செவ்வாய், 28 ஜூன், 2011

உலக வங்கி கூறும் கல்வி முறை

உலக நாடுகள் வேலைவாய்ப்பை தரும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

வகுப்பறையில் மாணவர்களை அதிகநேரம் செலவழிக்க வைப்பதைவிட, அவர்கள் படித்து முடித்தவுடன் வேலை பெறுவதற்கு ஏதுவான கல்வியின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான கல்வி கொள்கையை துவக்கி வைத்து உலக வங்கி தலைவர் ராபர்ட் சோலிக் கூறியதாவது, "பொருளாதார மேம்பாடு, நல்ல முன்னேற்றம், வறுமையை குறைத்தல் ஆகியவை அறிவையும், திறனையும் பொறுத்து இருப்பதால், நல்ல தரமான கல்வியை மாணவர்கள் பெறுவது அத்தியாவசியம். இந்த புதிய கொள்கையின் மூலம், வரும் 2015 ம் ஆண்டுக்குள், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் பொருட்டு பல நாடுகளுக்கு உதவ, உலக வங்கி மீண்டும் உத்திரவாதம் அளித்துள்ளது.

ஒரு அறிக்கையின்படி, உலகளவில் 21 கோடி பேர் வேலையின்றி இருப்பதாக கூறப்பட்டாலும், இன்னொரு அறிக்கையோ, பல பணிகளுக்கு திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறுகிறது.

தற்போது உலக நிலைமை வேகமாக மாறி வருகிறது. வளரும் நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தங்களிடம் உள்ள அதிகளவிலான இளைஞர் பட்டாளத்திற்கு நன்கு பயிற்சியளித்து பயன்பெறுவது தொடர்பாக கவலை அடைந்துள்ளன. வளர்ந்த நாடுகள் கல்வியின் முழு பலனையும் பெற, மனித அறிவின் திறனை அவர்கள் பயன்படுத்த வேண்டும். கல்வியை விட சிறந்த கருவி எதுவும் இல்லை" என்று கூறினார்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு