புதன், 22 ஜூன், 2011

மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.

[1]நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும். [2]

சுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.
மேற்பரப்பு நீர் என்பது நதி, ஏரி அல்லது சுத்தநீர் உள்ள ஈரநிலம் இவைகளில் உள்ள நீராகும். மேற்பரப்பு நீர் இயற்கையாக ஆவி குளிர்ந்து மழையாகி நீர்நிலைகளில் நிரம்புகின்றது. அதேபோல் கடலில் கலந்து வீணாகுவதும், ஆவியாகப் போய் விடுவதும், துணைமேற்பரப்பில் கசிந்தொழுகலாலும் இயற்கையாக இழந்து விடுகின்றது.




ஆவி குளிர்ந்து மழை ஆவதுதான் மேற்பரப்பு நீர் அமைப்பில் உள்ள நீர் வடிநிலத்தில் ஒரே இயற்கை உள்வைப்பாக இருந்த போதிலும், மொத்த நீர்அளவு ஒரு குறிப்பிட்ட நேரம் பல காரணங்களைச் சார்ந்துள்ளன. இந்தக் காரணங்களில் உள்ளடங்கும் ஏரிகள், ஈரநிலங்கள், மற்றும் செயற்கை நீர்த் தேக்கங்கள்ஆகியவைகளின் தேக்கத்திறன் ஒட்டியும், நீர்த்தேக்க நிலைகளின் மண்வளம்அதன் ஊடுருவ இடம் தரும் இயல்பு ஒட்டியும், நீரானது வடிநிலத்திலிருந்து மறைந்தோடிவிடுவதுஒட்டியும், பதங்கமாகும் நேரம் மற்றும் உள்ளூர் ஆவியாகும் வீதங்கள் ஒட்டியும் அமைந்திருக்கும். இத்தகு அனைத்துக் காரணங்கள் நீர்இழப்புக்குரிய விகிதாசாரங்களைப் பாதிக்கும்.


மேலும் இக்காரணங்கள் மனித நடவடிக்கைகள் பெருமளவு அல்லது சிலநேரங்களில் சீரழிக்கும் விளைவினை உண்டாக்கும். மனிதர்கள் நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொண்டே போவதால் தேக்கும் திறன் அதிகரிக்கின்றது. அது ஈரநிலங்களில் வடிகால்கள் வழியே குறைந்து போகின்றது. மனிதர்கள் அடிக்கடி வழிந்தோடும் நிர்த்தேக்க எண்ணிக்கைகள் மற்றும் அவைகளின் இயக்க வேகம் அதிகரிக்கச் செய்து நீர்சேரும் பிரதேசங்களின் ஊற்றொழுக்கு வழிமுறைப் படுத்தி வருகின்றனர்.


நீரின் ஒரு குறிப்பிட்ட காலம் மொத்தமாகக் கிடைக்கும் அளவு ஒரு முக்கிய மான கருத்தாக உள்ளது, சில நீர்ப் பயனாளிகள் நீர்த்தேவை விட்டுவிட்டு பெற வேண்டுவர். எடுத்துக்காட்டாக, பல பண்ணைகள்இளவேனில் காலம் அதிக அளவு நீர் வேண்டும் நிலையில் இருக்கும் ஆனால் குளிர் காலத்தில் நீர் கிடைப்பது அரிதாகி விடும். அப்படிப் பட்ட பண்ணைகளுக்கு நீர்வழங்கல் வேண்டி, மேற்பரப்பு நீர்அமைப்பு ஒன்று உருவாக்குதல் அவசியமாகின்றது. அது ஏராளமாக தேக்கும்திறன் கொண்டதாகவும் நீரை ஆண்டு முழுதும் சேகரிக்கத் தகுந்ததாகவும், குறுகிய காலத்தில் நீரை வெளிவரச்செய்யத் தக்கதாகவும் அந்த அமைப்பு விளங்கிட வேண்டும். வேறு சில பயனாளிகள் நீர் தொடர்ந்து தேவைப் பட ஒரு சக்தி சாதனம்நீரைக் குளிர வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவர். அப்படி ஒரு சக்தி சாதனம் நீருக்கென உண்டாக்க மேற்பரப்பு நீர் அமைப்பு தேக்கும் திறன் போதுமானதாக இருக்கச் செய்ய வேண்டும். எனவே, அப்படி இருந்தால்தான் அது சராசரி ஊற்றொழுக்கு தேவைக்குக் குறைந்த போது ஈடுகட்டும் என்று அவர்கள் அதற்காவன செய்வர்.


இருந்தபோதிலும், ஒரு நீர்வடிநிலத்தின் நீண்ட கால சராசரி ஆவி குளிர்ந்திடும் வீதம் அந்த நீர்வடிநிலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் மேற்பரப்பு நீரின் சராசரி நுகர்வினை மேலாகக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே அமையும்.

இயற்கையான மேற்பரப்பு நீர் அதிகமாகப் பெருகச் செய்ய வேறொரு நீர்வடிநிலத்தில் இருந்து அதை இறக்குமதி செய்யலாம். அதைக் கால்வாய் வழியாகவோ, குழாய் வரிசை வழியாகவோக் கொண்டு வரலாம். அதேபோல் செயற்கையான முறையில் பிற இங்கு அட்டவணைப் படுத்திய மூல ஆதாரங்களில் இருந்து கொண்டு வரலாம் ஆனால் நடை முறையில் அளவுகள் புறக்கணிக்கக் கூடியதாகவே இருக்கும். ஏன்எனில் மனிதர்களே மேற்பரப்பு நீர் 'இழந்தது' என்றும்(அதாவது அது பயன் படுத்தத் தக்கதாக இல்லை) அதற்குக் காரணம் மாசுபடுத்தலேஎன்றும் கூறலாம்.

[4]உலகிலேயே பிரேசில் தான் அதிக அளவில் சுத்தநீர் வழங்கலில் முதலிடம் பிற நாடுகளைக் கட்டிலும் பெறுகின்றது. ருஷியா, கனடா நாடுகள் அடுத்து வருகின்றன.


ஆற்றொழுக்கின் கீழ்
ஆறு செல்லும் திசைஎங்கும், நீரின் மொத்தக் கொள்ளளவு நீரோட்டத்துடன் கொண்டு செல்லப் படும் அதில் கண்புலனாகும் தங்குதடையற்ற நீரின் ஓட்டம் அடிப்பரப்பில் ஓடும் போது பாறைகள் ஊடே உள்ளிருக்கும் சரளைக்கற்கள் எல்லாம் தாண்டி செல்லும் போது அது திடமான பங்களிப்பாக தருவது கலந்திருக்கும். அதன் வெள்ளப்பரப்பு ஹைபோரெய்க் மண்டலம் என அழைக்கப் படுகின்றது

பல ஆறுகளில் பெரும் பள்ளத்தாக்குகளில் இந்த கண்புலனாகாத ஓட்டத்தின் உட்புறம் கண்புலனாகும் ஓட்டத்தை விஞ்சியிருக்கும். இந்த ஹைபோரெய்க் மண்டலம் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்-தடி நீர் இடையில் அடிக்கடி ஓர் இயக்கும் உள்முகம் நீரினை உள்ளடியாகவே நீரடுக்குப் பாறையிலிருந்து பெற்றுக் கொண்டு அதை உள்ளீடற்றதாக்கச் செய்யும். இது பெரும்பாலும் நிலத்தடிப் பாறைச்சிதைவுப்பகுதியில் முக்கியமாகக் இருக்கும். அங்கு ஆழமான நீண்டதுளைகள் மற்றும் நிலத்தடி ஆறுகள் பொதுவாக காணப்படும்.

நிலத்தடி நீர்.



ஷிபோட், ஒரு பொது நீர் மூல ஆதாரம் யுக்ரேனியன் கிராமங்கள்.

நிலத்தடி நீர்அடிப்பரப்புநீர் எனவும் அழைக்கப்படும். சுத்தநீர் மண்ணில் நுண்துளை மற்றும் பாறைகளில் அமைந்திருக்கும். அது ஆழமான நீண்ட துவாரங்கள்ஊடே அடிநில நீர்மட்டத்தின் கீழ்இருந்து கிளம்பிவரும். சிலசமயம் இதுஒரு தனிவேறுபாட்டை இருவகை யான நீர்ப்பரப்பிற்கும் இடையே வெளிப்படுத்தும் ஒன்று அடிப்பரப்பு நீர் அது மேற்பரப்புடன் தொடர்பு கொண்டிருக்கும். மற்றொன்று ஆழமான உள்ளடி நீர்ப்பரப்பு அதை ஆழ்நீளத்துளை என்பர்.(சில சமயங்களில் அது புதைபடிவ நீர் என்றும் கூறுவதுண்டு)

அடிப்பரப்பு நீர் மேற்பரப்பு நீர்உடன் சேர்த்து உள்வைப்பு, வெளிவைப்பு, நீர்ச்சேகரிப்பு சொற்றொடர்களில் சேர்த்துக் கருதப்படும். ஆனாலும் மாறுநிலை வேற்றுமையானது அதன் மெதுவான நீர்வரத்து கொண்டு செல்லப்படும் வீதம், அடிப்பரப்பில் உள்ள நீரின்சேகரிப்பு பொறுத்திருக்கும். பொதுவாக உள்வைப்பைக் காட்டிலும் மேற்பரப்பு நீர்அதிகமாகவே இருக்கும். இந்த வேற்றுமை மனிதர்களுக்கு அடிப்பரப்பின் நீரை நெடுங்காலத்திற்கு அதன் விளைவுகள் பற்றி எண்ணாமல் பயன்படுத்த ஏதுவாகும். இருந்த போதிலும் நெடுங்காலத்திற்கு கசிந்தொழுகும் நீர் அதன் சராசரி வீதம் மேற் பரப்பின் நீர் விட அதிகம் கட்டுப்பட்டதாக இருக்கும். அது அந்த சராசரி நுகர்வுக்கு உகந்த தாக இருக்கும்.

அடிப்பரப்பிற்கு உரிய நீர் மேற்பரப்பு நீர்கசிந்தொழுகல் மூலம் இயல்பான உள்வைப்பாக அமைந்திருக்கும். இயல்பான வெளிவைப்புகள் என்பதுதான் அடிப்பரப்பிலிருந்து வரும் ஊற்றுகள் ஆகும். ஆழநீண்டதுளைகள் கடல்களுக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.


மேற்பரப்பு நீர் ஆதாரம் திடமான ஆவி யாகுதலுக்கு உட்பட்டால் ஒரு நீர் மூலஆதாரம் ஆகும். அது உவர்ப்புத் தன்மைபடைத்திருக்கும். இது கண்மறைவாக உள்ள புதைந்திருக்கும் நீர்நிலைகளுக்குப்பொருந்தும். செயற்கையான முறையில்பாசனம் பெறும்பண்ணைகளிலும் இது காணலாம். கடற்கரைப் பகுதிகளில் மனிதர்கள் அடிப்பரப்பில் இருந்து பயன் படுத்தும் போது கசிந்தொழுகலின் போக்கை மாறு படுத்திவிட ஏதுவாகும். ஆதனால் மண் ணானது உப்புத்தன்மை பெற்றிருக்கும். மனிதர்களும் தங்களது பயன்பாட்டால் அடிப்பரப்பின் நீரை 'இழக்கச்' செய்யலாம். (அதாவது அதைப் பயன்படுத்த இயலாத வண்ணம்) ஏன்எனில் அது அந்த அளவிற்கு மாசு படிந்து விடும். அவர்கள் உள்வைப்பை அதிகரிக்கச் செய்யலாம் அதைஅடிப்பரப்பிற்கு நீர்த்தேக்கங்கள் எழுப்பி கொண்டுவரலாம் அல்லது குளங்களிலும் நிலைநிறுத்தச் செய்யலாம்.


உப்புநீக்குதல்
உப்புநீர் சுத்திகரிப்பு ஓர் இயற்கை வழிமுறையாகும். அதனால் உப்புநீர் (பொதுவாக கடல்நீர்) சுத்தநீராக மாற்றப்படும். பொதுவாக உப்புநீர் சுத்திகரிப்பு வழிமுறைகள் என்பனவடிகட்டுதல் மற்றும் மறுதலை ஊடுகலப்பு(துளைகள் உள்ள இடைத்தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை) நடப்புரீதியில் கடல்நீர் சுத்திகரிப்பு மாற்று நீர்ஆதாரங்களைக் காட்டிலும் அதிகச் செலவு வைக்கும் பணியாகும்.மொத்த மனிதப் பயன்பாட்டில் ஒரு சிறிதளவு பின்னம்தான் சுத்திகரிப்புப் பணியால் திருப்தி பெறுவர். அது பொருளாதார ரீதியில் அதிகமதிப்புடைய பயன்பாடுகளுக்கு (அதாவது குடும்ப அமைப்பு மற்றும் தொழிற்சாலை உபயோகங்கள்) மட்டுமே உகந்ததாகும். அதுவும் வறண்ட பகுதிகளுக்கேசாலப் பொருந்தும். இந்த சுத்திகரிப்புப்பணி அதிகப் பரவலாக பாரசீக வளைகுடா நாடுகளில் நடைபெறுகின்றது.


உறைபனி நீர்


நியூபௌந்துலாந்து கண்ட பனிப்பாறை போல
பல்வேறுபட்ட திட்டங்கள் முன்மொழியப்பட்டுபனிப்பாறைகளைஓர் நீர்ஆதரா மாக்க முனைவதுண்டு, ஆயினும் இன்றளவும் அது புதுமையான நோக்கங்கள் கொண்ட தாகவே இருந்து வந்துள்ளது. பனிப்படல நீரொழுக்கு ஒரு மேற்பரப்புநீர் ஆதாரம் என்றும் கருதப் படுகின்றது.

இமாலயங்கள் அடிக்கடி 'உலகின் கூரை' என்றழைக்கப் படுகின்றன. அது பூமியில் மிகப் பரந்த மற்றும் கடல்மட்ட உயரமானப் பிரதேசங்கள் கொண்டுள்ளன. மேலும் அதிகம் பனிப்பாறைகளும் துருவப்பிரதேசங்கள் போல உள்ளன. ஆசியாவின் பத்து பெரிய நதிகள் இங்கு உற்பத்தி யாகின்றன. ஒருகோடி மக்களுக்கும் மேற்பட்டோர் இதை நம்பி உள்ளனர். தட்பவெப்பநிலை மேலும் சிக்கலாக்கும் வண்ணம், உலக சராசரிக்கும் மேல் செல்லும் வண்ணம் நிலைமை உள்ளது. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளில் வெப்பநிலை 0.6 டிகிரிகளுக்கும் மேலாக உள்ளது, அதேசமயம் உலகவெப்பமயமாகுதல் புடி 0.7 என்றே கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.[5]




சுத்த நீரின் பயன்கள்
சுத்தநீரின் பயன்கள் நுகர்வு மற்றும் நுகர்வற்றது என இருவகைப்படுத்தப் படலாம் (நுகர்வற்றது சிலசமயங்களில் 'புதுப்பித்தல்' என்றழைக்கப் படுகின்றது. நீரின் பயன் வேறுபயன்பாடுகளுக்குக் கிடைக்காத வரை நுகர்ச்சியானதாகவே இருக்கும். இழப்புகள் என்பது அடிநீர்ப்பரப்பின் கசிவு மற்றும் ஆவியாகுதல் ஆகும் இவைகள் நுகர்ச்சியாகவும் கருதப்படும். ஏன்எனில் நீரானது விளைபொரு ளாகவும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றது.(அதாவது பண்ணை விளைபொருள் போல) நீர் சுத்திகரித்தபிறகு மேற்பரப்புநீர் போல மாற்றிவிட இயலும். அதாவது கழிவுநீர் பொதுவாக நுகர்ச்சியற்றதென்று கூடுதல் பயன்பாட்டிற்கு மாற்றும்வரை கருதப்படும்.

விவசாய எந்திரங்கள்


ஒரு பண்ணை நிலம் ஆணடரியோ
உலகெகங்கும் நீரின் பயன்பாடு 69% பாசனத்திற்கே செலவிடப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளது. 15-35% பாசனத்திற்கு மீட்டுப்பெறத் தாங்குதல் இன்றி உள்ளது.[6]


உலகில் சிலபகுதிகளில் பாசனம் எந்த பயிரினையும் விளைவிக்க அவசியமாகின்றது. ஆனால் மற்ற பகுதிகளில் அதிக லாபம் ஈட்டும் பயிர்களை வளர்க்கவும், பயிர்விளைச்சலை அமோகமாக்கவும் முடிகின்றது பாசன முறைகளில் பல்வகைகள் பயிர்விளைச்சல், நீரின் நுகர்ச்சி, கருவிகளுக்கு முதலீட்டுச்செலவு, மற்றும் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. பாசன திட்டங்கள் அதாவது உழுசால்மற்றும் தலைக்குமேல்நீர்தெளித்தல் போன்ற செலவுகுறைவாகப் பிடிக்கும் ஆயினும் திறனிலும் குறைவாகவே இருக்கும். ஏன்எனில் நீரானது பெருமளவு ஆவியாகுதல், ஓடிவிடுதல், அல்லது மண்டல வேர்ப்பகுதியில் வடிந்துவிடுதல் போன்ற காரணங்களால் இழப்புக்கு உள்ளாகின்றது கண்கூடு. மற்ற பாசன முறைகளான, சொட்டுநீர்ப் பாசனம்அல்லது துளித்துளிப் பாசனம்,அலைநீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம்-தெளிப்பான்களை தரையிலிருந்து இயக்குதல், கடைபிடிக்கலாம். ஆனால் இவைகள் செலவுபிடிக்கும் திட்டங்கள் ஆகும் அதுவும் ஓடுதல்,வடிதல்,ஆவியாதல் எல்லாவற்றாலும் ஏற்படும் இழப்பைக் குறைக்கக் கூடும். எந்த வழிமுறையானாலும் அது சரிவர நிர்வகிக்கப் படவில்லை எனில் பலன் வீணாகிவிடும். எல்லா வழிமுறைகளும் அவைகள் தகுந்த நிலவரங்களில் பயன்படுத்தப் படும் வரையில் ஆற்றல் மிக்கவைதான உரிய பாசன நேரம், மற்றும் மேலாண்மை இரண்டையும் ஒட்டியே பாசன வழிமுறை அமைந்திருக்கும். ஒரு பிரச்னை என அடிக்கடி கருதப்படுவது உப்புநீர் சுத்திகரிப்பு செய்வதால் அடிப்பரப்பு நீர் பாதிக்கப் படுவதாகும்.

நீரியல்கலாசாரம்ஒரு வளர்ந்துவரும் விவசாய நீர்ப்பயன்பாட்டு முறையாகும். சுத்தநீர் கொண்ட வணிகநோக்கில் மீன்பிடித்தல் தொழிலும் விவசாய நோக்கில் நீர்பயன்படுத்துவது போன்று இணையாகக் கருதப்படலாம் ஆயினும் குறைவான முன்னுரிமை பாசனத்தை விட அது பெற்றிருக்கலாம். (ஆரல் கடல் மற்றும் பிரமிடு ஏரி காண்க)

உலகில் மக்கள்தொகை பெருகப் பெருக, உணவுத் தேவை அதிகரிக்க, வேண்டியுள்ளதால் நிர்ணயிக்கப் பட்ட நீர்வழங்கல் அடிப்படையில் அதிகம் உணவு உற்பத்தி செய்வதும் அதற்கு குறைவாக நீர் பயன்படுத்த முனைவதும், பாசன முறைகளில்[7] அபிவிருத்தி செய்வதும்,தொழில்நுட்பங்கள் பயன் படுத்துவதும், விவசாய நீர் மேலாண்மை மற்றும் பயிர் வகைகள் மற்றும்நீர்உபயோகம்பற்றிச் சரிபார்த்து எச்சரிப்பதும் யாவும் மேற்கொள்ளப் படவேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றது.
தொழிற் புரட்சி


போலந்து ஒரு சக்தி சாதனம்
உலகெங்கிலும் நீரின் பயன்பாடு 15% தொழிற்சாலைகளுக்கென்று அளவிடப்பட்டுள்ளது, முக்கிய தொழில்துறை பயனாளிகள் சக்தி சாதனங்கள், குளிரூட்ட, எரிஆற்றல் மூல மாகப் பயன்படுத்தவே செய்கின்றனர். (அதாவது நீர்மின்விசைத் திட்டங்கள்) உலோகமற்றும் எண்ணெய் சுத்தி கரிப்புகள் போன்ற நீரினை வேதியல் செயல்முறைகளுக்கெனவும், பொருளுற்பத்தித் திட்டங்களுக்காகவும், ஒரு தீர்வாகப் பயன் படுத்துகின்றனர்.

தொழில்துறைக்கென்று ஒரு பங்கு நீரின் பயன்பாடு நுகர்ச்சியாகத்தான் உள்ளது ஆனால் மொத்தமாக அது விவசாயப் பயன்பாட்டைவிடக் குறைந்துள்ளது.


நீர் எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது. நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும்,மாசுபடுத்தாததாயும், புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது.

த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர்விசை மின்நிலையம் ஆக உள்ளது. அழுத்தத்திற்குள்ளானநீர், நீர்வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பானாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன. நீரின் இப்பணி சிறந்ததாயும்,மேலும் பாதுகாப்பானதாகவும்,சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது. அதிகவெப்பம் குளிர்ச்சியடையவும் வைக்கின்றது அல்லது ரம்பப் பிளேடுகளை அதிகச்சூடு ஏறாத வண்ணம் தடுக்கவும் செய்கின்றது.

நீரானது நீராவிச்சுழலி, வெப்பப் பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப் படாமல் வெளியேற்றும் நீர் தொழிற்சாலையில் மாசுபடுத்தும். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு தொழிற்சாலை களிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியல் மாசு), வெளியேற்றப் பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன.

வீடுகள்


குடிநீர்
உலகெங்கிலும் 15% நீரின் பயன்பாடு குடும்ப அமைப்புகளுக்காகவே ஆகின்றது. இதில் குடிநீர் குளியல், சமையல், துப்புரவு, மற்றும் தோட்டப் பராமரிப்பு யாவும் அடங்குகின்றன. அடிப்படை குடும்ப அமைப்பிற்கு என நீர்த்தேவைகள் ஒரு மனிதனுக்கு ஒருநாளைக்கு 50 லிட்டர்கள் என்று பீட்டர் கிளேக்கு என்பார் கணக்கிட்டுள்ளார். அதில் தோட்டப் பராமரிப்பு அடங்காது.
குடிநீர் என்பது போதுமான உயர்தரம் கொண்ட தாகவும், அது நுகரத் தக்க தாகவும், அல்லது பயன்படுத்தினால் அபாயம் ஏற்படாத தெனவும், நீணட காலத் தீங்கிழைக்கா தெனவும் இருத்தல் வேண்டும். அத்தகைய நீர் பொதுப்படையாக பருகத்தகும் நீர் என்று வழங்கப்பெறும் முன்னேறிய நாடுகளில் குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீர் மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கும் சேர்த்து பருகும் தரம் மிக்கதாக இருக்கவேண்டும்.அதில் ஒரு சிறிதளவு உண்மையில் நுகரப்படுகின்றது அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றது.


பொழுதுபோக்கு


கடற்கரை ஊற்றுக்களின் நீரோட்டங்கள்
பொழுது போக்குகேளிக்கைகளுக்காக நீரின் பயன்பாடு சிறிதெனினும் அது மொத்தத்தில் வளர்ந்துவரும் சதவீத மாகவே உள்ளது. அத்தகு பயன்பாடு பெரும்பாலும் நீர்த் தேக்கங்களில் நடைபெற்றக் கொண்டு வருகின்றது. நீர்த்தேக்கம் பூர்த்தியானதும் மிகைநீர் இந் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றது. அது கேளிக்கைப் பயன்பாடு என வகைப்படுத்தப் பட்டுள்ளது. நீர்வெளியேற்றும் பொழுது ஒருசில நீர்த்தேக்கங்களில் வெண் நீர்- கரைஊற்றுநீர் படகுச் சவாரிக்கெனப் பயன்படுத்தப் படுகின்றது.அது கேளிக்கைப் பயன்பாட்டின் கீழ்வரும். பிற எடுத்துக்காட்டுகள் பயன்பாட்டாளர்களில் தூண்டில் மீன்பிடிப்பாளர்கள், பனிநடைக்கட்டைப் பயனாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நீச்சல்காரர்கள் முக்கியமாக அடங்குவர்.

பொழுதுபோக்குப் பயன்பாடு வழக்கமாக நுகர்ச்சியற்றதாகும். கோல்ப் ஆடுகளங்களில் அதிக அளவில் நீர்உபயோகம் படுத்தப் படுவதாகவும் அதுவும் வறண்ட பகுதிகளில் என்றும் குறிவைத்துக் கூறுவதுண்டு. பொழுதுபோக்குப் பாசனம் (தனியார் தோட்டங்கள் உள்பட) குறிப்பிடத்தக்க விளைவை நீர்வள ஆதாரங்கள் பேரில் ஏற்படுத்துகின்றதா என்பது தெளிவில்லாமல் தான் இருக்கின்றது. ஏன்எனில் போதிய நம்பகமான தரவுகள் கிடைக்கப்பெறாததும் காரணம் ஆகும். சில அரசாங்கங்கள் கலிபோர்னியா அரசாங்கம் உள்பட கோல்ப் ஆடுகளத்தை விவசாயநோக்கம் கொண்டவை என்று அங்கீகரித்துள்ளன. சுற்றப்புறச் சூழல் ஆர்வலர்களின் குற்றச் சாட்டுகளுக்காக வீணாகும் தண்ணீர் பயன் படுத்துவதற்காக அங்ஙனம் செய்துள்ளனர். எப்படி எனினும், கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்கள் காண்கையில் அதன்விளைவு இதற்கெல்லாம் மீண்டும் அளிக்கப்பட்டாலும் பூஜ்யம் அளவிற்கு நெருங்கியுள்ளது.

கூடுதலாக பொழுதுப்போக்குப் பயன்பாடு பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக நீர்த்தேக்கத்தில் மிகுந்துள்ள நீர் கோடையின் பிற்பகுதியில் படகுச் சவாரிக்குப் பயன்படுத்தப் பட்டால் அது குடியானவர்களுக்கு இளவேனிற்காலத்தில் நடவுக்காலத்தில் கிடைக்காமல் போய்விடும். நீர் வெண்ணீர் தெப்பச் சவாரிக்கு வெளி யேற்றப்படுவது நீர்மின்விசை பற்றாக்குறை காலத்தில் தேவைக்கேற்ப கிடைக்காமல் போய்விட வாய்ப்புண்டு.




சுற்றுச்சூழல் ரீதியான
சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பாடு சிறி தளவெனினும் அது மொத்தத்தில் சதவீதம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றது. சுற்றுப்புறச் சூழலுக்கு நீரின் பயன்பர்டுகளில் அடங்குவது: செயற்கை ஈரநிலங்கள், செயற்கை ஏரிகள், வனவிலங்குகளுக்குகந்த சூழ்நிலை உருவாக்குதல், அணைக்கட்டுகளில்மீன் பிடிக்க ஏணிப்படிகள் அமைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்வெளியேற்றும் போது அத்தருணமாக மீன்குஞ்சு உற்பத்தி செய்வித்தல் ஆகியவாகும்.

பொழுது போக்குப் பயன்பாடு போல சுற்றுப்புறச் சூழல் பயன்பாடும் நுகர்வற்றதாகக் கருதப் படுகின்றது. பிற பயனாளிகளுக்கு குறிப்பிட்ட வேளைகளில் குறிப்பிட்ட இடங்களில் நீர் கிடைப்பதைக் குறைத்திடக் கூடும். எடுத்துக்காட்டாக, நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றும் பொழுது அதை மீன் குஞ்சுகள் உற்பத்திக்குப் பயன்படுத்தினால் அது அற்றின் மேல்பகுதியில் உள்ள நிலங்களுக்குதவாமல் போய்விடும்.


நீர் இறுக்கம்


1970–2000 காலகட்டத்தில் வளரும் நாடுகளின் மக்கள் பெற்ற குடிநீர் பங்கின் சிறந்த கணிப்பு.

முதன்மைக் கட்டுரை: water crisis
நீர்இறுக்கம் என்ற கோட்பாடு என்பது தொடர்பு படுத்திப் பார்த்தால் சுலபமாகத் தோன்றும். உலக வணிகத் தாக்குப்பிடிக்கும் வளர்ச்சிக் குழுவின் படி நிலைமைகளுக்கு ஏற்ற வாறு பயன்பாடு அமையும் நீர் எல்லா உபயோகங்களுக்கென போதுமானதாக இல்லாமல் போனாலும் அது விவசாயம். தொழில்சாலை, மற்றும் வீட்டு உபயோகம் என்று இருந்தாலும் நீர்இறுக்கம் ஆகிவிடும்.

தனிநபர்வருவாய்போல வரையரை செய்வது கடினம் எனினும் அது நீரின் பயன்பாடு மற்றும் திறன்பற்றிய யூகக் கருத்துக்கள் கொள்ளவைக்கின்றது என்றாலும் முன்மொழியப்பட்ட கருத்து: வருடாந்திர தனிநபர் புதுப்பித்துக்கொள்ளும் சுத்தநீர் கிடைக்கும் அளவு 1700 கனமீட்டர் குறைவாகும் பொழுது நாடுகள் நீர்இறுக்கம் கிரமமாகவோ அல்லது கால வேளையாகவோ பெறும் அனுபவம் அடையக் கூடும். 1,000 கனமீட்டர் கீழ் நீர்கிடைப்பது சொற்பம்
ஆனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கக் கூடும் அதனால் மனிதர்களின் ஆரோக்கியம் உடல்நலம் பாதிக்கும் நிலை ஏற்படும்.


மக்கள்தொகை வளர்ச்சி
2000-ல் உலக ஜனத்தொகை 6.2 பில்லியன்கள் ஆகும். ஐ.நா மதிப்பீட்டின்படி 2050ல் கூடுதலாக 3.5 பில்லியன்கள் ஆகும்போது வளர்முக நாடுகள் நீர் இறுக்கம் என்ற பிடியில் சிக்கித் தவிக்கக்கூடும்.[8] [9]எனவே நீரின் தேவை அதிகரிக்கும்நீர்ப்பாதுகாப்பு முறைகள்மற்றும் மறுசுழற்சி முறைகள்எந்த அளவிற்கு நடைபெறகின்றதோ அதை ஒட்டி வீதாசாரமாக முக்கிய நீர்வள ஆதாரங்கள் பொறுத்து அமையும்.[10]

அதிகரிக்கும் செழுமை
வறுமை துயர்தணிப்பு வீதம் இருபெரும் ஜனத்தொகை அரக்கர்களான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது செழுமைஅதிகரிப்பு என்பதின் பொருள் அதிக நீர்நுகர்வாகும். சுத்த புதிய நீர் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மற்றும் வாரத்திற்கு 7 நாட்கள் என்றளவில் ஆதாரத்துப்புரவுச்சேவைகள் தோட்டம் மற்றும் கார் போன்றவற்றிற்காக மட்டுமின்றி தனியார் நீச்சல் குளங்கள் ஜாக்குசிசிஸ் பராமரிக்க நீர் தேவைப்படுகின்றது.

வணிக நடவடிக்கைகள் விரிவாக்கம்
வணிக நடவடிக்கை என்பது தொழில் மயமாகுதல் இருந்து சேவைத்துறைகள் வரையில் அதாவது சுற்றுலா மற்றும் பொழுது போக்கு துறைகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து வேகமாக விரிவாகிக் கொண்டே வருகின்றது. அதன்விளைவாக நீர்த்தேவை அதிகரிக்கின்றது. வழங்கல்மற்றும் துப்புரவு நிமித்தம் வேண்டப்படுவதால் அது நீர்வள ஆதாரங்கள் மேல் அழுத்தங்கள் மற்றும் இயற்கை உயரின வாழ்க்கைச் சூழல் மேல் தாக்கங்கள் உருவாக்குகின்றன.

வேகமாக நகரமயம் ஆகுதல்
நகரமயமாகும் போக்குமுடுக்கி விடப்பட்டுள்ளது. சிறிய தனியார் கிணறுகள் மற்றும் மலக்கழிவுத்தொட்டிகள் குறைந்த அடர்த்திகொண்ட சமுதாயங்களில் நன்கு செயல்பட்டதுபோல அதிக அடர்த்திகொண்ட நகரப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படஇயலவில்லை. நகரமயமாகுதல் குறிப்பிடத்தக்க மூலதனம் நீர் உள்கட்டமைப்பபுகளுக்காகவேண்டப் படுகின்றது. அப்பொழுது தான் நீர் தனியார் களுக்கு, மற்றும் கழிவுநீர் ஒருங்குவிப்புகள் மேல் உரிய கவனம் செலுத்த இயலும். அது தனியார்கள் மட்டுமின்றி வணிக நோக்கிலும் கைகூடும். மாசுபடிந்த தொற்றுநோய் பரவவைக்கும் நீர்வளங்கள் சுத்திகரிக்கப் படவேண்டும் இல்லைஎனில் அது பெர்துமக்களின் சுகாதார அபாயநேர்வுகளுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நகரங்களில் அறுபது சதவீதம் 100000 பேர்கள் கொண்டுள்ளன. வேகமான வீதம் நிலத்தடிநீர் சேமித்து வைப்பது காட்டிலும் பயன்படுத்தப் படுகின்றது ஏதேனும் நீர் எஞ்சியிருப்பினும் அது கைவரப் பெறுதற்கு அதிகம் செலவாகின்றதுஎன்பது நிதர்சனமான உண்மை நிலவரமாகும்.

லேபிள்கள்: ,

செவ்வாய், 21 ஜூன், 2011

இலங்கை கல்வி முறை எதிர் கொள்ளும் சவால்

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. கல்வி மறுப்பதும் கல்வியைத் தனியார மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம் தேசியப் பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில் தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது.
தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயரதர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரிய ருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது கல்வியை விலை பேசி விற்பது இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.

1996 இல் இலங்கையில் மொத்த மாணவரகள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவரகள் பாடசாலையை எட்டிப் பாரப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்தது. இது 2003-இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வருகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில் 14 பேர கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர. மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.

இலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.

ஆண்டு பாடசாலைகளின் எண்ணிக்கை மாணவரகள் எண்ணிக்கை
1946 5946 593000
1976 9683 2572000
1992 10590 4289000
1997 10983 4260000
2000 9992 4190000
2001 9987 4184957

1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மாகாண ரீதியாக
மேற்கு 80
மத்திய 44
தெற்கு 72
வடகிழக்கு 149
வடமேற்கு 101
வடமத்திய 18
ஊவா 08
சப்பிரகமுவ 54
மொத்தம் 526

இதில் 2002-இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. 1990-க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத் தொடங்கிய அரசு அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை 1990-களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும் இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாகத் தொடரபுடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடையத்தை ஆராயின் முதலாம் ஆண்டு வகுப்புக்கான மாணவர அனுமதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

1980 364500
1985 372000
1990 387000
1995 342000
1999 343000
2001 330000
2002 330000

1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர அனுமதி 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும் அன்றாட பிழைப்புக்குச் சென்று திரும்பும் வசதி கருதியே பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக கொண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தாரை வாரப்பது போல் கல்வியினை வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியாரமயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.

இதன் விளைவு திடீரென நிரவாணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாகப் பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களைக் கொடுக்கும் புள்ளிவிபரங்களைத் தயாரித்து வெளியிடுகின்றனர. இதனடிப்படையில் 5 பாடசாலைகளில் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவனும் 18 பாடசாலைகளில் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களைத் தயாரிக்கின்றனர. ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர. அப்படி அனைத்துக் குழந்தைகளும் சென்றால் அவரகள் எங்கே செல்லுகின்றனர என்ற காரணத்தையும் ஏன் இந்தப் பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூடத் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர. கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும் பாடசாலைகளின் அவலங்களுக்குக் காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளைப் புச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.

மறு தளத்தில் கல்வி மறுப்பைத் துரிதமாக்கவும் மாணவரகளே கல்வியை வலுக்கட்டாயமாக கைவிடும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும் பாடசாலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவரகளைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலைகளில் 75 முதல் 100 மாணவர கொண்ட அதே நேரம் ஒரு ஆசிரியரே உள்ளனர. மாணவரகளின் கல்விக்குப் போதுமான ஆசிரியரகள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அமுல் செய்யப்படுகின்றது. 2001-இல் 1 முதல் 15 மாணவரகளைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந் தன. 16 முதல் 30 மாணவரகளைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவரகளைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவரகளைக் கொண்ட 744 பாடசாலைகள் இருந்தன. 100 மாணவரக்கு குறைந்த 2657 பாடசாலைகள் காணப்படுகின்றது. இந்தப் பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவரகளுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அமுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவரகளின் கல்வி நிரந்தரமாகவே முடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொள்கையாகி உள்ளது. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன் அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் ஏழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர. பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன் தனியார மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.

திட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க கல்வியின் தரத்தைக் குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையைச் சிதைத்து தனியாரமயமாக்கலைத் துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தாமாகவே தனியார கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்வியின் தரத்தைக் குறைக்கும் முயற்சியாக பாடசாலை ஆசிரியரகளின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் (அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில்) அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகள் உரிய தகைமைகள் அற்ற அதிபரகளால் நிரவகிக்கப் படுகின்றது. பொதுவாகப் பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுக்கிகளும் சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதவிகளில் தொற்றிக் கொள்கின்றனர. சமுதாயத்தின் அனைத்து சமூகச் சீரழிவுகளின் பிரதிநிதிகளாக இவரகள் உள்ளனர. இவரகள் கற்பித்தல் கற்றுக் கொள்ளல் சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும் பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவரகள் மாணவரகளின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர. அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியரகள் அதிபரகள் பள்ளியில் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும் மாணவரகள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை ஏவுவது மட்டுமின்றி அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்தக் கல்விச் சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.

பாடசாலைகளின் அதிபர நியமனத்தில் இனவாத அரசியல் புகும் போது தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டு வழங்கிய இனவாத நியமனத்தில் அதிபர சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்கள ஆசிரியரகளும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியரகளும் தெரிவு செய்யப்பட்டனர. இப்படி அதிபர சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியரகளும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியரகளும் தெரிவுசெய்யப்பட்டனர. அதிபர சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியரகளும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியரகளும் தெரிவு செய்யப்பட்டனர. ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் ஏற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள்ள நக்கி பிழைக்கும் தகுதியற்றவரகளைக் கொண்டு நிரப்ப மறுபுறத்தில் இனவாதம் திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றது. கடந்த 2000-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளரகளாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியரகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும் வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளரகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.

ஒருபுறம் தகமையற்ற பொறுக்கிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டைப் படுகுழியில் தள்ளுகின்றனர. மறு தளத்தில் உயர தகமையுள்ள உயர கல்வி பெற்ற 26000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர. எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி சமுதாயத்தின் அனைத்துப் பகுதியையும் சீரழிக்கின்றது. ஆசியாவில் உயரந்த கல்வித் தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படைத் தரத்தை நிரணயம் செய்வது கணிதப்பாடமாகும். இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல் பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஐரணிக்க முடியாத உண்மை என்னவென்றால் யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தமும் புலிகளின் கொள்கையும் இதை உருவாக்கினாலும் ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்புதான் இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழும்புக்கு அடுத்த மிகபெரிய நகர வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிதமாகியுள்ளது.

26000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம் 2003 இல் உயரதரப் பரிட்சையில் 251000 மாணவாகள் தேறிய போதும் 16000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவரகள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவரகள் உயரதரப் பரிட்சை எழுதிய பின்னும் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர. கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும் அவரகளுக்குக் கையுட்டும் கொடுத்து வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும் உலக நகரபுற லும்பன் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஓடவும் நாயைப் போல் அடிமையாக அடிமைப்பட்டு வாலாட்டும் அற்பத் தொழில்களைத் தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேரமையாக இளமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞரகளுக்கு இல்லாததாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மேற்கண்ட சமூகச் சீரழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே தெளிவுபடுத்துகின்றது. ஜனாதிபதி சந்திரிக்க அவரது மகன் விமுக்திக்கு கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேரச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளார. இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார காணிகளை வாங்கிக் குவித்துள்ளனர. இன்றைய (2003) காணி அமைச்சர தன் மீதான காணி மோசடிக்கு பதிலளிக்கும் போது இவற்றை ஆதாரப்புரவமாக குற்றம் சாட்டியுள்ளார. இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார. உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும் சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது

லேபிள்கள்: ,

வெள்ளி, 25 மார்ச், 2011

போதைவஸ்து

போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டிரு ப்பவர்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண் டிருக்கிறார்கள். சமுதாயத்தை சிறிது சிறி தாக அரிக்கும் புற்றுநோய் என்று இதை கூறலாம். இன்று ஏராளம் இளம் பரம் பரையினர் போதைவஸ்துப் பாவனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஆண்கள் மாத்தி ரமன்றிப் பெண்களும் இதில் அடங்குவர். போதை வஸ்துப் பழக்கத்துக்கு உள்ளாகி யவர்களால் அதைக் கைவிட முடியாது. அவர்கள் உட்கொள்ளும் போதைவஸ்து படிப்படியாகச் சீக்கிரமாகவே அவர்களை மரணத்தின் வாசலுக்குக் கொண்டு போய் விடும். நாட்டின் எதிர்கால சந்ததியின் ஒரு பகுதி நாட்டுக்கும் பிரயோசனமின் றித் தங்களுக்கும் பிரயோசனமின்றிச் சீரழி வதற்குப் போதைவஸ்து காரணமாகின் றது.
போதைவஸ்துப் பாவனையாளர்கள் தங் களை அழித்துக்கொள்வது மாத்திரமன்றிச் சமுதாயத்துக்கும் பிரச்சினையானவர்கள் ஆகின்றனர். போதைவஸ்து வாங்குவதற் குப் பணம் இல்லாத போது சிறுசிறு திரு ட்டுகளில் ஈடுபட்டுப் பின்னர் பெரிய திருடர்களாக மாறுகின்றனர்.
சிலர் வழிப் பறிக் கொள்ளைகளிலும் ஈடுபடுகின்றனர். வன்புணர்ச்சி, கொலை போன்ற பல குற் றச் செயல்களுக்குப் போதைவஸ்துப் பாவனை காரணமாக இருப்பதை உத்தியோகபூர்வ தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.
போதைவஸ்துப் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நற்பிர சைகளாக்கும் திட்டமொன்றை அரசாங் கம் நடைமுறைப்படுத்துகின்றது.
இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. புனர்வாழ்வுத் திட் டத்தின் கீழ் நற்பிரசைகளாக வெளியேறு பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவா கவே உள்ளது. மேலும், போதைவஸ்து வர்த்தகர்கள் தங்கள் விற்பனையை அதிக ரிப்பதற்காகப் புதுப்புதுத் தந்திரோபாயங் களைப் பின்பற்றும் நிலையில் அரசாங்கத் தின் புனர்வாழ்வுத் திட்டம் பெரிதாக வெற்றியளிக்கப் போவதில்லை. எனவே போதைவஸ்து வர்த்தகத்தை இல்லாதொ ழிப்பதற்கான செயற்பாட்டுக்கு அரசாங் கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
போதைவஸ்து வர்த்தகத்துக்கு எதிரான யுத்தம் இலகுவானதாக இருக்காது. இந்த வர்த்தகர்கள் சாதாரணமானவர்களல்ல. இவர்களுக்குப் பல்வேறு மட்டங்களில் வலுவான தொடர்புகள் உண்டு. பாதாள உலகத்துடனும் நெருக்கமான தொடர்பு கள் உண்டு. அரசியல் மட்டத்திலும் தொட ர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். குற் றச் செயல்களுக்கும் வேறு சட்டவிரோதச் செயல்களுக்கும் இவர்கள் பின்நிற்காதவர் கள். சுருக்கமாகக் கூறுவதானால் போதை வஸ்து வர்த்தகர்கள் ஒரு ‘மஃபியா’ கூட் டம் எனலாம்.
போதைவஸ்துத் தடுப்புப் பிரிவு இப் போது பொலிஸ் திணைக்களத்தில் இய ங்குகின்றது. இப்பிரிவு தீவிரமாகச் செயற் படுகின்ற போதிலும் போதைவஸ்து வர் த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு இப்பி ரிவின் ஆளணியும் வளங்களும் போதா திருப்பதை நடைமுறையில் உணரக்கூடிய தாக இருக்கின்றது.
இப்பிரிவை ஆளணி ரீதியாகவும் வளரீதியாகவும் மேலும் வலு ப்படுத்துவதோடு சிரேஷ்ட அதிகாரியொ ருவரைப் பொறுப்பாக நியமிப்பதன் மூலம் போதைவஸ்து வர்த்தகத்தை இல் லாதொழிக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கடமையாக அரசாங்கம் இதைக் கருத வேண்டும்.

லேபிள்கள்: ,

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கான கல்வி

UJEYANTHAN.Y
B.Ed(Reading)

‘கற்றல் என்பது ‘வெற்றி பெறுதல்’ என்று இன்று சுருங்கிப் போய்விட்டது. மெல்லக் கற்போர் தோல்வியுற்றோர் ஆகிறார். தோல்வி என்பது ஓர் அவமதிப்பு. வெற்றி மட்டுமே இலக்கு. பண்பு (Character) குறித்துப் பேசி வந்த பள்ளிகள், இன்று ஆளுமை (Personality) குறித்துப் பேசுகின்றன. ஆளுமை என்பது வெற்றி பெற்றோருக்கான குறியீடு ஆகும்.

கதைகளும், கட்டுக் கதைகளும் அதிகம் புழங்குவதும் வெற்றி பெற்றோரைப் பற்றிய பேச்சுக்களில் தான். வெற்றி பெற்றவர்கள் சொல்லப் போகும் ‘வெற்றி ரகசிய உளறல்களை’க் கேட்பதில் தான் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஆர்வம்! (டோனியின் வாழ்க்கை வரலாறு இன்று நூற்றுக்கணக்கான இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது).

மிகச்சிறு பிராயத்திலேயே குழந்தைகளின் வெற்றி தோல்வி குறித்த பேச்சுகள் தொடங்கி விடுகின்றன. “எங்க அண்ணன் மகன் ஆறு மாசத்தில தவழ ஆரம்பிச்சுட்டான். இவன் இன்னும் குப்புறக் கூட விழுகல!”

குழந்தைகளின் வெற்றி தோல்விகளை மதிப்பிட எடைக் கற்களாக இரு தடைக் கற்கள் இருக்கின்றன. ஒன்று ‘அறிவின் ஆதிக்கம்.’ மற்றொன்று ‘வயது வந்தோரின் எதிர்பார்ப்பு’.

உணர்ச்சிகளையும் இதயங்களையும் அற்பமாய் ஒதுக்கும் அறிவின் குறூரமும், சிறகுகளை அறுத்துச் சுமைகளை ஏற்றுப் பெரியோரின் சொந்த ஆசைகளும் சில குழந்தைகளிடம் வெற்றிக் களிப்பையும், பல குழந்தைகளிடம் விடுபடும் தவிப்பையும் உண்டாக்கி விடுகின்றன.

சரி – தப்பு கண்டுபிடிக்கும் அறிவின் கர்வத்தைக் களையாமல் ஒரு குழந்தையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் ஜீன் பியாஜெட் (Jean Piaget 1896-1980) பற்றிக் கல்வியாளர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அவசரம்… வேகம்… முந்துவது போன்ற ரேஸ் மைதானத்து வார்த்தைகள் கல்விக் கூடங்களை வந்து ஆக்கிரமித்தபோது, குழந்தை எவ்வாறு சுயமாக, படிப்படியாகக் கற்கிறது என்பதை ‘வெற்றி வெறியர்களுக்கு’ மண்டையில் அடித்து விளக்கியவர் பியாஜெட்.

பியாஜெட் ஐந்து வயதுச் சிறுமி ஜுலியாவுடன் நடத்திய சிறிய ஓர் உரையாடல் கல்வி உலகின் கவனத்தைப் பற்றிப் பிணித்தது. ‘காற்று உரையாடல்’ என அது பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

பியா: காற்று எப்படி உண்டாகுது ஜுலி?

ஜுலி: மரம்தான் காத்தை உண்டாக்குது!

பியா: அது எப்படி உனக்குத் தெரியும்?

ஜுலி: மரம் கிளைகளை ஆட்டி அசைத்துக் காத்தை உண்டாக்குவதை நான் பாத்திருக்கேன்.

பியா: அப்படியா? எனக்குச் செஞ்சு காட்டேன்!

ஜுலி: இந்தா இப்பிடித்தான்! (தன் கைகளை அசைக்கிறாள்)

பியா: காத்து வரல!…

ஜுலி: ம்ம்! மரம் பெரிசில்ல! அது கைய அசைக்கிறப்ப காத்து வந்திடும்.

பியா: அப்படீன்னா கடல்ல எப்படி ஜுலி காத்து வருது? அங்க மரங்களே இல்லையே!

ஜுலி: ம்! காத்து தரையில் இருந்து கடலுக்குப் போகுது. இல்ல! இல்ல! அது காத்து இல்ல. அலை! (ஓடிப் போகிறாள்).

பியாஜெட் ஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் உரையாடல் நடத்தியவர். வயது வந்தோர் உலக அறிவுச் செய்திகளை அவர் ஒருபோதும் குழந்தைகளுடனான உரையாடலில் இடைச் செருகியதில்லை.

வயது வந்தவர்களின் அறிவுலகப் பார்வையின் படி ஜுலியர் சொன்னதெல்லாம் தப்பு. ஆனால் உண்மையில் அது தப்பு அல்ல என்பது பியாஜெட்டின் கருத்து. ஒவ்வொன்றையும் குழந்தை தன் வழியில் அறியும் முயற்சி இது.

ஜுலியாவின் நம்பிக்கைகளை அங்கீகரித்து பியாஜெட் உரையாடலைத் தொடர்ந்தார். அந்த நம்பிக்கைகளைச் சரி என்று ஒப்புக் கொள்ளவும் இல்லை. தவறு என்று மறுக்கவும் இல்லை. குழந்தை தான் கட்டமைக்கும் தர்க்க வழியிலேயே பயணம் செய்து, இறுதியில் உண்மையைக் கண்டறிவதுதான் நிலைக்கும். வயது வந்தோரின் அவசரத்துக்குக் குழந்தையின் புரிதலைத் திருத்துவதும், சரி செய்வதும் தவறு என்பது பியாஜெட்டின் கருத்து.

தோற்கும் பின்தங்கும் தடுமாறும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள இந்தத் தெளிவும் நிதானமும் தேவை. வயது வந்தோரின் தர்க்க அறிவைக் குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் மேலும் அக் குழந்தைகளிடம் தோல்வியையே திணிக்கிறோம். குழந்தைகளைத் தனிமைப்படுத்துகிறோம். விம்ம வைக்கிறோம். குறுக வைக்கிறோம்; துர்காவைப் போல் சிலரை அழுது அழுது தூங்க வைக்கிறோம்…

3


குழந்தைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்க வேண்டும்?

நம்முடைய ஆசைகளுடனா? நம்முடைய எதிர்பார்ப்புகளுடனா? வெற்றி குறித்த நம் ஏக்கங்கள், பிரமைகளுடனா?

எதிர்பார்ப்பு பிரியத்தில் இருந்து எழலாம். ஆனால் எதிர்பார்ப்பின் அடுத்த அவதாரம் நிர்ப்பந்தம் தானே!

“குழந்தைகள் உங்களுடன்
இருக்கலாம்;
ஆனால் அவர்கள் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்!
உங்கள் சிந்தனைகளைத்
தர வேண்டாம்,
அவர்களுக்கென்று சிந்தனைகள்
இருக்கவே இருக்கின்றன”

என்பது கலீல் கிப்ரான் பாட்டு.

குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது (accepting them as they are) தான் உண்மையான அன்பு. ‘இப்படி இருந்தால் நல்லது’ என்ற உங்கள் விருப்பத்துக்கும் அந்தக் குழந்தைக்கும் சம்பந்தம் என்ன?

இதைச் சொன்னவர் ஏ.எஸ்.நீல் (A.S.Neill) சொன்னவர் மட்டுமல்ல; நடைமுறைப்படுத்தியும் காட்டியவர். குழந்தைகளை அப்படியே விரும்பி ஏற்றுக் கொண்டவர். இவர்களை இப்படி வளைத்து நிமிர்த்த வேண்டும் என்று எவ்விதத்திலும் திட்டம் இடாதவர்.

நீல் ஸ்காட்லாந்துகாரர்(1833-1973). கோடைமலைப் பள்ளி (Summer Hill School) என்ற தனித்துவம் மிக்க சோதனைப் பள்ளியை (Experimental School) இங்கிலாந்தில் நிறுவியவர். குழந்தை உரிமைகள் குறித்துச் சிந்திக்கிறவர்கள் ஸம்மர் ஹில் அனுபவங்களை வாசித்தால் நெகிழ்ந்து போவார்கள்.

‘இதைச் செய்யாதே!’ என்று குழந்தைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்காத பள்ளி. பள்ளிக்குப் பொருந்துமாறு குழந்தைகளைத் திருத்துவதற்கு மாறாக, குழந்தைகளோடு பொருந்துமாறு தன்னைத் திருத்தித் திருத்தி அமைத்துக் கொண்ட பள்ளி. ஒவ்வொரு குழந்தையும் ஆர்வம் கொண்டு கல்வியைத் தொடரும் வரை காத்திருந்த பள்ளி. எந்தக் குழந்தைக்கும் தோல்வியுணர்வை வழங்காத பள்ளி.

ஸம்மர்ஹில் நிறுவி வரலாறு படைத்த நீல், அடிப்படையில் தோல்வியுற்ற ஓர் ஆசிரியர்தான்.

ஸ்காட்லாந்தின் கிராமப்புறப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது (1917) மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார் என்பதற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்.

பணிநீக்கம் செய்யப்பட்டு பள்ளியை விட்டு வெளியேறுகையில் அவர் தன் சின்னஞ்சிறு மாணவர்களுடன் உரையாடுகிறார்:

“நான் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகிறேன் என்பது உங்களுக்குப் புரியுமோ என்னவோ? இருந்தாலும் புரியவைக்க முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களுடைய அம்மா அப்பாக்களூக்குப் பிடிக்காததால் நான் வேலைநீக்கம் செய்யப்பட்டேன். நான் நல்ல ஆசிரியர் இல்லையாம்! உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து விட்டேனாம். பாடம் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டுப் படம் போடவும், மீன் பிடிக்கவும், விளையாடவும் உங்களைப் பழக்குகிறேனாம். உங்களுக்குத் தேவையானதைக் கூட நான் சொல்லித் தரவில்லையாம்! பொலிவியாவின் தலைநகரம் எது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரியாதல்லவா? இதையெல்லாம் நான் சொல்லித் தரவில்லை அல்லவா?…” இவ்வாறு நீல் பேசிக் கொண்டிருக்கையில் ஜிம் என்ற மாணவன் எழுந்து கேட்கிறான் ‘பொலிவியாவின் தலைநகரம் எது சார்?. நீல் பதில் அளிக்கிறார்: “அது எனக்கே தெரியாது ஜிம்.”

பொய்மை கலவாத உரையாடல் இது.

எப்போதும் இப்படித்தான். பொய்மையற்ற உரையாடல்களுடனே அவர் குழந்தைகளை எதிர் கொண்டார். குழந்தைகளை நேசித்தார்.

பியாஜெட்டும், நீலும் குழந்தைகளை மதித்தவர்கள்; மதிப்பிட நினைத்தவர்கள் அல்லர்.

பியாஜெட், நீல் போன்றோரின் கண்களுக்குத் துர்கா கோமாளியல்ல, ஆர்வமுள்ளவள்; துடிப்பானவள்; பிரியத்துக்குரியவள். மனோரீதியான சில பிரச்சினைகள் அவளிடம் உண்டு. ஆனால் அவை களைய முடியாதவை அல்ல. களையலாம். எப்படி? சரி, தப்பு கண்டுபிடித்தா? இல்லை. பொறுமையும் வாஞ்சையும் கொண்டு! யாராவது ஒரே ஒருத்தராவது அவளோடு கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்.

லேபிள்கள்: ,