திங்கள், 25 அக்டோபர், 2010

பெற்றோர்கள் “டிவி’யில்

http://oddanchatram.in/students-suicide-due-to-parents-watching-tv-serials.html

subscribe to the RSS feed for updates on this topic.பெற்றோர்கள் “டிவி’யில் தொடர் அதிகம் பார்ப்பதால் மாணவர்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.மேலும் கல்வி கற்க முடியாத பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் வெளிச்சம் அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.சென்னை வெளிச்சம் அமைப்பினர் ஏழை மாணவர்களின் உயர்கல்வி, கல்விக்கடன் குறித்து மாநில அளவிலான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.கடந்த ஜூலை 15ல் சென்னையில் பயணத்தை துவக்கிய இவர்கள், 15 வது மாவட்டமாக திண்டுக்கல்லுக்கு நேற்று வந்தனர். பெற்றோர்கள் டி.வி., சீரியலில் மூழ்குவதால், குழந்தைகளிடம் அன்பாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.இதனால் மனவெறுத்து பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் சிலர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். கல்விக்கடனில் சிக்கல், கல்லூரி கட்டணம் செலுத்துவதில் பிரச்னை,காதல் தோல்வி, மனதிற்குள் இனம் தெரியாத வேதனை, ஆங்கிலம் பேச தெரியவில்லை, கறுப்பு நிற பிரச்னை, குடும்ப பிரச்னை, சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நாடகங்கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டனர். பிரசாரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அசோகன், திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சுப்ரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்தன் துவக்கி வைத்தனர்.இது குறித்து அமைப்பின் நிறுவனர் செரீன், ஒருங்கிணைப்பாளர்ஆனந்தக்குமார் கூறியதாவது: பெற்றோர்களும்,மாணவர்களும் டி.வி.,சினிமா பார்ப்பதால் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்படுகிறது. எங்கள் பிரசாரம் மூலம் மாணவர்கள் தற்கொலையில் இருந்து விடுபடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்

லேபிள்கள்:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு