புதன், 27 ஏப்ரல், 2011

அனர்த்தக் கல்வியின் அவசியம்

மாரிகாலம் அதுவும் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் இலங்கை மக்களுக்கு மிகவும் ஞாபகம் உள்ள தினமும் ஒன்று உள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் ஒரே நேரத்தில் இழந்ததை யார்தான் மறக்க முடியும்.
இயற்கையின் விளையாட்டுக்களை என்னவென்று சொல்வது, ஆதலால்தான் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது எம்மை பாதுகாக்கவும் அதிலிருந்து மீளவும் தன்னை தயார் செய்வதன் நோக்காக கொண்டு இன்று முன்னோடித் திட்டமாக அனர்த்தக் கல்வியின் அவசியம் உணரப்பட்டு அது பாடசாலைகளில் எவ்வளவு முக்கியத்துவமுடையது என்பதை அனர்த்தப் பாதுகாப்பு கல்வி இன்று வலியுறுத்தி நிற்கின்றது எனலாம்.
அந்தவகையில், “அனர்த்தம்” எனும் போது இயற்கையின் பஞ்சபூதங்கள், இடம்மாறி, இடமாற்றம் ஏற்படுகின்ற போதுதான் இவ்வனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இடி, மின்னல், காற்று, மழை, வெள்ளம் என்பனவும் ஏற்பட்டு அதனூடாக பேர ழிவு ஏற்படுகிறது. மண்சரிவு, சூறாவளி, சுனாமி, பூமியதிர்ச்சி, எரிமலை போன்ற வகைகள் இயற்கையால் சாபமிட்டது போன்று எம்மை வந்தடைகின்றன.
எனவேதான் இயற்கையின் பாதுகாப்பில் இருக்கின்ற நாம் இவற்றினையும் தாங்கி வாழ்வதுடன் இதிலிருந்து பாதுகாப்பும் பெறுகின்ற நோக்கில் எமது பாதுகாப்பை நாம் தேடிக்கொள்ளும் முகமாக சுனாமிக்குப் பின்னராக இலங்கையில் இப்பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப் பட்டுள்ளமையானது மிகவும் வரவேற் கத்தக்கதான ஒரு விடயமாகவே கொள்ளலாம்.
சுனாமிக்குப் பின்னராக இலங்கையின் பாதுகாப்பில், ‘அனர்த்தப் பாதுகாப்பு’ என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் எமக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்திய 2004 டிசம்பர் 26ம் நாளை மறக்க முடியாது. அவ்வாறான ஒரு சம்பவம் இனிமேல் ஏற்படுகின்ற போது நமது பாதுகாப்புக்கு நாமே உத்தரவாதமாய் அமைந்து விடுவதற்காக வேண்டிய இன்று பரவலாக இதன் முக்கியத்துவம் பேசப்படுகிறது.
எந்தவொரு விடயத்தையும் இலகுவாக பரப்புவதற்கு ஏற்ற இடம் பாடசாலையாகும். இவ்வாறான விழிப்புணர்வுகளை செயற்படுத்துவதற்கும் பாடசாலைக் கட்டமைப்பு உதவுகிறது.
அந்த வகையில் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்கள் என்கிற வகையிலும் மாணவர்களே என்பதாலும், எதிர்காலத்தில் இதனை மனதிற் கொண்டு செயற்படுத்துபவர்கள் மாணவர்கள்தான் என்பதாலும் பாடசாலைகளில் இது சம்பந்தமான கருத்துக்களை அழுத்துவது சாலச் சிறந்தது என்பதாலும் இதனை கல்வியோடு இணைத்து பார்க்கப்படுகிறது.
இன்று அனர்த்தங்கள் பல்வேறு வடிவங்களில் ஏற்படலாம். இயற்கையாக தோன்றும் அனர்த்தங்கள் வேறு, மனிதர்களால் தோற்றுவிக்கப்படுகின்ற அனர்த்தங்கள் வேறு எனவும் நோக்கலாம்.
இதிலிருந்து இளஞ்சிறார்களை பாதுகாத்து அல்லது தாக்கங்களைக் குறைப்பது அல்லது பாதிப்பிலிருந்து விடுபட்டு பிள்ளைகளின் நல்வாழ்வினையும், பாதுகாப்பினையும் உறுதி செய்கின்ற வகையில் சகல பாடசாலைகளிலும் இவற்றினை கொண்டு வரும் நோக்குடன் 2005ம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அனர்த்த இடர்க் குறைப்புக்குரிய சட்ட ஒழுங்குகளையும் நிறுவன ரீதியான ஒழுங்குகளையும் ஏற்படுத்தும் முகமாக இது கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
நாட்டில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதாவது வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, பயங்கரவாதம் (தற்போது மிகவும் குறைந்துவிட்டது), சூறாவளி, சுனாமி போன்றவைகள் ஏற்படுகின்ற வேளைகளி லும், அதன் பின்னரான காலகட்டங்களிலும் இடர்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவாறான சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுப்பதும், தவிர்ப்பதும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழியாக கல்வி உலகம் காணப்படுகிறது.
எனவேதான் பாடசாலைகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதனை வழங்குதல் சிறப்பாகும். காரணம் குடும்பத்தின் முகவராக காணப்படுகின்ற பாடசாலைகள் அறிவு, திறன் என்பவற்றை வழங்குகின்ற மாணவர்கள் உருவாகின்ற குடும்ப அங் கத்தவர்கள் காணப்படுவதானது நிலையான சமூக பாதுகாப்புக்கு வித்திட ஏதுவாக பாடசாலை அனர்த்தக் கல்வி செயன்முறை செயற்திட்டம் உதவுகிறது.
அதிகமான பாடசாலைகளில் அனர்த்தப் பாதுகாப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு அதற்கு பயிற்சிகளும் விழிப்புணர்வு பயிற்சிகளும் வழங்கப்பட்டு, பாடசாலைச் சூழலின் இடையூறுகள் அதிகம் பாதிப்புறும் தன்மை போன்றவைகள் பகுப்பாய்ந்து, இனங்காணப்பட்ட பாதுகாப்பான இடங்களையும் மற்றும் வெளியேறும் வழிகளையும் காட்டுகின்ற பாடசாலையினதும், கிராமத்தினதும் வரைபடங்களை காட்சிப்படுத்த வேண்டும். சகல சமூகத்தினது ஒத்துழைப்புடன் அவசர நிலைமையின் போது பாடசாலைச் சமூகத்தை எவ்வாறு பாதுகாப்புடன் வைத்திருந்து வெளியேற்றுவது போன்ற பாவனைப் பயிற்சிகள் மூலமாக மனித உயிர்களின் பாதுகாப்புக்கு வகை செய்து செயற்படவும் உதவுகின்றது.
இன்று நாட்டின் அனைத்து மாவட்டங் களிலுமுள்ள பாடசாலைகளில் கற்கின்ற அனைத்து மாணவர்களினதும் அனர்த்த ரீதியான பாதுகாப்பினை வழங்கும் வகை யில் பாடசாலை அனர்த்தப் பாதுகாப்புக்கான தேசிய வழிகாட்டி எனும் நூலினை கல்வியமைச்சு சமூக இசைவுக்கான கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பகத்தின் மிஹிZ அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்ப ட்டு வருவதுடன், தேசிய கல்வி நிறுவகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மனித உரிமைக்குமான அமைச்சு, ஆசிய அனர்த்த தயார் நிலை நிலையம்- பாங்கொக் எனவும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றன.
எனவேதான் பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் ஊடாக பாடசாலை அனர்த்தப் பாதுகாப்புத் திட்டத்தினை ஏற்படுத்தி அவசரகால செயற்பாட்டினூடாக அனர்த்தங்களைத் தடுக்கும் வகையில் எந்தவிதமான அனர்த்தத்தையும் எதிர்கொள் ளும் வகையறாக இத்திட்டம் முழுமையான அணுகுமுறையை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.
குறிப்பாக பாடசாலையில் அல்லது பாடசாலைச் சூழலில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை சமாளித்து அதற் கேற்றவாறு துலங்கல்களை மேற்கொண்டு தடுக்கவும், குறைக்கவும் செயற்பாடுகளை மேற்கொள்ள உதவுகின்றது. இத்திட்டத்தின் ஊடாக செய்முறைப் பயிற்சிகள் அனைத்து பாடசாலைகளிலும் செயற்படுத்தப்படுகின்ற போது இன்னும் பயன் மிக்கதாகவும் திகழும் அல்லவா?
எனவே, இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டமையினால்தான் கடந்த 2007ம் ஆண்டிலிருந்து பாடசாலை கலைத்திட்டத்தில் அனர்த்தம் தொடர்பான விடயங்களை விஞ்ஞானம், வாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும், புவியியல், குடியியலும் மக்களாட்சியும் என்கிற பாடங்களினூடாக இதனது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து இது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று தேசிய கல்விக் கல்லூரிகளில் அனர்த்த முகாமைத்துவத் திற்கான கற்கைகளும் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அனர்த்த இடர் முகாமைத்துவம் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய பாடநெறி 2008ம் ஆண்டிலிருந்து கட்டாய மாக்கப்பட்டும் உள்ளன.
ஆகவே, பாடசாலைகளில் மாணவர்க ளுக்கு செயற்பாட்டு ரீதியில் அமைந்த இத்திட்டத்தின் மூலமாக, எதிர்காலத்தில் எவ்விதமான இடையூறுகளிலிருந்தும் தன்னையும், தனது குடும்பத்தினையும் பாதுகாப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதற்கு உதவுவதுடன், தலைமைத் துவக் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இயங்கும் ஒரு அமைப்பு உருவாக்கம் பெறுகின்றது என்ற உணர்வுடன் கூடியதான நிலை தோன்றியுள்ளது என்றே கூறலாம். ‘இடர், துன்பத்திலிருந்து நாம்பாதுகாப்பு பெறவும் மற்றவர்களுக்கு உதவவும் எம்மை அர்ப்பணிப்போம்’

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு