புறப்பட்டு வருபவன் தானே ஹீரோ. அதுபோல ஒரு ஆசிரியர் ஏராளமாய் பாடத்தை பற்றியும், பாடத்தை ஒட்டியும், பாடத்திற்கு வெளியேயும் அறிந்து இருக்க வேண்டும். மாணவர்களின் மேல் உண்மையான அக்கறை வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தது போல புத்துணர்வுடன், புதிய புதிய விஷயங்களுடன் மாணவர்கள் முன் வர வேண்டும். படிப்போடு, நாட்டு நடப்பை, சமூக அக்கறையை, அன்பை, மனிதாபிமானத்தை, வாழும் வாழ்வில் மேன்மையை, பண்பாட்டை, கலாசாரத்தை என்று மாணவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
"எந்தவொரு குழந்தையையும் என்னிடம் 7 ஆண்டுகள் விட்டு வையுங்கள். அதன் பிறகு எந்த சாத்தானும், ஏன் கடவுளும் கூட அவனை அவனது குண நலன்களை மாற்ற முடியாது!'
-புகழ் பெற்ற கிரேக்க ஆசிரியரின் அனுபவ மொழி இது.
ஹேப்பி பர்த்டே டூ யு ஆல் !
மாணவர்கள் பிறந்தநாளை, பள்ளி அறிய கொண்டாடுவர். ஆசிரியரும் பரிசு தருவார். எந்த ஆசிரியராவது பிறந்தநாளை அனைவரும் அறிய கொண்டாடியது உண்டா? இல்லை. ஆசிரியர் தினத்தையே தம் ஆசிரியர்களின் பிறந்த தினமாய் மாணவர்கள் நினைத்து கொண்டாடலாமே! காசு போட்டு பெரிய பரிசாய் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியருக்கு பிடித்த பேனா, புத்தகம் என அவர் மனம் கவர்ந்தவற்றை அளிக்கலாம். படிக்காதவன் - படிக்கிறேன் என்றும், ஒழுங்கில்லாதவன் - இனி ஒழுக்கமாய் இருப்பேன் என்றும் உறுதிமொழி எழுதி தரலாம். ஒரு உண்மையான ஆசிரியருக்கு மாணாக்கரின் நலமே பெரும் பரிசு. இதுபோல உறுதிமொழி தந்து அதை அம்மாணவர்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். மற்ற மாணவர்கள் கூட்டமாய் இதை செய்திடல் வேண்டும்.
மாணவர்களுக்கு சவால் !
ஆசிரியரின் நடை, உடை, பாவனை, பேச்சு, பாடம் நடத்தும் பாங்கு, வாகனம் என எதை வேண்டுமானாலும் எடுத்து கொண்டு கிண்டல் செய்யும் சில மாணவர்கள் உண்டு. ஆசிரியரின் மேன்மையை பற்றி தெரியாதவர்கள் அவர்கள். அவர்களை சும்மா விட்டு விட முடியாது. குரு பீடத்தின் மகிமையை எடுத்து காட்ட வேண்டும். ஆசிரியர் என்றால் பெரிய ஆளா என்ன? என கேட்கும் மாணவனுக்கு ஒரு சவால்!
ஒரு ஐந்து வயது குழந்தைக்கு பொறுமையாய், மகிழ்வாய், அன்பாய், "அ, ஆ, இ' சொல்லி கொடுங்கள் பார்க்கலாம். அப்படி நீங்கள் படிக்கும்போது ஆசிரியரின் உயர்வு விளங்கும். கண்கள் பணிக்கும்; கரங்கள் துதிக்கும்; மனம் மன்னிப்புக்கு மன்றாடும். ஆசிரியர், அம்மா, அப்பா, நண்பன் என்று எல்லாமாய் இருப்பவர் ஆசிரியர். ஆசிரிய பெருமக்களுக்கு சிறுவர்மலர் வாசக குட்டீஸ் களின் சார்பாக ஆசிரியர்தின வாழ்த்துக்கள்!

லேபிள்கள்:

மனித விழுமியம்

| |

ஆண்டவனின் படைப்பிலேயே அபூர்வமான படைப்பு மனிதன்தான் என்று ஆச்சர்யப்படுகிற அறிஞர்கள் போலவே காந்திஜியும் மனிதன், மற்ற படைப்புகளிலிருந்து ரொம்ப வித்தியாசமான தனிப்பிறவி என்கிறார். உடலமைப்பு, உணவுமுறை, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கும்போது மனிதனும் விலங்குகளை போலவே நடந்துகொண்டாலும் ஒழுக்க நெறிமுறையான தார்மீக தளத்தில் அவ்வப்போது தன்னை வைத்துக்கொள்வதுதான் மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. ஆறாவது அறிவுதான் மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனிதனின் பூர்வாசிரமம் குரங்குதான் என்கிறது விஞ்ஞானம். மிருகத்தனம் என்பது மனிதனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விலக ஆரம்பத்திருக்கிறது. மனிதரில் இத்தனை குணங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவதற்கு காரணம் மிருகத்தனம் சிலரிடம் அதிகமாகவும் சிலரிடம் குறைவாகவும் இருப்பதுதான் காரணம். அது முற்றிலுமாக விலகியிருக்கும்போது மனிதன் தன்னை படைத்த ஆண்டவனின் வசமே வந்துவிடுவான். அதற்கு காந்திஜி சொல்லும் வழிமுறை மனிதனுக்குள்ளேயே புதைந்து கிடக்கும் தெய்வீக சக்தி புரிந்துகொள்ள முயற்சிப்பது.

'மனிதன் என்பவன் வெறும் அறிவாற்றலோ, விலங்குகளையொத்த உடலமைப்போ, இதயம் அல்லது ஆன்மாவோ மட்டும் அல்ல. இவை அனைத்தும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்தவனே முழுமையான மனிதன்' (ஹரிஜன், 8.5.1937)

மனிதனின் நடவடிக்கைளுக்கும் அவனது ஆன்மாவின் குரலுக்கும் சம்பந்தமிருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் ஒரு முழுமையான மனிதனாக நடந்து கொள்ள முயற்சிக்க முடியும். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசங்களை சொல்லவேண்டுமென்றால் பகுத்தறிவு, புலனடக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கெட்டதை செய்யும் மனிதனுக்கு கூட எது நல்லது எது கெட்டது என்பது நன்றாகவே தெரிந்தபின்தான் அந்த செயலை செய்கிறான். பகுத்தறிவு மனிதனை பண்படுத்துவது உண்மைதான். ஆனால், அதுவே எல்லா மனிதனுக்கும் இருக்கவேண்டுமென்கிற கட்டாயமில்லை. ஆனால், புலனடக்கம் என்கிற விஷயம் ஒன்றில்லாவிட்டால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வித்தியாசம் பார்க்க முடியாது. காந்திஜியோ, மனிதனுக்கு என்றைக்கு பகுத்தறிவும் புலனடக்கமும் முழுமையாக கிடைக்கிறதோ அன்றுதான் மனிதனிடமிருந்து முரட்டுத்தனம் முற்றுலுமாக விலகிச்செல்கிறது. அப்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான் என்கிறார்.

'மனிதன் என்றால் மிருகத்தனத்தையும் முரட்டுத்தனத்தையும் விட்டொழிப்பதே என்பதை முழுமையாக உணரும்போதுதான் மனிதத்தன்மையே முழுமை பெறுகிறது' (ஹரிஜன், 8.10.1938)

மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்ததால் வந்த வினை, ஆண்டவனின் படைப்பிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்படுபவன் மனிதனாகிவிட்டான். விலங்குகளை விட ஆபத்தானவன் மனிதன் என்பது உண்மைதான். மனிதனின் உணர்ச்சிகள் சில சுய கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது மனிதனும் மிருகமாகிறான். என்னதான் சொன்னாலும் பகுத்தறிவுதான் மனிதனை உயர்நிலைக்கு உயர்த்துகிறது என்கிறார் காந்திஜி.

'முன்னேற்றம் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய விஷயம். பகுத்தறிவை பெற்றிருக்கும் மனிதனுக்கு உண்பதும் உறங்குவதும் மட்டுமே வாழ்க்கையில்லை. மனிதன் தனது பகுத்தறிவை பயன்படுத்தி கடவுளை வழிபட ஆரம்பித்தான். கடவுளை புரிந்து கொள்ள முயற்சி செய்தான். அதை புரிந்து கொள்வதே மனித வாழ்க்கையின் லட்சியமானது. ஆனால் விலங்குகளுக்கோ கடவுளை ஆராதிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் இல்லை' (யங் இந்தியா, 24.6.1926)

யானை, பூனை, நாய், குரங்கு எல்லாமே சினிமாவில் சாமி கூம்பிடுவதுகூட மனிதனின் பகுத்தறிவால் வந்த ஐடியாதானே! பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பகுத்தறிவுன் உந்துதல்தானே! உண்மையில் இது மாதிரியான ஜந்துகளுக்கு அடுத்த வேளை ஆகாரம்தான் ஆண்டவன். அதை தேடுவதில்தான் மும்முரமாக இருக்குமே தவிர ஆண்டவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்காது.

உணவு, உடையெல்லாம் கிடைத்தபின்னரும் சாந்தி கொள்ளாமல் எதையாவது தேடி அலைகிறான். சரி, மனிதன் ஒருவனே தன்னைப் படைத்தவனை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குகிறான் என்று சொல்லிவிடலாமா? இல்லை. அப்படியொரு ஆராய்ச்சியில் இறங்குமாறு ஆண்டவனால் படைக்கப்பட்டவனே மனிதன் என்கிறார் காந்திஜி.

'இறைவனின் படைப்பில் மனிதன் ஒருவனே தன்னை படைப்பித்த ஆண்டவனை அறிவதன் பொருட்டு உருப்பெற்றவன். நாளுக்கு நாள் தன்னை வளப்படுத்திக்கொண்டு உடைமைகளை சேர்த்துக்கொள்வது மனித வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல. தன்னை படைத்த ஆண்டவனை நோக்கி நாளுக்கு நாள் ஆத்மார்த்தமாக நெருங்கி வருவதே மனித ஜென்மத்தின் முக்கியமான பணி' (யங் இந்தியா, 27.10.1927)

லேபிள்கள்:

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தன்னம்பிக்கை

லேபிள்கள்:

வியாழன், 9 செப்டம்பர், 2010

பாலியல் கல்வி

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இருபாலர்களுக்கிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஞ்ஞான வளர்ச்சியின் பக்க விளைவாக, இன்றைய இளைஞர்களிடையே, பல புத்தகங்களும் ஊடகங்களும் திரைப் படங்களும் பாலுறவு பற்றிய மோகத்தைப் பரப்பி வருகின்றன. இதனால், இளம் வயதிலேயே பாலுறவு பற்றி முழுமையான அறிவு இல்லாமல் நமது இளைய சமுதாயம் தவறான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பாலியல் நோய்கள், HIV/AIDS போன்ற உயிரைக் குடிக்கும் வியாதிகள் பரவத் துவங்கிவிட்டன. இளைஞர்களுக்குப் பாலுறவு பற்றி போதிய அறிவு புகட்டி அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதன் மூலமே பாலியல் நோய்களற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும். பாலியல் கல்வியின் அவசியத்தைப் பலரும் உணர்ந்தாலும் இதற்கு எதிர்ப்புக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இது தவிர இந்த அறிவை இளைஞர்களுக்கு எவ்வாறு கொடுப்பது, எந்த வயதில் துவங்க வேண்டும், பாடத் திட்டங்கள் எப்படி இருக்கவேண்டும், இப்படிப் பல கேள்விகள். இது பற்றிய ஒரு சிந்தனைதான் இக்கட்டுரை. இது எந்த வகையிலும் முழுமையானதல்ல.

செக்ஸ் பற்றி, அதன் அடையாளம், உறவுகள், அதன் நெருக்கம் பற்றிய அறிவினைப் பெற்று அதனால் ஒரு தெளிவு பெறுவதைத்தான் பாலியல் கல்வி என்று சொல்கிறோம். இந்தக் கல்வி, இளைஞர்கள் தங்களை உணர்ந்து, தங்களது தேவைகளை அறிந்து கொள்ளவும், அந்தத் தெளிவினால் பாதை மாறாது வாழ்க்கையில் உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் உதவும் என்று சொல்லலாம்.

இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி தருவதன் மூலம் அவர்கள் பாலியல் பலாத்காரங்கள், பால் வேறுபாடுகளால் இழைக்கப்படும் அநீதிகள், தேவையில்லாத கருத்தரிப்புக்கள், தவறான உடலுறவுகளால் ஏற்படும் நோய்கள், HIV, AIDS ஆகியவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முடியும். இந்தப் பாலியல் கல்வியின் உண்மையான நோக்கம், உடலுறவுகளால் வரும் அவசியமற்ற, விரும்பாத கருத்தரிப்புக்களைத் தவிர்ப்பதும், தவறான விளைவுகளைப் போக்குவதும், பாலுறவால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமல் காப்பதும்தான். ஆண் பெண் உறவை மேம்படுத்தி ஒரு உயரிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் பாலியல் கல்வி பயன்படும். உண்மையான பாலியல் கல்வி என்பது இந்த நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றும் கல்விதான். இந்தக் கல்வி எது நல்லது, அல்லது கெட்டது என்று பகுத்தறிய உதவ வேண்டும். செக்ஸ், பாலுணர்வுகள் முதலியவற்றால் ஏற்படக்கூடிய சமூகப் பிரச்சனைகளைப் பற்றியும் கருக்கலைப்பு, கருத்தடை போன்ற நுண்ணிய விஷயங்களையும் உணர்ந்துகொள்ளப் பயன் பட வேண்டும்.

சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான வளர்ச்சிகளால் சில பக்க விளைவுகளும் உண்டு. சில உடல்நலம் குறித்த பத்திரிகைகள் பாலியல் தொடர்புகளால் ஏற்படக் கூடிய தீங்குகளையும் ஆபத்துக்களையும் வலியுறுத்துகின்றன. வேறு சில பத்திரிகைகளோ பாலியல் நடவடிக்கைகள் ஒரு மனிதனை எப்படி முழுமை பெற்றவனாக ஆக்குகின்றன என்று சொல்கின்றன. இப்படிப்பட்ட மாறுபட்ட கருத்துக்களால் இளைஞர்களிடம் குழப்பம் ஏற்படுவது இயற்கை.

செக்ஸ¤ம், பாலுணர்வும் மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன. பாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அம¨ந்தாலொழிய ஒழுக்க, மத ரீதியான கலாசாரக் கட்டுப்பாடுகள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இயலாமல் போகும்.

பாலியல் கல்வி கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு இவைகள் பற்றித் தனிப்பட்ட கருத்துக்கள், நம்பிக்கைகள் இருக்கலாம். இந்தத் தனிப்பட்ட எண்ணங்கள் அவர்கள் கற்றுத்தரும் கல்வியில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அவர்கள் இவை இரண்டையும் பிரித்துணர வேண்டும். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர், கல்யாணத்திற்கு முன்னால் உடலுறவு கூடாது என்ற கொள்கை உள்ளவராக இருக்கலாம். அவரது இந்த சொந்தக் கருத்து, ஆபத்தில்லாத பாலுறவு பற்றியும், கருத்தடைகள் பற்றியும் சொல்லிக் கொடுப்பதில் தடைக்கல்லாக இருக்கக் கூடாது. பாலுறவு பற்றிய கல்வியில் பொது ஒழுக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை மாணவர்களிடையே ஆசிரியர்கள் திணிப்பது தோல்வியையே தரும்.

படிக்கும் இளைஞர்களுக்கு உடலுறவு பற்றிய விளக்கங்களையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் எடுத்துச் சொல்லி அவர்களாகவே அது பற்றித் தெளிந்து ஒரு முடிவுக்கு வரச் சேய்வதுதான் உண்மையான பாலியல் கல்வி. உடலுறவு ஏற்படுத்தும் உணர்ச்சிகள், மற்றவரது உடல், மன உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் தர வேண்டிய மதிப்பு - இவைகள் பற்றியும் சொல்லித் தருவதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் பால் வேறுபாடுகள் பற்றி உணர இந்தக் கல்வி வழி செய்ய வேண்டும்.

அடுத்த படியாக, பாலியல் கல்வி, எத்தகைய உறவுகள் எண்ணங்களை பலப்படுத்தக் கூடியது என்று இளைஞர்கள் தாங்களே தீர்மானிக்கும் வகையில் அமைய வேண்டும். அவர்கள் பாலுறவில் அச்சுறுத்தல், தவறான அணுகுமுறைகள், மற்றவர்களது பலவீனத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துதல் முதலிய முறைகள் இனிமையான உறவுகளை எப்படிப் பாதிக்கும் என்பதை உணரும்படியாக அமைய வேண்டும்.
இளைஞர்கள் செக்ஸ் பற்றிப் பல்வேறு முறைகளில் தெரிந்து கொள்கிறார்கள். அவற்றில் சில சரியான தகவல்களைக் கொடுக்கும் வேளையில், சில சாதனங்கள் பாலுறவு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்புகின்றன. அதனால் செக்ஸ் பற்றிய கல்வியைக் கொடுக்குமுன்னால், மாணவர்களிடையே பாலுறவு பற்றிய தவறான கருத்து இருந்தால் முதலில் அதைப் போக்க வேண்டும். பாலியல் கல்வி படிப்பவர்கள் சிலர், கருத்தடைச் சாதனங்களால் பயனில்லை என்றோ அல்லது HIV/AIDS போன்ற நோய்கள் குணப்படுத்தக் கூடியவைதான் என்றோ தவறான கருத்துக்கள் கொண்டிருக்கலாம். இது போன்ற தவறான கருத்துக்களை முதலில் அவர்களது மனதிலிருந்து நீக்க வேண்டும். இளைஞர்கள் கீ¢ழே கொடுக்கப்பட்ட விஷயங்கள் பற்றி நன்றாக அறிந்திருப்பது அவசியம்:

பாலுணர்வு வளர்ச்சி (Sexual development)
இனப்பெருக்கம்
கருத்தடை
உறவுகள்

இளைய சமுதாயத்தினர் அவர்கள் வயதிற்கு வரும்போது உடலிலும், மன அளவிலும் ஏற்படும் மாற்றங்கள், கருத்தரித்தல், கருத்தடை, குடும்பக் கட்டுபாடு, உடலுறவு மூலமாகப் பரவும் வியாதிகள், HIV/AIDS பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த விதமான கருத்தடைச் சாதனங்கள் உள்ளன, அவை எப்படி வேலை செய்கின்றன, அவைகள் எப்படி உபயோகப் படுத்தப் படுகி‎ன்றன, எந்தக் கருத்தடைச் சாதனங்கள் சிறந்தவை, அவைகளை எப்படிப் பெற முடியும் என்பது பற்றி அறிந்திருத்தல் நலம். இவை பற்றி ஆலோசனைகளை சமுதாயத்திலும், தேசிய அளவிலும் எப்படிப் பெறலாம் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.

பாலியல் கல்வியைத் துவக்குவதற்கு எது சரியான தருணம்? சொல்லப் போனால் பாலியல் கல்வியை இளமையிலேயே, பருவமடைவதற்கு முன்பே ஆரம்பிக்க வேண்டும், சரியாக எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பது படிக்கும் இளைஞனது உடல், மன அறிவு வளர்ச்சியையும் அவர்களது புரிந்துகொள்ளும் தன்மையையும் பொறுத்தது.

என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும், அதை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அதை யார் சொல்லிக் கொடுக்கிறார்கள், எப்போது சொல்லிக் கொடுக்கிறார்கள் எந்தச் சூழ்நிலையில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது, படிக்கும் இளைஞன் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறான் என்பதைப் பொறுத்தது. நாட்களை வீணாக்காமல் இளமையிலேயே பாலியல் கல்வியைத் துவங்குவது அவசியம். அடிப்படையான விஷயங்களை முதலில் சொல்லிக் கொடுக்கலாம். உதாரணமாக சிறு வயதில், மனிதர்கள் எப்படி நாளுக்கு நாள் குழந்தைப் பருவத்திலிருந்து காலப்போக்கில் வளர்ச்சி அடைகிறார்கள். எப்படிக் குழந்தைகளாயிருந்து பெரியவர்களாகிறார்கள் போன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்துப் பாலியல் கல்வியைத் துவக்கலாம். இது பருவமெய்துவதைப் பற்றி விளக்கமாக சிறு பிராயத்திலேயே தெரிந்துகொள்ள அடிப்படையாய் இருக்கும். நம் உடலில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இது பாலுறவால் தொற்றக்கூடிய நோய்களைப் பற்றிப் பின்னர் விளக்குவதற்கு உதவி செய்யும்.

பாலியல் கல்வி இளைஞர்களிடையே தேவையற்ற ஆர்வத்தைத் தூண்டி அவர்களைப் பாலுறவுகளைப் பரிசோதனை செய்து பார்க்கத் தூண்டுகிறது என்று சிலர் வாதிடுவதுண்டு. ஆனால் இவ்வாறு நடந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இளவயதில் சொல்லப்படும் செய்தி அவர்களது மனதில் சுலபமாகத் தங்குகிறது. குழந்தைகளிடம் எதையும் பேசக் கூடாது என்ற மனப்பான்மையுடன் இல்லாமல் குழந்தைகள் நம்மைக் கேள்வி கேட்கும்போது தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். பெற்றோர்களும், ஆர்வலர்களும் இளைஞர்களிடம் செக்ஸ் பற்றியும் பாலியல் உறவுகள் பற்றியும் விவாதிக்கலாம். பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடம் இது மாதிரி விஷயங்கள் பற்றிப் பேசுவதில் ஒரு தயக்கம் இருக்கிறது. இது போன்ற தயக்கங்களைக் கைவிட்டு, அதை ஒரு முக்கியத்தவம் வாய்ந்தததாக, இளைஞர்களது பார்வையை விசாலப்படுத்துவதாக, சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு கல்வியாக அணுக வேண்டும். இதற்கு இளைஞர்களிடம் ஒரு நல்ல நெருக்கம் வைத்துக்கொண்டு நம்மிடையே அவர்கள் மனதிலுள்ளதைப் பரிமாறிக் கொள்வதற்கான பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். நெதர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய மனப்பான்மை இளைஞர்களிடையே பாலியல் பற்றிய ஒரு ஆரோக்கியமான சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது. இளைஞர்களின் வயது கூடும்போது அவர்களுக்குப் பாலுறவு பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்புக்கள் சமுதாயத்தின் மூலமாகவும் ஊடகங்களின் மூலமாகவும் அவர்களது பள்ளிகளின் மூலமாகவும் கிடைக்கி‎ன்றன. ஆனாலும் குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய அறிவினை ஊட்டுவதில் பெற்றோர்களுக்குத்தான் பெரும் பங்கிருக்கிறது.

வீடுகளில் பெற்றோர்களிடம் இளைஞர்கள் மனம் விட்டுப்பேசித் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, கவலைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். இது ஒரு தொடர் கல்வி. பெற்றோர்களின் பங்கு அதிகமிருந்தாலும் பள்ளிகளுக்கும் மற்றும் பல சமூக நிறுவனங்களுக்கும் இந்தக் கல்வியை இளைஞர்களுக்கு அளிப்பதற்கான பெரும் பொறுப்பு இருக்கிறது.

பள்ளிகளில் ஒரு பாடத் திட்டத்தை வைத்துக்கொண்டு அதன்படி, கல்வி தரப்படுகிறது. வேண்டிய தகவல்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளப் பாடத்திட்டங்கள் போதுமான வாய்ப்பளிப்பதில்லை. பாலியல் கல்வி இளைஞர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால் அவைகள் வேண்டிய தகவல்களை அனைத்து இடங்களிலிருந்தும் பெற வேண்டும். பள்ளியில் நடப்படத்தப்படும் கல்வியில் பெற்றொர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊடகங்களின் மூலமும் மற்ற சாதனங்கள் மூலமும் தாங்கள் பெறும் செய்திகளை இளைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில நாடுகளில் பாலியல் கல்வியை வலுப்படுத்துவற்கான முறைகளை இளைஞர்களிடமே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தேவைகளை அவர்களே உணர்வதோடு ஒரு ஈடுபாடும் ஏற்படுகிறது. பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகிறது.
பாலியல் கல்வி பள்ளிகளில் எந்த முறையில் அமைய வேண்டும்?
அவை இளைஞர்களுக்கு முக்கியமாகக் கற்றுத்தர வேண்டியவை என்ன?

1. அது இளைஞர்கள் தவறான பாதையில் போவதைத் தடுக்க வேண்டும்.
2. மக்களிடையே உள்ள வேறுபட்ட பாலுறவு பற்றிய கருத்துக்களுக்கும் மனோபாவங்களுக்கும் எது காரணம்?
3. பாலுறவு பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் தெளிவான அறிவு.
4 தவறான பாலுறவால் ஏற்படக்கூடிய பதிப்புக்கள், கருத்தடை சாதனங்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றிய சரியான தகவல்கள்.
5 சமூகத்தினாலும், உடனிருப்பவர்களாலும் ஏற்படக்கூடிய அழுத்தங்கள்.
6. இளைஞர்களின் மனதில் பதியுமாறு பலவிதமான முறைகளைக் கையாண்டு இளைஞர்கள் பாலியல் கல்வியின் அவசியத்தை உணரச் செய்தல். இந்தக் கல்வி முறை இளைஞர்களுக்குப் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும், உடலுறவு கொள்ளும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்துக்கொள்ள உதவும்.
7. பாலியல் பற்றி நன்கு அறிந்த அது சார்ந்த துறையிலிருப்பவர்களுடன் கலந்துரையாடல்.

மேலே சொன்ன யாவுமே மிகவும் அவசியமானவை, ஒன்றுக்கொன்று தொடர்புடயவை. முக்கியமாக, பாலியல் கல்வி பாலியல் நல நிலையங்களுடன் நெருங்கிய தொடர்புடையவாய் இருக்கவேண்டும். இளைய சமுதாயத்திற்குப் பாலியல் கல்வி அவசியம் என்பதை நன்குணர்ந்தாலும் அதை எவ்வாறு அவர்களுக்குப் பயன் தரும் வகையில் அளிக்க முடியும் என்று ஒரு முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. பாலியல் கல்வி என்பது ஒரு முனைப்பட்டதல்ல. பலவேறு தனித் தனிப்பட்ட செயல்களை ஒன்று சேர்க்க வேண்டும். அது மட்டுமின்றி இது உணர்வுபூர்வமான நுண்ணிய முறையில் அணுக வேண்டிய ஒரு கல்வி. இளைஞர்களின் மனோபாவம், ஊடகங்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு, அவர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு, கற்றுக் கொள்பவரின் மனப் பக்குவம் போன்ற பல விஷயங்கள் இந்தக் கல்வியில் அடங்கியிருக்கின்றன. சமூக நல நிலையங்களும் இதில் பெரும் பங்காற்ற முடியும். அரசாங்கத்தின் உதவியுடன் ஊடகங்கள் மூலமாகப் பாலியல் கல்வியை நாட்டின் பல பாகங்களிலுமுள்ளவர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்க முடியும். பாலியல் கல்வியின் வளர்ச்சி மேலே சொன்னவர்களின் பங்களிப்பில்தான் இருக்கிறது. இதைத் தவிர, புதிதாகத் திருமணமான தம்பதிகள், ஒரினச் சேர்ர்க்கையினர் ஆகியோருக்கென்று தனியாக எவ்வாறு பாலுறவுகள் பற்றிய அறிவை அளிக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும். அகதிகள். அனாதையாகத் தெருவில் திரிபவர்கள், சிறையிலிருக்கும் இளைஞர்கள். என்று பல விதமான பிரிவினர்களுக்கும் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.

இங்கே கூறப்பட்டவை பாலியல் கல்விக்கு அடிப்படையாக இருந்தாலும் எல்லாப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் கல்வியைத் தயார் செய்ய வேண்டும். கொடுக்கப்படுகின்ற பாலியல் கல்வி எதிர் காலத்தில் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

லேபிள்கள்: