திண்மக்கழிவு
திண்மக்கழிவு என்பது நாளாந்த வாழ்க்கைச் செயற்ப்பாடுகளிலிருந்து உருவாகும் பொருளாதார பெறுமதியற்ற திண்மப்பொருட்கள் என விபரிக்கப்படுகின்றது. அதாவது வீடுகள், வைத்தியசாலைகள், வர்த்தகவியாபார, கைத்தொழில் மற்றும் விவசாய செயற்ப்பாடுகளினால் மட்டுமன்றி பொதுத்துறைகளாலும் வெளியேற்றப்படுகின்ற திரவமல்லாத கழிவு திண்மக்கழிவு என வரையறுக்கப்படுகின்றது. திண்மக்கழிவானது உணவுக்கழிவுகள், தேவையற்ற துணிகள், தோட்டக்கழிவு, கட்டட நிர்மாணக்கழிவு, தொழிற்சாலைக்கழிவு, கடதாசி, உலோகங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி முதலானவற்றையும், பொதி செய்வதனால் உண்டாகும் கழிவுகள் போன்ற பல்வேறுபட்ட வித்தியாசமான பொருட்களினை உள்ளடக்குகின்றது.
திண்மக்கழிவுகளானது நாட்டுக்கு நாடும், வீட்டுக்கு வீடும், தொழிற்சாலைக்கு தொழிற்சாலையும் வேறுபடுகின்றது. சிலவேளைகளில் குறிப்பிட்ட சில பொருட்கள் குறித்த நாட்டினில் அல்லது தொழிற்சாலையினால் அல்லது நபரினால் கழிவுகளாகக் கருதப்படலாம். ஆனால் ஏனைய நாடுகள் அல்லது தொழிற்சாலைகள் அல்லது நபர் மேற்குறிப்பிட்ட கழிவுகளை கழிவுகளாகக் கருதாத சம்பவங்களும் காணப்படுகின்றன. வீதி விபத்தினால் கொல்லப்பட்ட நாய், கோழி போன்றவற்றின் இறந்த உடலுக்கு பெறுமதி இல்லாமையால் அது கழிவாகக் கருதப்படுகின்றது. அதே சமயம் கோழியின் உடலுக்கு பெறுமதி உள்ளதால் அது கழிவாகக் கருதப்படுவதில்லை. இருந்த போதிலும் நாய் இறைச்சி நுகரப்படும் நாடுகளினில் நாயின் இறந்த உடலுக்கு பெறுமதி காணப்படுகின்றது.
எங்களுடைய நாட்டில் கடதாசி, தேங்காய்சிரட்டை, பிளாஸ்ரிக் என்பனவற்றை திண்மக்கழிவுகளாக கழிக்கின்றார்கள். ஊண்மையில் இவை பெறுமதியுள்ள வளங்களாகும். உகந்த முகாமைத்துவத்தின் ஊடாக இப்பொருட்க்களிலிருந்து பல நன்மைகளினை பெற்றுக்கொள்ளலாம். நன்கு திட்டமிடப்பட்ட நாடுகள், நகரங்களின் பூங்காக்கள், தெருக்கள், வீதிகள் போன்றவற்றை அழகுபடுத்துவதற்க்காக தாவரங்கள் நாட்டப்படும் போது நகரக் கழிவுகளான தாவரப்பகுதிகள் மண்ணின் அமைப்பைப் பேணுவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நன்கு திட்டமிடப்படாத நாடுகளில் அவ்வகையான தாவரப்பகுதிகள் வளங்களாகக் கருதப்படாது கழிவுகளாகக் கருதப்பட்டு கழிவாக வெளியேற்றப்படுகின்றன.
உலகிலுள்ள பல நாடுகளில் உள்ளதைப்போல் எங்களுடைய நாட்டிலும் நகரத் திண்மக்கழிவுகளானது உள்ளுர் அதிகார சபைகளினால் அகற்றப்படுகின்றன. நச்சுத்தன்மையான கழிவுகள் வேறொரு தனிப்பட்ட வகைக்கழிவாக கருதப்படுகின்றது. இக்கழிவுகள் தொழிற்சாலைகள், மருத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாக்கப்படுகின்ற நச்சுத்தன்மையான கழிவுப்பொருட்க்களிற்க்கான முகாமைத்துவம் சிறந்த மேற்ப்பார்வையின் கீழ் செய்யப்படல் வேண்டும்.
6.2 திண்மக்கழிவுகளின் பாகுபாடு:
திண்மக்கழிவுகளானது அவை வெளிவிடப்படும் இடங்களின் அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தப்படுகின்றது.
o மாநகர-சபை திண்மக்கழிவுகள்
o வீட்டுத் திண்மக்கழிவுகள்
o சந்தை,வர்த்தக திண்மக்கழிவுகள்
o நிறுவனத் திண்மக்கழிவுகள்
o வீதி,கடற்க்கரைத் திண்மக்கழிவுகள்
o நிர்மாணத் திண்மக்கழிவுகள்
o கைத்தொழில் திண்மக்கழிவுகள்
o விவசாயத்தினால் உருவாகும் திண்மக்கழிவுகள்
o தீங்கு பயக்கும் திண்மக்கழிவுகள்
6.3 திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் சுற்றாடல் பிரச்சினைகள்:
o வளி மாசடைதல்
o நீர் மாசடைதல்
o மண் மாசடைதல்
o சுகாதாரப் பிரச்சினைகள்
o உயிரினப் பல்லினத்துவத்தின் மீதான சேதங்கள்
o இயற்கை காட்சிகளின் அழிவு
o சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
6.3.1. வளி மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகளில் வளி மாசடைதல் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். பல்வேறுபட்ட நுண்ணுயிர்களால் திண்மக்கழிவுகள் பிரிந்தழிகைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இச்செயற்ப்பாடுகளின் போது காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டினால் பல்வேறுவகையான இரசாயன வாயுக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாயுக்கள் வளிமண்டலத்தில் ஒன்றுடன் ஒன்று கலந்து துர்நாற்றத்தை ஏற்ப்படுத்துகின்றன. இவ்வாறு துர்நாற்றம் உருவாகும் காரணத்தினால் அவ்விடப்பரப்பில் வாழும் வதிவிடவாசிகளுக்கு தொல்லைகள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. இதனால் கழிவுகள் கழிக்கப்படும் இடங்களினைத் தெரிவு செய்தல் இலகுவான நோக்காக இருக்காது. திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்ப்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பூகோள வெப்பமுறலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதுவரையில் எங்களுடைய நாட்டில் கழிவகற்றப்படும் இடங்களிலிருந்து உருவாகும மெதேனைக் குறைக்கவோ அல்லது சேகரிக்கும் வசதிகளோ காணப்படவில்லை. இதனால் எமது நாட்டில் கழிவகற்றப்படும் இடங்கள் வளி மாசடைதலின் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. பல்வேறுபட்ட திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்ப்பாடுகளின் போது உருவாகும் தூசுகளாலும் வளி மாசடைதல் ஏற்படுகின்றது. குறிப்பாக திண்மக்கழிவுகளின் காவுகையின் போதும், கழிவகற்றலின் போதும் தூசு துணிக்கைகள் பரம்பலடைகின்றது. இதனால் சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்ப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கைத்தொழில் கழிவுகள் கழிவகற்றலுக்கு அகப்படும்போது உருவாகும் தூசுகளால் தீராத சுவாச நோய்கள் உருவாக்கப்படலாம்.
திண்மக்கழிவுகள் எரிக்கப்படும்போது உருவாகும் பல இரநாயனக் கூறுகளானவை மனிதனுக்கு அதிகளவு தீமையை ஏற்ப்படுத்துகின்றன. இவற்றுள் இரு ஒட்சிசன் அதிக நச்சுத்தன்மையானவை. இவ் இரசாயனங்கள் நீரில் கரையமுடியாதவை. ஆனால் இவை கொழுப்பில் கரைந்து நீண்ட காலத்துக்கு சுற்றாடலில் நிலைத்திருக்க கூடியவை. இக்கூறுகள் ஆபத்தான ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கக் கூடியவை. திண்மக்கழிவுகள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படும்போது இவ்வகை இரசாயனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் இவை முற்றாக பிரித்தழிவதற்கு உயர் வெப்பநிலை மிக அவசியமாகும். இதனாலேயே, பிளாஸ்ரிக் பொருட்கள் குறைந்த வெப்பநிலையில் எரிக்கப்படல் சுற்றாடலுக்கு நட்புறவான செயற்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
திண்மக்கழிவுகள் காற்றின்றிய நுண்ணங்கிகளின் செயற்பாட்டிற்கு உட்படும்போது உருவாகும் மெதேன் வாயுவானது பல சந்தர்ப்பங்களில் தீப்பற்றக்கூடியதாக இருக்கலாம். பிளாஸ்ரிக் உள்ளடங்கலாக எல்லா திண்மக்கழிவுப்பொருட்களும் பல நிலைகளில் எரிதலுக்கு உட்படுத்தப்படலாம். இதனால் உயர்ந்த சுற்றாடல் மாசடைதல் நிலைமைகள் உருவாக்கப்படலாம்.
6.3.2. நீர் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை நீர் மாசடைதல் ஆகும். எமது நாட்டில் உள்ள வடிகாலமைப்புத் தொகுதியானது பல வழிகளில் தடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொலித்தீன் பைகள், தேங்காய் மட்டைகள், ஏனையவை போன்றன வடிகாலமைப்பினுள் சென்று வடிகாலமைப்புத் தொகுதியைத் தடுக்கின்றன. இவ்வாறு தடுக்கப்பட்டுள்ள வடிநீரானது நுளம்புகள்,பறவைகள்,எலிகள்,உடும்புகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களுடன் தொடர்புபட்டு வாழுகின்ற ஏனைய விலங்குகளின் இனப்பெருக்க இடங்களாகச் செயற்படுகின்றன. கிணறுகளும் வடிகால்வாய் நீரும் அவற்றினுள் கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மாசாக்கப்படுகின்றன. இதனால் உயிரியல் ஒட்சிசன் தேவை (டீழுனு), இரசாயன ஒட்சிசன் தேவை (ஊழுனு) மிக அதிகளவில் காணப்படுகின்றது. திரவக் கழிவுகளால் குடிநீர் தொற்றாக்கலுக்குள்ளாக்கப்படுவதன் மூலம் பல சுகாதாரப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் மேலும் தீவிரமான சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன.
6.3.3. மண் மாசடைதல்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான சுற்றாடல் பிரச்சினை மண் மாசடைதல் ஆகும். துpண்மக்கழிவுகளின் வெளியேற்றத்தினால் மண்ணினது இரசாயன, பௌதீகத் தன்மைகள் மாற்றத்திற்குட்படலாம். துpண்மக்கழிவுகளில் வேறுபட்ட வகையான பொருட்கள் காணப்படுகின்றமையால் குறிப்பாக மண்ணினது நீர் பெறுமானமானது பெருமளவில் வேறுபடுகின்றது. இதனால் தாவரங்களின் வளர்ச்சியும் மண்ணில் உள்ள உயிரினங்களின் வளர்ச்சியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையான திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதன் மூலம் இப்பிரச்சினையானது மேலும் சிக்கலடைகின்றது. ஏல்லா இடங்களிலும் பொலித்தீன்பைகள் கொட்டப்படுவதனாலும் இவைகள் பிரிகையடைவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமையாலும் மண்ணின் வளம் குறைவடைந்து செல்கின்றது. திண்மக்கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் நிலநீர் மட்டம் குறைவடைந்து செல்லும் நிலை ஏற்படலாம்.
மண் மாசடைதல்
6.3.4. சுகாதாரப்பிரச்சினைகள்:
திண்மக்கழிவுகளால் உருவாக்கப்படும் மற்றுமொரு முக்கியமான பிரச்சினை சுகாதார ரீதியான பிரச்சினையாகும். திண்மக்கழிவுகளுடன் பல சுகாதாரப்பிரச்சினைகள் தொடர்புபட்டுள்ளன. துpண்மக்கழிவுகளுடன் தங்களுடைய வாழ்க்கை வட்டத்தை நெருங்கிய முறையில் பேணுகின்ற ஈக்கள்,நுளம்புகள்,கரப்பான் பூச்சிகள்,எலிகள் போன்றவற்றினால் வேறுபட்ட வகைக்குரிய நோய்கள் பரப்பப்படுகின்றன. அதாவது டெங்கு,மலேரியா, மூளைக்காய்ச்சல், பைலேரியா போன்ற நோய்கள் இவ்வங்கிகளால் பரப்பப்படுகின்றன. மேலும் திண்மக்கழிவுகளுடன் திண்மக்கழிவகற்றும் இடங்களுக்கு நோய்க்கிருமிகள் வந்து சேர்கின்றன. இதன் காரணமாக வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரப்பப்படுகின்றன.

லேபிள்கள்: யோ. உஜேயந்தன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு