புதன், 24 நவம்பர், 2010

குழந்தைகளைவளர்ப்பதில் பெற்றோரின் பங்கு

குழந்தைகள் பெற்றோருக்குக் கண்குளிர்ச்சியாவார்கள். குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச சீரமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். அவர்களால்தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமும் அவர்களுக்கு ஊட்டப் படும் இஸ்லாமிய ஆரம்பக் கல்வி மூலமும் தான் சாத்தியமாகும்
குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து, உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடு படுகின்றனர். செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லாவிட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது, கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறும்
ஒரு குழந்தை வளரும் சூழல், அதன் எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ, அதே போன்று ஒருவன் மாணவனாக இருந்து பெறும் அறிவும் அவனது வாழ்க்கையில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்த வல்லது. எனவே, மாணவப் பருவத்தின் போது அவர்களிடம் நற்பண்புகளையும் நல்லொழுக்கங்களையும் கல்வி மூலம் ஏற்படுத்தினால் அவர்களது ஆளுமையை நெறிப்படுத்த முடியும்.

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு