புதன், 22 ஜூன், 2011

நீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.

நீர் மாசுபடுதல் இன்றைய உலகில் முக்கியமான கவலைகளில் ஒன்றாக உள்ளது.
பலநாடுகளின் அரசுகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வுகள் காண முயன்று கொண்டு இருக்கின்றன. பலவகையான மாசுகள் நீர்வழங்கலை அச்சுறுத்திக்கொண்டே வருகின்றன. அதுவும் வளங்குன்றியுள்ள நாடுகளில் அது பரவலாக உள்ளது. அதிலும் குறிப்பாக, இயற்கை நீரில் புதிதான கழிவுநீர்க்கால்கள் இரண்டறக் கலப்பது என்பது கழிவுநீர் அகற்றும் முறையில் ஒரு பொதுமுறையாகி உள்ளது இத்தகைய நாடுகளில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பாதி வளர்ச்சி அடைந்த சீனா, இந்தியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இது பரவலானதாக உள்ளது.
கழிவுநீர், சாக்கடைச்சேறு, குப்பை மற்றும் நச்சாக உள்ள மாசுகள் யாவும் நீரில் இறுதியில் வந்து குவியலாகி விழுகின்றன. அதிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்தாலும் பிரச்னைகள் தோன்றத்தான் செய்கின்றன. சுத்திரிகரிக்கப்பட்ட கழிவுநீரால் சாக்கடைச் சகதிகள் தோன்றி அவைகள் நிலத்தினில் நிரம்பு கின்றன. அதனால் நிலமெங்கும் பரவு கின்றன. கடைசியில் கடலினில் குவிந்து கலக்கின்றன.[14] இதற்குக் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட இடம் என்றுசொல்ல இயலாத மாசுகள் தோன்றும் பகுதி அதாவது விவசாயஇடங்களில் நீர்பொங்கிவழிதலாலும் அதுவே ஒருமுக்கிய மாசுகளின் மூல ஆதாரம் ஆகின்றது.அதனோடு நகரங்களில்புயல்மழைநீர்பொங்கி வழிவதும் உடன் ரசாயன கழிவுகள்தொழிற் சாலைகளால் மற்றும் அரசாங்கங்களால் குவிந்து விடுதலும் உரிய காரணங்களாகி விடுகின்றன.
நீரும் சச்சரவும்
இரு மாநிலங்கள் இடையில் நிகழ்ந்த சச்சரவு என்பதற்கு தெரிந்த உதாரணமாக விளங்குவது கிமு 2500 மற்றும் 2350 காலத்தில்சுமேரியமாநிலங்களான லாகேஷ் மற்றும் உம்மா இரண்டுக்கும் ஏற்பட்ட நதிநீர்ப் பிணக்கே ஆகும்.[15] அதுதவிர்த்து சர்வதேச அளவில் நீருக்காகச் சண்டை என்பதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால் நீரானது வரலாற்றில் தொடர்ந்து சண்டைக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. நீர்சொற்பமாகக்கிடைக்கும் போது அரசியல் உளைச்சல்கள் கிளம்பிவரும். இதுவே நீர்இறுக்கம் என்றும் குறிப்பிடுவதுண்டு. நீர்இறுக்கம் உள்ளூர் மற்றும் பிரதேசஅளவில் பிணக்குகள் தோன்றிவரக் காரணமாய் அமைந்தது.[16] ஒரு சுத்தமான எண்ணிக்கை சார்ந்த வழி முறைமையியல்படி, தாமஸ்-டிக்ஸன் நீர்ப்பற்றாக்குறை மற்றும் சாகுபடிநிலம் கிடைப்பதிலும் பற்றாக்குறை இரண்டுமே வன்முறைப்பிணக்குகளுக்குப் பிரகாசமான வாய்ப்பளிக்கின்றன.[17]

நீர்இறுக்கம் சண்டைகள் மற்றும் அரசியல் உளைச்சல்கள்-இழு உலைவுகள் தோன்றவதற்கு கடுப்பூட்ட வல்லதாக அமைந்துள்ளது. அரசியல் உளைச்சல்கள் நீரால் மட்டும் நேரடியாகக் தோன்றுவது கிடையாது. சுத்தநீர் கிடைப்பது தரத்திலும் அளவிலும் நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்துவருவதில் ஒரு பிரதேசத்தின் ஸ்திரத்தன்மையை அது பாதிக்கின்றது. அதன்விளைவாக மக்கள் தொகையின் ஆரோக்கியம், பொருளாதார வளர்ச்சிக்குமுட்டுக்கட்டை, பெரியசச்சரவுகள் வர கடுப்பூட்டும் வண்ணம் நிலைமை உருவாகும்.[18]

சச்சரவுகள் மற்றும் உளைச்சல்கள் நீரால் தேசிய எல்லைகளுக்குள் ஆற்றின்கீழ்ப்படுகையில் உள்ள வடிநிலப் பிரதேசங்களில் நிகழக்கூடும். சீனாவின்மஞ்சள்நதியின் அல்லது தாய் லாந்தின்சாவோ பார்யா நதியின் தாழ்வான பகுதிகள், எடுத்துக் காட்டாக, நீர் இறுக்கத்தைப் பலவருடங்களாக அனுபவித்துக் கொண்டுவருகின்றது. மேலும் கூடுதலாக, சில உழுநிலமுடைய நாடுகள் பாசனத்திற்காக நீரையே நம்பியுள்ளவைகள் அதாவது சீனா, இந்தியா, ஈரான், மற்றும் பாகிஸ்தான் யாவும் குறிப்பாக நீர்சம்பந்தமான சச்சரவுகள் தோன்றக் கூடிய அபாயக்கட்டங்களைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன.[18] அரசியல் உளைச்சல்கள், பொதுமக்கள் பேராட்டம், வன்முறை இவைகள் நீர்தனியார்மயமானதால் வெடித்துக்கிளம்பும். 2000ல் நடந்த பொலிவியன் தண்ணீர்ச் சண்டைகள் இக்கருத்தில் ஒரு வழக்காக ஆகியுள்ளது.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு