புதன், 7 செப்டம்பர், 2011

பாடசாலை முகாமைத்துவம்

பாடசாலைகள் சிறந்த முறையில் முகாமைசெய்யப்படுவதனால் நாட்டின் சுபீட்சகரமான எதிர்காலத்தை கட்டி எழுப்ப எனவே பாடசாலை முகாமை பற்றி சிந்திப்பது முக்கியமானது. இவ்புலமானது அதிபர் ஆசிரயர் மாணவர்கள் பெற்றௌர் சமூகம் நாட்டின் பொருளாதார அரசியல் உலககல்விப்போக்கு என்பவற்றை தன்னகத்தே சிந்தித்தல் வேணடும். முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு பல்வேறு பரிமாணங்களில் விளங்கப்படக்கூடியது. பொதுவாக ஒழுங்கமைந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிக்கோள்களை வினைத்திறனுடனும்இவிளைதிறனுடனும் அடைவதற்கு தமது நிறுவன ஒழுங்கமைப்பையூம் வளங்களையூம் திட்டமிட்டு வழிப்படுத்தி ஒழுங்கமைத்து மேற்பார்வைசெய்து ஒருங்கிணைத்துக்கொள்ளும் உபாயங்களும் நுட்பங்களுமே முகாமை என்று கூறப்படுகிறது.எனவே பாடசாலை தனது அங்கீகரிக்கப்பட்ட கல்விக்குறிக்கோள்களை அடைவதற்கு வழிமுறைகளை தீர்மானித்தல் வேண்டும். இவை தமது வழிமுறைகளை காணும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. புhடசாலைகளும் ஒழுங்கமைந்தநிறுவனமாகும் இவை சமூக பொருளாதார அரசியல் கலாசார தொழில்நுட்ப பரவல் போன்றவற்றால் ;;;;;;;;;;பலஇடையூ+றுகளை சந்தித்துக்கொள்கின்றன. தேசியவிளைவூகளான மக்கள் பண்பு விருத்தி மற்றும் மனிதவள விருத்தி என்பவற்றை சிறந்தமுறையில் உருவாக்க அதிபர் முக்கியமானவர் இவர் பாடசாலையின் சிறந்தமுகாமையாளராக இருப்பதனால் நாட்டின் குறிக்கோள்களை அடையமுடியூம்.
பாடசாiபைற்றிய சிந்தனை மாற்றம் தற்பொழுது உலகளாவியரீதியில் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு ஏற்ப கல்விவடிவமைக்கப்டுகின்றது. மாணவன் உற்பத்திப்பொருளாக கணிக்கப்படுகின்றான். இவ்உலகளாவிய மாற்றங்களை நாமும் ஏற்றுக்கொள்ளும்போது முகாமைத்துவக்கட்டமைப்புக்குள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியதாகின்றது. பாடசாலை உயர்மட்ட அணியினரான அதிபர் பிரதிஅதிபர் உதவிஅதிபர் பகுதித்தலைவர்கள் பல்வேறுசந்தர்ப்பங்களில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாகவூம்; எதிர்கொள்பவராகவூம் உள்ளனர்.
பாடசாலை பலநூறு தனிநபர்களின் கூட்டுக்கட்டமைப்பாகும். மாணவர்; இஆசிரியர்இஊழியர்இ பெற்றௌர் இ கல்வித்திணைக்களஅலுவலர் சமூகநலன்விரும்பிகள்இவர்களின் கூட்டுச்சேர்மானத்தின்போது பல்வேறுபட்ட முரண்பாடுகள்தோன்ற வாய்பபுண்டு. முரண்பாடுகள் படிப்படியாகபரவி குழுநிலைஅம்சங்களாக வளர்;ச்சிபெறுவதுண்டு. எனவே இக்கட்டமைப்பை நிர்வகிக்கின்ற அதிபர் சிறந்தமுகாமை எண்ணக்கருவை வளர்த்தெடுப்பதன் மூலமே சமூகம் எதிர்பார்க்க்pன்ற பிரஜையை உருவாக்கமுடியூம்.
பொதுவாக எமது பாடசாலையை பொறுத்தவரை பல்வேறுபட்டகாரணங்களை கூறமுடியூம் அதிபர் அதிகாரங்களை தன்னகத்தே குவித்துவைத்திருத்தல் பரவலாக்கம் செய்யாதுஇருப்பதனால் இராணுவக்கட்டமைப்பமாதிரி கட்டளைக்காக காத்துநிற்கவேண்டிஉள்ளது. இதன்காரணமாக ஆசிரியரிடத்தே மனரீதியான தன்னிறைவூம் திருப்தியூம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனைய பதவிநிலைகள் பகடைகாய்களாக உள்ளன அவர்களும்; திருப்தியைகாட்டுவதில்லை நீண்டகாலஅடிப்படையில் பாடசாலை தனது பொலிவை இழக்க இது ஏதுவாக அமையூம். நான் என்றுசிந்திக்காது நாம் என்று சிந்திக்க அதிபர் முயலவேண்டும் தகுதியூம் தலைமைத்துவமும் கூட்டுணர்வூம் பெற்றௌர் பங்களிப்பை அதிகரிக்க ஈடுபாடுகொண்ட அதிபர் தேவை கற்கும் ஆர்வமும் ஆசிரியர்; ஒழுக்கத்தை முன்னேற்றும் விருப்பமும் கொண்டவராக அதிபர் அமைதல்வேண்டும் எமது பாடசாலையில் இது குதிரைக்கொம்பாக உள்ளது. தகைமை தேர்ச்சி மாணவர் பகுத்தறிவூசிந்தனை வளர்ப்பதில்; ஈடுபாடு பயனுறுதிகொண்ட மாணவர் ஒழுக்கமேம்பாடு பெற்றௌர் தொடர்பு என்பவற்றை அதிபர்வளர்த்தெடுக்கவேண்டும். ஆசிரியரின் நலனில் அதிபர்; அக்கறைகொண்டவராக இருத்தல் வேண்டும் பெரும்பாலும் ஆண்;;;;;அதிபர்கள் பெண் ஆசிரியர்களின் நலன்களில் அக்கறை கொண்டவராக இருத்தல் பாடசாலை முகாமையில் பல இடையூ+றுகளை ஏற்படுத்தும். சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களை அனுசரிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.பாடசாலையின் நாளாந்த பணிகளில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதில் தொடர்புடைய ஆட்களை நன்கு விளங்கிக்கொண்டு அதற்கேற்ப தமது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும்.அத்தகைய நிலையிலேயே ஆட்களுடன் முரண்படாது அதேசமயம் பணிகளையூம் நிறைவேற்றமுடியூம்.. ஆனால் எமது அதிபர்கள் பிரிட்டிஸ்காலத்து ஆட்சிமுறையிலேயே முகாமைத்துவத்தை கருதுகின்றார்கள். பொதுவாக வழமையாக அதிபர் மேற்கொள்ளும் நடத்தைகள் தவறானதாக பொருத்தக்கேடானதாக அமையமுடியூம் இத்தகைய நிலமைகளில் சுயவிமர்சனப்பாங்குள்ளவராகவூம் கீழ் பணியாற்றும் ;ஆசிரியரின் கருத்துக்களை கேட்கக்கூடியவராகவூம் இருத்தல் வேண்டும் அவ்வாறு அதிபர்கள் இல்லை நான் பிடிச்ச முயலுக்கே மூன்று கால்கள் என வாழ்கிறார்கள்.
தான்; நிறைய கற்பதுடன் ஏனைய சகபாடிகள் உயர்கல்வி கற்பதற்கும் பதவிஉயர்வூ பெறுவதற்கும் மேலதிகபதவிகளைப்;பெறுவதற்கும் அதிபர் உதவூதல் வேண்டும் சம்பளஉயர்வூளை உரியகாலத்தில் பெற்றுக்கொள்ள தடையாக இருத்தல் கூடாது ஆனால்; பெரும்பாலும் எமது அதிபர்கள் பழிவாங்கும் நடவடிக்கைக்காக இதனையே துருப்புச்சீட்டாக இதனையே கையாண்டு ஆசிரியர்களை பழிவாங்குகின்றார்கள். பெரும்பாலும் எங்கள் அதிபர் சுற்றுநிருபங்கள் நியமங்களை பின்பற்றி நடப்பதனால் சலிப்பு உண்டாகின்றது.
அதிபர் பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் மாணவர் பெற்றௌர்களின் சொந்தவைபவங்கள் நலன்கள்கலந்துகொண்டு உணர்வூகளை பகிர்ந்துஉதவி வழங்குதல் வேண்டும். இதுதனிநபர் உறவில் நம்பகத்தன்மையை ஏறப்படுத்தும். ஆனால் பெரும்பாலான அதிபர்கள்; இவ்வாறு இல்லை தமது குடும்பம் தொழில் ரீதியான பதவி என தம் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றார்கள். பெற்றௌரின் எதிர்பார்ப்பு எனது பிள்ளைகள் சிறந்த கல்வியை கற்று பொருளாதாரத்தை ஈட்டவேண்டும் என்பதாகும் . பிள்ளை பற்றி ஆசிரியரின் எதிர்பார்பு சமூகம் ஏற்றுக்கொள்கின்ற நியமங்களுக்கு அமைய மாணவனை உருவாக்கி அவனை உலகிற்கு அனுப்புதல் வேண்டும் அதாவது நற்பிரஜை அனுப்பதல் . இஙூகு முரண்பாடுகளை காணலாம.; பொதுவாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினால் போதும் பிள்ளை படிப்பான் என்ற எண்ணக்கரு பெற்றார்களிடத்தே உண்டு. இது தவறானது பிள்ளைகளின் நலன்பற்றி ஆசிரியரிடத்தே தெரிந்து ஆசிரியருடன் இணைந்து செயற்பவதுடன் பெற்றார் பிள்ளையை நன்றாக வளர்த்தெடுக்க முடியூம். பேற்றார்கள் ஆசிரியரை சந்திப்பதற்கு பின்வரும் சந்தர்ப்பங்கள் அமையப்பெறுகின்றதுவிளையாட்டுப்போட்டிஇ பரிசளிப்புவிழாஇ அதிபர்தினவிழாஇ வருடாந்த பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக்கூட்டம் இ வினாத்தாள்களை பார்வையிடுவதற்கான தவனை சந்தர்ப்பங்கள் ஆகும்.ஆனால் இச்சந்தர்ப்பங்களை பெற்றார்கள் பயன்படுத்திக்கொள்வதில்லை வந்தோம் கையெழுத்திட்டோம் எல்லாம் ஆசிரிய்;ர்கள்; பார்த்துக்கொள்வார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி உங்கள் கையில் என வாய்வார்த்தையூடன் ஒடிப்போய்விடுகிறார்கள் . சேர் நல்லா அடியூங்கோ நாங்கள் கேட்க வரமாட்டம் என்று நசூக்கான வார்த்தைகளை பிரயோகித்து விட்டு செல்கின்றார்கள். புல வழிகளிலும் ;ஆசிரியர் பெற்றௌரையிட்டு இவ்வகையில் புளகாங்கிதம் அடைந்தாலும் மாணவனின் வளர்ச்சி பற்றி ஆசிரியர்;மட்டும் சிந்திக்கHது பெற்றௌரும் சிந்திக்கவேண்டும் பிள்ளை தொடர்பான பலயினங்களை பெற்றௌரும் சிந்திக்கவேண்டும்.பொதுவாக போட்டிகளில்; மாணவன் வெற்றியீட்டுகின்றபோது ஆசிரியரை வாழ்த்தும் பெற்றார்கள் பரிசு கிடைக்கப்பபெறாதவிடத்து ஆசியரையே பரிசு கெடுப்பது வழமை. இது பொதுவாக கற்ற பெற்றௌரிடத்தில் உள்ள குறைபாடு. தனது பிள்ளையை போட்டிக்கு தெரிந்துகொள்ளாதவிடத்து ஆசிரியரை குறைகூறுவது முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளும்.ஆசிரியர்களிடத்தேயூம் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வல்;லமையம் அவர்களை பணிமாற்றம் செய்யூம் திறனும் பெற்றௌரிடத்தே உண்டு இது எமது கல்விப்புலம் சார்ந்த நிலையில் மாபெரும் குறைபாடு ஆகும். மாணவனின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் ஆயின் பெற்றௌர்களை இடையிடையே அழைத்து மாணவனின் ;நலன் பற்றி விசாரிப்பதுடன்; நல் ஆலோசனை வழங்கவேண்டும். அவனின் பலயீனங்ககளை களைவதற்கு கல்விஅறிவூகுறைந்த பெற்றாருக்கு ஆலோசனை வழிகாட்டலைமேற்கொள்ள வேண்டும்.
புhடசாலைகள் எல்லா நாடுகளிலும் அவற்றின் மனித மற்றும் சமூகபொருளாதாரஅபிவிருத்திகளில் முக்கியமான பங்கு வகிக்கும் நிறுவனங்களின் முதன்மையானவை .குடும்பங்களின் பிள்ளைகள் பிறந்தாலும் வளர்ந்தாலும் சமூகத்தில் பொருத்திக்கொள்வதற்கும் சமூகத்திற்கு இணக்கமான பிரசையாக மாறவதற்கும் சில அறிவூம் திறன்களும் நம்பிக்கைகளும் நேர்மனப்பாங்குகளும் உருவாக்;க பாடசாலை பங்காற்றவேண்டும் இவற்றை பெற்றார் நிறைவான முறையில் வழங்க முடியாதுஎனவே அவற்றை ஆசிரியர்கள் வழங்குவதற்கு உதவூபவராக பெற்றார்; இருத்தல் வேண்டும் .தொகுத்து நோக்கும் போது சுபீட்சமான எதிர்காலத்தை கட்டிஎழுப்ப எமது தேசத்தின் ஜக்கியத்தைபேண ஆசிரியர் முக்கியம் பெறுகின்றார் அவர் அதிபருடன் பெற்றொருடன் நல்உறவை ஏற்படுத்துவதன் மூலம் வளமான எதிர்காலம் கட்டிஎழுப்பப்பட இலங்கையில் வாய்ப்புண்டு இதோபோல் இதன் தலைமகனான அதிபர் முகாமைபற்றிய எண்ணக்கருவை நன்கு விளங்கிக்கொண்டவராகவூம் சமூகம் பற்றி சிந்திக்கின்றவராக அமைவாராயின் வளமான சமூகம் கட்டிஎழுப்பப்படும்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு