வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம்
வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம்
பள்ளி படிப்பு என்பது வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. சூடாரத்னா என்ற கன்னட கவி கூற்றுப்படி ஒரு தகப்பன் தன் குழந்தையைப் படிக்க வைக்கவில்லை என்றால், அக் குழந்தையை அவர் கொலை செய்வதாக ஆகும். தந்தை தன் குழந்தையை குறிப்பிட்ட வயதிற்குப் பின் பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால் சரியாகச் சொல்லவேண்டுமாயின் வீடுதான் ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் எனலாம்.கடவுள் ஒவ்வொருவருக்காகவும் வந்து நம்மை காப்பார் என்று எண்ணக்கூடாது. கடவுள் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயைக் கொடுத்துள்ளார். பெண்கள்தான் கடவுளின் முழுப் படைப்பு என்று சொல்லலாம். தாய்தான் பொறுமையின் பிறப்பிடம். அவளது தியாகம் பூமாதேவியின் தியாகத்திற்கு ஒப்பானதாகும். தாய்தான் வீட்டை உருவாக்குபவள். தாயின் முயற்சிதான் மனிதனை முழு ஆளுமை உடையவனாகவும் தனித்தன்மை பெற்றவனாகவும் மாற்றிவிடுகிறது. "நீங்கள் ஒரு தாயைப் பற்றி தெரிந்துகொள்ள, அவளது குழந்தைகளைப் பாருங்கள்" என்பது பழமொழி. தாயானவள் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு அடிக்கல் நடுபவர் எனலாம். சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க அவர் தாயார் ஜீஜாபாயின் ஊக்கம்தான் ஒரு காரணம் ஆகும். ஒரு பெண்ணின் (மகளின்) நல்ல நண்பர் என்பவர் அவரது தாயார் மட்டுமே என்றால் மிகையாகாது.
ஒரு மிருதுவான தாயார் கடினமான மகளை உருவாக்க முடியும். "தாய் எப்படியோ அப்படியே மகள்", மனிதர்கள் என்பவர்கள் அவர்களின் தாயார்களால் உருவாக்கப்படுபவர்கள். தாய் தன் கண்களை இழந்தாலும், அவள் தனது அழகிய மனக் கண்பார்வையை இழக்க மாட்டாள். "தாயை விட சிறந்ததொரு கோவில் இல்லை" என்பது தமிழ்ப் பழமொழியாகும். தாயின் நல்ல உள்ளம் கடலின் ஆழத்தை விட அதிகமானது. குழந்தையின் சுற்றுப்புற சூழலின் முதல் எதிர்வினை அதன் தாயாரிடம் இருந்துதான் தொடங்குகிறது. தாய்தான் குழந்தைகளின் மனதில் என்றும் அழியாத எண்ணங்களை உருவாக்குகிறார். தனது குழந்தைகளை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து வருகிறாள். வித்யாவதி தேவி பிரிட்டீஷாரை எதிர்த்து தன் மகன் பகத்சிங் போராட எண்ணினாள். அதன்படி நடந்தது. தனது மகன் ஒரு கதாநாயகனாக வர வேண்டும்; வாழ வேண்டும் என்று எண்ணினாள். கோழை போல் நடக்கக் கூடாது என்று விரும்பினாள். அது நடந்தது. தாய் ஸ்தானம் என்பது அவளது குணங்களை கொண்டதுதான். இது ஒரு கலை. இதில் எல்லா பெண்களும் சிறந்து விளங்க வேண்டும். தாயும் தாய்மை ஸ்தானமும் பெண்களுக்கான ஆடல் சார்ந்த பாடலாகும். தாய் என்பவள் சுயநலம் கொண்டவள் அல்ல. அவள் தன் குழந்தைகள் யாவரும் தனது உரிமைக்குரியவர் என்று நினைப்பதில்லை. தன் குழந்தைகளை அன்புடன் நேசிக்கிறாள். ஆனால் அவர்கள் தனது உரிமை என்று எப்போதும் சொன்னதில்லை.குழந்தையை சொந்தம் கொண்டாடுவது தன் தற்காப்பிற்கில்லை. குழந்தைகளை உலகிற்கு கொண்டு வர பெண்களுக்கு கடவுள் சந்தர்ப்பமளித்தார். கலீல் ஜிப்ரான் என்ற பெரிய மதத் தலைவர் கூற்றுப்படி உங்களது குழந்தைகள் உங்களுடையதல்ல. மனிதப் பிறவி எடுத்து வாழ விரும்பிய ஜீவன்களின் மறு உருவம்தான் அவை.
தாய் தன் குழந்தை மீது அபரிமிதமான அன்பைப் பொழிகிறாள். எனவே, வீடுதான் குழந்தையின் முதல் பள்ளியாகும். வீட்டை நிர்வகிப்பவர்தான் குழந்தையின் முதல் ஆசிரியர்.
By.
y.ujeyanthan.B.Ed(Hons)
லேபிள்கள்: யோ.உஜேயந்தன், B.Ed(Hons)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு