புதன், 25 ஜனவரி, 2012

ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம்

“இயற்கைத் தோற்றப்பாடுகளிடையே இருக்கின்றன எனக் கருதப்படும் தொடர்புகள் பற்றிய கருதுகோள் முன்மொழிவுகள் பற்றிய ஒரு படிமுறையான கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனை சார்ந்த விமர்சன விசாரணை என்பதே ஆய்வு” என்னும் ஹேர்லிங்கர் கருத்துக்கு இணங்க இன்று ஆய்வும் அது சார்ந்த துறைகளும் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. அவ்வாறான வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆய்வு என்பது மிகவும் அவசியமாகும்.

ஒரு கட்டிடத்தின் உறுதி அது அமைக்கப் பெற்றுள்ள அடித்தளத்தினைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அதுபோல மனிதனின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது அவன் பெறுகின்ற ஆரம்பக்கல்வியினைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஆரம்பக்கல்வி பிள்ளைகளின் அடிப்படை உரிமையாக வலியுறுத்தப்படுகின்றது. ஆரம்பக்கல்வியின் மீதான முதலீடு மனித பலத்தை உருவாக்கச் செய்யப்படுவது என்பது அண்மைக்கால கருத்தாகவும் காணப்படுகின்றது.

இதனுள் ஆரம்பக்கல்வியானது தனியொருவருடைய பாதுகாப்பான எதிர்காலம் (ளுநஉரசநவல குரவரசந) நல்வாழ்வு (ர்நயடவா டுகைந) தன்நம்பிக்கையுடையதான வாழ்க்கை (ளுநடக சுநடயைவெ டுகைந) என்பற்றுக்குத் துணை செய்யும் என்பதனை விஞ்ஞான ரீதியான பல்வேறு ஆய்வுகளும் இன்று வெளிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் வகிபங்கு புதியதொரு விடயமல்ல கல்விக்கும் குடும்பத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு பிள்ளைகளின் உள விருத்திää உடல் விருத்திää வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள்ää சமூக ஊட்டத்துக்கான கல்விää கலாசாரம் பற்றிய அடிப்படை விளக்கங்கள்ää சமயம் மற்றும் ஒழுக்கக்கல்விää மொழியறிவு முறையில் கல்வி மூலம் பெறப்படும் தொழில்கள்ää அறிவு போன்றவற்றினை வழங்குவதில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறிப்பாகக் கூறுவதாயின் சமூக மயமாக்கத்திற்குத் தேவையான அடிப்படைகளை வழங்குவதில் பெற்றோர் முன்னிற்கின்றனர்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே” என்பதற்கு இணங்க ஆரம்பத்தில் இருந்தே சீரான பாதையில் கற்றலை மேற்கொள்வதற்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் வழிகாட்டுபவர்கள் பெற்றோரே. அவ்வாறு ஆக்க ப10ர்வமாக பெற்றோர்கள் பங்களிப்பினை வழங்குகின்றபோது இன்றைய புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய கல்வியின் குறிக்கோளுக்கு இயைபாக இன்றைய சிறார்களை நாளைய நாட்டின் நற்பிரஜைகளாக ஒவ்வொரு பாடசாலைகளினாலும் உருவாக்க முடியும்.
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து என்பதற்கு இணங்க பசுமையான மாணவ பருவத்தில் ஆரம்ப நெறியில் பெற்றோரின் பங்களிப்பு என்பது அத்தியவசியமான ஒன்றாகவுள்ளது. எதிர்காலத்தில் பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும். என்பது பெற்றோரின் அவாவாகும். இவ்வாறான முன்னோற்றத்திற்கும் ஆரம்பக்கல்வி என்பது அத்திவாரமாக அமைகின்றது. அதனை ஒழுங்கான சீரான முறையில் அமைத்துக் கொடுக்கும் பொறுப்புக்களை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதுடன் பெற்றோரின் கடமை முடிந்து விடவில்லை. பாடசாலையில் தமது பிள்ளைகள் யாருடன் பழகுகின்றார்கள்ää எவ்வாhறான நண்பர்களைத் தேடிக்கொள்கின்றார்கள்ää எவ்வாறு கல்வி கற்கின்றார்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து அறிவதுடன் உரிய ஆசிரியருடன் சுமுகமான உறவினை வைத்திருத்தல் வேண்டும் என்ற ரீதியல் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியினை பிள்ளைகள் பயிலும் போது அதனை சிறப்பானதாக்கி தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். காரணம் கற்றல் என்பது குடும்ப வாழ்வின் ஒரு பகுதியே மனிதக் குடும்பத்தில் குடும்பம் பெரும் பங்கு புகட்டுகின்றது என்பதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு அவசிமாகவுள்ளது.
ஆளுமை விருத்திக்குப் பொருத்தமான காலப்பகுதியாகக் கொள்ளப்படுகின்ற ஆரம்ப கல்வியில் பொருத்தமான அனுபவங்களும் சந்தர்பங்களும் கிடைக்கும் இடத்து ஒரு பிள்ளை விரும்பத்தக்க பழக்க வழக்கங்கள்ää மனப்பாங்குää விழுமியங்கள்ää திறன்களää; சுயசிந்தனைää திறனாய்வுää சமூக இசைவாக்கமää; பெற்று எதிர்கால நடவடிக்கைக்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொள்கின்றது என்பது எடுத்துக் காட்டப்படுவதால் ஆரம்பக்கல்வியில் பெற்றோரின் பங்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சவால்களை எதிர் கொண்டு மிளிரும் ஒரு சமுதாயத்தைப் பிரசவிப்பதற்குத் தயராவது எனின் அதனை வைத்தியம் பார்க்கும் வைத்தியராக பெற்றோர்கள் பிள்ளையின் ஆரம்பக் கல்விக்கு உதவ வேண்டும் அப்போதுதான் பிள்ளையின் எதிர்காலம் பிரகாசமானதாக என்றும் ஒளிவிடும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு