புதன், 27 ஏப்ரல், 2011

கட்டாயக்கல்வி

ஒவ்வொரு மனிதனுக்கு தனது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, இன்றைய உலகில் மிகப்பல குழந்தைகள் இந்த வாய்ப்பு ஏதும் இன்றி வளருகின்றன. ஏனெனில் அவர்களது அடிப்படை உரிமையான ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. கல்வித் திட்டங்கள் பலவற்றின் காரணமாக, 2000ம் ஆண்டின் முடிவிற்குள் இந்திய கிராம ஜனத்தொகையின் 94% பேர்களுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாக ஆரம்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 84% மக்களுக்கு நடுநிலைப் பள்ளிகள் 3 கி.மீ. தூரத்திற்குள் உருவாக்கப்பட்டு விட்டன. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரையும், பெண் குழந்தைகளையும் பள்ளிகளிள் சேர்க்க சிறப்பு மிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் ஐந்தாண்டு திட்ட காலகட்டத்திலிருந்தே ஆரம்பக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கல்வி நிலையங்களில் குழந்தைகள் சேர்ப்பு குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளது.
அதேபோல ஆரம்பக் கல்வி நிலையங்களுக்கும், அதற்கு அடுத்த கட்ட கல்விச் சாலைகளும் எண்ணிக்கையில் பெருகிவிட்டன. 1950-51 ஆண்டில் ஆரம்பக் கல்விக்கான பள்ளிகளில் 3.1 மில்லியன் மாணவர்கள் மட்டும் சேர்ந்தனர். 1997-98 ஆண்டைய கணக்கின்படி இந்த எண்ணிக்கை 39.5 மில்லியனாக உயர்ந்தது. ஆரம்பப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் ஆகியன 1950-51ம் காலகட்டத்தில் 0.223 மில்லியன்கள். இந்த எண்ணிக்கை 1996-97-ல் 0.775 மில்லியன்களாக உயர்ந்தது. 2002-2003 ஆண்டில் 6-14 வயதுள்ள குழந்தைகளில் 82% பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள், இதை 100% ஆக ஆக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
உலக மக்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டுவரவும், அமைதியும் பாதுகாப்பும் உள்ள வாழ்க்கையை மக்கள் வாழ்வதற்கும், ஒவ்வொரு நாட்டிலுள்ள குடிமக்கள், நலம் பயக்கும் முடிவுகளை தங்களுக்கும் தங்களது குடும்பங்களுக்கும் தேர்ந்தெடுக்க அவர்கள் திறனை மேம்படுத்துதல் அவசியம். இந்த நிலையை அடையவேண்டும் என்றால், உலகத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளும் தங்களின் ஆரம்பக் கல்வியையாவது, உயர் தரமுள்ள கல்வி கற்கும் சூழ்நிலை உள்ள பள்ளிகளில் பயில வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு