இன்றைய கல்வி முறையின் குறைபாடுகள்
நாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்; எமது தேசிய வருமானம் இந்த கல்வி முறைக்கு வெளியில் இருந்து வருகின்றது. மக்களின் உழைப்பு, வாழ்வு
என அனைத்தும் இந்த கல்வி முறைக்கு வெளியில் நீடிக்கின்றது. கற்றலின் மொத்த விளைவும், அதன் அறுவடையும் 99.9 சதவீதமானவர்களுக்கு முடிவில் எதுவும் கிடைப்பதில்லை. சில அடிப்படையான பொது அறிவு இக்கல்வியில் கிடைக்கின்றது. அது எழுதவும், கையெழுத்திடவும், வாசிக்கவும் உதவுவதற்கு அப்பால், இந்தக் கல்வி அனுபவாத அறிவை சற்று மேலே ஒழுங்குபடுத்திய வடிவில் கிடைக்கின்றது அவ்வளவே. இதை இந்தக் கட்டுரை சுருக்கமாகவே ஆராய்கின்றது. முதலில் கல்வி இன்றைய நிலை பற்றிய அறிதலில் உள்ள அடிப்படை, கல்வியின் நோக்கத்தையும், அதன் வரலாற்று இயங்கியலையும் தெரிந்துகொள்வது அவசியமானதும், நிபந்தனையானதுமாகும்.
இன்று கல்வி தொடர்பாக முன்வைக்கப்படும் கருத்துக்கள், கல்வியின் ஒட்டு மொத்த தேவையை, அதன் நோக்கை, அனைவருக்குமான கல்வியின் தேவையை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்படுவதில்லை. மாறாக குறுகிய நோக்கம், குறுகிய நலன்களை அடிப்படையாக கொண்ட தனிநபர் நலன் சாhந்த கருத்துகள் முன்தள்ளப்படுகின்றன. கல்வி என்பது என்ன? எதற்காக கல்வி கற்க வேண்டும்? கற்றதன் விளைவு என்ன? என்ற அடிப்படையான விடையத்தை புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது தான் எமது நாட்டிற்கான, சரியான கல்விக் கொள்கையை வழிகாட்டும்.
நாம் இன்று கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். இதன் பயன் என்ன? ஒரு குடும்பம் முதல் ஒரு தனிமனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், கல்வியை தி;ட்மிடும் அரசுக்கு இடையில் கூட பாரிய பிளவு காணப்படுகின்றது. இது ஏன் நிகழ்கின்றது? இவற்றை எல்லாம் நாம் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. இது மட்டும் தான் நிகழ்கால தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமறைக்கும் சரியான ஒரு கல்விக் கொள்கையை வகுக்க சமூகத்துக்கே வழிகாட்டும். இவற்றை மிகச் சுருக்கமாக நாம் புரிந்து கொள்ள முயல்வோம்.
மனித சமுதாயத்தில் கல்வியின் வரலாறு என்ன?
இன்றைய நவீன கல்விக் கூடங்களின வரலாறு 150 வருடங்களுக்கு உட்பட்டதே. அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை இது அடிப்படையாகவும் கொண்டிருந்தது. ஆனால் இந்த நவீன கல்விக் கொள்கை அனைத்து மக்களுக்கும் இன்றுவரை கல்வியை கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக கல்வி கற்றுக் கொடுப்பது மறுப்புக்குள்ளாகின்றது. இது தேசத்தின் உள்ளேயும், தேசத்துக்கு வெளியேயும் கல்வியை மறப்பதே ஜனநாயகமாகியுள்ளது. மறுபக்கத்தில் உலகமயமாதல் இன்று கிடைக்கும் கல்வியை வர்த்தகமக்கி, கிடைக்கும் கல்வியை மறுக்கும் புதிய பாதைக்கு உலக அரசகள் கையெழுத்திட்டுள்ளன.
கல்வியின் வரலாறு என்பது நவீன கல்விக் கூடங்களுக்கு வெளியில் இருந்தது. கால காலமாக மனித இனம் குரங்கில் இருந்து தோன்றியது முதல் தொடங்குகின்றது. குழந்தை பிறந்தது முதலே, தாய்யின் மடியில் வாழத் தொடங்கிய முதலே கல்வி ஊட்டல் என்பது தொடங்கியது. கல்வியின் தேவை என்பது, இந்த சமுதாயத்தில் வாழ்தளுக்கான அடிப்படையை வழங்குகின்றது. இயற்கையில் சார்ந்த வாழ்ந்த மனிதன், சேர்க்கையில் உழைத்து வாழத் தொடங்கியது முதலே கல்வி மூலம்; சமுதாயம் உழைப்பை ஒழுங்குபடுத்த தொடங்கியது. இயற்கையில் வாழ்ந்த போது, கல்வி என்பது தனித்துவமிக்கதாக இருக்கவில்லை. பரம்பரை வழியாக, தன்னூர்வு சார்ந்த துண்டதலுக்கு உட்பட்ட எல்லைக்குள், இயற்கை சார்ந்த அனுபவ வழிகளில் அறிவு காணப்பட்டது. அதாவது மிருங்களின் இயல்பு நிலையைத் தண்டிவிடவில்லை. ஆனால் மனிதன் உழைப்பைக் கொண்டு வழத் தொடங்கிய போது, அறிவு என்பது இயற்கையின் எல்லையைக் கடந்த வளர்ச்சி பெறுகின்றது.
இங்கு மனிதன் உழைத்து வாழத் தொடங்கியது முதல், அனுபவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கல்வி கற்றல் உறுதி செய்யப்பட்டது. அதாவது இயற்கை பற்றியும், இயற்கையை மாற்றி எப்படி வாழ்வது என்பது பற்றிய கல்வி, வாழ்வின் வளர்ச்சியுடன் வளர்ச்சியுற்றது. இயற்கை பற்றி அறிவும், அதை மாற்றி அமைப்பது பற்றிய அறிவு கல்வியாகவும், புதிய அறிவியலாக இன்று வரை அதன் தன்மை மாறிவிடவில்லை. முடிவின்றி அறிவின் வளர்ச்சி உயர்ந்து செல்கின்றது. இந்தப் போக்கில் என்றுமே, இன்றைய நவீன கல்விக் கூடங்கள் இதை கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக சமுதாயத்தின் மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு வழங்கிய அறிவு துணை கொண்டு, இளைய தலைமுறை மூத்த தலைமுறை அறிவின் எல்லையை கடந்து வளர்ச்சி பெற்றது. இத ஒரு பரஸ்பர இயங்கியல் விதியாகும்.
இது அனுபவவாத சார்ந்தும், நீண்ட தொடர்ச்சியாக பாரம்பரியமாக தலைமுறை சாhந்து அறிவு வளர்ச்சி பெற்றது. உதாரணமாக நெருப்பு பற்றிய அறிவை எடுத்தால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினருக்கும் அதை பெறத் தெரிந்து இருந்தது. அன்றைய அறிவு நெருப்பை எப்படி பெறுவது என்ற வகையில், அதுவே கல்வியின் ஒரு அடிப்படையான விடையமாக இருந்தது. ஆனால் இன்று அந்த நெருப்பை பெறும் முறை, பொதுவான அறிவியலுக்கு தெரியாது. குறைந்த பட்சம், அன்று நெருப்பை எப்படி பெற்றனர் என்பதும் கூடத் தெரியாது. அன்று ஒரு அறிவுமுறை இருந்தது. அது சமுதாயத்தின் இருப்பின் மேல், சமுதாயத்தின் வாழ்வின் மேலான அறிவாக காணப்பட்டது.
சமுதாயத்தில் அறிவியலின் வளர்ச்சியும், சமுதாயத்தின் தேவைகளும் வளர்ச்சியுற்ற போது உழைப்பில் பிரிவினை உருவாகியது. உழைப்பின் பிரிவினையும் அது சார்ந்த கல்வியும் பிளவுற்றது. அனைவரும் பெற்றிருந்த பொதுக் கல்வி, என்பது உழைப்பு பிரிவினை சார்ந்து பிரிந்து செல்லத் தொடங்கியது. அறிவின் அளவும் பண்பும் வேறுபட்டதாலும், சமுதாய நெருக்கடிகளின் போது சமுதாயம் அழிந்துவிடும் அளவுக்கு, ஒன்றன் மீதான ஒன்றின் அறிவற்ற சூழலால் மனிதன் பிழைத்துக் கொள்வதே கடினமாகியது. அதனால் சமுதாயம் கல்வி கற்றுக் கொடுத்தல் என்ற வடிவத்தை உருவாக்கினர். பிரதான உழைப்பு அல்லாத மற்றையவற்றிலும் கற்றுக் கொடுத்தல் சமுதாயத்தின் பொதுக் கடமையாகியது. இதன் மூலம் உழைப்பு தலைமுறையின் தொடர்ச்சியின் வடிவமாக அல்லாமல், குருவின் வழிகட்டலுக்கு உள்ளனது. இவையே சமுதாயத்தின் அன்றாட வாழ்வியல் போக்காகில் ஒரு அம்சமாகியது.
உழைப்பு பிரிவினையில் எற்பட்ட விலகல், அறிவில் எற்றத் தாழ்வை உருவாக்கியது முன்பு பார்த்தோம்; ஆனால் உழைப்பு பிரிவினை ஒரு சமுதாய பிளவாக மாறிப் பிரிந்த போது, அறிவு மறுப்பும் அதன் உட்கூறாகிவிடுகின்றது. புதிய உழைப்பு மீதான அறிவு சமுதாயப் பிளவை வீரியமாக்கியது. இந்த அறிவு சமுதாய நலன் கடந்து சிலரின் குறகிய நலன் சார்ந்த போது, அந்த அறிவு அனைவருக்கும் மறுக்கப்பட்டது. புதிய அறிவு மூலதனமாகியது. அடிமைத்தனத்தக்கு ஒரு நெம்பாகியாது.
கல்வி மறுப்பும் பிளவும்.
சமுதாயத்தில் எற்பட்ட பிளவு அறிவியல் பிளவாகியது. உற்பத்தி வடிவங்கள், நுகர்வு வடிவங்கள் மாறின. முன்பு அனைவரும் பெற்றிருந்த பொது அறிவு, உழைப்பின் மீதான அறிவு என்பது பிளவுபட்ட அமைப்பில் மறுப்பாக மாறியது. விவசாய சமுகங்கள் உருவான போதும், பின்னால் நிலப்பிரபுத்துவ அமைப்பு உருவான போது, மேலும் ஆழமான பிளவாகியது. உழைப்பின் பிரிவினை, கல்வியின் பரந்த அறிவியலை மறுப்புக்குள்ளாக்கியது. மாறாக அவர்களுக்கு உழைத்து வாழ்ந்த துறை சார்ந்த அறிவியலும், அது சார்ந்த அறிவின் வளர்ச்சியும் பொதுவாக உயாச்சி பெற்றது. சமுதாயத்தில் தத்தம் உழைப்பு சாhந்த அறிவும், அது சார்ந்த கல்வியும் எல்லா கிராமிய சமுதாயத்தில் காணப்பட்டன. இந்த அடிப்படைக் கல்வியற்ற சமூகம் எதுவும் இருக்கவில்லை. அத்துடன் உலகளாவில் இது சீரானதாக இருந்தது வந்தது.
உழைப்பு சார்ந்த கல்வி முறைக்கு வெளியில் உழைப்பு சராது வாழ்ந்த பிரிவு ஒன்று உருவாகத் தொடங்கியது. ஆட்சியாளர்களாகவும், மதம் சார்ந்தம்.. உருவான ஒரு பிரிவு உழைப்பு சாராத கல்விமுறைக்குள் தன்னை நிலைநாட்டத் தொடங்கியது. உழைப்புக்கு வெளியில் கற்பனை சார்ந்து கல்வி உருவானது. கல்வி கற்றலில்; எற்பட்ட திரிபு ஒன்று அக்கபக்கமாக சமுதாயத்தில் புரையோடியது. இந்த பிரிவு தனது வாழ்க்கைகான ஆதாரத்தை உழைப்பவனிடம் இருந்து பெற்ற வாழ வேண்டியது நிபந்தனையானது. எனவே உழைப்பவனிடம் இருந்து அவனின் உழைப்பை தனது வாழ்வு ஆதாரத்துக்கு இலவாசமாகப் பெற, அடிப்படைக் கல்வியில் பிழற்ச்சி எற்பட்டது. கல்வியில் பாரிய பிளவு உருவாகியது.
இவர்கள் உழைப்பின் வேறுபட்ட பிரிவுகளின் அறிவை தம் வசப்படுத்துவதன் மூலம், அறிவில் தம்மை மேன்மைப்படுத்த முடிந்தது. அத்துடன் தனது இருப்புச்: சார்ந்தும், உழையாது வாழவும் அறிவை கற்பனையுடன் இனைத்து புனைந்தனர். இந்த கற்பனையும், அனைத்து உழைத்து வாழும் மக்களின் அறிவையும் இந்த பிரிவு தன்வசப்படுத்தியதன் மூலம், சில புதிய உழைப்பின் கருவிகளையும் கண்டுபிடிப்புகளையும், அறிவையும் பெற முடிந்தது. இந்த அறிவு ஒரு மூலதனமாக மாறியது. உழைப்பவனுக்கு முன், இந்த அறிவு அவனை உயர்த்தியது. இந்த அறிவை சார்ந்து உழைப்பவனை அடிமைப்படுத்தவும், அவனுக்கு இதை கற்றுக் கொடுக்கும் கல்வி முறைக்கு இது வித்திட்டது.
இந்த உழையாத பிரிவின் அறிவு ஆரம்பத்தில் உழைப்புக்கு வெளியில் உருவான அறிவை, கற்றுக் கொடுக்கும் முறையே உருவானது. இது மதம், போர்ப் பயிற்சிகள், ஒற்றுவேலைகள் என்ற தொடங்கியது. உழைப்பை கற்றக் கொடுத்தல் என்பது கல்விமுறையில் ஆரம்பத்தில் புகுத்தப்டவில்லை. அது பராம்பரியமாக சமுகங்களால் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கும் வடிவமே இருந்தன. அறிவில் எற்பட்ட பிளவு, அறிவு மூலம் சமுதாயத்தில் உயாந்த நிலையில் வாழமுடியும் என்ற சமூக அமைப்பில், அறிவு இரகசியமான ஒரு பாதுகாகப்பான மூலதனமாகியது. இதனால் கற்றுக் கொடுக்க பணமும், சமுதாயத்தின் அடிமைத் தனத்துக்கு எற்ப ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுப்பும் வித்திடப்பட்டது. கல்வி உழையாது மேல் உள்ளவனின் வாழ்வை அழித்துவிடும் என்றால், கீழ் உள்ளவனுக்கு கல்வி மறுக்கப்படுவது எதார்த்தமாகியது.
நவீன கல்வியின் தேவை
நிலப்பிரபுத்துவ அமைப்பில் சொந்த உற்பத்தி சார்ந்த அறிவு கடந்து அறிவைப் பெறுவது, அடிமைத்தனத்தையே தகர்த்துவிடும் என்ற நிலை உருவானது. அறிவின் கற்பனை வளர்ச்சியும், எதார்த்தம் சார்ந்த வளர்ச்சியும் அக்கபக்கமாக வளர்ச்சியுற்ற போது, நிலப்பிரபுத்துவ அமைப்பும் மதமும் ஆட்டம் காணும் நிலை உருவானது. கைத்தொழில் புரட்சிக்கு முன்பு நீடித்த 2000 வருடத்தில் மதம் ஆட்சி பீடங்கள் ஆற்றிய பங்கு, எதார்த்த கல்வியை மதத்துக்க எதிரானதாகக் கூறி மறுத்தன, ஒடுக்கின. அதாவது அறிவு சார்ந்த சிந்தனைகள் தடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டன. 2000 ஆட்டுகளுக்கு முன்பு உலகில் பல்வேறு நாடுகளில் எற்பட்ட அறிவியல் வளர்ச்சி, தீடிரென முடக்கி மலடக்கப்பட்டது. அறிவின் எல்லையை மதம் கடந்து செல்;ல அனுமதிக்கவில்லை. பொதுவான மதக் கல்வி கூட அனைத்து மக்களுக்கு மறுக்கப்பட்டு, மூடநம்பிக்கையை மக்களிள் செயல்லாக்கி அதில் அழுந்தி வாழும் ஒரு சமுதாயத்தை படைத்தனர். ஆனால் நிலப்பிரபுத்துவ அமைப்பினுள் உற்பத்தி வடிவத்தில் எற்பட்ட மாற்றம் கைத் தொழில் புரட்சிக்க வித்திட்டது. அதாவது உழைப்பு மாற்றம் உற்பத்தியில் எற்பட்ட போது, பழைய கல்வி முறையையும் அறிவுத் தளத்தையும் தகர்த்தது. இதன் போது, கடுமையான போராட்டம் கல்வித் துறையில் நடந்தது. கடந்த 200 வருடங்களுக்கு முன்பும், அதை தொடர்ந்த ஆண்டுகளிலும் கல்வியும் அது சார்ந்த அறிவும் தொடர்பாக, கடுமையான எதிர் எதிர் போக்குகள் நிலவின.
ஆனால் உற்பத்தி வடிவம் பழையதை முடிவுக்கு வரக் கோரியது. முதலாளித்துவ உற்பத்தி முறை, தனது உற்பத்தி இயந்திரங்களை கையாளத் திறனுள்ள உழைப்பாளியைக் கோரியது. இந்த வகையில் கல்வியைக் கோரியது. ஆனால் அனைவருக்குமான கல்வியை அல்ல. தனக்கு தேவையானவனுக்கு மட்டும், அத்துறை சார்ந்து மட்டும் கோரியது. அதே நேரம் சிறு கைத்தொழில்கள் பெரிய தொழிச்சாலைகள் வரை குழந்தை உழைப்பை கோரின. அன்று நெசவு சார்ந்த உழைப்பில் நெசவு முதலாளிகள் குழந்தை உழைப்பை கோரி வாதிட்ட போது "அவர்களது வேலைக்குரிய துணியின் மென்மையான இழை நயத்துக்கு, விரல்களின் மெல்லிய இந்தத் தொழிற்சாலைகளில் அவர்கள் பிள்ளைப் பிராயம் முதலே பழகினாலன்றிதொடுநயம் தேவை இந்தத் தொடு நயத்தைப் பெறமுடியாது."" என்று கூறிய ஜனநாயக முதலாளித்துவம், குழந்தை உழைப்பை நியாயப்படுத்தி வாதாடியது. இதற்கு பதிலளித்த மார்க்ஸ் "குழந்தைகள் முழுக்க முழுக்க அவர்களின் மெல்லிய விரல்களுக்காகவே வதைக்கப்பட்டனர்"" என்றார். அவர் மேலும் கூறும் போது "இந்தக் கல்வி சரத்துக்களுக்குத் தொழிலதிபர்களே காட்டுகின்ற எதிர்ப்பு, அவற்றை எய்ப்பதற்காக அவர்கள் கையாளும் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் ஆகிய இவை யாவற்றிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ஆன்மா கண்கூடாக தெரிகிறது."" என்று இந்த ஜனநாயகத்தின் முகத்தைக் கிழித்தெறிந்தார்.
போலித்தனத்தையும், கருணையையும் நியாப்படுத்தும் போது, மார்க்ஸ் அதன் வக்கிரத்தை அம்பலப்படுத்தினார். ஹாலந்தில் வறியோர் இல்லமொன்றில் நான்கு வயது குழந்தை வேலைக்கமர்த்தப்பட்ட விதத்தை 17 ஆவது நூற்றாண்டில் "அன்புள்ளம் கொண்ட" வாணிப நேயர்கள் "களிப்புடன்" விவரிக்கின்றனர் என்பதையும் "நடைமுறை நற்பண்பு" என்பதன் உதாரணங்கள் ஆதாம் ஸ்மித்தின் காலம் வரை மெக்காலே பாணியிலான எல்லா மனிதாபிமான நூல்களிலும் எடுத்தாளப்படுகிறது. சிறுவருக்கு வேலை கொடுத்தல் மனிதபிமான செயலாக அறிவுத்துறை நியாப்படுத்தி குழந்தை உழைப்பை பாதுகாத்தனர். அன்று முதல் முதலாளித்துவத்தின் மனிதாபிமான எச்சில்கள் மீது புகழாரங்கள் சூட்டப்பட்டதை மார்க்ஸ் கேலி செய்கின்றார். நாம் எமது ஊர்களில் வேலைக்கு அமர்த்தும் சிறுவர் சிறுமிகளுக்கு செய்யும் உபதேசங்களில், மனிதபிமான ஏஜாமானின் கொடூரங்களை மூடிமறைத்து புகழ்வதை அன்றாட காணமுடியம். அன்று கத்தோலிக்கச் திருச்சபை குழந்தைகளின் கல்விக்கான அடிப்படைக் கோரிக்கையை நிராகரித்து, புனிதத்தின் மகிமையை நிலைநாட்ட முயன்றது. நியூயோர்க் திருச்சபை "கல்விக்கான மசோதா பெற்றோர்களின் உரிமையைப் பறிக்கின்றது (இது இன்று பெண்களின் கரு அழிப்புக்கு உடல் சுதந்திரம் என்பது போல்) என்றும், குடும்ப வருமானத்தை குறைப்பதன் மூலம் வறுமை உருவாகும் என்றும் (இன்று வறுமைக்கு காரணம் அதிக குழந்தைகள் என்ற காரணம் போல்) வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்த்தனர்."" இப்படித் தான் கிறிஸ்துவப் புனிதம் வக்கரித்தது. பிரஞ்சுப் புரட்சி பற்றி அறிந்த ஆஸ்திரிய அதிகாரிகளும், திருச்சபையும் "அரசு நடத்தும் பாடசாலை கல்வி இளம் குழந்தைகளை, வேகம் நிறைந்த உள்ளங்களை, மனிதாபிமானம் என்ற போர்வையில், அழிவை ஏற்படுத்தும் சிந்தனைகளால் ஈர்க்கின்றனர். இந்தச் சிந்தனைகள், மிகவும் கீழ்மட்டத்து மக்களுக்கும் பரப்பப்பட்டு, அது மேலும் அடிவரை ஊடுருவ முயல்கின்றனர்"" என்று 1793 இல் அரசருக்கு எச்சரிக்கும் வகையில் எழுதினர். இப்படி நவீன கல்வி தோன்றிய வரலாற்றில் அடுக்கடுக்காக பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
கல்வி சுய சிந்தனைக்கு அடித்தளமிடுவதால், நிலவுகின்ற அமைப்பும் அதன் தயவில் நீடிக்கும் உயர் வர்க்கங்களின் ஆட்சியும் தகர்ந்துவிடும் என்ற அச்சம் பீதியாகிய போது, பொது கல்வி எதிர்ப்பு உருவானது. முதலாளிகள் குறைந்த கூலிக்காக குழந்தை உழைப்பை வலியுறுத்தினர். அத்துடன் அடங்கிப் ஒடுங்கிப் போகும் குழந்தைப் பருவத்தை விரும்பினர். குழந்தைப் பருவத்தில் இருந்தே உழைப்பை திணித்தால், உழைப்பில் இயந்திரமாகிவிடும் மந்தைக் குணத்தை நேசித்தனர். இதனால் குழந்தைக்கான கல்வியை எதிர்த்தனர். மறு தளத்தில் நவீன உற்பத்தி கருவிகளை இயக்கும் நவீன அறிவுள்ள இயந்திர உழைப்பாளியைக் கோரியது. இதுவே கல்வி என்ற கோரிக்கைக்கு அத்திவாரமாகி போராட்டமாகியது. கைத்தொழில் புரட்சி இந்த கல்விக்கான அத்திவாரத்தையிட்டது. உழைப்பில் இருந்து அன்னியமாகிய மக்களையும், அது சார்ந்த அறிவற்ற குழந்தைகளையும், நவீன கல்வி கூடங்களில் கொண்டு வந்தனர்.
இங்கு குழந்தைக்கு நவீன இயந்திரங்களை இயக்கும் அறிவையும், உழைப்பையும் பகுதியாக கொண்ட கல்வி முறையே ஆரம்பத்தில் கொராப்பட்டது. இந்த கல்வி உழைக்கும் இயந்திரத்தின், ஒரு உழைப்பு கருவியை உற்பத்தி செய்தது. இயந்திரத்தில் சதையுள்ள ஒரு உறுப்பாக, இயந்திரத்தின் ஒரு கருவியாக கல்வி மனிதனை மாற்றியது. இந்த கல்வி முறை சமுதாய நலன்களில் இருந்தும் சரி, அதன் நலன் சார்ந்து உருவாக்கப்படவில்லை. இது இன்ற வரை நீடிக்கின்றது. இந்திரத்தின் உறுப்பாக, உற்பத்தி கருவிகளை இயக்கும் ஒரு இயந்திரமாக இயங்கும் உறுப்புகளையே இன்றைய கல்வி முறை உருவாக்கின்றது. இதைச் சுற்றித்தான் மொழி முதல் மற்றையை அனைத்து அறிவும் கட்டமைக்கப்படுகின்றது. இந்த கல்விமுறை சரியானதா?
நிலவும் கல்வி முறை தவறனது. ஏன்?
கல்வி முறை தவறானது என்கின்ற போது, அது உலகளாவிய வகையில் தவறானவையாகும். சிலர் மேற்கு கல்வி உயர்ந்தது என்றும், மூன்றாம் உலக கல்விக்கு மாற்றாக முன்னிறுத்துகின்றனர். உண்மையில் கல்வி பற்றி அடிப்படை நோக்கத்தை புரிந்து கொள்ளாத வரை, தவறான கல்விக் கொள்கைக்கு வக்காளத்து வாங்குவது தொடராவே செய்யும்.
ஒரு கல்விக் கொள்கை தவறானது என்று சொல்லும் போது, எதை அடிப்படையாக கொண்டு இதை நாம் புரிந்து கொள்வது என்பது மிகமுக்கியத்துவம் வய்ந்தது. இங்கு ஏன் நாம் கல்வியை கற்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பும் போது இதற்கான விடை கிடைக்கின்றது. கல்வி ஏன் கற்கப்பட வேண்டும் என்ற பார்வையில் இரண்டு போக்குகள் காணப்படுகின்றது.
1.தனிப்பட்ட மனிதன் கல்வி கற்பதன் மூலம், பணத்தை சம்பதிக்கலாம்.
2.நவீன உற்பத்தி இயந்திரங்களின் இயக்கும், சதையுள்ள மனிதக் கருவிகளை உருவாக்க முடியும்.
இந்த உள்ளடகத்தில் தான் இன்றைய நவீன கல்விக்கான அடிப்படை பூர்த்தி செய்யப்படுகின்றது. இங்கு கூலிமுறை இதன் ஆதாரமாக உள்ள நிலையில் இது நியாப்படுத்தப்படுகின்றது. தனிப்பட்ட இரண்டு நேர் எதிரான நிலையில் உழைப்பு பற்றி கண்ணோட்டம் சார்ந்து, இவை இரண்டும் சுய நலன் சார்ந்து கல்வி அங்கிகரிக்கப்படுகின்றது. இந்த பத்திரத்தை ஆற்றும் நபர்களுக்கிடையிலான தனிபட்ட நலன்களும், அவை ஒன்றை ஒன்று சார்ந்தும் இந்த அமைப்பு நீடிக்கின்றது. இந்த சுழற்சிக்குள் தான் ஒட்டு மொத்த கல்வியும் உலகளாவில் திட்டமிடப்படுகின்றது. இந்த எல்லையை சுற்றி இதற்கு சேவை செய்யும் உறுப்புகளையும் இன்றைய கல்வி உருவாக்கின்றது.
இதனால் சில தனிப்பட்ட மனிதனும், தனிப்பட்ட முதலாளியும் சுய லாபம் அடைகின்றனர். பரந்துபட்ட மக்களுக்கு இந்த கல்வி அவர்களுக்கு எதிராக மாறிவிடுகின்றது. கல்வி சமூகத் தேவைக்கு எதிரானதாகவே செயல்படுகின்றது. கல்வியின் அடிப்படை நோக்கம் திட்டவட்டமாக சமூகத் தேவையில் இருந்து, அதை மையமாக வைத்த உருவாக்கப்பட வேண்டும். இயற்கையில் உன்னதமான இயங்கியலை அனுசரித்தே, இந்தக் கல்வி தன்னை வளப்படுத்த வேண்டும்;. மக்களின், நாட்டின்; சமூகத் தேவைகளை நோக்கி கல்வி முன்னேற வேண்டும்;. தனிப்பட்ட எல்லா மனிதனைப் பற்றியும், ஒட்டுமொத்த கல்வி சிந்திக்க வைக்கவேண்டும்;. நான் எனது என்று சுற்றி வரும் கல்விக்கு பதில், சமூகம் அதில் நான் என்ற கல்வி முறைக்கு முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதில் தான் தனிமனிதனின் கல்வி முக்கியத்துவம் பெற வேண்டும்.
இன்றைய கல்வி மற்றைய மனிதனுக்கு எதிரானதாக கற்றுத் தரப்படுகின்றது. இயற்கை அழிப்பை எப்படிச் செய்வது என்பதையே, கல்வி சூறையாட கற்றுக் கொடுக்கின்றது. இன்றைய கல்வி எகித்திய கோபுரங்கள் போல் ஒரு சிலரை உயரத்திலும், அடியில் பலரையும் புதைத்துவிடுகின்றது. மனிதப் பிளவையே இன்றைய கல்வி தனது அத்திவரமாகக் கொள்கின்றது. இயற்ககையில் இருந்து விலகிய மனித வாழ்வை உன்னதமாக காட்டுகின்றது. அதாவது வரைமுறையற்ற சூறையாடலையே மனித நாகரிகத்தின் இலட்சியம் என புகட்டுகின்றது. நான் சுதந்திரம் பெற்றவன் என்ற வரையறை, மற்றவனுக்கு மறுப்பை நியாப்படுத்துகின்றது. ஜனநாயகம் என்ற வரையறை, ஜனநாயக மறுப்பை நியாப்படுத்துகின்றது. அனைவருக்கும் ஜனநாயகம், சுதந்திரம் என்றால்; அது அhத்தமிழந்து விடுகின்றது அல்லவா! ஆனால் கல்வி இதை மறுத்து, மறுப்பை அத்திவாரமாக்க பிளவை நியாப்படுத்தக் கோருகின்றது. மற்றவனை அடிப்படுத்தி வைப்பதே சுதந்திரம், ஜனநாயகம் என்று இன்றைய கல்வி போதிக்கின்றது. இப்படி விரிந்த தளத்தில், நவீன கல்வி மனித இனத்துக்கு எதிரானதாகவே கற்றுத் தரப்படுகின்றது. உலகின் உயிரணம் அனைத்துக்கும் எதிராகவும், இயற்கைக்கு எதிராகவும் கூட கற்றுத் தரப்படுகின்றது. மனித இனத்துக்கு எதிரான சுயநலமே கல்வியின் அத்திவாரமாக்கி அனைத்தும் நியாப்படுத்தப்படுகின்றது.
ஆனால் இந்தக் கல்வியைக் கூட உலகளவில் அனைத்து மனிதர்களுக்கும் மறுப்பது இன்றும் கூட எதார்த்தமாக உள்ளது. இதுவும் கூட இந்தக் கல்வி முறையில் குறிப்பான கற்பித்தலின் இருந்தே மறுக்கப்படுகின்றது. கல்வி மறுப்பு என்பது உலகளாவில் வாழ வழியற்ற நிலையில் தொடங்கி, கற்கும் மாணவனைப் பார்த்தலே திட்டு என்ற கூறி பாடசாலைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில், 15 வயதுக்கு குறைந்த 25 கோடி குழந்தைகள் உடல் உழைப்பில் வதைக்கப்படுகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி 10க்கும் 14 வயதுக்கு உட்பட்ட 7.3 கோடி குழந்தைகள், அதாவது உலகக் குழந்தைகளில் 13 சதவீகிதத்தினர் கடுமையான உடலுழைப்பில் வாழ, இந்த ஜனநாயக உலகம் நிர்ப்பந்திக்கின்றது. 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் வீட்டில் வேலைக்காரராக வேலை செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை இதற்குள் உட்படுத்தப்படவில்லை. தொழில்த்துறை சார்ந்த இந்த புள்ளி விபரமே பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அதாவது 15 வயதுக்கு கீழ்ப்பட்ட 25 கோடி குழந்தைகள் கண் விழித்தவுடன் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர். இதை கூர்மையாக விரிவாகவும் பார்த்தால் 10 கோடி குழந்தைகள் பாடசாலை செல்ல வசதியற்றவர்களாக இருக்கின்றனர். 15 கோடிக் குழந்தைகள் பட்டினியுடன் படுக்கைக்கு செல்லுகின்றனர். 3 கோடிக் குழந்தைகள் வீடற்ற நிலையில் வீதியில் படுத்துறங்குகினறனர். இவைகளால் 40 ஆயிரம் குழந்தைகள் வருடம் இறந்து போகின்றனர். ஐந்து கோடி குழந்தைகள் உணவற்ற நிறைகுறைவினால் மரணத்தின் பிடியில் ஒவ்வொரு வருடமும் சிக்கி தவிக்கின்றனர். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மையின் பால்சுரப்பை 4 முதல் 6 மாதத்துக்கு நீடிக்கும் உணவைக் கொடுப்பதன் மூலம், உலகில் 10 லட்சம் குழந்தைகளின் உயிரை உடனடியாக பாதுகாக்க முடியும். யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் ஆண் பெண் குழந்தைகள் பாலியல் சந்தையில் பாலியல் தேவைகாக மூலதனமாக்கப் படுகின்றனர்.
குழந்தைகளையிட்டு அக்கறைப்படாத உலக ஜனநாயகத்தில் 1990இல் 2.5 லட்சம் குழந்தைகள் கொரில்லாப் போராட்ட களத்தில் இயங்கினர். 1984க்கு முந்திய பத்து வருடத்தில் 50 லட்சம் குழந்தைகள் யுத்தத்தினால் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர். 50 லட்சம் குழந்தைகள் வதிவிடத்தை இழந்தனர். 1995 களில் 18 வயதுக்குட்பட்ட 2 கோடியே 40 லட்சம் சிறுவர்களை புலம் பெயர்ந்த அகதி முகாங்களில் அல்லாட வைத்துள்ளது. கடந்து சென்ற 10 வருடத்தில் 20 லட்சம் குழந்தைகளை கொன்ற தனிமனித சுயநல ஜனநாயக அமைப்பு, 40 முதல் 50 லட்சம் குழந்தைகளை ஊனமாக்கியுள்ளது. இப்படி குழந்தைகள் அவலம் இருக்கம் நிலையில், கல்வி கூடங்களைப் பற்றிய எமது சிந்தனை இவை உள்வாங்கமல் முன்னேற முடியாது.
உலக வர்த்தக அமைப்பு, மற்றும் யுனிசேவ் அறிக்கைகளின் படி 1990களின் குழந்தை மரணத்தை பார்ப்போம்.
காகுலான் இருமல் - 5.1 லட்சம்
சிசு தலைவிறைப்பு ஜன்னி - 7.9 லட்சம்
மலேரியா - 10 லட்சம்
மணல்வாரியம்மை - 15.2 லட்சம்
இதர சுவாச நோய் - 22 லட்சம்
வயிற்றுப்போக்கு நோய் - 40 லட்சம்
இதர காரணம் - 42 லட்சம்
மக்கள் விரோத தனிமனித சுயநலனை அடிப்படையாக கொண்ட ஜனநாயகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடிகணக்கில் குழந்தைகள் இறந்து போகின்றனர். 1993 இல் தொற்று நோய்கள் காரணமாக 165 லட்சம் மக்கள் (இங்கு சில நாடுகளில் தொற்று நோய் சாதாரண இறப்பாக மதிப்பிடுவதால் இறப்பு அதிகமாகவே இருக்கின்றது.) இறந்து போனார்கள். ஆனால் யுனிசேவ் இந்த அவலத்தை சுட்டிக் காட்டும் போது, எமது பொது புத்தி மட்டத்தில் நாம நியாப்படுத்தி; செய்யும் கேளிககைளையும் அதற்கு இசைந்து போகும் தன்மையையும் அம்பலப்படுத்தியது. 1995 இல் ஒரு அறிக்கையை முன்வைத்தது. அதில் உலகளவில் வருடம் ஆரம்ப கல்விக்கு 1300 கோடி டொலரும் செலவு செய்;யும போது, சிகரெட்டுக்கு 40000 கோடி டொலரும், குடிக்கு (பீர், வைன்) 24500 கோடி டொலரும், கோல்ஃப் விளையாட 4000 கோடி டொலரும், இராணுவதுக்கு 80000 கோடி டொலரும் பயன்படுத்துவதை அம்பலப்படுத்தியது. இந்த அமைப்பில் கல்வியின் அவலம், வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகின்றது. நாம் உலகாளவில் கல்வியின் நிலையை, அதன் அவலத்தை புரிந்த கொள்ளமால் குறைந்த பட்சம் சரியான கல்விக் கொள்கைக்கான ஆரோக்கியமான ஒரு வழிகட்டுதலைச் செய்ய முடியாது.
உலகாளவிய நிலமை என்பது இலங்கையளவிலும் கூட விதிவிலக்கின்றி பொருந்தும். ஒவ்வொரு பாடசாலைக்கும் கூட பொருந்திவிடுகின்றது. ஒரு பாடசாலையைச் சுற்றி கல்வி மறுப்பு முதல் தவறான கல்விக் கொள்கை வரை புரையோடிக் கிடக்கின்றது. இதை நாம் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிவிடுவதன் மூலம், அர்ப்பத்தனமான வக்கிரத்தைத் தாண்டி கல்வியை வேறு எந்த வகையிலும் விளக்கமுடியாது.

லேபிள்கள்: யோ.உஜேயந்தன்
2 கருத்துகள்:
தங்களின் பதிவு தற்போது கல்வி டிப்ளோமா படிக்கும் என்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாக உள்ளது. நன்றிகள் பல.
நன்றி தங்கள் பதிவுக்கு
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு