வெள்ளி, 9 செப்டம்பர், 2011

அக்கரைப்பற்று அறிமுகம்

அறிமுகம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் அம்பாறை மாவட்டமானது 21 பிரதேச செயலக பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கிழக்குக் கரை ஓரமாக 12உம் மத்தியை அம்பாறை நகரைச் சுற்றி 09உம் அமைந்துள்ளது. மாவட்டத்தை நிர்வாகம் செய்வதற்கு ஒரு கச்சேரியை அம்பாறையில் அமைத்து அங்கே பல அரசாங்க திணைக்களங்களும் அமைத்து இம்மாவட்டத்தில் அரசு பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது. பல இன மக்கள் இப்பிரதேசத்தில் வசித்து வருகிறார்கள். இக்குடிசார் பரம்பலானது காலத்திற்குக் காலம் எல்லைகள் மாற்றப்பட்டு இப்போது சிங்களவர்களும் முஸ்லீம்களும் சம அளவு விகிதத்திலும் தமிழர்கள் மிகக் குறைந்த அளவு விகித்திலும் வசித்து வருகின்றனர். இங்கே பௌத்தம், இந்து ,இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்தோர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு விவசாய மாவட்டமாக இனங்கானப்பட்டிருப்பதும் இலங்கையின் நெல்லை உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் முன்னனியில் இருக்கின்றது. இம்மாவட்டம் தனது எல்லைகளாக கடல் மட்டக்களப்பு மாவட்டம் , மொனறாகலை மாவட்டம் சபதுளை மாவட்டம் ஆகியவற்றுடன் எல்லைகளில் பாரிய மலைகள், நதிகள், குளங்கள், ஆறுகள், காடுகள், வயல் நிலங்கள் என்பவற்றைக் கொண்டுள்ளது.

விசேட சிறப்பம்சமாக கிழக்கில் கரையோரமாக துறைநீலாவணை தொடக்கம் குமணை வரையில் பாரிய கடல் பரப்பை கொண்டுள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு ஒரு சிறப்பான இயற்கை சூழலைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மேற்படி மாவட்டமானது பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன

1. ஆலையடிவேம்பு
2. அக்கரைப்பற்று
3. அட்டாளைச்சேனை
4. நிந்தவூர்
5. காரைதீவு
6. கல்முனை (தமிழ் பிரிவு)
7. கல்முனை (முஸ்லீம் பிரிவ)
8. திருக்கோவில்
9. பொத்துவில
10. லகுகல
11. தமணை
12. உகணை
13. பதியத்தலாவ
14. அம்பாரை
15. மகாஓயா
16. தெகியத்தக்கண்டிய
17. சம்மாந்துறை
18. சாய்ந்தமருது

19. நாவிதன்வெளி
20. இறக்காமம்

நிர்வாக எல்லை.


(ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவு)



அம்பாறை – அக்கரைப்பற்று பிரதான பாதையில் 6ம் மைல் கல்லில் தொடங்கி அக்கரைப்பற்றை நோக்கிய திசையில் செல்லும் போது வலது பக்கமாக உள்ள ஆலிம் நகர் ,கிறவல்குழி குடியிருப்பின் தெற்குப் புறமான பகுதியை உள்ளடக்கி தொடர்ந்து வரும் பாதையில் அல்-ஹிதாயா பாடசாலையில் மேற்குப் புறமான பாதையினூடாக வடக்காகச் சென்று அப்பாதை பெரியபள்ளிக்கு முன்பாக கிழக்காகச் செல்லும் மருத்துவர் வீதியினை சந்தித்து அதனைக் குறுக்கறுத்துச் செல்லும் முதலியார் வீதியினூடாக வடக்குப் புறமாகச் சென்று பின் தோம்பதோரின் சந்தியை அடைந்து


பின்னர் கிழக்காகச் செல்லும் இஸ்மாயில் ஸ்டோர் ஒழுங்கையின் ஊடாக கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று – கல்முனை பிரதான பாதையை அடைந்து பின்பு அதிலிருந்து தெற்கு நோக்கி சிறிது தூரம் சென்று அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தை அடைந்து அதனூடாக பொத்துவில் வீதியில் கிழக்காகச் சென்று தொடர்ந்து அவ்வேலையானது அக்கரைப்பற்று தர்மரத்ண விகாரையின் எதிராகவுள்ள அக்கரைப்பற்று மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து சிறிது தூரம் சென்ற பின் அக்கரைப்பற்று பத்திரகாளி கோவில் வீதியினூடாக சென்று பத்திரகாளி கோவிலையும் அதன் காணிகளையும் உள்ளடக்கி மீண்டும் பொத்துவில் வீதியை அடைந்து பின்னர் கிழக்காகச் சென்று அக்கரைப்பற்று பஸ் டிப்போவிற்கு அடுத்து வருகின்ற கடற்கரை வீதியானது சென்று கடற்கரையை அடையும் வரை.
பின் சின்னமுகத்துவாரம் அதன் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி பின் சின்னமுகத்துவாரத்தில் இருந்து பெரிய களப்பை ஊடறுத்து சாகாம வீதியில் உள்ள 7வது மைல் கல்லை அடைந்து அதிலிருந்து சாகாம வீதியினூடாக தாலிபோட்ட ஆற்றை அடைந்து அதிலிருந்து திருக்கோவில் பிரதேச செயலாளர் எல்லையையும், தமண பிரதேச செயலாளர் எல்லையையும் தொட்டு தமணை எல்லையில் உள்ள எகலகலகந்த மலை வரை செல்கிறது.











கிராம சேவை அலுவலர்களின் பிரிவுகள்

பிரிவின் பெயர் இலக்கம்

1. வாச்சிக்குடா ஏவி ஃ 01
2. ஆலையடிவேம்பு ஏபி ஃ 21ஏ
3. நாவற்காடு ஏவி ஃ 03
4. அக்கரைப்பற்று 7 ஏபி ஃ 21
5. அக்கரைப்பற்று 7ஃ1 ஏவி ஃ 05
6. அக்கரைப்பற்று 7ஃ2 ஏவி ஃ 6
7. அக்கரைப்பற்று 7ஃ3 ஏவி ஃ 07
8. அக்கரைப்பற்று 7ஃ4 ஏவி ஃ 8
9. அக்கரைப்பற்று 8 ஏபி ஃ 22
10. அக்கரைப்பற்று 8ஃ1 ஏவி ஃ 09
11. அக்கரைப்பற்று 8ஃ2 ஏவி ஃ 11
12. அக்கரைப்பற்று 8ஃ3 ஏவி ஃ 12
13 அக்கரைப்பற்று 9 ஏபி ஃ 22ஏ
14. சி;ன்னமுகத்துவாரம் ஏவி ஃ 14
15. கோளாவில் 1 ஏவி ஃ 16
16. கோளாவில் 2 ஏவி ஃ 17
17. கோளாவில் 3 ஏபி ஃ 23
18. பனங்காடு ஏவி ஃ 13
19. சின்னப்பனங்காடு ஏவி ஃ 19
20. கண்ணகிகிராமம் 1 ஏவி ஃ 20
21. கண்ணகிகிராமம் 2 ஏவி ஃ 21
22. அளிக்கம்பை ஏவி ஃ 22


அமைவிடம் :-

அம்பாறை மாவட்டத்தில் கிழக்குப் புறமாக அம்பாறை நகரில் இருந்து 16 மைல்களுக்கு அப்பால் அக்கரைப்பற்று பிரதேசம் அமைந்துள்ளது. இதன் தெற்குப்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. எமது பிரதேச செயலாளர் பிரிவும் மேலே குறிப்பிட்ட பிரிவையே உள்ளடக்கியுள்ளது. இப்பிரிவு 25628 ஆயிரம் மொத்த சனத்தொகையைக் கொண்டுள்ளது. 22 கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசமாகவும் காணப்படுகிறது. இதன் பரப்பளவு


90 சதுர கிலோ மீற்றராகும். ஆலையடிவேம்பு; பிரதேச செயலக பிரிவு பின்வரும் கிராமங்களை உள்ளடக்கியது.


1. அளிக்கம்பை
2. கண்ணகி கிராமம்
3. பனங்காடு
4. கோளாவில்
5. அக்கரைப்பற்று
6. ஆலையடிவேம்

இதனுடன் பல வயல் கண்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. பிரதானமான தில்லை ஆறு இதன் மேற்குப்புறமாக சென்று பனங்காட்டை ஊடறுத்து கிழக்குப்புறமாக செல்வதும் அக்கரைப்பற்று அண்மித்த பகுதிகளில் மட்டுமே குடியிருப்புக்களை மட்டும் கொண்டு அதனை சூழவுள்ள பகுதிகள் வயல்வெளிகளும் மேச்சல்தரைகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.




.
தரைத்தோற்றம்

இப்பிரதேசம் கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாள 75 – 120 உயரம் வரையுள்ளது. இது மணல்களையும் பாறைகளையும் கொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசம் கிழக்காக ¾ மைல் நீளமான கடல்வளமும் மேற்காக பயிர்ச்செய்கை நிலமும் வடக்காக குடிமனைகளும் தெற்காக வயலும் மலைசார்ந்த பிரதேசமும் காணப்படுகின்றன. இவற்றில் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 100 அடி உயரமும் கொண்ட இரண்டு மலைகளும் 10 ஏக்கர் சதுர அடிப்பரப்பும் 75 அடி உயரமும் கொண்ட ஒரு மலையும் குறகிய மலைத்தொடர்களும் காணப்படுகின்றன.

நீர்வளங்கள்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அநேகமாக குடியிருப்பாளர்கள் குடிநீர் பெறுகின்றனர். இதில் கண்ணகி கிராம மக்கள் நல்ல குடிநீரைப் பெறுவது கஸ்டமாக உள்ளது. இவர்கள் வசிக்கின்ற பகுதியை அன்மித்து மலைகள் காணப்படுவது காரணமாகும். இப்பிரதேசத்தில் தில்லையாறு, பட்டியடிப்பிட்டிக் குளம், நீத்தையாறு, தாலிபோட்டாறு என்பனவும் காணப்படுகின்றன. மேலும் நீர் பெறுவதில் கஸ்டமான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் (கண்ணகி கிராமம் , அலிக்கம்பை) வாய்க்கால்களில் விடப்படும் தண்ணீர் மூலமும் குளாய் கிணறுகளில் பெறப்படும் தண்ணீர் மூலமும் தனது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

கண்ணகி கிராமம் நில அடிப்பகுதியில் மலைப்பாங்கான பிரதேசமாக காணப்படுவதால் இங்கே கிணறுகள் தோண்டுவது மிகவும் கஸ்டமான ஒரு காரியமாகும். இங்கே வசிக்கின்ற மக்களுக்கு அரசாங்கம், பொதுத் தாபனங்கள் குளாய்க் கிணறுகள், பொதுக் கிணறுகள் என்பன அமைத்துக் கொடுக்க வேண்டும். இதே மாதிரியே அளிக்கம்பை கிராமமும் அமைந்துள்ளது.

ஆலையடிவேம்பு, வாச்சிக்குடா பகுதியில் வசிக்கின்ற மக்கள் அதிகம் சுத்தமில்லாத நீரையே தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். பெரும்பான்மையான சலவைத் தொழிலாளர்கள் பட்டியடிப்பிட்டிக் குளத்தையும் வயற்செய்கைக்காக உப உணவுச்செய்கைக்காக தில்லையாற்றையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் சுத்தமான நீரைப்பெறுவதற்கு பொதுக் கிணறுகள் நீர்வழங்கள் அமைப்புக்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.


குறிப்பு

கண்ணகி கிராமம் தற்போது மீளக்குடியேற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டு;ள்ளது. இப்போது ஏற்கனவே உள்ள கிணறுகள் யாவும் தூர்ந்த நிலையிலேயே இடிபாடுகளுக்கு உட்பட்ட நிலையிலும் உள்ளது. இதனால் மீளக் குடியமர்வு செய்யும் போது பழைய கிணறுகளை புணரமைக்கவும் புதிதாக பொதுக் கிணறுகள் குளாய் கிணறுகளை அமைக்கவும் தேவை ஏற்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று குளம் ஃ பட்டியடிப்பிட்டி குளம்

பட்டியடிப்பிட்டி குளமானது வாச்சிக்குடாவில் அமைந்துள்ளது. இ;ப்பிரிவில் பெரும்பான்மையினராக சலவைத் தொழிலாளர்கள் வசிப்பதால் அவர்களே தமது தொழில் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். இக்குளம் வருமாந்த மழை வீழ்;ச்சியினால் நிரப்பப்பட்டு வரட்சியான காலங்களில் வற்றிவிடுகிறது. ஆண்மைக்காலங்களில் ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட இக்குளத்தை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் இக்குளம் விஸ்தீரணம் குறைந்து நீர் கொள்ளவு குறைந்து எதிர்காலத்தில் இக்குளத்தை நம்பி தொழில் செய்வோர்களும், விவசாயம் செய்வோர்களும் தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.











கடல் வளம்

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடல் வலயம் காணப்படுகிறது. இவ்வளமானது பல அடிப்படைத் தொழில்களுக்கு ஏதுவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக மீன்பிடித்தொழில் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் சின்னமுகத்துவாரம், கோளாவில், பனங்காடு போன்ற பகுதிகளில் வசிக்கும் அநேகர் மீன்பிடித்தொழிலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. போதியளவு தொழிலாளர் வசதி, சந்தை வாய்ப்பு, போக்குவரத்து, அனுபவம் என்பன செறிவாகக் காணப்படுவதனால் நவீன மீன்பிடி பயிற்சி அளிக்கும் அமைப்பினூடாக இத்தொழிலாளர்களுக்கு பயிற்சி, நிதி வசதி என்பன வழங்கினால் இப்பகுதியில் ஆழ் கடல் மீன்பிடித்தல் தொழிலை செய்து அதிகளவு வருமானத்தை இத்தொழிலைச் செய்யும் மக்கள் பெறக் கூடியதாக இருக்கும்.

தெங்கு வளம்:

ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கிழக்காக கடற்கரை காணப்படுவதால் அதனை அண்மித்த பகுதியான சின்னமுகத்துவாரம் பகுதியில் பல தென்னம் தோட்டங்கள் காணப்படுகின்றன. அத்தோட்டம் அக்கரைப்பற்று 9, அக்கரைப்பற்று 7, அக்கரைப்பற்று 8 ங் குறிச்சியிலும் கோளாவில் பகுதிகளிலும் வீடுகளில் தென்னை மரங்கள் காணப்படுவதால் இப்பகுதியில் கிட்டத்தட்ட 150 ஏக்கர் காணப்படுகிறது. இவ்வளத்தினை அதிகரிக்க முடியும் ஏனெனில் சூறாவளி தாக்கியதில் பல தென்னந்தோட்டங்கள் சேதமாகின. அத்தோடு வீடுகளில் உள்ள பல மரங்கள் சேதமாகின. ஆனால் இருந்த அளவு இன்னும் மீளப் பெறப்படவில்லை. எனவே இப்பகுதியில் இப்போது தேங்காயின் விலையும் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதியில் இலவசமாக நாற்றுத் தென்னை விநியோகம் செய்யப்படவேண்டும்.

இதனாலே இப்பகுதி தேவைகளை நிறைவேற்றவும் தும்பு, தெங்குப் பொருட்கள் தொடர்பான உற்பத்தித் தொழிற்சாலைகளை ஏற்படுத்த முடியும். இதனூடாக குடிசைக் கைத்தொழில் உற்பத்தியாக பிரஸ், தும்புத்தடி, கால் துடைப்பம், தென்னம் கள்ளு இது போன்ற பல உற்பத்திகளை செய்யலாம்.


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அமைப்பும் பொதுவான கால நிலையும் (காலநிலை ஏற்கனவே தரப்பட்டுள்ளது. எனவே மண்ணமைப்பு மாத்திரமே இங்கு தரப்படுகிறது.)








இலங்கையின் கீழ் திசையான மட்டக்களப்பு மாநகரின் தென்புறமாக ஆலையடிவேம்பு பிரதேசம் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே அம்பாறை வீதியினையும் தெற்கே அளிக்கம்பையினையும் கிழக்கே கடலுடன் இணைந்த முகத்துவாரத்தினையும் மேற்கே இலுக்குச் சேனையையும் கொண்டு அமைந்துள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் வடமேல் திசையாக தாழ்ந்து அமைந்துள்ளதை இங்கே ஓடும் நீத்தை ஆறு விளக்குகிறது.

மண்

இப்பிரதேசத்தில் இறுகாத கடினமற்ற பொருட்களால் அமைந்து காணப்படுகிறது. மேற்போர்வையினை மட்படை எனலாம். இம்மட் பரம்பலானது சீராகப் பரவி காணப்படவில்லை. இப்படை 5 அடி – 20 அடிவரை ஆழமுள்ளதாக காணப்படுகிறது. இம்மண் தாய்ப்பாறையின் சிதைவினாலும் சேதன – அசேதன பொருட்களின் திரட்சியினாலும் இனங்காணப்படுகிறது.

பொதுவாக மண்ணியல் ஆளர்கள் ஆய்வு செய்தது போல் எமது பிரதேச மண்ணையும் ஆய்வுக்குட்படுத்தி ஆராய முடியும;




பொதுவாக ஆலையடிவேம்பு பிரதேசம் இடத்திற்கு ஏற்ப வேறுபட்ட மண் வகைகளை கொண்டமைந்தாலும் பொதுவான அயனமண் (ஊசுயுஏநுடு) என்ற வகையினுள் அடக்க முடிகிறது. இம்மண் வெப்பப்பகுதியிலும் வெப்பமும் ஈரமும் கொண்ட பருவகால காலநிலை உள்ள பகுதிகளில் பரம்பி உள்ளதால் எமது பகுதியிலும் இவற்றைக் காணலாம். எமது பகுதியில் எமது பகுதி மக்களின் அறிவுத்திறனைக் கொண்டு அதன் தன்மையினை மணல், களி, மணலும் களியும் சேர்ந்த இருவாட்டி என்ற 03 இனங்களாக பாகுபடுத்திக் கூறுவர். எமது பிரதேசத்தின் கிழக்கே கடற்கரை சார்ந்து மணலும் மேற்கே செல்லச் செல்ல இருவாட்டி மணலுமாகச் சென்று வயல் பாகங்களை அண்டிய பகுதி நீரைத்தேக்கி வைக்கக்கூடிய களியாக மாற்றமடைகிறது. மேலும் வடக்கே கருமணலும் தெற்கே செல்லச் செல்ல நரை நிறமுள்ள மணலும் கண்ணகிபுரம் மற்றும் அளிக்கம்பை சார்ந்த பகுதியில் பசைத்தன்மையுள்ள களி ஃ செம்மணலுமாக அமைந்து பரவலான நெற்செய்கையினை நிர்ணயித்துச் செல்கின்றது. மணல், இருவாட்டி சார்ந்த பகுதிகளில் தெங்குச் செய்கை, மரவள்ளி மற்றும் ஊடுபயிர்களையும் செய்கை பண்ணை மேற்கொள்ளப்படுகின்றது.

மழை வேளைகளில் வெள்ளம் பெருகும் போது மேற்படையிலுள்ள வளமுள்ள கனியுப்புக்கள் ஃ கூள்பொருட்கள் பி என்னும் படையில் தங்குகின்றது. இவை மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்டு இரும்பு சத்துள்ள அமில மண்ணாக அமைந்துவிடுகிறது.

கடல் மண்வளம்:-

இப்பிரதேசத்தில் ¾ மைல் நீளமான கடற்கரையை கொண்டுள்ளதான அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் இருந்து 500 யார் தூரத்தில் கிழக்கில் கடல் அமைந்துள்ளது. இங்கே கடற்கரை மணல் வளம் போதியளவு கிடைக்கின்றது. இந்த வளத்தை இப்பிரதேசத்தினதும் எமக்கு அடுத்ததாகவுள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரும் கட்டடத் தேவைகளுக்கும் வேறு பல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பிரதேசத்தில் பொதுவாக மண்ணரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை குறிப்பிடல் வேண்டும். ஜனவரி-நவம்பரில் இடையிலான பகுதியில் மண்னெடுக்கப்படுகிறது. மணல் டிரக்டர், வண்டில்கள், கென்டர்களில் ஏற்றிச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

களிமண்வளம்

ஆலையடிவேம்பு உ.அ.அதிபர் பிரிவிற்கு மேற்குப்புறமாக அமைந்துள்ள வாச்சிக்குடா, அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி குளத்தில் களிமண்ணும் அதை அண்மித்த பகுதியில் ஒரு வகை ஊத்தைக் களிமண்ணும் காணப்படுகின்றது. இவ்வகையான மண் அமைப்பு ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.

இந்தக் களிமண்ணை இப்பகுதியில் சட்டி, பானை செய்யவும் வேறு வகைகளில் வீட்டு அத்திவாரங்களை மூடுவதற்கும் வீதிகளின் ஓரங்களை நிரப்பவும் பாவிக்கிறார்கள். பட்டியடிப்பிட்டிக் குளத்தை சில முஸ்லீம்கள் அதிகாரமற்ற வகையில் நிரப்பி கடைகளைக் கட்டி வருவதால் குளத்தின் விஸ்தீரணம் குறைந்து கொண்டு செல்வதோடு எதிர்காலத்தில் இம்மண்ணினைப் பெறுவதற்கு வேறு இடம் ஒன்றைத் தேடவேண்டி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.




கற்பாறைகள.;

அக்கரைப்பற்று மத்தியில் இருந்து 6 மைல்கள் தூரத்தில் கண்ணகி கிராமம் அமைந்துள்ளது. இது ஆலையடிவேம்பு பிரதேசத்தின் தெற்குப்புறமாக அமைந்துள்ள பகுதியாகும். இங்கே பாரிய மூன்று மலைகள் அமைந்துள்ளன. இவைகளில் 100 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட 2 மலைகளும் 75 அடி உயரமும் 10 ஏக்கர் பரப்பும் கொண்ட ஒரு மலையும் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பல மலைத் தொடர்களும் காணப்படுகின்றன. 4 மைல் தொலைவில் அளிக்கம்பை கிராமமும் சூழ காடுகளும் காணப்படுவதால் விறகினைப் பயன்படுத்துவதாலும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியும் கருங்கல்லை உடைக்கும் தொழிலை செய்யலாம். தற்போது இது நம்பிக்கை;குரிய சிங்கள முதலாளிமார்களுக்கு வெடிமருந்து வழங்கி அவர்கள் மூலமாக இ;ப்பிரதேசத்தின் கருங்கல் தேவையை அதிக விலை கொடுத்து பொது மக்கள் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு