வெள்ளி, 25 மார்ச், 2011

போதைவஸ்து

போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபட்டிரு ப்பவர்கள் தேசத்தை நாசமாக்கிக் கொண் டிருக்கிறார்கள். சமுதாயத்தை சிறிது சிறி தாக அரிக்கும் புற்றுநோய் என்று இதை கூறலாம். இன்று ஏராளம் இளம் பரம் பரையினர் போதைவஸ்துப் பாவனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஆண்கள் மாத்தி ரமன்றிப் பெண்களும் இதில் அடங்குவர். போதை வஸ்துப் பழக்கத்துக்கு உள்ளாகி யவர்களால் அதைக் கைவிட முடியாது. அவர்கள் உட்கொள்ளும் போதைவஸ்து படிப்படியாகச் சீக்கிரமாகவே அவர்களை மரணத்தின் வாசலுக்குக் கொண்டு போய் விடும். நாட்டின் எதிர்கால சந்ததியின் ஒரு பகுதி நாட்டுக்கும் பிரயோசனமின் றித் தங்களுக்கும் பிரயோசனமின்றிச் சீரழி வதற்குப் போதைவஸ்து காரணமாகின் றது.
போதைவஸ்துப் பாவனையாளர்கள் தங் களை அழித்துக்கொள்வது மாத்திரமன்றிச் சமுதாயத்துக்கும் பிரச்சினையானவர்கள் ஆகின்றனர். போதைவஸ்து வாங்குவதற் குப் பணம் இல்லாத போது சிறுசிறு திரு ட்டுகளில் ஈடுபட்டுப் பின்னர் பெரிய திருடர்களாக மாறுகின்றனர்.
சிலர் வழிப் பறிக் கொள்ளைகளிலும் ஈடுபடுகின்றனர். வன்புணர்ச்சி, கொலை போன்ற பல குற் றச் செயல்களுக்குப் போதைவஸ்துப் பாவனை காரணமாக இருப்பதை உத்தியோகபூர்வ தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.
போதைவஸ்துப் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நற்பிர சைகளாக்கும் திட்டமொன்றை அரசாங் கம் நடைமுறைப்படுத்துகின்றது.
இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. புனர்வாழ்வுத் திட் டத்தின் கீழ் நற்பிரசைகளாக வெளியேறு பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவா கவே உள்ளது. மேலும், போதைவஸ்து வர்த்தகர்கள் தங்கள் விற்பனையை அதிக ரிப்பதற்காகப் புதுப்புதுத் தந்திரோபாயங் களைப் பின்பற்றும் நிலையில் அரசாங்கத் தின் புனர்வாழ்வுத் திட்டம் பெரிதாக வெற்றியளிக்கப் போவதில்லை. எனவே போதைவஸ்து வர்த்தகத்தை இல்லாதொ ழிப்பதற்கான செயற்பாட்டுக்கு அரசாங் கம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
போதைவஸ்து வர்த்தகத்துக்கு எதிரான யுத்தம் இலகுவானதாக இருக்காது. இந்த வர்த்தகர்கள் சாதாரணமானவர்களல்ல. இவர்களுக்குப் பல்வேறு மட்டங்களில் வலுவான தொடர்புகள் உண்டு. பாதாள உலகத்துடனும் நெருக்கமான தொடர்பு கள் உண்டு. அரசியல் மட்டத்திலும் தொட ர்புகளைக் கொண்டிருக்கின்றார்கள். குற் றச் செயல்களுக்கும் வேறு சட்டவிரோதச் செயல்களுக்கும் இவர்கள் பின்நிற்காதவர் கள். சுருக்கமாகக் கூறுவதானால் போதை வஸ்து வர்த்தகர்கள் ஒரு ‘மஃபியா’ கூட் டம் எனலாம்.
போதைவஸ்துத் தடுப்புப் பிரிவு இப் போது பொலிஸ் திணைக்களத்தில் இய ங்குகின்றது. இப்பிரிவு தீவிரமாகச் செயற் படுகின்ற போதிலும் போதைவஸ்து வர் த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு இப்பி ரிவின் ஆளணியும் வளங்களும் போதா திருப்பதை நடைமுறையில் உணரக்கூடிய தாக இருக்கின்றது.
இப்பிரிவை ஆளணி ரீதியாகவும் வளரீதியாகவும் மேலும் வலு ப்படுத்துவதோடு சிரேஷ்ட அதிகாரியொ ருவரைப் பொறுப்பாக நியமிப்பதன் மூலம் போதைவஸ்து வர்த்தகத்தை இல் லாதொழிக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கடமையாக அரசாங்கம் இதைக் கருத வேண்டும்.

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு