செவ்வாய், 21 ஜூன், 2011

ஆசிரியர்களின் மகத்துவம்

வணக்கத்துக்குறியவர்கள்

இன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !

நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்

கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்

மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !


இன்று கல்விப் புலத்தில் ஆசிரியர்களை மாற்ற முகவர்கள் ஆசிரியர்கள் என்ற வகையில் கல்வியில் புதிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் உண்மையான வாண்மை விருத்தியின் மேம்பாட்டிற்கும், ஆசிரியரது தொழில்சார் முன்னேற்றத்திற்கும் ஆசிரியர் பயிற்சிகள் அவசியம் தேவையானவையாக அமைந்துள்ளன.
அந்த வகையில் ஆசிரியர்களை பட்டதாரிகளாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று நாடளாவிய ரீதியில் தமிழ், சிங்கள மொழிகளில் பல்வேறு பிராந்திய நிலையங்களின் உதவியுடன் இலங்கையின் தேசியக் கல்வி நிறுவகத்தினது கல்விமாணி (கி. ரினீ) பட்டக் கற்கை நெறி ஆசிரியர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றமையை கூறலாம்.
உண்மையில் காலத்திற்கேற்றவாறான ஆசிரியரின் வகிபாகம் மாற்றமுற்று வரும் இவ்வேளையில் நல்லதொரு பொதுக்கல்வியை வழங்குவதில் ஆசிரியரது வகி பங்கு முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது.
வெறுமனே தேடலற்ற ஆசிரியர் மையக் கல்வி முறையிலிருந்து தேர்ச்சிமையக் கல்வி முறையில் அமைந்த கல்வி முறையாக தற்கால தேடலுள்ள ஆசிரியர்கள், மாணவர்களை தூண்டுகின்ற செயன்முறை சார்ந்த கல்வியை வழங்குகின்ற புதுமையான ஆசிரியரை அதாவது ஒரு ஆசிரியர் ஒரு வளவாளராக (ஞிலீsourணீலீ ஜிலீrson) மாற்றமுறும் நிலையினை இக் கல்விமாணி கற்கை பரந்தளவிலான கல்வித் தொழில்நுட்பங்களையும் புகுத்தி, தியாகசிந்தையுள்ள, அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை பிரசவித்து வருகின்றமை சிறப்பிற்குரியது.
ஆசிரியர்கள் தம்மை கற்றல் - கற்பித்தல் தொடர்பாக மேம்படுத்தி உயர்த்திக் கொள்வதனூடாக ஆசிரியரின் வாண்மையை விருத்தியுறும் வகையில் தொலைக் கல்வி, ஆசிரியர் பயிற்சிகள், தொடறுரு பயிற்சிகள் போன்றவற்றிலிருந்து மேம்பட்ட நிலையில் அனைத்து ஆசிரியர்களும் தொடராக கற்று, தொழில் கல்வியில் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக உருவாக்கி கல்வியில் புதுமையை புகுத்தும் புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் கல்வி வழிகாட்டும் ஆசிரியராக வரவேண்டும் என்பதையே இக்கற்கை நெறி எடுத்தியம்புகிறது.
எனவேதான் அன்றைய ஆசிரியர்கள் கடத்தல் வகிபங்கையும் இடைக்காலத்தில் கொடுக்கல் வாங்கல் வகிபங்கையும், தற்கால ஆசிரியர்கள் பூகோளமயமாக்கலில் வெற்றிகரமான பாடசாலைக் கல்வியையும் வழங்குவதற்காக நிலைமாற்ற வகிபாகத்தையும் கொண்டிருக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் தனது வகிபங்கை உணர்ந்து செயற்படுதல் இன்றியமையாததாகவும் உள்ளது.
உண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தின் பிராந்திய நிலையங்களின் ஊடாக நடைபெறுகின்ற இக் கல்விமாணி பட்டக் கற்கை நெறியானது ஒரு தொடர்பாடல் நிறைந்த நிலையமாக தொழிற்படுவதற்கும், நிலையம் அமைந்துள்ள பிரதேச பாடசாலைகளும், கல்விமாணி கற்கையினை பெறுகின்ற ஆசிரிய மாணவர்களுக்கு அப்பிரதேச அதிபர்களும், வலய, கோட்ட கல்விப் பணிப்பாளர்களும் உதவி புரிகின்றமையானது, அப்பிரதேசத்தினது கல்வி வளர்ச்சிக்கு உதவுவதுடன் குறிப்பாக கற்றல் கற்பித்தல் பயிற்சிகள், கற்றல் செயல்நிலை ஆய்வுகள் போன்றவற்றினூடாக கல்வி மேம்பாட்டிற்கு ஒத்தாசையான ஒத்துழைப்பு நல்கி வருகின்றமை மேலும் ஒருபடி சிறப்பானது எனவும் கூறலாம்.
பாடசாலை மாணவர்களுக்கு காலத்திற்கு காலம் முன்வைக்கப்படும் கலைத்திட்ட மறுசீரமைப்பு முறையினை முன்வைத்து சமூக, சிந்தனை தனியாள் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் பாரிய பொறுப்புடைய ஆசிரியர்களை வழிப்படுத்தும் மூலோபாய கல்வித் தத்துவங்களையும் ஆக்கச் சிந்தனையுடன் மாணவர்கள் மீது வழிசமைக்கும் நோக்குடன் அங்கு கற்பிக்கின்ற விரிவுரையாளர்கள் தமது கடமையை சரிவர செயற்படுத்துகிறார்கள் என்பதுடன் கல்விமாணி பட்டத்தினைப் பெறுகின்ற ஆசிரிய மாணவர்களின் செயற்படுதிறன் மேலோங்கி காணப்படுவதற்கும் இந்நிலையங்கள் எப்போதுமே சிந்தையுடன் செயற்பட்டு வருகின்றன.
மத, இன, பால், பிரதேச வேறுபாடின்றி எல்லோரும் ஒன்றாக செயற்பட்டு ஒரு குடும்ப உறவினர்கள் போல் மாணவர்கள் தமது கற்கை நெறியினை கற்பதன் ஊடாக சமாதான சூழ்நிலையும், இன முரண்பாடுகள் அற்ற ஒரே சமூக குழுவாகவும் அமைந்து ஒற்றுமை மிக்கதான நிலையினை உணர்த்தி நிற்கவும், நாட்டுக்குகந்த நற்பிரஜைகளை உருவாக்க விளையும் ஆசிரியர் சமூகம் இப்பயிற்சிகள் மூலம் சிறந்த பலாபலங்களைப் பெற்று உயர்வான கல்விக்கு உயிரோட்டமாக தம்மை ஈடுபடுத்தியும் வருகின்றமை கண்கூடு.
எனவேதான் இலங்கைவாழ் அனைத்து ஆசிரியர்களும் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாகவும், வகுப்பறையில் மட்டுமன்றி இன்றைய உலகிற்கேற்றவாறான நவீன உயர் விழுமிய ஒழுக்கங்களை உருவாக்கும் உயர் வாண்மைத்துவமிக்க உன்னத ஆசிரியர் சமுதாயத்தை வெளிக்கொணரும் நோக்குடன் பயிற்றப்பட்டு வெளியேறுகின்ற போது தற்கால புதுமைமிக்க உலகாதாயத்தின் அடிப்படையில் சிறப்பான மாணவர்களைக் கண்டுகொள்ளக்கூடியதாக இருக்கும் நிலையினை இந்தப் பயிற்சிகள் உதவுகின்றன எனலாம்.
ஆசிரியர்கள் என்றென்றும் கல்வி உலகில் போற்றக்கூடியவாறான நிலையில் காணப்படுவதனால்தான் ஆசிரியர் ஒரு உருகும் மெழுகுவர்த்திக்கு உதாரணமாக கொள்வர். ஒளிர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு விளக்கில் இருந்துதான் மற்றொரு விளக்கிற்கு ஒளியேற்ற முடியும்.
இதனைத்தான் ஆசிரியத்துவம் பணிசெய்தே வருகின்றது. ஆசிரியர் பணியானது மற்றவரை வாழவைக்கின்ற செயற்பாட்டில் ஏணியாகவும் உதவுகிறது. இதனை சரியான முறையில் பயன்படுத்தவே இப்பயிற்சிகளின் அவசியம் உணரப்பட்டுள்ளன.
எனவேதான் தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கின்ற ஓர் ஆசிரியரால்தான் மற்றொருவருக்கு சிறப்பாக கற்பிக்க முடியும் என்பதுவும் நாமறிந்த உண்மை.
கல்வித்துறை முன்னேற்றத்திற்கான ஆய்வுகளுக்கும், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களும் நாளுக்குநாள் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்ற புதிய கற்பித்தல் முறையை ஒரு ஆசிரியர் கருத்திற்கொண்டு காலத்திற்கேற்ப தன்னைத் தயார்படுத்தி, கற்போன், கற்பிப்போன் இடையிலான செயற்பாடுகள் கற்போனை சிந்திக்க வைக்கவும், ஆராய்வுப் பணியில் ஈடுபட தூண்டுவதற்கும், ஆசிரியர் கற்பித்தல் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தன்னை விருத்திசெய்து கொள்வதற்காகவும் இப்பயிற்சிகள் அவசியமாகின்றன.
மேலும், இவ்வாறான விருத்திகளினூடாக ஆசிரியர் வாண்மையினராக அமைவதற்கும், ஆசிரியரினது கல்வித் தகைமையையும்u தொழிற்றகைமையையும் உயர்த்திக் கொள்ள வேண்டிய பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. அந்த வகையில் கல்விமாணி பட்டக் கற்கை நெறி ஆசிரிய சமுதாயத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனலாம்.
இப்பயிற்சிகள் மூலமாக கற்றலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அனைவரும் தொழிற்றகைமையுள்ள பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக மாற்றப்பட்டும், தங்களது வாண்மை விருத்தியில் உயர் விழுமிய, மாண்புடைய நல்ல பண்பாளர்களாகவும் மிளிர்கின்ற அதேவேளை தாம் பெற்ற பயிற்சியின் மூலமாக நாட்டுக்கும் உலகுக்குமான எதிர்கால நற்பிரஜைகளை உருவாக்குகின்ற ஆசிரியர் சமுதாயத்தையும் வழங்கி வருகின்றமை சிறப்பான விடயமாகும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு